Thursday, July 24, 2014

பிறவி பயன்!!!

நனைந்தது போதும்
உள்ளே வந்துவிடு
பேரழகிப்பெண்ணே

அப்போதுதான்...

நாளையும் வருவான்
உன் ஸ்பரிசம் தொட்டு
பிறப்பின் பயனை அடைந்து
கரைந்துப்போகப்போகும்
மழைக்கள்ளன்!!!

வேலையில்லாப் பட்டதாரி - தமிழ்மூன்று சுமாரான படங்களுக்குப்பின் தனுஷ் நிமிர்ந்திருக்கும் படம். நம் வீட்டில் இருக்கும் இரண்டு மூன்று பேரில் ஒருத்தராவது படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பார். அந்தமாதிரி திறமை மிகுந்த பட்டதாரியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் கதை.

அன்பான அம்மா சரண்யா, கொஞ்சம் கண்டிப்பான அப்பா சமுத்திரக்கனி, அம்மாஞ்சி தம்பிக்கு ஐடி கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை, ஆனால் அண்ணன் தனுஷுக்கு தனக்கு பிடித்த கன்ஸ்ட்டரக்க்ஷன் துறையில் (சிவில் எஞ்சினியரிங்) வேலை கிடைக்காதலால் மூன்று வருடமாக வீட்டில் பொறுப்பற்றத்தனமாக சுற்றித்திரிகிறார். பக்கத்து வீட்டில் புதிதாய் குடிவரும் அழகான அமலாபால் குடும்பம். தனுஷின் ஏதோ ஒன்று அமலாபாலை கவர இரண்டுபேரும் லவ்வுகிறார்கள். அப்படி லவ்வும்போது தனுஷின் அம்மாவிடமிருந்து போன் வர இரண்டு நாளுக்கு மேல் சிறிய பிரச்சினையால் அம்மாவிடம் பேசாமல் இருப்பதால் போனை அட்டெண்ட் செய்யாமல் போக மாரட்டைப்பால் இறந்துப்போகிறார் அம்மா சரண்யா.

திடீரென ஏற்ப்பட்ட இழப்பால் குடும்பம் தவித்துப்போக அம்மாவின் உடல் உறுப்பு தானத்தால் பிழைத்த பெண்ணின் அப்பா கன்ஸ்ட்ரக்க்ஷன் துறையில் தனுஷுக்கு வேலை கொடுக்க சில மாதங்களில் தனுஷ் வேலையில் மிளிர அவருக்கென்று கவர்ன்மெண்ட் பிராஜக்ட் டெண்டரில் கிடைக்க வேலையில் மும்முறமாகிறார். ஆனால் அதை எதிர்ப்பார்த்து ஏமாந்த அடுத்த பில்டர் (இள வில்லன்) தனுஷின் புராஜக்டை முடக்க அவருடன் கூட்டு சேரும் அரசியல்வாதி கிரண் என இரண்டாவது பாதியில் அதை தனுஷ் எப்படி முறியடிக்கிறார் என்பதே கதை.

அதில் இறுதியில் சோஷியல் நெட்வர்க்கிங் சைட் ஃபேஸ்புக் மூலம் இள எஞ்சினியர்களை திரட்டி சக்ஸஸ்ஃபுல்லாக புராஜக்டை முடிக்கிறார். வில்லனையும் சமாதானப்படுத்துகிறார். சரியான நேரத்தில் முகலிவாக்க கட்டிட விபத்தையும் எடிட்டிங்கில் சேர்த்திருப்பது சிறப்பு.

கிளைமாக்ஸுக்கு அரை மணி நேரம் முன் ஜாலியாக நகரும் படம் இறுதியில் கொஞ்சம் சீரியஸாகி சுபமாகிறது. வழக்கமான அம்மா சரண்யா, சீரியஸான அப்பாவாக சமுத்ரகனி, பக்கத்து வீட்டு அமலா பாலின் தமிழ் பட கலாச்சாரத்தை மீறாத வேலைக்குபோகாத பொறுக்கிப்பய்யனை காதலிக்கும் பெண்ணாகவும், இருபது நிமிடங்களே வரும் விவேக் அமைதியாய் பின்னுகிறார், அதே மாதிரி தமிழ் பட நியதிகளை மீறாத அழகான வில்லன் மற்றும் என் நண்பர் முரட்டு வில்லனாக கிரண் என நடித்தவர்கள் அனைவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். நல்லவேளை அம்மாவின் உறுப்புக்களை தானம் பெற்ற பெண்ணும் தனுஷை காதலித்து படம் வழக்கமான முக்கோணக்காதலை காட்டாமல் போனது நல்லது.

கதையில் மைனஸ் எனப்பார்த்தால் அவ்வளவு பெரிய புராஜக்டை வேலைக்கு சேர்ந்து ஆறுமாதமே ஆன தனுஷுக்கு கொடுப்பதும், இரண்டு ஃபுளோர் கட்டிய பிறகு இது என் பிளான் இல்லை என சொல்லி இடிப்பதும், முகனூல் மூலம் வந்தடையும் பல நூறு இள எஞ்சினியர்களைக்கொண்டு சடனாக பிராஜக்டை கட்டமுடியுமா என்பதும், ஒரே மாதிரியான டேன்ஸ் மூவ்மெண்ட், பாடல்களில் தனுஷின் சுமாரான ஆதிக்கம்...கடைசியில் வரும் மொக்கையான சிக்ஸ்பேக் சண்டை...இப்படியான சில மைனஸ்கள்.

இயக்குனர் வேல்ராஜ் தனக்கான வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார். வாழ்த்துக்கள்.

இந்தப்படம் நன்றாக ஓடுவதற்க்கு காரணம் படித்துவிட்டு வேலை கிடைக்காத தமிழ்நாட்டு எஞ்சினியர்கள்தான் என நினைக்கிறேன். வீட்டில் வெட்டியாக இருப்பதால் அவர்களுக்கான படத்தை வீக் டேய்சிலும் பார்த்து படத்தை நல்லாவே ஓட்டுகிறார்கள் தியேட்டர்களில். தனுஷ் மாதிரியான நல்ல எஞ்சினியர்களை இந்தியா இன்னும் எதிர்ப்பார்க்கிறது.

வேலை யில்லாப்பட்டதாரி - வாய்ப்பு கிடைத்தால் ஜமாய்க்கும் திட்டதாரி!!!

மேல்விலாசம் - The Address மலையாளம்
உலக சினிமா வரளாற்றில் மிக மிக குறைந்த படங்களே படம் முழுக்க ஏதாவது ஒரே ஒரு இடத்தில் நடக்கும்படி கதை இருக்கும். இந்தப்படமும் அப்படித்தான் படத்தின் மொத்த காட்சிகளும் ஒரு மிலிட்டரி கோர்ட் அறையின் நான்கு சுவற்றுக்குள்ளும், அது மட்டுமல்லாது பெண்களே இல்லாத படம் (இரு காட்சிகளில் வரும் ஒரு பெண் குழந்தையை தவிற).

