Sunday, June 15, 2014

கம் ஆன் இந்தியா
கம் ஆன் இந்தியா

மகனுக்கு நக்கலாய் காரணத்தை காமெடியாக சொல்லிவிட்டாலும். என்னுள் ஒரு உறுத்தல்... இந்தியா ஏன் புட்பாலில் சிறப்பாக இல்லையென்பதை யோசிக்கத்தொடங்கினேன். கிரிக்கெட் மோகம், அரசியல் தலையீடு, பணப்பற்றாக்குறை என பல விஷயங்களை தாண்டி ஒரு முக்கியமான விஷயம் இருப்பதை மறந்துப்போகிறோம்.

அது ஸ்டாமினா என்கிற உடல் தெம்பு. நம்மவர்களால் ஒன்றரை மணி நேரம் களத்தில் இருக்க முடியவில்லை என்பதே உண்மை. இந்திய சீதோஷ்னநிலை, உணவு முறை, ஆரோக்கியம் என பல விஷயங்கள் இருந்தாலும். உணவும், ஆரோக்கியத்திற்க்கு கொடுக்கப்படவேண்டிய முக்கியத்துவம் கவனிக்கப்படவேண்டியதே.

பஞ்சத்தாலும், பட்டிணியாலும் வாழும் பல நாடுகள் புட்பாலிலும், தடகளத்திலும் கோலோச்சும்போது இந்தனை கோடி மக்கள்தொகைக்கொண்ட நம்மால் முடியாதா? வெறும் காலில் புட்பால் ஆடி சாதித்தவர்கள் நாம். அதற்கேற்ற பயிற்சிகள் தேவை.

இப்படித்தான் ஜப்பானியர்களையும், சீனக்காரர்களையும் சப்பைமூக்கு, குள்ளர்கள் என கிண்டல் அடித்துவந்தோம். ஆனால் இன்று ஒலிம்பிக்கில் அமெரிக்க, ரஷ்யக்காரர்களை முந்தவில்லையா? காரணம் அவர்களின் கடுமையான பயிற்சியும், ஆர்வமுமே காரணம். இன்று அவர்கள் குள்ளர்களாக இல்லை தடகளத்திலும் மற்ற விளையாட்டுகளிலும் உயரமானவர்களாகவே இருக்கிறார்கள்.

அரசியல் காரணங்கள், பயிற்சியாளர், மற்றும் பணம் பிரச்சனைகளாக இருந்தாலும் ஏதாவது ஒரு போட்டியில் சாதித்தால்தானே நம் அணியின் மீது நம்பிக்கை வரும். பார்க்கலாம் இப்போது ஐபிஎல் மாதிரி புட்பாலிலும் தொடங்கியிருக்கிறார்கள். சச்சின் கூட கேரள அணியை வாங்கியிருக்கிறார். காலம் கனியும் என நம்புவோம்.

திறமைகள் எங்குதான் இல்லை கண்டறிந்து ஊக்கம் கொடுத்தால் பலன் கட்டாயம் கிடைக்கும்.

கடுமையான பயிற்சியும், உடல் தெம்பையும் சரியாக கவனித்து கண்டுக்கொண்டால் இந்தியாவும் 2022ல் புட்பால் உலககோப்பையில் ஆடும். "ஜன கன மனவும்" ஒலிக்கும்!!!

ஜெய் ஹிந்த்!!!

டூரிஸ்ட் ஹோம் - மலையாளம்டூரிஸ்ட் ஹோம் - மலையாளம்


ஒரு இயக்குனர், பத்து கதையாசிரியர்கள் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம்.

எக்ஸ்பிரிமெண்ட்டல் படம். ஒரு சுமாரான லாட்ஜில் இருக்கும் பணிரண்டு அறைகளில் நடக்கும் பணிரண்டுவிதமான மனிதர்களின், அவர்களின் சம்பவங்களின் தொகுப்பு. உலகில் முதன்முதலாக கேமராவின் ஒரே ஆங்கிளில் வைத்து எடுக்கப்பட்ட படம் வேறேதாவது உண்டெனில் இதையும் அதனோடு சேர்த்துக்கொள்ளலாம். எனக்குத்தெரிந்து இந்தியாவின் முதல் மேல்சொன்ன வகைத்திரைப்படம் இது. கேமரா கிட்டத்தட்ட எல்லாக்காட்சிகளும் இடதிலிருந்து வலமாக மட்டுமே நகர்கிறது. கதைகள் நடக்கும் இடமும் அந்த லாட்ஜின் அறைக்குள்ளில்தான். இப்படி ஒரு கதையை இயக்கி வித்தியாசமாக படைத்த இயக்குனர் ஷெபியை கட்டாயம் பாராட்டணும்.

