Friday, February 13, 2015

Rishi - குழந்தையும் தெய்வமும்!!!



குழந்தையும் தெய்வமும்!!!

ரிஷிக்கு அரையாண்டு தேர்வுகள் நடந்துக்கொண்டிருக்கின்றது. காலையில் மனைவி போகும்போது மதியம் ரிஷி வந்தவுடன் தமிழ் படிக்க சொல்லுங்க, என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

மதியம் ஆர்ட் எக்ஸாம் முடிந்து ரிஷி வந்துவிட்டான். தமிழ் படிக்கச்சொன்னேன். நாளை கணக்கு எக்சாம் பா எனச்சொல்லி கணித புக்கை தேட ஆரம்பித்தான். டேபிளில், பையில், அலமாரியில் என எல்லா இடத்திலும்...

எனக்கு கோபம் வந்தது ஆனாலும் அடக்கி ரிஷியை திட்டிவிட்டேன். என்ன பண்ணுவையோ எனக்குத்தெரியாது கணக்கு புக்கை இப்பொ தேடி எடுக்கணும் என்று ஆர்டர் செய்து மிரட்டி, நாளைக்கு பரீட்சை ஆனா புக்கை காணோமா? என அதட்டி ரூமுக்குள் இருக்கச்சொல்லிவிட்டு டிவி பார்க்க ஆரம்பித்தேன்.

கொஞ்சம் நேரம் தேடியவன்...காணவில்லை அப்பா என்றான். இன்னும் கொஞ்சம் திட்டினேன்.

அழுகையுடன் ரூமுக்குள் சென்றான். அரை மணி கழித்து மெதுவாய் ரூமை எடிப்பார்த்தேன்...பொதுவாக மத்தியான வேளையில் ரிஷி தூங்கி பல வருடம் ஆய்விட்டது. ஆனால் இன்று சோகமான முகத்துடன் தூங்கிக்கொண்டிருந்தான். எனக்கு பாவமாகிவிட்டது. எழுப்பவில்லை.

எதேச்சையாகயாக அவன் அருகில் இருக்கும் நோட்டைப்பார்த்தபோது அவன் எழுதி இருந்தது கண்ணில் பட்டது.

"Please God! I want my maths class work note and my revision note. Fastly God"

என்று எழுதியிருந்தான். எனக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

கொஞ்ச நேரத்தில் ரிஷியின் கடவுள் நோட்டைக்கொண்டுவந்தார். வேறு யாருமல்ல அது என் மனைவிதான். அவள் தன் பையில் தவறுதலாய் வைத்திருக்கிறாள் நேற்று சொல்லிக்கொடுக்கும்போது!!!

No comments:

Post a Comment