இன்னொன்று முக்கியமானது இது ரியல்டைம் படம் அதாவது படம் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் டைம் பெர்ஃபெக்ஷனோடு ஒரிஜினல் கால அவகாசத்தில் நடப்பவையாகும். அதாவது கோர்ட் விவாதத்தின் இடையில் விடப்படும் இண்ட்ரவல்களும் பத்து நிமிடமெனில் ரியல் டைமில் பத்து நிமிடமாகவும் அதற்க்குள் சில சம்பவங்களும் நடக்கும் படியாக எடுத்திருப்பார் இயக்குனர்.

ஒன்றரை மணி நேரமும் அந்த சிறிய அறைக்குள் இயக்குனர் நம்மைக்கட்டிப்போடுவது அதிசியம்தான். அதுவும் பார்த்திபன் நடித்த மலையாளப்படத்தில் கிட்டத்தட்ட கடைசி இரண்டுநிமிடம் வரை ஒரு வார்த்தையும் பேசாமல் ஆனால் அவரை மையப்படுத்தி நகரும் கதையின் இறுதியில் நம்மை அழவும் வைத்துவிடுகிறார் ரா பார்த்திபன்.


கதை இதுதான்...இரண்டு அதிகாரிகளை துப்பாக்கியில் சுட்டதாகவும் அதில் ஒருவர் இறந்துவிட பார்த்திபனுக்கு எதிராக ராணுவ கோர்ட்டில் விசாரணை பார்த்திபனுக்கு ஆதரவாக சுரேஷ் கோபி வாதாட எதிர்தரப்பு கேப்டன் அசோகனுக்காக நிழல்கள் ரவி வாதாட கோர்ட்டின் தலைமை நீதிபதியான கென்ரல் தலைவாசல் விஜயும் மற்ற நாங்கு பேரும்.

பார்த்திபனும் குற்றம் செய்ததை ஒப்புக்கொள்ள அந்தக்குற்றதிற்க்கான காரணத்தை கண்டறிய சுரேஷ் கோபி முயல்கிறார். பின்னர் இந்தியாவின் சாபமான உயர் ஜாதியின் ஒருவன் தன்னைவிட தாழ்ந்த ஜாதி கொண்டவை வன்மம் தீர்க்க செய்த சதிகள் அம்பலமானாலும் இறுதியில் அவருக்கு பதிவி உயர்வும் கொடுத்து ஆர்டர் வருகின்றது. பார்த்திபனின் நிலை என்ன? அவனின் வளர்ப்பு குழந்தையின் நிலையென்ன? எதற்காக இந்த துப்பாக்கி சூடு நடந்தது என்பதனை படத்தைப்பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

சூர்ய கிருஷ்ன மூர்த்தி எழுதிய கதையை வெறும் 15 நாட்களில் படமாக்கி இயக்குனர்  மாதவ் ராம்தாஸ் பல அவார்டுகளை குவித்திருந்தப்படம். இந்திய அரசாங்க ஊழியர்களின் அவலங்களையும், அராஜகங்களையும், உயர் ஜாதியினரின் அடக்குமுறைகளை இதைவிட எப்படி சொல்லுவது? அவர்களுக்கு துணைப்போகும் மற்றவர்களை என்ன சொல்வது?

முக்கியமாய் படத்தில் இருக்கும் சின்ன சின்ன டீட்டெய்லுகளும் அவர்கள் உபயோகப்படுத்தும் வார்த்தைகளும் அவர்களின் நடவடிக்கைகளும் கிட்டத்தட்ட நம்மை ஒரிஜினலான மிலிட்டரி கேம்புக்கே அழைத்துச்செல்கிறது. சபீபத்திய இந்தியப்படங்க்களில் இப்படியான டீட்டெய்ல் வேறு எந்தப்படத்திலும் நான் கண்டதில்லை.

வசனம் பேசாமல் கண்களை கலங்க வைக்கும் பார்த்திபன், கேள்விக்கணைகளால் வழக்கம்போல் துளைத்தெடுக்கும் சுரேஷ் கோபி, மிடுக்கான நீதிபதியாக தலைவாசல் விஜய் மற்றும் கேப்டன் அசோகன் நிழல்கள் ரவி என அத்தனைப்பேரும் துல்லியமாய் வாழ்ந்திருக்கிறார்கள் ஒரிஜினல் ராணுவத்தினராய்.

இந்தமாதிரியான எக்ஸ்பிரிமெண்ட்டல் படங்கள் அதிகம் வரவேண்டும். ரசிகர்களை படங்களை வெற்றியாக்கி கொண்டாடவேண்டும்.

ஒன்றை மணி நேரமே ஒடும் படம் உங்களை கோர்ட் அறைக்குள் கட்டிப்போடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

மேல்விலாசம் என்றால் முகவரி என்பது அர்த்தம். ஆமாம் இந்தப்படமும் நல்ல படத்திற்க்கான முகவரி.

Thursday, July 17, 2014

Why Brasil Lost???Why Brazil lost to Germany? My view!!!

ஏன் பிரேசில் தோற்றது - அலசுவோம்

நான் ஒன்றும் கால்பந்தாட்ட வீரனல்ல. கடந்த கால கால்பந்தட்ட விளையாடுக்களை கண்டதின் மூலம் ஏற்ப்பட்ட சிறு அறிவு என வைத்துக்கொள்ளலாம்.

1. பிரேசில் தனது முதல் ஆட்டத்திலும், முக்கியமாக காலிறுதி ஆட்டத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டவில்லை. முந்தய பிரேசில் அணிகளை ஒப்பிடும்போது இது மிக சாதாரணமான அணியே.

2. கடந்த ஐந்து ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே நெய்மார் சிறப்பாக ஆடியிருக்கிறார். மற்ற ஆட்டங்களில் பிரேசிலின் ஆட்டக்காரர்களே நெய்மாருக்கு பந்தை பாஸ் செய்யவில்லை. இன்னும் நெய்மாருக்கு எக்ஸ்பீரியன்ஸ் தேவை அதற்க்குள் அவரின் மீது அத்தனை சுமைகளை ஏற்றியது பிரேசிலின் தவறு. அடுத்த உலககோப்பையில் கலக்குவார் என எண்ணுவோம்.

3. செமி ஃபைனலில் நெய்மார் மற்றும் சில்வா என இரண்டு முக்கிய வீரர்கள் இல்லாதது பிரேசிலுக்கு பின்னடைவே. மற்ற வீரர்கள் அவர்களின் இடத்தை நிரப்ப தவறிவிட்டனர்.

4. நெய்மாரும், சில்வாவும் இல்லாத குறையை கோச் முன்னதாக வேறுமாதிரி கையாண்டிருக்க வேண்டும். பிரேசில் வீரர்களுக்கு மனதளவில் ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்தியிருக்கவேண்டும். தவறிவிட்டார். ஓவர் கான்ஃபிடன்ஸில் ஆடத்தொடங்கிவிட்டனர் பிரேசில் ஆட்டக்காரர்கள்.