திருட்டுத்தனமாக சீட்டாட்டம் நடக்கும் ஒரு அறை, வெளிநாட்டில் இருக்கும் கணவனுக்கு தெரியாமல் அவரின் நண்பருடன் களவாடி டெலிவரிக்காக வந்திருக்கும் கள்ள காதலர்கள், பேரனின் மருத்துவ சிகிச்சைக்காக வந்திருக்கும் பெரியவர், கணவனின் மருத்துவ செலவுக்காக விமச்சாரியாகும் பெண், பிக்பாக்கெட் திருடர்கள் இருவர், எதையோ செய்துவிட்டு பரபரப்பாய் ரூமில் இருக்கும் இருவர், அப்பாவை திருத்த தன் கல்லூரி நண்பருடன் நாடகமாடும் பெண், ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க பிராக்டிஸ் செய்யும் அம்மா மற்றும் பெண், விபச்சாரியுடன் பொழுதை கழிக்க வரும் டிராஃபிக் போலீஸ், கள்ள ஜோதிடர், இண்டர்வியூவுக்கு பயந்து சாவும் பட்டதாரி...இப்படி பலரின் கதைகளை நாங்கு நாங்கு முறை கேமராக்களின் மூலம் சொல்கிறார் இயக்குனர்.

பாடல்கள் இல்லை, ஆக்க்ஷன் இல்லை கொஞ்சம் மெதுவாக நகரும் கதை. வித்தியாசம் வேண்டும் என நினைப்பவர்கள் கட்டாயம் பார்க்கலாம்.


வரவேல்ப்பு - மலையாளம்


வரவேல்ப்பு - மலையாளம்

கத்தாமா என்றொரு வெளிநாட்டு வேலைக்குப்போய் கஷ்டப்படும் பெண்ணின் படத்தை பார்த்துவிட்டு என் ஹார்ட் டிஸ்க்கில் அடுத்தப்படம் தேடியபோது கிடைத்த இந்தப்பழையப்படம் வரவேல்ப்பு. கத்தாமாவில் இந்தியாவிலிருந்து அரபு நாடுக்கு சென்று கஷ்டப்படும் பெண்மணியின் கதை, இதில் வெளிநாட்டிலிருந்து சம்பாதித்து பிஸினஸ் செய்து இந்தியாவில் கஷ்டப்படும் ஒருவனின் கதை. அட...என்ன ஒரு கோ ஹின்ஸிடெண்ட். அக்கரைக்கு இக்கரை பச்சை!!!

80களின் இறுதியில் கேரளத்தில் இப்படியான ஒரு படம் வந்தது எனக்கு ஆச்சர்யத்தைத்தந்தது. கேரளாவின் தொழிற்சங்கங்களை தோலுரிக்கும் தைரியமான படம். பிசினஸ் செய்பவர்களையும், பிசினஸ் செய்ய வருபவர்களும் தொழிற்சங்கங்க்களின் தேவையற்ற போராட்டத்தால் கேரளாவின் வியாபாரம் செய்ய ஏன் தயங்குகிறார்கள் என்பதை தெள்ளத்தெளிவாக சொல்லி நெத்திப்பொட்டில் அடிக்கும் படம். இந்த கதைக்கு சொந்தக்காரர் சாத் சாத் நமக்குப்பிடித்த ஸ்ரீனிவாசனே.

படம் கொஞ்சம் பரபரப்பாய் ஆரம்பிக்கின்றது. வெளிநாட்டிலிருந்து 7 வருடம் கழித்து வரப்போகும் தங்கள் தம்பிக்காக இரு அண்ணன்களும், அவர்களின் மனைவிமார்களும் அவனுக்கு பிடித்த சமையல்களை செய்ய ஆரம்பிக்கிறார்கள். அவனும் வந்து சேராததால் அவர்களே அதை தின்று காலி செய்ய இரவில் லேட்டாய் வருகிறான் தம்பி மோஹன்லால். வெறும் கஞ்சிதான் அவனுக்கு கிடைக்கிறது.

