Thursday, July 24, 2014

மேல்விலாசம் - The Address மலையாளம்
உலக சினிமா வரளாற்றில் மிக மிக குறைந்த படங்களே படம் முழுக்க ஏதாவது ஒரே ஒரு இடத்தில் நடக்கும்படி கதை இருக்கும். இந்தப்படமும் அப்படித்தான் படத்தின் மொத்த காட்சிகளும் ஒரு மிலிட்டரி கோர்ட் அறையின் நான்கு சுவற்றுக்குள்ளும், அது மட்டுமல்லாது பெண்களே இல்லாத படம் (இரு காட்சிகளில் வரும் ஒரு பெண் குழந்தையை தவிற).

இன்னொன்று முக்கியமானது இது ரியல்டைம் படம் அதாவது படம் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் டைம் பெர்ஃபெக்ஷனோடு ஒரிஜினல் கால அவகாசத்தில் நடப்பவையாகும். அதாவது கோர்ட் விவாதத்தின் இடையில் விடப்படும் இண்ட்ரவல்களும் பத்து நிமிடமெனில் ரியல் டைமில் பத்து நிமிடமாகவும் அதற்க்குள் சில சம்பவங்களும் நடக்கும் படியாக எடுத்திருப்பார் இயக்குனர்.

ஒன்றரை மணி நேரமும் அந்த சிறிய அறைக்குள் இயக்குனர் நம்மைக்கட்டிப்போடுவது அதிசியம்தான். அதுவும் பார்த்திபன் நடித்த மலையாளப்படத்தில் கிட்டத்தட்ட கடைசி இரண்டுநிமிடம் வரை ஒரு வார்த்தையும் பேசாமல் ஆனால் அவரை மையப்படுத்தி நகரும் கதையின் இறுதியில் நம்மை அழவும் வைத்துவிடுகிறார் ரா பார்த்திபன்.


கதை இதுதான்...இரண்டு அதிகாரிகளை துப்பாக்கியில் சுட்டதாகவும் அதில் ஒருவர் இறந்துவிட பார்த்திபனுக்கு எதிராக ராணுவ கோர்ட்டில் விசாரணை பார்த்திபனுக்கு ஆதரவாக சுரேஷ் கோபி வாதாட எதிர்தரப்பு கேப்டன் அசோகனுக்காக நிழல்கள் ரவி வாதாட கோர்ட்டின் தலைமை நீதிபதியான கென்ரல் தலைவாசல் விஜயும் மற்ற நாங்கு பேரும்.

பார்த்திபனும் குற்றம் செய்ததை ஒப்புக்கொள்ள அந்தக்குற்றதிற்க்கான காரணத்தை கண்டறிய சுரேஷ் கோபி முயல்கிறார். பின்னர் இந்தியாவின் சாபமான உயர் ஜாதியின் ஒருவன் தன்னைவிட தாழ்ந்த ஜாதி கொண்டவை வன்மம் தீர்க்க செய்த சதிகள் அம்பலமானாலும் இறுதியில் அவருக்கு பதிவி உயர்வும் கொடுத்து ஆர்டர் வருகின்றது. பார்த்திபனின் நிலை என்ன? அவனின் வளர்ப்பு குழந்தையின் நிலையென்ன? எதற்காக இந்த துப்பாக்கி சூடு நடந்தது என்பதனை படத்தைப்பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

சூர்ய கிருஷ்ன மூர்த்தி எழுதிய கதையை வெறும் 15 நாட்களில் படமாக்கி இயக்குனர்  மாதவ் ராம்தாஸ் பல அவார்டுகளை குவித்திருந்தப்படம். இந்திய அரசாங்க ஊழியர்களின் அவலங்களையும், அராஜகங்களையும், உயர் ஜாதியினரின் அடக்குமுறைகளை இதைவிட எப்படி சொல்லுவது? அவர்களுக்கு துணைப்போகும் மற்றவர்களை என்ன சொல்வது?

முக்கியமாய் படத்தில் இருக்கும் சின்ன சின்ன டீட்டெய்லுகளும் அவர்கள் உபயோகப்படுத்தும் வார்த்தைகளும் அவர்களின் நடவடிக்கைகளும் கிட்டத்தட்ட நம்மை ஒரிஜினலான மிலிட்டரி கேம்புக்கே அழைத்துச்செல்கிறது. சபீபத்திய இந்தியப்படங்க்களில் இப்படியான டீட்டெய்ல் வேறு எந்தப்படத்திலும் நான் கண்டதில்லை.

வசனம் பேசாமல் கண்களை கலங்க வைக்கும் பார்த்திபன், கேள்விக்கணைகளால் வழக்கம்போல் துளைத்தெடுக்கும் சுரேஷ் கோபி, மிடுக்கான நீதிபதியாக தலைவாசல் விஜய் மற்றும் கேப்டன் அசோகன் நிழல்கள் ரவி என அத்தனைப்பேரும் துல்லியமாய் வாழ்ந்திருக்கிறார்கள் ஒரிஜினல் ராணுவத்தினராய்.

இந்தமாதிரியான எக்ஸ்பிரிமெண்ட்டல் படங்கள் அதிகம் வரவேண்டும். ரசிகர்களை படங்களை வெற்றியாக்கி கொண்டாடவேண்டும்.

ஒன்றை மணி நேரமே ஒடும் படம் உங்களை கோர்ட் அறைக்குள் கட்டிப்போடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

மேல்விலாசம் என்றால் முகவரி என்பது அர்த்தம். ஆமாம் இந்தப்படமும் நல்ல படத்திற்க்கான முகவரி.

No comments:

Post a Comment