Monday, June 9, 2014

கோச்சடையான்!!!கோச்சடையான்!!!

2005 ல் தொடங்கப்பட்டு 2014 வந்திருக்கும் சவுந்தர்யாவின் திரீடி மோஷன் கேப்சர் படம்.

அதற்க்கு முன் சில விளக்கங்கள்...

படம் டைட்டில் போடுவதற்க்கு முன் ரஜினியைப்பற்றியும், இந்த படத்தைப்பற்றியும் சில தகவல்களை சொல்லுவார்கள். அவைகள் வெறும் படத்தின் விளம்பரத்திற்க்காக மட்டுமே...அதை அப்படியே நம்பிவிடவேண்டாம்.

அதில் கூறப்பட்ட இரண்டு முக்கியமான திரித்துக்கூறப்பட்ட விஷயங்கள்...

1. இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் படம் இதுவாம் (முதல் முழுநீள மோஷன் கேப்சர் படம் என்று வேண்டுமானால் சொல்லலாம்)

2. ரஜினியின் கடின உழைப்பில் உருவான படம் (ரஜினியின் கால்ஷீட் நாலே நாளு நாள்தான்)!!!

சரி படத்திற்க்கு வருவோம்

முதலில் இந்த படத்திற்க்கு விமர்சனம் எழுத நினைத்தபோது இரண்டை மட்டும் மனதில் வைத்து தைத்துக்கொண்டேன். என் 15 வருட அனிமேஷன் அனுபவத்தை வைத்து இந்த படத்தை விமர்சனம் செய்யக்கூடாது, இன்னொன்று சாதாரண ரசிகனைப்போல் படத்தை விமர்சனம் செய்யவேண்டும். முடியுமா என்பது தெரியவில்லை முயற்சிப்போம்.

நாட்டுக்காக உயிர் துறந்த அப்பாவின் ஆசையை பூர்த்தி செய்யும் ராணா எனும் வீர மகனின் கதை. ஆற்றில் அடித்துவரப்படும் சிறுவனை காப்பாற்றுகிறார்கள் அவன் நாளடைவில் வளர்ந்து சிறந்த போர்த்தளபதி ஆகிறான். கலிங்கத்தின் மீது போர்தொடுக்க மன்னனிடம் ஆதரவு வாங்கி போர்த்தொடுக்க அந்நாட்டில் அடிமைகளாய் இருந்த கலிங்க மக்களை மீட்டு அவர்கள் நாட்டின் மீதே போர்தொடுக்க அது ராணா தன் மக்களை விடுவிக்க செய்த சூழ்ச்சி என்பது மன்னருக்கு (ஜாக்கி ஷெராஃப்) தெரியவருகிறது. அவரும் கோபம் கொள்கிறார்

இதனால் கலிங்கமன்னனின் (நாசர்) அன்பையும், இளவரசனின்(சரத்குமார்) நம்பிக்கையையும் பெறுகிறான். இளவரசியையும்(தீபிகா) காதலிக்கிறான். கடைசியில் தன் அப்பாவைக்கொன்ற (கோச்சடையான் பிளாஷ்பேக்) கலிங்கத்து அரசனை பழிவாங்கி வாகை சூடுகிறான்.

நல்ல கதை கே எஸ் ரவிகுமார் இரண்டாவது பாதியில் சுவாரஸ்யமாக்குகிறார். வஞ்சம், ஏமாற்றம், வீரம், காதல், பாசம் என அத்தனையையும் சம விகிதத்தில் கலந்துக்கொடுத்திருக்கிறார். படத்தில் இரண்டாவது பாதியின் பல வசனங்கள் அருமை.

இசை ரஹ்மான், நல்லாவே செய்திருக்கிறார். பல இடங்களில் பேக்ரவுண்டு ஸ்கோர் அதிருவது அழகு.

இயக்குனார் சவுந்தர்யா, முதல் படைப்பில் மோசம் போகவில்லை. ரஜினிக்கு ஏற்ற கதை. இந்திய அனிமேஷன் துறையை உலக அளவில் எடுத்துச்செல்ல பாடுபட்டிருக்கிறார். ராணாவை விட கோச்சடையான் கேரக்டரின் டெக்னிகல் விஷயங்கள் கொஞ்சம் பெட்டராக இருக்கின்றது. நாகேஷ் அவர்களின் கலக்கல் எண்ட்ரி பாராட்டப்படவேண்டிய விஷயம்.

கதையில் காணாமல் போகும் இளவரசன் சரத்குமார், கிளைமாக்ஸில் மட்டும் வரும் ராணாவின் இன்னொரு சகோதரன், ராணா இளவரசி ஒட்டாத காதல் என ஆங்காங்கே லூப் ஓல்ஸ்.

படத்தின் டெக்னிகல் விஷயங்களை அலச நன் தயாராய் இல்லை (அலசினால் எனக்கு கோபம்தான் வரும்). ஆனால் சிலவற்றை மட்டும் சொல்லலாம்...பேக்ரவுண்ட் மாட மாளிகைகளின் ஃபினிஷிங் இல்லாத டெக்க்ஷர் வர்க்குகள், கலர்புல்லாக இல்லாத கிரவுட் காட்சிகள், புரபோஷன் இல்லாத உடல் அமைப்புகள், பல இடங்களில் சொதப்பும் அனிமேஷன் என இவைகளைத்தவிர்த்துவிட்டுப்பார்த்தால்...குழந்தைகளையும், பெண்களையும் கவரும்.

எல்லாவற்றையும் தாண்டி இது ரஜினியின் அனிமேஷன் படம் என்பதை மனதில் இறுதிவரை வைத்துக்கொள்ளுங்கள்.

கோச்சடையான் - நல்ல முயற்ச்சி, வாழ்த்துக்கள்.
No comments:

Post a Comment