5. ஜெர்மனிக்கு எதிராக கேம் பிளே என சொல்லக்கூடிய ஆட்ட வியூகத்தை தவறாக கணக்கிட்டு ஆட இறங்கியது பிரேசில். 1:2:4:4 என்கிற ஆட்டமுறையில் சிறப்பான ஜெர்மானியின் முன் கள வீரர்களுக்கு இரண்டு தடுப்பு வீரர்களை மட்டுமே பிரேசில் அமைத்தது மிகப்பெரிய தவறு. அதுவும் பிற்பகுதி ஆட்டத்திலாவது இந்த வியூகத்தை மாற்றியிருக்கலாம்.

6. ஜெர்மனி அடித்த 7 கோல்களில் சுமார் 6 கோல்கள் பிரேசில் கோலியின் ஃபெனால்டி ஏரியாவுக்குள் குறைந்தது மூன்றுமுறையாவது பந்தை பாஸ் செய்து கடத்தி கோல் அடித்தனர். ஒரே ஒரு டைரக்ட் ஷாட் மூலம் மற்றொரு கோல் அடிக்கப்பட்டது. காரணம் பிரேசில் வீரர்களை பிரித்து ஏமாற்றி கோல் அடிக்கும் திறமையையும், ஒருவருக்கொருவர் பாஸ் செய்து டீம் வர்க் மூலம் கோலடிப்பதையும் மேற்க்கொண்டனர். இது நல்ல அட்டாக்கிங் பிளே ஆகும்.

7. கடந்தக்கால தோல்விகளை கணக்கில் கொண்டு ஜெர்மனி தன்னை தயார் படுத்தி இந்த முறை சேம்பியன் அணியை கேவலமாக தோல்வியுறச்செய்தது ஆச்சர்யமான உண்மை. ஜெர்மனியின் கன்ஸிஸ்டன்ஸி பாராட்டுக்குறியதே.

8. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ஜெர்மனி சரசரவென கோல்கள் அடித்து பிரேசலை தினறச்செய்ததால் மனதளவில் இவர்கள் பாதிக்கப்பட்டுவிட்டனர். அவர்களால் தொடர்ந்து சிறப்பாக ஆடமுடியவில்லை. இது ஜெர்மனியின் ஆட்ட வுயூகமே, முடிந்தவரை வேகமாக கோல் அடித்து முன்னிலை பெற்றுவிட்டால் எதிராளியை தாக்குவது சுலபம்.

9. சொந்த மண்ணில் அதுவும் எண்ணிலடங்கா டை ஹார்ட் ரசிகர்கள் முன் பிரேசிலுக்கு இவர்கள் காட்டிய கண்ணாமூச்சி விளையாட்டு அப்பாடா பல காலம் உலக மக்களால் மறக்க முடியாது.

10. என்னதான் உலக மக்கள் பிரேசிலின் தோல்வியை கண்டு வருத்தப்பட்டாலும் பிரேசிலில் ஸ்டேடியங்கள் கட்டவும், உலககோப்பைக்காகவும் வேறு இடங்களுக்கு அடித்து விரட்டப்பட்ட சொந்த மக்கள் இந்த ஆட்டத்தின் முடிவைக்கண்டு மகிழ்வார்கள் என்பதில் ஐய்யமில்லை.

For highlights :

https://www.facebook.com/photo.php?v=1494881080729321&set=vb.1384237698460327&type=2&theater

பிளாட் ந. 4பிFLAT NO. 4B - Malayalam

"ஒருவருக்கு உலகில் பிரச்சனை முடிந்து மீளும்போது, அந்த முடிந்துப்போன பிரச்சனை இன்னொருவருக்கு புதிய பிரச்சினையாய் தொடங்கும்"

சில படங்கள் சப்தமில்லாமல், பிரபலமான நடிகர்கள் இல்லாமல், மிகப்பிரமாண்டமான தயாரிப்பில் இல்லாமல் மக்கள் மனதை தொட்டு வருடிவிட்டுப்போகும். இந்தப்படம் அந்த வகை.

காதலித்து கல்யாணம் செய்து மூன்று குழந்தைகளின் பெற்ற நடுத்தர மனிதன் அதுவும் தன் பெரிய மகளுக்கு நடக்கும் துரதிஸ்டமான சம்பவத்தால் படும் பாடே இந்தப்படம். சிம்பிளான மேக்கிங், அலட்டல் இல்லை, பிரமாண்டம் இல்லை, பார்க்க டீஸண்ட்டான சீரியல் மாதிரி தெரிந்தாலும் அனைத்து நடிகர்களும் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையுடன் வாழும் காதல் குடும்பம். பெரிய மகள் வயதுக்கோளாரில் பணக்கார வாலிபனுடன் பழக அதை சாதகமாக்கி அந்தரங்கத்தை வீடியோப்பிடிக்கிறான். காதலனுடன் சென்ற அப்பார்ட்மெண்டில் வாட்டர் பியூரிஃபை கம்பெனியில் வேலை செய்த அப்பாவை செக்யூரிட்டியாக மகள் பார்க்க குடும்பத்தின் நிலை அறிந்து தன் காதலனை மறக்க சொல்ல அவனும் இவளின் அப்பார்ட்மெண்டில் இருக்கும் தனது "கே" காதலனுடன் அவளை விபச்சாரத்திற்க்கு தயாராக்க நினைக்க, அதிர்ச்சியில் அவளும் கையை அறுத்துக்கொண்டு ஆஸ்பிடலில் அட்மிட் ஆகிறாள். ஒரு நிலையில் பெண்ணின் அப்பா மகளுக்கு வரும் போன் காலை அட்டெண்ட் செய்து தங்களின் இயலாமையை சொல்லி தன் பெண்ணை விட்டுவிடும்படி கெஞ்ச அவன் மனம் மாறினானா? எந்தப்பெண்ணின் கதி என்ன என்பதே மீதிக்கதை.

சட்டென்று முடிந்துவிடும் கிளைமாக்ஸ் நம்மை அவ்ளோதானா என நினைக்கவைக்கிறது. கிளைமாக்ஸை இன்னும் கொஞ்சம் தெளிவாக காட்டியிருக்கலாம். அப்பாவாக பிரபலமில்லாத ரியாஸ் எம்.டி, மனைவியாக லக்ஷ்மி ஷர்மா, பெரிய மகளாக ஸ்வர்ணா தாமஸ்.

முக்கியமாய் படத்தில் நடிப்பால் எல்லோரையும் கவர்வது பெண்தன்மை கொண்ட ஆணாக வரும் ஸ்ரீஜித் ரவி. புண்ணியாளன் அகர்பத்தியில் டிரைவராக வந்தும் அசத்திய அவரேதான். நடிப்பில் தனிப்பரிணாமம். நான் இதுவரைப்பார்த்த நடிப்புகளில் இவரின் அந்த பெண்தன்மைக்கொண்ட நடிப்பே சிறந்தது என்பேன். கோபக்காட்சிகளில் ஆணாகவும், மற்ற நேரங்களில் பெண்ணாகவும் பின்னி பெடலெடுத்திருக்கிறார். இவர் தமிழிலும் நடிக்கவேண்டும். சமீபத்திய இவரின் படங்களால் இவரின் பயங்கர ரசிகன் நான்.