மோஹன்லால் வெளிநாட்டிலிருந்து மொத்த பணத்துடன் வருவதால் இரு அண்ணன்களும் அந்த பணத்தைக்கொண்டு பிஸினசை விரிவாக்கும் பிளானுடன் இருக்கிறார்கள். மூத்த அண்ணன் தனது ஹோட்டல் பிசினசை வளப்படுத்த ஏசி ஹோட்டல் தொடங்கலாம் என்கிறார். இளைய அண்ணன் தனது அராக்கு ஷாப்பைப்போல் இன்னொன்று தொடங்கலாம் என்கிறார். இதற்கிடையில் மோஹன்லாலின் இறந்துப்போன அம்மாவின் அண்ணன் தென்னந்தோப்பை வாங்கி காசு பார்க்கலாம் என்கிறார். எல்லாவற்றிர்க்கும் தலையாட்டும் மோஹன்லால் அடுத்த நாள் பேப்பரில் வரும் ரூட்டுடன் கூடிய பஸ் விறபனைக்கு விளம்பரத்தை கண்டு "கல்ஃப் மோட்டார்ஸ்" என்கிற பஸ் சர்வீசை ஆரம்பிக்கிறார். அடிக்கடி ரிப்பேராவதோடு மட்டுமல்லாமல் அண்ணன் ரெகமண்ட் செய்து வேலைக்கு எடுத்த ஓட்டுனர், நடத்துனர்களின் அலட்சியம், பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த குடிகார அப்பாவின் மகளாய் ரேவதி, பிசினஸ் தொடங்கி பணம் கரைந்ததால் மோஹன்லாலை கழட்டிவிடும் குடும்பம், ஏமாற்றி ஓடிப்போகும் நடத்துனர், பின்னர் மோஹன்லாலே நடத்துனராகும் பரிதாபம், திருடி ஓடிய நடத்துனருக்காக வக்காலத்து வாங்கி அடிமேல் அடி கொடுக்கும் தொழிற்சங்க தலைவர் முரளி, ஆர் டி ஓ ஆபீசராய் இம்சை கொடுக்கும் ஸ்ரீனிவாசன், கடைசி காட்சிகளில் மோஹன்லாலுக்காக போராடும் அரசு அதிகாரி விஜயன்...இப்படி பல சுவாரஸ்ய சம்பவங்கள். பின்னர் அவரின் வியாபாரம் என்னவாயிற்று என்பதை தொழிற்சங்கங்களின் குரூர முகத்துடன் காட்டும் அதிர்ச்சி கிளைமாக்ஸ்.

7 வருடங்கள் பாலைவனத்தில் கஷ்டப்பட்டு சம்பாதித்தப்பணம் கரைந்துப்போனதில் வரும் இயலாமை, சரியான தொழிலாளர்கள் அமையாததால் ஏற்ப்படும் பிரச்சனைகள், ரேவதியுடனான இனம் புரியாத நட்பு என பல கோணங்களில் லாலேட்டன் காமெடி கலந்து அசத்தியிருக்கிறார். படத்தில் மிக அதிகமான போராட்ட வாழ்க்கை இருந்தாலும் அதை அளவாக கொடுத்து திரைக்கதையை அமைத்த ஸ்ரீய்னிவாசனின் திறமையை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.

துடுக்குப்பெண்ணாக வந்து, பொய் சொல்லி மோஹன்லாலை ஏமாற்றி இறுதியில் பக்க பலமாய் இருக்கும் பாத்திரத்தில் ரேவதி, தன் அப்பா குடித்து குடித்து எல்லாவற்றையும் அழிக்க தளராது குடும்பத்தை நடத்தும் ஏழைப்பெண்ணின் வாழ்க்கைப்போராட்டம்.

டிரைவராக இன்னசண்ட், மனிதர் அனாயசமாக நடித்துவிட்டுபோகிறார். வண்டியை ஆக்ஸிடென்ட் செய்துவிட்டு சிம்பிளாக எஸ்கேப் ஆகியும், ஆர் டி ஓ ஆபீசரின் முன் வண்டியை நிறுத்தாமல் ஓனரை மாட்டிவிடும் காட்சிகளிலும் மோஹன்லாலை நடிப்பில் முந்துகிறார்.

கோபக்கார தொழிற்சங்க தலைவராக முரளி, தான்தோன்றித்தனமாக கடைசிவரை விட்டுக்கொடுக்காத தலைவன். வியாபாரம் செய்ய வருபவர்களை பிச்சைக்காரராக்கி நடுத்தெருவுக்கு இழுத்துவிடும் சிவப்புக்கொடி தலைவன்.

சத்யன் அந்திக்காடின் சிறப்பான இயக்கம், எல்லாவற்றையும் மிக ஆழமாகப்பார்க்காமல் காமெடியுடன் கதை நகர்த்தும் உத்தி சிறப்பு. அதுவும் அந்தக்கடைசி காட்சி நம்மை கலங்கவைக்கும் என்பதில் ஐய்யமில்லை.

ஆக...என்னதான் பணம் சம்பாதித்தாலும் அதை சரியான படி முதலீடு செய்வது அவசியம். நானும் கோயம்புத்தூரில் அனிமேஷன் இன்ஸ்டிட்யூட் தொடங்கி நிறைய பேருக்கு பீஸ் வாங்காமல் சொல்லிக்கொடுத்து பல லட்சங்கள் இழந்தவன் என்கிற முறையில் "பிஸினஸ் செய்கிறவர்கள் பாவம் பார்க்கக்கூடாது அல்லது பண விஷயத்தில் கறாராக இருக்கணும்" என்பதை உங்களுக்கும் எனக்கும் தெளியவைத்தப்படம் இந்த வரவேல்ப்பு.

