Friday, February 13, 2015

Vellimoonga வெள்ளிமூங்கா (ரேரான சில்வர் ஆந்தை)




அவுட் அண்டு அவுட் சிரிப்பு வெடி எண்ட்டடெய்னர் பார்க்கணுமா? கொஞ்சம் வேகமாகப்பேசும் மலையாளம் உங்களுக்கு புரியுமா? அரசியலை அக்குவேர் ஆணி வேராக காட்டியிருக்கும் படம் பார்க்கணுமா? உடனே டவுன்லோடு செய்யுங்கள்...

மலையாளத்தில் செப்டம்பர் மாதத்தில் சத்தமில்லாமல் வந்து சக்கை போடு போட்ட படம். கலாசலான நடிப்பில் பிஜு மேனனின் அட்டாகாசத்தில் அதிர்ந்த திரைக்கூட்டம்.

பொதுச்சேவையில் மக்களுக்காக அனைத்தையும் இழந்த நல்ல அரசியல்வாதி அப்பா இறந்துப்போக மூத்தபையனான பிஜுமேனன் மீது குடும்பச்சுமை விழுகிறது. அரசியலை அதிகம் வெறுக்கிறார் தன் இறந்துப்போன அப்பாவையும். எதேச்சையாக அப்பாவின் கதர் சட்டையை அணிந்து போலீஸ் ஸ்டேஷன் வாசல் வழி செல்ல மந்திரி தோற்றத்தில் கண்ட இவரை போலீஸ் விழுந்து உபசரிக்க இவருக்கும் ஆரசியல் ஆசை வருகிறது. வயது நாப்பதானாலும் அரசியலில் பெரிய ஆளாகாமல் சுற்றிக்கொண்டிருக்க தனது சாணாக்கியத்தனத்தால் எப்படி மத்திய மந்திரி ஆகிறார், பள்ளிக்காலத்தில் டாவடித்த நண்பியின் மகளை எப்படிக்கைப்பிடிக்கிறார், தன்னை எதிர்க்கும் தன்னுடனே இருக்கும் மற்றவர்களுக்கு எப்படி ஆப்படிக்கிறார் என்பதே கதை.

சிரித்து சிரித்து கண்ணில் நீர் வழிவது நிச்சயம். அதுமட்டுமல்லாது படமுழுக்க இருக்கும் டுவிஸ்ட் அண்டு டர்ன்ஸ் நம்மை திணறடிக்கும் என்பது நிச்சயம்.

பிஜு, அஜு வர்கீஸ், நிக்கி கல்ரானி, கேபிஏசி லலிதா, கொஞ்ச நேரமே வரும் ஆசிஃப் அலி என கலாட்டா குடும்பம். லால் ஜோசின் கதையை ஜிபு ஜோசப் எஞ்சாய் செய்து இயக்கியிருக்கிறார்.

வெறும் 3 கோடியில் எடுக்கப்பட்டு கேரளாவில் 35 கோடிக்குமேல் இன்னும் சம்பாதித்துக்கொண்டிருக்கின்றது.

நேரமிருந்தால் காணுங்கள்!!!

No comments:

Post a Comment