ஒரு டீஸண்ட்டான படம் நடுத்தர மக்களின் வாழ்வை, பெண்குழந்தைகள் வாழும் வீடுகளில் நடக்கும் பிரச்சனைகளையும் அதனால் வரும் பாதிப்புகளையும், அதிலிருந்து விடுபடும் வழியையையும் நன்றாக சொல்லிய இயக்குனர் கிருஷ்னஜித் விஜயனுக்கும், இசையால் நம்மை மகிழ்வித்த நிகில் பிரபாவுக்கும் முக்கியமாய் நடிகர் ஸ்ரீஜித் ரவிக்காகவே படத்தை இன்னொருமுறை கட்டாயம் பார்க்கலாம்.

பிரான்ச்சியேட்டன் அண்டு தி செயிண்ட்
படிக்காத தனக்கென்று தனியாக சமூகத்தில் சிறப்பான பெயரில்லாத ஆனால் அப்பாவின் சம்பாத்தியத்தில் உருவாக்கிய பிசினஸை பெரிய பிசினஸ் சாம்ராஜ்யமாக்கி நண்பர்களின் கூற்றுக்காகவும், புகழுக்காகவும் பத்மஸ்ரீ பட்டத்தை பணத்தால் வாங்கலாம் என்று சொல்ல... மம்முட்டியும் அவர்களின் நண்பர்களும் செய்யும் காமெடி கலந்த சம்பவங்களின் தொகுப்பை மம்முட்டி சர்ச்சில் புண்ணியாளன் அதாவது கடவுள் தூதன் பிரான்சிஸிடம் சொல்லும் பிளாஷ்பேக் கதையே இந்தப்படம். அவர் அவார்ட் வாங்கினாரா, கடவுள் அவருக்கு ஆதரவு கொடுத்தாரா  இல்லையா என்பதை திருச்சூரின் இழுப்பான பாஷையில் மம்முக்கா கலக்கியிருக்கும் படம் இந்த பிரான்ச்சியேட்டன் அண்டு தி செயிண்ட்.

பெயர் வெளியில் தெரியவேண்டும் என்பதற்க்காக சின்ன சின்ன உதவிகளை பெரிதாக்கி புகழுக்காக அலையும் மம்முட்டி, அவரை முட்டாளாக்கி காசை கரைக்கும் நண்பர்கள், கூடவே தனது பள்ளிகால எதிரியும் மம்முட்டியின் பள்ளிகால காதலி மம்முட்டியை ஏமாற்றிய குஷ்பூ, இரண்டாவது பாதியில் மம்முட்டிக்கு உதவிசெய்யும் பத்மஸ்ரீ எனும் பெயர் கொண்ட பிரியாமணி, நண்பர்கள் கூட்டத்தில் இன்னசண்ட் , டியூஷன் வாத்தியராக ஜெகதி என படத்தில் அததனைப்பேரும் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

2010ல் வெளியாகி சாதாரண படமாக கருதப்பட்டு ஸ்லீப்பர் ஹிட்டாகி பல கோடிகளை குவித்ததோடு நிறைய அவார்டுகளையும், நேஷனல் அவார்டையும் தட்டியப்படம். நாப்பதுகளில் வாழும் படிக்காத மற்றவர்களுக்கு உதவும் பிசினஸ்மேனாக மம்முட்டி, திருச்சூர் பாஷையில் தனது அனுபவத்தை காட்டியிருக்கிறார். நண்பர்களுக்காக உதவிசெய்வதிலும், அவார்டு மோகங்களில் தன்னை மறப்பதிலும், புகழுக்காக ஏங்குவதிலும், படிக்காத மாணவனை தன்னுடன் வைத்து அவனை பெரியாளாக்க நினைப்பதிலும் அவரின் பாத்திரத்தை சிறப்பாக படைத்திருக்கிறார்.

நண்பராக இன்னசண்ட் அவரும் மம்முக்காவுக்காக உண்மையிலேயே பாடுபட்டு அவரை பதவியில் உட்காரவைக்க முயலுவதிலும் அது நடக்காமல் போக அடுத்ததாக பத்மஸ்ரீ அவார்டுக்காக முயலுவதும் காமெடியுடன் இயல்பாய் நடித்திருக்கிறார்.

கொஞ்ச நேரமே வந்தாலும் பிரியாமணி நன்றாகவே செய்திருக்கிறார். ஆனாலும் அவரின் நடிப்புக்கு தீனி இந்தப்படத்தில் இல்லை.

முக்கியமாய் படமுழுக்க ஜீசஸாக வரும் வெளிநாட்டு நடிகர் (Jesse Fox Allen), மாஸ்ட்டர் கணபதி இருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

புதுமையான கதையில்லி, சஸ்பென்சான திரைக்கதை இல்லை, மனதை உருக்கும் கதையும் இல்லை ஆனால் இயல்பான ஒரு பணக்காரரின் கதையை இயக்கிய இயக்குனர் ரஞ்சித்தை வாழ்த்த வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன்.

பிரான்ச்சியேட்டன் அண்டு தி செயிண்ட் - கடவுளும், கடவுளான மனிதருக்கும் இடையேயான சம்பாஷணை.  

நாங்கள்!!!பிறந்த, வளர்ந்த கிராமங்களை விட்டு என்றுமே பிரியப்போவதில்லை
நாங்கள் உங்களுக்கு பொறுப்பற்றவர்கள்.

ஊரில் சாவு விழுந்தால் தூக்கவும், குழி வெட்டவும் நாலுபேராய் நாங்கள் வேண்டும்
நாங்கள் உங்களுக்கு பொறுக்கிகள்

விவசாயம் செய்யும் அப்பாவுக்கு ஒத்தாசையாய் தோட்டத்திற்க்கு உதவிக்கு ஓடுவோம்
நாங்கள் உங்களுக்கு தண்டச்சோறுகள்

ஆயிரம் இம்சைகள் செய்தாலும் அம்மாவுக்கு வலியெனில் கால்பிடித்து விடுவோம்
நாங்கள் உங்களுக்கு கழுதைப்பயலுகள்

கிராமத்து கல்யாண செய்திகளை சொந்தக்கார ஊர்களுக்கு நடையாய் நடந்து சொல்லிவருவோம்
நாங்கள் உங்களுக்கு மொள்ளைமாறிகள்

திருவிழாக்களில் பந்தக்கால் முதல், பந்திவரை இழுத்துப்போட்டு முகம் சுளிக்காமல் வேலைசெய்வோம்
நாங்கள் உங்களுக்கு முடிச்சவுக்கிகள்

பக்கத்துவீட்டு தாத்தா பாட்டிக்கு மாதம் இரண்டுமுறை ரேஷன் வாங்கி கொடுப்போம்
நாங்கள் உங்களுக்கு ஊர்மேய்பவர்கள்