யு டியூபில் தாராளமாய் கிடைக்கிறது. முடிந்தால் டவுன்லோட் செய்து பார்க்கவும்.

வரவேல்ப்பு - சொந்த மண்ணில் தோற்றுப்போனவனின் கதை. மோஹன்லாலின் அடுத்த இந்திய பயணத்திற்க்கு காத்திருப்போம்!!!


தூவானத்தும்பிகள் - மலையாளம்


தூவானத்தும்பிகள் - மலையாளம்

1987 ல் வெளிவந்து 27 வருடங்கள் கழிந்தாலும் இன்னும் மலையாளிகளின் மனதில் மட்டுமல்ல இந்தியர்களின் மனதிலும் நீங்கா இடம்பெற்றப்படம். 2013 நடத்தப்பட்ட வீக்கெடுப்பில் இந்தியாவின் மிகச்சிறந்த படங்களில் 8வது இடத்தை பெற்றிருக்கும் படம்.

போல்டான சப்ஜெக்டை அந்தக்காலத்தில் தைரியமாக தொட்டு படத்தை திரைப்பட வரலாற்றில் வைரக்கலாக இன்னும் ஜொலிக்க காரணமாய் இருந்தவர் இயக்குனர் பத்மராஜன். அதுவும் சில காட்சிகளாலும், கதை கருவாலும் "ஏ" முத்திரையுடன் வந்தாலும், குடும்பத்துடன் அனைவரையும் தியேட்டருக்கு இழுத்தப்படம். இதன் இசையும், பாடல்களும் போன வருடம் வரை பல மலையாளப்படங்களுக்கு இன்ஸ்பிரேஷனாய் இருந்திருக்கின்றன.

சிலப்படங்கள் நம்முள் சென்று நம் பழைய நினைவுகளை தட்டி எழுப்பி கடந்தக்காலங்களை அசைப்போடவைக்கும். அப்படியான ஒரு கதை இந்த தூவானத்தும்பிகள். ஆமாம் மழை நேர தூறலில் வரும் தும்பிகள்.

பணக்கார இளைஞரான மோஹன்லால் கிராமத்திலிருந்து அவ்வப்போது நகரத்துக்கு வந்துசெல்வார். கல்லூரி படித்த காலத்திலிருந்து நகரத்துக்கு வந்துசெல்வதால் அவரின் அன்பான மற்றும் உதவும் குணத்திற்க்கு ஏகப்பட்ட நண்பர்கள் நகரத்தில். கிராமத்திற்க்கு வந்துப்போகும் தூரத்து உறவுப்பெண்ணான பார்வதி (தற்போது நடிகர் ஜெயராமின் மனைவி) யை பார்த்து காதல் கொண்டு நேராக அவரின் கல்லூரிக்கு சென்று விருப்பத்தை சொல்ல, பார்வதி கோபமடைந்து பிடிக்கவில்லை என்கிறார். அதே வேளையில் தனது நண்பருக்கு உதவி செய்ய நினைத்து, ஒரு பெண் வீட்டிற்க்கு கடிதம் எழுதுகிறார், மழையும் பெய்கிறது, அந்தபெண்ணும் சம்மதிக்க விலைமாது என நினைத்து அவளுடன் ஹோட்டலில் தங்குகிறார். அன்றைய இரவில் அவள் விலைமாது அல்ல (சுமலதா - தற்போது கன்னட நடிகர் அம்ப்ரீஷின் மனைவி) தனக்குத்தான் முதன் முதலில் உடலை கொடுத்திருக்கு "வெர்ஜின்" என அறிந்து குற்ற உணர்வில் தவிக்கிறார். இதுவரை யாரையும் காதலிக்காத அல்லது பெண்களுடன் பழகாதவர் மோஹன்லால் என்பதும் அவளுக்கு தெரியவர...மோஹன்லாலும் அவளையே திருமணம் செய்வதாகவும் கூறுகிறார்.

