Friday, February 13, 2015

உமா சங்கர் ஐஏஎஸ்!!!


உமா சங்கர் ஐஏஎஸ்!!!

(முகனூலில் கடந்த ஒரு வாரமாக விமர்சிக்கும் நல்லவர்கள் இவரின் முழுமையான வாழ்கையை அறிந்திருக்கிறார்களா? அல்லது சமூக அக்கரையாவது முகநூல் பிரபலங்களுக்கு உண்டா???)

2000ல் இந்தியாவின் மிகச்சிறந்த அரசு நிர்வாகி "man of the next millennium" என பட்டம் வாங்கியவர். நீங்கள் இப்போது பாராட்டும் சகாயத்திற்க்கே முன்னோடி. இவர் கோலோச்சிய காலத்தில் லஞ்சம் வாங்காது, அனைவரையும் தைரியமாக எதிர்த்து வெற்றிக்கண்டவர். அதனால் அவருக்கு கிடைத்ததென்னவோ பதவிப்பறிப்புகள், இடமாற்றங்கள், ஒன்றுக்கும் உதவாத துறைகளுக்கான தலைவர் பதவிகள்.

மனிதர் எவ்வளவு நொந்து போயிருப்பார். நேர்மையாக இருந்ததால் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருப்பார்?

முதல்வராக கருணாநிதி இருந்தபோது இவரால் அவர் குடும்பத்திற்க்கு இடைஞ்சல் வர இவரை உடனே தண்ணி யில்லாத காட்டுக்கு மாற்றினார், பெர்சனலாக இவருக்கு வர வேண்டிய பதவி உயர்வுகளை தடுத்து இவர் தனது ஜாதிச்சான்றிதழை வாங்க முடியாமல் தடுத்தார்.

கணினி துறையில் ஆர்வம் மிகுதியாலும், கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற ஆசையாலும் இவராகவே கேட்டு எல்காட்டுக்கு 2006 மற்றும் 2008 வாக்கில் பொறுப்பாளராக இருந்தார். அப்போதுதான் சென்னை தரமணி மற்றும் ஐடி பார்க்குகள் தொடங்க ஆயத்தமான நேரம் இவரின் கண்டிப்பான அணுகுமுறையால் பல பணக்காரர்களுக்கும், அரசியல் வாதிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தவர். ஒரு கார் வாங்க நினைத்து கருணாநிதி அரசு இவருக்கு லோன் சேங்ஷன் செய்யவில்லை என்பது கொடுமையிலும் கொடுமை.

அழகான குடும்பம், குழந்தைகள் என இருந்தவரை எது மாற்றியதென்று தெரியவில்லை. காரணம் பிறக்கும்போது எல்லோரும் நல்லவராகவே பிறக்கிறோம், ஆனால் நம்மை சுற்றியிருக்கும் சமூகம்தான் நம்மை வளர்க்கிறது. பல நேரங்களின் அந்த சமூகம் நம்மை மாற்றியும் விடுகிறது. மெத்தப்படித்த ஐஏஎஸ் ஆனாலும் அதிலிருந்து தப்பிப்பது கடினம். ஆக அவரின் இந்த நிலைக்கு யார் காரணம் எனப்பார்த்தால் 60 முதல் 70 சதம் இந்த சமூகமே.

சென்னை ஹாஸ்டலில் படிக்கும்போது ரோட்டில் யாராவது துண்டு பேப்பரை கொடுப்பார்கள் அதில் மத சம்பந்தப்பட்ட கதைகளும், சிறப்புகளும் இருக்கும். பின்னர் நம்மை அவர்களுடன் பிரார்த்தனைக்கு அழைப்பார்கள், அதன்பால் கவரப்பட்டு செல்லும் நம்மை முழுவதுமாக ஆட்கொண்டு மூளைச்சலவை செய்துவிடுவார்கள். அந்தமாதிரி பாதிக்கப்பட்ட பலர் ஒருவாரம் இரண்டுவாரம் என பித்து பிடித்தவர்களைப்போல் அலையக்கண்டிருக்கின்றேன், உளறிக்கொண்டும், ஒரு நேரத்தில் அதிக மன அழுத்தம் காரணமாக பித்துப்பிடித்துப்போகக்கண்டிருக்கிறேன். சிலருக்கு பித்து கொஞ்ச நாளில் தெளிந்துவிடும்...ஆனால் சிலருக்கு...???

ஒரு விஷயத்தின் மீது அதிக ஆர்வம் ஏற்ப்பட்டாலோ, ஆராய வேண்டும் என்கிற எண்ணம் ஏற்ப்பட்டாலோ நாம் அதீத ஈடுபாட்டுடன் அந்த விஷயத்திற்க்குள் நுழைவோம். பின்னர் அதுவே ஒரு நேரத்தில் நம்மை முழுவதுமாக தன்னுள் இழுத்து அதற்க்கு தேவையான வடிவில் நம்மை மாற்றிவிடும். பின்னர் அதிலிருந்து விடுபடுவது கடினம். எல்லாவற்றிர்க்கும் "எக்ஸ்ட்ரீம் ஸ்டேஜ்" என்று ஒன்று உண்டல்லவா? அதுதான் அதன் உச்ச கட்டம். இப்போது அதில்தான் விழுந்துக்கிடக்கிறார் உமா சங்கர்.