வெளிநாட்டு மகனின் வெஸ்ட்டர்ன் யூனியன் டாலரை மாமாவுக்கு பணமாய் மாற்றிக்கொடுப்போம்
நாங்கள் உங்களுக்கு பன்னாடைகள்

ஊருக்கு ஒரு பிரச்சனையெனில் தைரியமாய் முன் நிற்ப்போம், முழங்கிடுவோம், ஒன்றிணைவோம்
நாங்கள் உங்களுக்கு பரதேசிகள்

ஊர்க்கார பொண்ணுங்களை அடுத்தவன் கேலிசெய்தால் அண்ணன்களாய் தட்டிக்கேட்போம்
நாங்கள் உங்களுக்கு பொம்பளைப்பொறுக்கிகள்

யானை நடமாட்டம் வந்தால் உயிர் பயமில்லாது பட்டாசு கொளுத்தி விரட்டி அடிப்போம்
நாங்கள் உங்களுக்கு எருமைமாடுகள்

தார் போடாமல் குண்டும் குழியுமான ரோட்டை மண் போட்டு சமமாக்குவோம்
நாங்கள் உங்களுக்கு குட்டிச்சுவருகள்

புதிதாய் ஊருக்குள் யார் நுழைந்தாலூம் விசாரித்து வழி காட்டுவோம்
நாங்கள் உங்களுக்கு பண்டாரங்கள்

ஊர்க்கார நண்பன் வெளினாட்டுக்கு போனாலும், வந்தாலும் வழியனுப்பிவைப்போம் வரவேற்ப்போம்
நாங்கள் உங்களுக்கு ஓசி சோறுக்கு அலையும் ஜென்மங்கள்

ஊர்குழந்தைகளை சாப்பாடு தின்ன பூச்சாண்டிகளாய் நாங்கள் கைகாட்டப்படுவோம்
நாங்கள் உங்களுக்கு படிக்காத முட்டாபயல்கள்

உங்கள் பிள்ளைகளை அடிக்கும்போது எங்களை நாய்கள் மாதிரி உதாரணம் காட்ட நாங்கள் இருப்போம்
நாங்கள் உங்களுக்கு தடிமாடுகள்

பெருசுகளின் மூடநம்பிக்கை, சாதி மத சண்டைகளை இளசுகள் நாங்கள் கண்டுக்கொள்வதில்லை
நாங்கள் உங்களுக்கு முந்திரிகொட்டை முட்டாப்பசங்க

ஆயிரம் சொன்னாலும் நாங்கள் கோவிக்கப்போவதில்லை, வருத்தப்படவும் போவதில்லை - காரணம்
நாங்கள் இல்லையெனில் ஊரும் இல்லை, ஏன் நீங்களும் இல்லை

எங்கள் ஊர்மக்கள் எங்களை சாகும்வரை வெறுத்தாலும்
எங்கள் ஊரை நாங்கள் வாழும்வரை நேசிப்போம்!!!
ஷட்டர் - மலையாளம்
Shutter - Malayalam Movie

ஷட்டர் - மூடிய அறைக்குள் திறக்கும் மனசு!!!

12வது படிக்கும் மகளை அவள் காதலித்துவிடுவாளோ என்று நிக்கா செய்ய அவசரப்படும் அப்பா ரஷீத் என்கிற லால். நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும்போது ஆட்டோடிரைவர் நண்பரின் விபச்சாரி சம்பவம் பற்றி கேள்விப்பட்டு மது தீர்ந்ததால் மீண்டும் வாங்க ஆட்டோவில் செல்ல, இன்னொருபுறம் மிகச்சிறந்த இயக்குனாரான ஸ்ரீனிவாசன் சூப்பர்ஸ்டாரின் கால்ஷீட்டுக்காகவும், அப்பாயிண்ட்மெண்டுக்காகவும் அலையும்போது அந்த ஆட்டோரிவரின் ஆட்டோவில் பையில் நிறைய முக்கியமான பேப்பர்களையும் விட்டுவிட்டு மறந்துச்செல்ல...

மது வாங்கிவிட்டு வரும்போது ரோட்டில் ஒரு விபச்சாரியை சந்திக்கிறார்கள், லாலுக்கு சபலம் வர ஆட்டோடிரைவரிடம் சொல்லி நடு இரவில் லாலின் வீட்டுக்கு அருகில் இருக்கும் அவரின் கொடவுன் அறைக்குள் புகுந்து சாப்பாடு வாங்க வெளியே வரும் ஆட்டோடிரைவர் வெளியில் ஷட்டரை பூட்ட, சாப்பாடு வாங்கி வரும்போது அந்த இயக்குனரை பார்த்து பேகை திருப்பிக்கொடுக்கப்போகும் சந்தோஷத்தில் இருவரும் மது அருந்த போலீஸில் மாட்டிக்கொள்கிறார்கள். ஆட்டோடிரைவர் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து லாலின் மொபைல் வீட்டில் இருப்பது தெரியாமல் உளறிக்கொட்டிவிடுகிறார்...அந்த பக்கம் போன் எடுத்தது யார் என்பது சஸ்பென்ஸ். இயக்குனரும் தன் காதலியுடன் பேசுகிறார் பணம் வேண்டி.

அறையின் உள்ளே இருக்கும் விபச்சாரிக்கும், லாலுக்கும் ஓர் இரவு மற்றும் அடுத்த நாள் இரவு வரை நடக்கும் சம்பவங்கள், அடுத்தநாள் போலீஸ்டேஷனிலிருந்து வெளியே வரும் சுயமாக சிந்தித்து செயல்படாத ஆட்டோடிரைவர் ஷட்டருக்கு வெளியே கூட்டத்தைப்பார்த்து அசம்பாவிதம் நடந்துவிட்டதாக இயக்குனரிடம் ஐடியா கேக்கப்போக...

இறுதியில் அடுத்த நாள் இரவு ஷட்டர் திறக்க விபச்சாரியும் லாலும் வெளியே வருகிறார்கள். பின்னர் ஷட்டரை திறந்தது யாரென்று அறியாமல் கடைசிக்காட்சியில் திரை விலகும்.

படத்தில் பொதுவாக வெளித்தோற்றத்தையும், செய்யும் தோழிலையும் வைத்து யாரையும் எடைப்போடக்கூடாது என்பதும் அந்த ஷட்டரின் உள் நடக்கும் படிப்படியான மாற்றங்களும் இறுதியில் நடக்கும் இனம்புரியாத அன்பு பரிமாற்றங்களும் படம் பார்ப்பவர்களை கைத்தட்ட வைக்கும்.

அந்த இயக்குனரின் காதலி யார் என்பதை கடைசியில் காட்டி நம்மை கதையின் ஓட்டத்தில் வியப்பளிப்பார் இயக்குனர் ஜாய் மேத்யூ. இவர் நாடகத்துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர். அதனால் கதையில் நிறைய ஆச்சர்யங்களையும், கதையின் நடையில் வித்தியாசத்தையும் காணலாம். உலக அளவில் நடக்கும் பல சினிமா திரையிடல்களில் அவார்டுகளை குவித்தப்படம்.