அன்றைய இரவில் கடற்கரையில் அவர்களின் சந்திப்பு நீள்கிறது. இரண்டு உடல்களுடன் மனங்களும் இணைகிறது. ஆனால் மோஹன்லாலுக்கு இன்னொரு பெண்ணான பார்வதி மீது ஆசை என்று அறிந்து மறுநாள் காணாமல் போகிறார் சுமலதா. பின்னர் ஊருக்கு வரும் மோஹன்லாலின் நல்ல குணம் அறிந்து பார்வதியும் மோஹன்லாலை காதலிக்கிறார். திடீரென்று வரும் தந்திமூலம் மீண்டும் சுமலதாவை சந்திக்கிறார். இப்படியாக மூன்று சந்திப்புகள் அவர்களுக்குள் நடக்கின்றது. மூன்று சந்திப்பிலும் நல்ல மழைப்பெய்கிறது

இறுதியில் மோஹன்லாலுக்கும் பார்வதிக்கும் கல்யாணம் நிச்சயமாக கடைசி சந்திப்புக்கும் தந்தி வருகிறது சுமலதாவிடமிருந்து. மோஹன்லாலுல் எல்லாவற்றையும் ஒளிக்காமல் பார்வதியுடன் பகிர்ந்திருந்தாலும் இந்த முறை பார்வதி சுமலதாவை சந்திக்ககூடாது என கல்யாணத்தை தள்ளிப்போடுகிறார், கிளைமாக்ஸில் பார்வதி திருட்டுத்தனமாய் ரயிவே ஸ்டேஷன் வந்து ஒளிந்து பார்த்தாலும், மோஹன்லால் காத்திருக்க சுமலதாவும் வருகிறார், கூடவே அவரின் கணவரும், குழந்தையும். அதிரும் மோஹன்லாலுக்கு தான் மனைவியை இழந்த ஒருவருக்கு வாழ்க்கை கொடுத்திருப்பதாகவும், பார்வதியை கல்யாணம் செய்துக்கொண்டு சந்தோஷமாக வாழச்சொல்லிவிட்டு இனி நாம் சந்திக்கப்போவதில்லை என்று கூறி ரயிலில் ஏறி கையசைக்க இவனிலிருந்து அவளும் ரயிலும் விலகி மறைகிறது. இப்போது மழை இல்லை.

படத்தில் ஹைலைட்டான விஷயங்கள் பல அருமையான பாடல்கள், உணர்வைதொடும் இசை, மனதை தைக்கும் வசனங்கள், காதலை சொல்லும் நெருக்கமான காட்சிகள் என படம் இன்றுப்பார்த்தாலும் திகட்டாத காவியம். அதுவும் அந்த அரவின் கடற்கரையில் அவர்கள் காதல் சல்லாபங்கள் சொல்ல வார்த்தையில்லை.

கட்டாயம் உங்கள் மதை தொடும் காவியம். திருச்சூர் மலையாளத்தின் அழகான ஸ்லாங் படம் முழுக்க. சுமலதாவின் அழகும், வாளிப்பான உடலும் அவள் கனவுக்கன்னி என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பப்ளியான மோஹன்லால் எல்லா வகை நடிப்பையும் சிறப்பாய் செய்வார் என்பதற்க்கு இந்தப்படம் ஒரு சாட்சி.

காதலுக்காக இவள் அவனையே விட்டுக்கொடுக்கிறாள். விட்டுக்கொடுத்தலும், பரஸ்பர புரிந்துக்கொள்ளலுமே உண்மையானக்காதல். காதல்வயப்பட்டு காதலனையோ காதலியையோ அடையாதவர்களுக்கு சமர்ப்பணம்.

இந்தப்படத்தை வாழ்நாளில் ஒருமுறையாவது பார்த்து பிறந்த பயனை அடையுங்கள்.

தூவானத்தும்பிகள் - தன்னை காதலித்தவன் சந்தோஷமாய் இருக்க தன்காதலை துறக்கும் தியாகப்பெண்ணின் உண்மைக்காதல்!!!

Monday, June 9, 2014

கோச்சடையான்!!!கோச்சடையான்!!!

2005 ல் தொடங்கப்பட்டு 2014 வந்திருக்கும் சவுந்தர்யாவின் திரீடி மோஷன் கேப்சர் படம்.

அதற்க்கு முன் சில விளக்கங்கள்...

படம் டைட்டில் போடுவதற்க்கு முன் ரஜினியைப்பற்றியும், இந்த படத்தைப்பற்றியும் சில தகவல்களை சொல்லுவார்கள். அவைகள் வெறும் படத்தின் விளம்பரத்திற்க்காக மட்டுமே...அதை அப்படியே நம்பிவிடவேண்டாம்.

அதில் கூறப்பட்ட இரண்டு முக்கியமான திரித்துக்கூறப்பட்ட விஷயங்கள்...

1. இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் படம் இதுவாம் (முதல் முழுநீள மோஷன் கேப்சர் படம் என்று வேண்டுமானால் சொல்லலாம்)

2. ரஜினியின் கடின உழைப்பில் உருவான படம் (ரஜினியின் கால்ஷீட் நாலே நாளு நாள்தான்)!!!

