Monday, June 9, 2014

குயீன் - ஹிந்தி

கங்கனா ரனாவ்த் அவ்வளவு ஒன்றும் வசீகரிக்கும் அழகுடன் இல்லையெனினும் அவளின் முகம் எதைச்சொனாலும் செய்கிறது, அதற்கேற்றார்ப்போல் உடலும் வளைகிறது. கிட்டத்தட்ட சப்பாத்தி மாவு மாத்ரி எந்த வேடத்துக்கும் செய்துக்கலாம்.

மொக்கைப்படத்திலும் நடிப்பார், திடீரென்று காண்ட்ரவர்ஸியான படங்களிலும் நடிப்பார் சொல்லாமல் கொள்ளாமல் குயீன் மாதிரியான படங்களிலும் நடித்து இன்ப அதிர்ச்சிக்கொடுப்பார். சமீப கால நடிகைகளில் போல்ட் அண்டு பியீட்டிஃபுலான நடிகை நம்ம கங்கனா...ஆனாலும் ஒரே ஒரு தமிழ்படத்துடன் கோடம்பக்கத்தை மீண்டும் எட்டிப்பார்க்காமல் இருப்பது வருத்தமே. மனீஷா கொய்ர்ராலாவின்வின் சாயல் இவரிடம் கொஞ்சம் உண்டு.

சரி கதைக்கு வரலாம்.

அடுத்த நாள் சர்தார்ஜி குடும்பத்தின் கல்யாணம் கங்கனாவின் வீட்டில் முதல் நாள் திருமண வைபவம் குதூகலமான நாட்டியத்துடன் படம் தொடங்குகிறது. அன்று ஈவினிங் மாப்பிள்ளை (கை போ சே யில் நடித்த ராஜ்குமார் ராவ்) கங்கனாவை சந்திக்க காபி டேக்கு அழைக்கிறார். பதட்டத்துடனும் ஆவலுடனும் வரும் கங்கனாவுக்கு அதிர்ச்சி காத்திருக்கின்றது. மாப்பிள்ளை திடீரென்று திருமணம் வேண்டாம் பிஸினஸை கவனிக்க வேண்டும் என்று சொல்ல இவளின் அமைத்திக்கெஞ்சல், கதறல் வீணாய்ப்போகிறது.

துக்கத்துடன் வீட்டிற்க்கு வரும் கங்கனா கதவை மூடி அறைக்குள் அடைப்பட்டு கிடக்க இவர்களின் காதல் நேரத்துக்காட்சிகள் பிளாஷ்பேக்குகளாய்....காலையில் எழும் இவளுக்கு எல்லோரும் ஆறுதல் கொடுக்க திருமணம் முடிந்து அனிமூன் செல்ல (கணவனாகப்போகிறவரின் பேவரை பிளேசான பாரிஸூக்கான) முன்பதிவு டிக்கெட்கள் கண்ணில் படுகிறது நான் அனிமூன் போகவேண்டும் என அப்பாவிடம் சொல்கிறாள். அவர்களும் சம்மதிக்க ஒற்றை ஆளாய் பாரிஸ் போகும் அவளுக்கு அங்கே விஜயல்க்ஷ்மியின் (லிசா ஹெய்டன்) நட்பு கிடைக்கிறது.

கணவருடன் வரவேண்டிய ஹனிமூன் இடங்கள் தனியாக வந்ததில் முதல் சில நாள் திணறுகிறாள்.பின்னர் விஜயலக்க்ஷுமியின் நட்பு கிடைக்க இவர்களின் கொண்டாட்டம் ஆரம்பமாகிறது. அங்கிருந்து ஆம்ஸ்டர்டாம் மூன்று இளைஞசர்களுடான இண்ட்ரஸ்டிங் ரூம் ஷேரிங் வாழ்க்கை, ஹோட்டல் நடத்துபவருடனான முதல் கிஸ், விஜயலக்ஷ்மியின் நண்பியின் வித்தியாச தொழில் என அத்தனையையும் மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். கங்கனாவை தேடி அலையும் ராஜ்குமாருக்கு படத்தில் இவள் கொடுக்கும் அதிர்ச்சி கிளைமாக்ஸ் படம் விட்டுப்போகும்போது பலமான கைத்தட்டலில் படத்தின் வெற்றி நமக்கு தெரிந்துவிடுகிறது.

படத்தில் அவளின் இனிஷியல் ஸ்ட்ரகள்ஸ், ஒன்றும் அறியாத கலாச்சாரத்துடன் வாழும் இந்திய பெண்ணுக்கு வரும் மாற்றங்கள், எந்த மாதிரியான சூழ்னிலையையும் எதிர்க்கொள்ளும் பக்குவம் என அததனையும் பெண்களுக்கான பாடங்கள். சொஞ்சம் கவர்ச்சி சில காட்சிகளில் தூக்கலான இரட்டை அர்த்த வசனங்கள், பெண்ணை இப்படி திடீரென்று தனியாக பாரினுக்கு அனுப்பும் பெற்றோர், ஹீரோயினின் அப்பா மகனின் விஜயக்க்ஷுமி வழிசல், கல்யாணத்தை நிறுத்த சொல்லும் காரணம் என சில குறைகளை தவிர்த்துவிட்டுப்பார்த்தால் படம் உண்மையிலேயே கிளாஸ்தான். பாடல்கள், இசை குளுமையான லொகேஷண் ஹாட்டான கதை, கலக்கியெடுக்கும் ஒன் வுமன் ஷோவாக கங்கனா...தயவு செய்து மிஸ் செய்யாதீர்கள்.

இன்னொன்றையும் குறிப்பிட்டே ஆகவேண்டும், நாயகி ஒரு ஜப்பான்காரன், ரஷ்யன் ஆள் மற்றும் ஒன்னொரு நீக்ரோ நண்பருடன் அடிக்கும் லூட்டிகளும் அவர்களுக்கு இடையேயான புரிதலும் பிரமாதம், இந்தியப்பெண்களின் வெளிநாட்டு அவல நிலைகளும் தொட்டுப்போன இயக்குனரின் சிந்தனை சிந்திக்கவேண்டிய விஷயமே!!!

டைரக்டர் விகாஷ் பாலுக்கு வாழ்த்துக்கள். கங்கனாவுக்கு டபுள் வழ்த்துக்கள்.

ஆக...

குயீன் - சமீபத்தில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் கலக்கிய இந்திய அழகி ராணி!!!

ந்ல்


No comments:

Post a Comment