ரஷீதாக லாலும், இயக்குனராக ஸ்ரீனிவாசனும், ஆட்டோ டிரைவராக வினய் போர்ட், விபச்சாரியாக சஜீதா மண்டத்தில், ரஷீதின் மகளாக ரியா சாய்ரா என அனைவரும் தங்களின் பகுதியை அருமையாக செய்துள்ளனர். லாலின் நடிப்பில் அதிக முதிர்ச்சி, விபச்சாரியாக நடித்தவர்க்கும் ஒரு ஓ போடலாம்.

கொஞ்சம் ஸ்லோபேஸ்டு சீரியஸ் கதைகளை விரும்புவோர் கட்டாயம் காணலாம் இந்த ஷட்டர்.

ஷட்டர் - மூடிய அறைக்குள் திறக்கும் மனசு!!!

வான் காதல்!!!இந்த
நிலவுக்காதலிக்கு
அறிவே இல்லை...

தினமும்
தாமதமாய் வந்து
சூரியக்காதலனை
முகம் சிவக்க
அனுப்பிவிடுகிறதே!!!

#LoveTips 1 to 10

#LoveTips 1

பெண்களிடம் நீங்கள் ஸ்மார்ட் என்று பேர் வாங்க ஒரு ஐடியா நான் சொல்லட்டுமா???

எல்லாவற்றையும் தெரிந்தாமாதிரி பெண்கள் முன் காட்டிக்கொள்ளாதீர்கள்.
எல்லாவாற்றையும் அவர்களிடமிருந்து தெரிந்துக்கொண்டமாதிரி காட்டிக்கொள்ளுங்கள்.

அப்புறமென்ன...நீங்கதான் அவர்களின் ஹீரோ!!!

ரொம்ப சிம்பிள்.

#LoveTips2

பெண்களை காதலிக்க அல்லது பிரண்ட்ஷிப் புடிக்க நீங்கள் பைக் ஓட்டவேண்டும், கார் வைத்திருக்க வேண்டும், ஆறடிக்கு மேல் உயரம் இருக்கணும், நுனி நாக்கில் இங்கிளீஷ் பேசணும், செலவு செய்யணும் அல்லது செம ஸ்மார்ட்டா இருக்கணும்னு அவசியமில்லை

உங்களிடம் பெண்கள் பாதுகாப்பை உணர்ந்தால் போதும். நீங்கள் அருகில் இருக்கும்போது சேஃப்டியா ஃபீல் பண்ணனும்.

அதுபோதும் நீங்கள் தான் அவர்களின் பெஸ்ட், உள் புற தோற்றத்தில் நீங்கள் எப்படியிருந்தாலும் பரவாயில்லை.

#LoveTips3

முதன் முறை பெண்ணை அழைத்துக்கொண்டுப்போகும்போது உங்க பர்ஸ் கனமா இருந்தா போதும்.

இரண்டாவது முறையிலிருந்து உங்க பர்ஸ் அவர்களுக்கு தேவையில்லை. உங்களுக்காக அவர்களின் பர்ஸ் கனமாக ஆரம்பித்துவிடும்.

காரணம் நீங்கள் அவரின் பெண் நண்பிகளின் முன் ஸ்மார்ட்டாக இருக்கவேண்டி அவர்களே செலவு செய்வார்கள்.

இருக்கவே இருக்கு புக்கு வாங்கணும், டுயூஷன் ஃபீஸ், புராஜக்ட் செய்யணும் என்று பொய் சொல்லி அவர்களுக்கு புரஷைவாக்கத்திலும் டி நகரிலும் 100 ரூபாய்க்கு பிளாட்பார கடையில் டாப்ஸ் வாங்கி உங்களுக்கு அலன் சோலி, பீட்டர் இங்ளேண்ட் வாங்கித்தருவார்கள்.

பெண் நண்பிகள் கிடைப்பது பாக்கியம்.

#LoveTips4

கஷ்டப்பட்டு, பாடுபட்டு, போராடி ஒரே ஒரு கேர்ள் பிரண்ட் மாத்திரம் கண்டுபிடிச்சு நட்பானா போதும்.

அடுத்தநாள் முதல் உங்களின் கீழ் எம்எல்எம் மாதிரி அவளின் நண்பிகள் எல்லோரும் ஜாய்ன் செய்துக்கொண்டே இருப்பார்கள் உங்கள் நட்பு வட்டத்தில். நண்பியின் நண்பி, நண்பியின் நண்பியின் நண்பி, நண்பியின் நண்பியின் நண்பியின் நண்பி....இப்படி

சொல்லமுடியாது...அவளை விட நல்ல ஃபிகர் உங்களுக்கு நண்பியாக மாட்டி ஒரே நேரத்தில் திரிஷா, திவ்யா என கிடைக்க வாய்ப்பிருக்கு. அது உங்க சாமார்த்தியம்.

#LoveTips5

உங்களின் காதல் பயணம் ஸ்டிராங்கான பாம்பன் பாலம் மாதிரி இருக்க...

காதலி உங்களை சார்ந்து எதைக்கேட்டாலும் இல்லை என்று சொல்லுங்கள் அல்லது அவளையும் இணைத்து பதில் சொல்லுங்கள்...

சாப்டீங்களா?

உன்னைப்பார்க்காம பசி இல்லை

தூங்குனீங்களா?

உன்னையே நினைச்சதால தூக்கம் வரல

படிச்சீங்களா?

புக்க பார்த்தாலே உன் முகதாஅன் தெரியுது...

.......................

.........................

இப்படியே கண்ட்டினியூ பண்ணி ஜமாய்ங்க

#LoveTips5

அடிக்கடி ஏதாவது முட்டாள்தனம் செய்து காதலியை அழவையுங்கள்

உடனே தேடிவந்து ஆறுதல் சொல்லுங்கள்.

குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுற கதைதான்.

உங்கள் ஆறுதல் அவளை உங்களுடன் நெருக்கமாக்கும்.

முடிந்த வரை அட்வைஸ் செய்து அவளை வெறுப்படைய வைக்காதீர்கள். சும்மா "உச்" கொட்டினால் போதும். ஆனா முகத்தை அவளை விட சோகமா வெச்சிக்க தெரிஞ்சிருக்கணும்.

#LoveTips6

உங்கள் இருவரின் எந்த வித விவாதங்களிலும் இரண்டுபேரும் பங்கு பெறணும்.

ஆனால் முடிவு உங்கள் காதலியின் கருத்தாகவே இருக்கணும். அவள் சொன்னதுதான் ஃபைனல்...நோ அப்பீல் பிளீஸ்.

அப்படிசெய்தால் நீங்கள் தான் அவளின் அப்பாவை விட முக்கியமானவர்.

#LoveTips7

நண்பியை காதலியாக்க அந்த பெண்ணிடம் நீங்கள் தான் முதலில் புரபோஸ் செய்யணும்.