சரி படத்திற்க்கு வருவோம்

முதலில் இந்த படத்திற்க்கு விமர்சனம் எழுத நினைத்தபோது இரண்டை மட்டும் மனதில் வைத்து தைத்துக்கொண்டேன். என் 15 வருட அனிமேஷன் அனுபவத்தை வைத்து இந்த படத்தை விமர்சனம் செய்யக்கூடாது, இன்னொன்று சாதாரண ரசிகனைப்போல் படத்தை விமர்சனம் செய்யவேண்டும். முடியுமா என்பது தெரியவில்லை முயற்சிப்போம்.

நாட்டுக்காக உயிர் துறந்த அப்பாவின் ஆசையை பூர்த்தி செய்யும் ராணா எனும் வீர மகனின் கதை. ஆற்றில் அடித்துவரப்படும் சிறுவனை காப்பாற்றுகிறார்கள் அவன் நாளடைவில் வளர்ந்து சிறந்த போர்த்தளபதி ஆகிறான். கலிங்கத்தின் மீது போர்தொடுக்க மன்னனிடம் ஆதரவு வாங்கி போர்த்தொடுக்க அந்நாட்டில் அடிமைகளாய் இருந்த கலிங்க மக்களை மீட்டு அவர்கள் நாட்டின் மீதே போர்தொடுக்க அது ராணா தன் மக்களை விடுவிக்க செய்த சூழ்ச்சி என்பது மன்னருக்கு (ஜாக்கி ஷெராஃப்) தெரியவருகிறது. அவரும் கோபம் கொள்கிறார்

இதனால் கலிங்கமன்னனின் (நாசர்) அன்பையும், இளவரசனின்(சரத்குமார்) நம்பிக்கையையும் பெறுகிறான். இளவரசியையும்(தீபிகா) காதலிக்கிறான். கடைசியில் தன் அப்பாவைக்கொன்ற (கோச்சடையான் பிளாஷ்பேக்) கலிங்கத்து அரசனை பழிவாங்கி வாகை சூடுகிறான்.

நல்ல கதை கே எஸ் ரவிகுமார் இரண்டாவது பாதியில் சுவாரஸ்யமாக்குகிறார். வஞ்சம், ஏமாற்றம், வீரம், காதல், பாசம் என அத்தனையையும் சம விகிதத்தில் கலந்துக்கொடுத்திருக்கிறார். படத்தில் இரண்டாவது பாதியின் பல வசனங்கள் அருமை.

இசை ரஹ்மான், நல்லாவே செய்திருக்கிறார். பல இடங்களில் பேக்ரவுண்டு ஸ்கோர் அதிருவது அழகு.

இயக்குனார் சவுந்தர்யா, முதல் படைப்பில் மோசம் போகவில்லை. ரஜினிக்கு ஏற்ற கதை. இந்திய அனிமேஷன் துறையை உலக அளவில் எடுத்துச்செல்ல பாடுபட்டிருக்கிறார். ராணாவை விட கோச்சடையான் கேரக்டரின் டெக்னிகல் விஷயங்கள் கொஞ்சம் பெட்டராக இருக்கின்றது. நாகேஷ் அவர்களின் கலக்கல் எண்ட்ரி பாராட்டப்படவேண்டிய விஷயம்.

கதையில் காணாமல் போகும் இளவரசன் சரத்குமார், கிளைமாக்ஸில் மட்டும் வரும் ராணாவின் இன்னொரு சகோதரன், ராணா இளவரசி ஒட்டாத காதல் என ஆங்காங்கே லூப் ஓல்ஸ்.

படத்தின் டெக்னிகல் விஷயங்களை அலச நன் தயாராய் இல்லை (அலசினால் எனக்கு கோபம்தான் வரும்). ஆனால் சிலவற்றை மட்டும் சொல்லலாம்...பேக்ரவுண்ட் மாட மாளிகைகளின் ஃபினிஷிங் இல்லாத டெக்க்ஷர் வர்க்குகள், கலர்புல்லாக இல்லாத கிரவுட் காட்சிகள், புரபோஷன் இல்லாத உடல் அமைப்புகள், பல இடங்களில் சொதப்பும் அனிமேஷன் என இவைகளைத்தவிர்த்துவிட்டுப்பார்த்தால்...குழந்தைகளையும், பெண்களையும் கவரும்.

எல்லாவற்றையும் தாண்டி இது ரஜினியின் அனிமேஷன் படம் என்பதை மனதில் இறுதிவரை வைத்துக்கொள்ளுங்கள்.

கோச்சடையான் - நல்ல முயற்ச்சி, வாழ்த்துக்கள்.
குயீன் - ஹிந்தி

கங்கனா ரனாவ்த் அவ்வளவு ஒன்றும் வசீகரிக்கும் அழகுடன் இல்லையெனினும் அவளின் முகம் எதைச்சொனாலும் செய்கிறது, அதற்கேற்றார்ப்போல் உடலும் வளைகிறது. கிட்டத்தட்ட சப்பாத்தி மாவு மாத்ரி எந்த வேடத்துக்கும் செய்துக்கலாம்.