மனம் ஒரு குரங்கு நினைத்தது ஓரிடத்தில் இல்லையெனில் அடுத்த இடத்திற்க்கு தாவும். ஆனால் அங்கே எல்லாம் இருக்கிறது என்று எண்ணிய பட்சத்தில் அங்கேயே உட்கார்ந்துக்கொள்ளும். அப்போது அடுத்தவரோ அல்லது இந்த உலகமோ என்ன சொன்னாலும் அது நமக்கு புரியாது காரணம் நமக்கு பதில் இப்போது நம்முள் இருப்பது வேறு என்பதே. அவர் இறைவனிடம் பேசினார் என்று சொன்னதில் எனக்கு ஆச்சர்யமொன்றுமில்லை...காரணம் கோயில்களில் , புண்ணிய ஸ்தலங்களில் நாமும் அப்படியே கடவுவுளிடம் நம் தேவைகளை வேண்டி பேசுகிறோம் அல்லது பிரார்த்திக்கிறோம். இதில் மட்டும் என்ன நியாயம்? அல்லது கடவுள் என்றாவது உங்களுக்கு பதில் அளித்திருக்கிறாரா? அதனால் எந்த அடிப்படையில் இதை நாம் செய்கிறோமோ அதே அடிப்படையில்தான் அவரும் சொல்கிறார் நானும் கடவுளிடம் பேசினேன் என்று.

இதையே ஒரு மத போதகரோ, தலைவரோ பேசியிருந்தால் நம்பும் கூட்டம் உமா சங்கர் சொன்னதை நம்பவில்லை. அதற்க்கு காரணம் அவரின் பதவி. அதுவும் கலெக்டர் பதவி. அவரை சாடும் பலர் உமாசங்கரைப்பார்த்து அவர்களின் விமர்சங்களை அதிகம் வைக்க வில்லை, அவர்களின் விமர்சனங்கள் குறிப்பிட்ட அந்த மதத்தின் மீதே வைக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தில் கூட இறைவனை கணவாரக நினைத்து வாழ்ந்த பெண்ணின் கதையும் நாமறிவோம். அதனால் இவரை முட்டாள் என்பதோ, மிக கேவலமாக வசைபாடுவதையோ தவிர்ப்போம். மதம் மனம் சம்பந்த பட்ட விஷயம் என்பதால் மதத்தை விமர்சிக்காமல் உமாசங்கரின் நிலையை ஆராய்வோம்.

ஒரு நல்ல அதிகாரி தனது பதவியில் இருக்கும்வரை மக்களுக்காக நன்மைகளை செய்தவர், நேர்மையாக இருந்தவர் இப்போது தவறிழைத்திருக்கிறார், பொதுவான உயர் பதவியிலிருந்துக்கொண்டு மத பிரசங்கங்களில் ஈடுபட்டது மிகப்பெரிய தவறு எனினும் அவரை இன்னும் இன்னும் அதிகமாக விமர்சிக்காமல் அவரின் உண்மை நிலை அறிந்து அவர் இருக்கும் சிறைக்குள் இருந்து அடிபடாமல் வெளியே இழுக்க வேண்டும்.

ஏர்கனவே மதியிழந்து பேசும் அவரை அசிங்கப்படுத்தாமல் அவரை நல்ல முறையில் மாற்ற அரசுகள் ஆவன செய்தல் வேண்டும் அல்லது அவருக்கு புரியவைக்க வேண்டும். அதற்க்காக அவரை மதம் மாறச்சொல்லியோ அல்லது, அவர் இப்போது இருக்கும் மதம் தவறானதோ என்று சொல்ல வரவில்லை. மிக முக்கியமாய் இந்தியா இவரை மாதிரியான நேர்மையான அரசு ஊழியரை இழந்துவிடக்கூடாது. அதனால் ஏற்ப்படும் இழப்பு நமக்குத்தான். நமக்கே அவரின் நிலையைக்கண்டு எள்ளினகையாடும்போது அவரின் குடும்பத்தினர் நிலையை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். அவர்களுக்கு இவர் செய்யும் காரியங்கள் பிடித்திருக்கும் என சொல்வது கடினமே.

உண்மையிலேயே இவர் ஒரு ஸ்ட்ரிக்டான கலெக்டர். அதை நேரடியாக கண்டும் மூன்று நாங்கு முறை பேசியும் இருக்கிறேன் என்பதால் என்னால் ஆணித்தரமாக சொல்லமுடியும். நீங்களும் நம்புங்கள்...பழைய உமாசங்கராக இவர் திரும்பி வர அதே இறைவனை பிரார்த்திப்போம்.