காதலி உங்களுக்கு மனைவியாக அவர்களே புரபோஸ் செய்வார்கள்.

அதன் முடிவை ஆண்களிடமே விட்டுவிடுகிறேன்.

#LoveTips8

காதலிக்க முக்கியமான மூன்று குணம் ஆண்களுக்கு அவசியம் வேண்டும்.

அடிக்கடி காதலியை புகழணும்

அடிக்கடி அடிக்கடி காதலியை ரொம்ப புகழணும்

அடிக்கடி அடிக்கடி அடிக்கடி காதலியை பயங்கரமா புகழ்ந்துகிட்டே இருக்கணும்.

#LoveTips9

காதலியின் மொபைலுக்கு யார் போன் செய்தாலும், மெசேஜ் வந்தாலும் அது யார்? என்ன விஷயம்? என்று நீங்கள் கேட்கவே கூடாது. முக்கியமா அவளின் சுதந்திரத்தில் நீங்கள் தலையிடவே கூடாது.

ஆனால்...உங்களின் மொபைலுக்கு கால், மெசேஜ் வந்தா உடனே சொல்லிடுங்க.

அதற்க்கும் ஒரு ஐடியா...

உங்களுக்கு பல நண்பிகள் இருக்கும் பட்சத்தில்...

கமலா வை கமலக்கண்ணன் எனவும்

விமலாவை விமலநாதன் எனவும்

உங்களின் ஃபோன் காண்டேக்டில் சேவ் செய்து வைக்கலாம்.

#LoveTips10

காதலிகளை பெண் நண்பியை தொட முயற்சிக்காதீர்கள்.

ஆனால் அதற்க்குபதிலாக...

யாருமில்லாத தியேட்டரில் ஹாரர் பார்க்க கூட்டிப்போலாம்
ரங்கநாதன் தெருவில் வீக்கெண்டில் கூட்டிப்போலாம்
காலேஜில், ஆபீஸில் பல்லி கரப்பான் பூச்சிகளை காட்டலாம்

நீங்கள் முயற்சிக்க வேண்டாம்... அவர்களே உங்களை இருக்கப்பிடித்துக்கொள்வார்கள்.

உண்மை காதலுக்கு ஏது முடிவு???
என்னை காதலிக்க சொல்லி 2000 ஆம் ஆண்டில் இம்சை செய்து இரண்டுமாதம் என்னை பின் தொடர்ந்தாள் ஒருவள். அவளின் காதல் வெறும் இன்பாக்ஷுவேஷன் என்பதை அறிந்து அவளுக்கு புத்தியூட்டினேன்.

ஆயிரம் முறை சொல்லியும் நான் மறுத்தும் விடாமல் துரத்தி, தன் காதலை நிரூபிக்க கையையும் கொஞ்சம் பிளேடால் அறுத்துக்கொண்டாள், கண்ணீரில் நனைந்தாள் என்முன்னே. அந்த விபரீதம் கண்டு அதிர்ந்த என்னையும்  ஒரு நாள்  "ஐ லவ் யூ" சொல்லவைத்தாள் அவள்.

அந்தக்கன்னிக்காதல் வெறும் இரண்டு வாரம்தான் நீடித்தது. முதலில் அவள் காதலை மறுத்த நான் அந்த இரண்டுவாரத்தில் என்னுள் அவளை நிரப்பினேன். எங்குபார்த்தாலும் அவள் தெரிந்தாள், என்னை முழுவதும் ஆட்கொண்டாள்.

ஒருநாள்...சட்டென்று என் காதலை அவள் முறித்துவிட காரணம் அவள் குடும்பம் என்றாள்.

மனம் குலைந்து உடல் மெலிந்தேன்.

அவள் காதலை கழட்டிவிட்டதோடு விட்டிருக்கலாம்...

ஆனால்....

நீ என்னில் இல்லை...இனி என்னுள் வரவும் முடியாது. உன்னை வெறுக்கிறேன் என் முன் நிற்காதே என்றும் சொன்னாள்.

நானும் விலகினேன். அடுத்த மூன்று மாதத்தில் என் கண் முன்னே இன்னொருவனுடன் சுற்றினாள். வேண்டும் என்றே என்னை வெறுப்பேற்றினாள்.

நானும் அவள் வாழ்க்கை சுகமாய் இருக்க பிரார்தித்தேன். ஆனால் இன்னொருவனை காதலித்தப்பின்னும் என்னை பற்றி அவதூறுப்பரப்பினாள். பொறுத்துக்கொண்டேன். அடிக்கடி என்முன்னே அவனுடன் சுற்றினாள் அல்லது நடித்தாள்.

ஒரு அதிகாலை வேளை அடையார் மலர் ஆஸ்பிடல் முன் பஸ்ஸில் வந்துக்கொண்டிருந்தேன். எனக்கு முன் ஒரு பயங்கரமான விபத்து..ஸ்கூட்டரில் போன ஒரு அப்பாவும், மகளும் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாய் சொன்னார்கள்.

ஓடிச்சென்று எட்டிப்பார்த்தேன் காப்பாற்றலாம் என்று எண்ணி.

அடிப்பட்டவர்களை பார்த்தப்பின் தூக்கிவாறிப்போட்டது. அது அவளும் அவளின் அப்பாவும்.

நான்குப்பேராய் தூக்கி சென்று ஆஸ்பிடலில் சேர்த்தோம். உடனடியாக ரத்தம் தேவை என்றார்கள். நண்பர்களுக்கு போன் செய்து ஆஸ்பிடலில் என்னுடன் வேலைப்பார்ப்பவள் என்று சொல்லி ஆபரேஷனுக்கு ஆவன செய்தேன். அவள் குடும்பத்திற்க்கும் தெரிவித்தேன். என் முகத்தை கடைசிவரை காட்டவில்லை. ஐசியூவில் கதவுக்குப்பின் இருந்து கலங்கினேன்.

ரத்தம் கொடுத்தேன். அதுவும் என் இரத்த குரூப்தான் அவளுக்கும். நான் ரத்தம் கொடுத்ததை அவளுக்கு சொல்லவேண்டாம் என்று நண்பர்களிடம் சத்தியம் வாங்கினேன்.

நலமுற்றாள், மீண்டும் ஆபீஸ் வந்தாள். நான் ரிசைன் செய்து வேறிடம் சென்றேன்.

என்னை வெறுத்தவள் என்னை வேண்டாம் என்றவள் என் கண் முன்னே நிற்க்காதே என்றவள், என் ரத்தத்தை சுமக்கிறாள். காலம் பூராவும் என் இரத்தத்தை சுமப்பாள். அதிலென் காதலும், அவள் மேல் நான் வைத்த அன்பும் அவளின் உடல் முழுக்க பரவி சுற்றிக்கொண்டே இருக்கும். அவள் உயிர்வாழும்வரை என் நினைவுகளாய் அதில் நானும் சுற்றிக்கொண்டிருப்பேன் அவளுக்கு தெரியாமலே!!!