மொக்கைப்படத்திலும் நடிப்பார், திடீரென்று காண்ட்ரவர்ஸியான படங்களிலும் நடிப்பார் சொல்லாமல் கொள்ளாமல் குயீன் மாதிரியான படங்களிலும் நடித்து இன்ப அதிர்ச்சிக்கொடுப்பார். சமீப கால நடிகைகளில் போல்ட் அண்டு பியீட்டிஃபுலான நடிகை நம்ம கங்கனா...ஆனாலும் ஒரே ஒரு தமிழ்படத்துடன் கோடம்பக்கத்தை மீண்டும் எட்டிப்பார்க்காமல் இருப்பது வருத்தமே. மனீஷா கொய்ர்ராலாவின்வின் சாயல் இவரிடம் கொஞ்சம் உண்டு.

சரி கதைக்கு வரலாம்.

அடுத்த நாள் சர்தார்ஜி குடும்பத்தின் கல்யாணம் கங்கனாவின் வீட்டில் முதல் நாள் திருமண வைபவம் குதூகலமான நாட்டியத்துடன் படம் தொடங்குகிறது. அன்று ஈவினிங் மாப்பிள்ளை (கை போ சே யில் நடித்த ராஜ்குமார் ராவ்) கங்கனாவை சந்திக்க காபி டேக்கு அழைக்கிறார். பதட்டத்துடனும் ஆவலுடனும் வரும் கங்கனாவுக்கு அதிர்ச்சி காத்திருக்கின்றது. மாப்பிள்ளை திடீரென்று திருமணம் வேண்டாம் பிஸினஸை கவனிக்க வேண்டும் என்று சொல்ல இவளின் அமைத்திக்கெஞ்சல், கதறல் வீணாய்ப்போகிறது.

துக்கத்துடன் வீட்டிற்க்கு வரும் கங்கனா கதவை மூடி அறைக்குள் அடைப்பட்டு கிடக்க இவர்களின் காதல் நேரத்துக்காட்சிகள் பிளாஷ்பேக்குகளாய்....காலையில் எழும் இவளுக்கு எல்லோரும் ஆறுதல் கொடுக்க திருமணம் முடிந்து அனிமூன் செல்ல (கணவனாகப்போகிறவரின் பேவரை பிளேசான பாரிஸூக்கான) முன்பதிவு டிக்கெட்கள் கண்ணில் படுகிறது நான் அனிமூன் போகவேண்டும் என அப்பாவிடம் சொல்கிறாள். அவர்களும் சம்மதிக்க ஒற்றை ஆளாய் பாரிஸ் போகும் அவளுக்கு அங்கே விஜயல்க்ஷ்மியின் (லிசா ஹெய்டன்) நட்பு கிடைக்கிறது.

கணவருடன் வரவேண்டிய ஹனிமூன் இடங்கள் தனியாக வந்ததில் முதல் சில நாள் திணறுகிறாள்.பின்னர் விஜயலக்க்ஷுமியின் நட்பு கிடைக்க இவர்களின் கொண்டாட்டம் ஆரம்பமாகிறது. அங்கிருந்து ஆம்ஸ்டர்டாம் மூன்று இளைஞசர்களுடான இண்ட்ரஸ்டிங் ரூம் ஷேரிங் வாழ்க்கை, ஹோட்டல் நடத்துபவருடனான முதல் கிஸ், விஜயலக்ஷ்மியின் நண்பியின் வித்தியாச தொழில் என அத்தனையையும் மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். கங்கனாவை தேடி அலையும் ராஜ்குமாருக்கு படத்தில் இவள் கொடுக்கும் அதிர்ச்சி கிளைமாக்ஸ் படம் விட்டுப்போகும்போது பலமான கைத்தட்டலில் படத்தின் வெற்றி நமக்கு தெரிந்துவிடுகிறது.

படத்தில் அவளின் இனிஷியல் ஸ்ட்ரகள்ஸ், ஒன்றும் அறியாத கலாச்சாரத்துடன் வாழும் இந்திய பெண்ணுக்கு வரும் மாற்றங்கள், எந்த மாதிரியான சூழ்னிலையையும் எதிர்க்கொள்ளும் பக்குவம் என அததனையும் பெண்களுக்கான பாடங்கள். சொஞ்சம் கவர்ச்சி சில காட்சிகளில் தூக்கலான இரட்டை அர்த்த வசனங்கள், பெண்ணை இப்படி திடீரென்று தனியாக பாரினுக்கு அனுப்பும் பெற்றோர், ஹீரோயினின் அப்பா மகனின் விஜயக்க்ஷுமி வழிசல், கல்யாணத்தை நிறுத்த சொல்லும் காரணம் என சில குறைகளை தவிர்த்துவிட்டுப்பார்த்தால் படம் உண்மையிலேயே கிளாஸ்தான். பாடல்கள், இசை குளுமையான லொகேஷண் ஹாட்டான கதை, கலக்கியெடுக்கும் ஒன் வுமன் ஷோவாக கங்கனா...தயவு செய்து மிஸ் செய்யாதீர்கள்.