இனியாவது ஒருவரை விமர்சிக்கும் முன் அவரின் பின் புலத்தை அறிந்து விமர்சிப்பது நல்லது. அவரின் இன்றைய நிலைக்கு யார் காரணம் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும். இந்தமாதிரியான நேரங்களில் நம் அன்புதான் அவருக்கு தேவை.

Passion:
*To make India a corrupt free nation, using among other things innovative and outcome oriented Information Technology / e-governance tools.
*To see India a discrimination and poverty free nation.
*To popularize the use of free and open source software and thus reduce the cost of implementation of information technology solutions in Government and private sector.

இரண்டாயிரத்துபத்தில் அவர் எழுதிய கடிதத்தின் ஒரு சில பகுதிகள் உங்கள் பார்வைக்காக...கலெக்டரின் நிலையைப்பாருங்கள்.

C. Umashankar IAS., (Tamilnadu Cadre)
26th August 2010
Dear friends,

I am breaking my silence after a long time. I wish to share an interesting view of things happening around. You are aware of the trials and tribulations that I have been undergoing. But you would be surprised to find me and my family happy and enjoying every moment. We are also watching the unfolding of events with amazement and amusement. There is no drop in our happiness. We have bought a new car during this period (a Luxury car – Mitsubishi Cedia). Of course I informed the Government well in advance. The Government refused to sanction me a car loan even after I moved the Central Administrative Tribunal, Madras Bench. Finally my younger brother contributed the gap and we registered the car on 24thAugust 2010. It is to indicate that life is normal despite the false vigilance cases foisted against me and an illegal suspension order imposed on me for standing upright.

Friends, the purpose of this mail is to tell about my present spiritual life. I draw my full energy and powers from God. (Please do not consider it proselytizing. I want to share the present situation, which is not tense and the future which is tense elsewhere).

After I was shifted from ELCOT when I was physically verifying the scam records in ELNET’s premises, I went into deep depression. As a man who was proved to be courageous by filing cases against Jayalalitha regime in 1995 when I was hardly 4 years in the IAS, the impulse was to expose Karunanidhi regime. But then my family members, who refused to believe what was happening, asked me to wait for a week. They were of the opinion that Mr.Karunanidhi would see reason and reverse the illegal transfer orders. In the meanwhile I was going into further depression.

On 3rd August, 2008 – that is, 5 days after my transfer orders were issued on the 28thJuly 2008, there was a message from the Church (Assembly of God Church, Anna Nagar). The week’s message was “I would restore whatsoever that had been taken away from you”.

There were two options before me after the illegal transfers from ELCOT viz., quit service and join private sector or quit the world.

As a strong person I discarded the second option.

The final option was to take up private service. Got offers. My sister Latha (Austin, Texas) started professional reconfiguration of my resume so that I could get a high level job in the US.
But the church messages changed it all. I decided to stay on in the IAS.

Never in my life Iwould put my faith in any human being. I have learnt my lesson.

Over the two year period I have been going to Church, I have found a new face of Jesus. He is not only the kindest God but also a strong God when it comes to protecting His beloved ones. The more I heard about Him as the Lord of the Hosts (Leader of the armies), the more confident I grew. That I don’t need to do anything when a wrong is committed against me. Jesus would take the revenge. It is His role.

From August 2009, Jesus has been giving me promises. These are like covenants (agreements) to do or not to do certain things. I will indicate just two of them for your understanding.

So, when the Karuninidhi Government suspended me, there was no distress at home. When they filed false vigilance cases, we all smiled. Because, everyone at home knows that even 1000 Karunanidhis cannot do any damage to me or to any member of the family. That is the protection we got. Thanks to Jesus.

Mr.Karunanidhi is trying to eject me from IAS quoting that I am a Christian.

I am telling everyone that it is the very same Jesus who is going to do marvellous things and I would stand on top in the IAS not long from now.

Well, there is another side of Jesus as the LORD OF THE HOSTS.

Whoever attempts to intimidate His beloved children has to necessarily face the LORD OF THE HOSTS. It is not going to be a pleasant meet.

Jesus has already declared that He Loves me so much. He also told me that He would not allow even a strand of hair to fall from my head. I am happy that I discovered such a loving and powerful God.

I can only pity the people who have put me in this unpleasant circumstance. When terrible things happen, they will realize their sin.

My faith is only in God. Now you know why!

You all would have a valid question. Will I do e-governance in the future?

Yes, indeed. The difference is that I would not be disturbed from now onwards in the march to attain transparency in public administration.

Regards,
C.Umashankar IAS., (TamilNadu Cadre)
e-governance Specialist,
Chennai, Tamilnadu, India.

No comments:

Post a Comment