ஒருநாள் என் காதல் அவளுக்குப்புரியும் அப்போது நானும், அவளும் இன்னொருவருக்கும், இன்னொருத்திக்கும் சொந்தமாயிருப்போம். காதல் மட்டும் எங்களுக்குள் ஓரமாய் துடித்திக்கொண்டிருக்கும் எங்கள் இதயத்தைப்போல்.

சத்தியமா இது கதையேதான்!!!


மூங்காரு மளே (பருவமழைக்கு முந்தைய மழை) - கன்னடம்Mungaru Male - Kannada Movie Review

முதன் முதலாக ஒரு கன்னட ரிவியூ. 2006ல் ஐதராபாத்தில் வேலையில் இருந்தபோது வெளிவந்த படம். எனக்கு தெரிந்து பல காலம் கழித்து கன்னட படம் ஒன்று ஐதராபாத்தில் வெளிவந்தது இதுவாகத்தான் இருக்கும். ஆனால் என் அதிர்ஷ்டம் படத்தை பாதியில் விட்டுவிட்டு வரவேண்டியதாகிவிட்டது...கிளையண்ட்டுக்கு ஃபைல் அப்லோடிங்கில் ஏற்ப்பட்ட எரரால் புராஜக்ட் மானேஜராகிய என்னை கூப்பிட்டத்தால் படத்தை பார்க்காமலே சென்றுவிட்டேன். வேலையை ரிசைன் செய்ய இந்தப்படத்தை பார்க்க முடியாமல் செய்ததும் ஒரு காரணம் என்றால் அது மிகையில்லை.

சிலபடங்கள் நம்முடன் பல நாட்கள் நினைவில் தங்கியிருக்கும். படம் வந்து 8 வருடங்கள் ஆனாலும் எனக்கு பிடித்த 10 படங்களில் இதுவும் ஒன்று எனச்சொல்வேன். சாதாரண சீரியல் ஆக்டராக இருந்த கனேஷின் இரண்டாவது படம் அவரை கன்னடத்தில் எங்கோ கொண்டுச்சென்றப்படம். ராஜ்குமாரின் வாரிசுகளையும், உபேந்தரா, சுதீப் மற்றும் தர்ஷன்களை ஒரே இரவில் வயிற்றில் புளியை கரைத்தப்படம். கன்னட படங்களில் மிகப்பெரிய வசூலை ஒரு சாதாரண ஹீரோவுக்கு கொடுத்து இன்று கணேஷ் உச்சத்தில் இருக்க காரணமான படம்.

இந்தியாவில் வெளிவந்த எல்லாப்படங்களிலும் முதன் முதலாக மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் 500 நாட்கள் தொடர்ந்து ஓடி சாதனை செய்தப்படம். ராஜ்குமாரின் மகன் புனீத் ராஜ்குமாருக்காக எழுதப்பட்டு அவர் கதைசரியில்லை என ஒதுங்க வெறும் 75 லட்சத்தில் கணேஷை வைத்து எடுக்கப்பட்டு சுமார் 80 கோடிகள் அள்ளியப்படம். படத்தில் மூன்று முக்கியமான விஷயங்கள் ஒன்று கர்நாடகத்தின் மடிக்கீரே மற்றும் ஜோக் ஃபால்சின் அழகும், இரண்டாவது படமுழுக்க பெய்யும் மழையும் ஹீரோ கூடவே வரும் தேவதாஸ் என்கிற முயலும் ஹா ஹா கொள்ளை அழகு. படத்தின் எல்லாப்படல்களும் மிகப்பிரபலம்.

சரி கதைக்கு வருவோம்...

முதல் காட்சியில் பணக்காரரான ஹீரோ கணேஷ் பெங்களூரின் மாலில் ஒரு அழகான பெண்ணை (பூஜா காந்தி) சந்திக்கிறார்...தவறுதலாக அவளைப்பார்த்துக்கொண்டே திறந்துக்கிடக்கும் சாக்கடையில் விழ அந்தப்பெண் கணேஷை கைக்கொடுத்து காப்பாற்ற தவறுதலாக அவளின் கடிகாரத்தை விட்டுச்செல்கிறாள். தன் அம்மாவின் உயிர்த்தோழியின் மகள் கல்யாணத்திற்க்கு... அம்மாவுடன் ஒரு வாரம் முன்னதாகச்செல்ல அங்கே அவன் பார்த்தப்பெண்தான் மணமகளாய் இருக்கிறாள். முதலில் கணேஷை வெறுக்கும் பூஜா பின்னர் அவனை காதலிக்கத்தொடங்க, மகளின் காதலை அறிந்து கணேஷிடமே மணமகளின் அம்மா மகள் யாரையோ காதலிக்கிறாள் என அழுது மகளின் மனசை மாற்றி கல்யாணத்திற்க்கு சம்மதம் வாங்கிக்கொடு என கையேந்துகிறார், மணப்பெண்ணின் மிலிட்டரி அப்பாவின் உயிரை காப்பாற்றிய சோல்ஜர் கௌதம்தான் மணமகன் என அறிந்து அவர்கள் யாருக்கும் பிரச்சனை கொடுக்காமல் சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப் ஆகிறார் ஹீரோ, பின்னர் கல்யாணம் நடந்ததா கணேஷின் நிலை என்ன என்பதே மனதை உருக வைக்கும் கிளைமாக்ஸ்.

இடையில் காமெடி, சஸ்பென்ஸ், பிரமாண்டமான மலைப்பள்ளத்தாக்கு, இயற்கை கொஞ்சும் கர்நாடகா முக்கியமாய் மனதை வருடும் ஆறு பாடல்கள் என படம் இன்றுப்பார்த்தாலும் நீங்கள் ரசிப்பீர்கள்.

படத்தின் மிகப்பெரிய மைனஸ் நாயகி பூஜா காந்தி. கொஞ்சம் வயதான தோற்றம், அழகும் நடிப்பும் அவ்வளவாக கவரவில்லையெனினும் படத்தை முழுக்க முழுக்க தூக்கி நிறுத்தி ஸ்கோர் செய்வது கணேஷ்தான். சிறிய பட்ஜெட் படம் என்பதால் பிரபல நடிகைகளும் நடிக்க முன்வராததால் மும்பையிலிருந்து பூஜா காந்தி. அனந்த நாக் நாயகியின் அப்பாவாக சிறப்பாக செய்திருக்கிறார். இயக்குனர் யோக்ராஜ் பட்டுக்கு ஆயிரம் பூக்கள் வாழ்த்துக்களாய்.

உண்மைக்காதல் என்பது சேர்வதல்ல, விட்டுக்கொடுத்தல்!!! என்கிற வரிகளை படித்துவிட்டு தியேட்டரை விட்டு கண்ணீருடன் வந்த மக்களைப்பார்த்தாலே தெரியும் இந்தப்படம் எப்படி வென்றது என்று.

முடிந்தால் டோரண்ட் டவுன்லோட் செய்து பாருங்கள். சப்டைட்டிலுடன் டோரண்ட் உண்டு.

மூங்காரு மளே - மழையில் கரைந்த உண்மைக்காதல்!!!