இன்னொன்றையும் குறிப்பிட்டே ஆகவேண்டும், நாயகி ஒரு ஜப்பான்காரன், ரஷ்யன் ஆள் மற்றும் ஒன்னொரு நீக்ரோ நண்பருடன் அடிக்கும் லூட்டிகளும் அவர்களுக்கு இடையேயான புரிதலும் பிரமாதம், இந்தியப்பெண்களின் வெளிநாட்டு அவல நிலைகளும் தொட்டுப்போன இயக்குனரின் சிந்தனை சிந்திக்கவேண்டிய விஷயமே!!!

டைரக்டர் விகாஷ் பாலுக்கு வாழ்த்துக்கள். கங்கனாவுக்கு டபுள் வழ்த்துக்கள்.

ஆக...

குயீன் - சமீபத்தில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் கலக்கிய இந்திய அழகி ராணி!!!

ந்ல்


பொய் நடிகன்!!!

அம்மா போனில் "சாப்டியாடா?" என விசாரித்தபோது
பட்டிணி கிடந்தாலும் திருப்தியாய் சாப்பிட்டுவிட்டதாய் பொய் சொல்கிறேன்

அப்பா "செலவுக்கு பணம் இருக்கா?" என்றபோது
காலிபாக்கெட்டில் கைவிட்டு காசு நிறைய இருப்பதாய் பொய் சொல்கிறேன்

பணம் இல்லாது தங்கையின் கல்யாணத்திற்க்கு வரமுடியாமல் போனபோது
"வேலை அதிகம், மானேஜர் ஒரு முரடன்" என்று பொய் சொல்கிறேன்

தம்பியின் கல்லூரி கட்டணத்தை கேட்டு அதிர்ந்தாலும்
"அவ்ளோதானா அடுத்தமாதம் அனுப்புவதாய்" பொய் சொல்கிறேன்

மனைவியின் அருகாமை இல்லாது மனது துடித்தாலும்
காட்டிக்கொள்ளாதவனாய் மனம் விரும்பி பொய் சொல்கிறேன்
"அடுத்தமாதம் வந்துவிடுவதாய்" மீண்டும் மீண்டும் பொய் சொல்கிறேன்

மகளின் ஜானி ஜானி எஸ் பாப்பாவை ஒப்புவிக்க முடியாதவனாய்
"ஐய்யா...அப்பாக்கு இது கூட தெரியல" என்றவளின் கபடமில்லாத சிரிப்பைக்கேட்க பொய் சொல்கிறேன்

கம்ப்யூட்டர் கார் கேமில் இரண்டுலட்ச பாயிண்ட்டைத்தொட்டாலும்
"உன் பாயிண்ட்ஸைவிட குறைவுதான்" என்று மகனிடம் பொய் சொல்கிறேன்

அவர்களின் சந்தோஷத்தில் எனக்கு தேவைப்பட்ட இந்த பொய்கள்
இதை பொய்கள் எனச்சொன்னால் நம்பமுடியாத மெய்கள்

இவைகள் பொய்களா இல்லை என் நடிப்பா என ஆராய்கையில்
நாலு பேருக்கு நல்லதுன்னா பொய்யும் சொல்லலாம், நடிக்கவும் செய்யலாம்!!!

ஒன்றும் ஒன்றும்!!!

ஒன்றும் ஒன்றும்!!!

ஒற்றை வானம்
ஒற்றை நிலா
ஒற்றை கடல்
ஒற்றை பூமி
ஒற்றை தென்றல்


ஓருடல்
ஈருயிர்!!!Khaddama (House Maid ) - Malayalam


Khaddama (House Maid  ) - Malayalam

கத்தாமா (அரபு நாடுகளில் வீட்டு வேலை செய்பவள்)

இரண்டாயிரத்து பதினொன்றில் ரிலீஸாகி நம்மையெல்லாம் கொஞ்சம் உலுக்கிப்பார்த்த படம். அரபு நாடுகளில் வீட்டு வேலைக்குப்போகும் கேரளத்து பெண்ணைப்பற்றிய படம்.

முதல் காட்சியிலேயே ஏதோ ஒன்று நடக்க கூடாது நடக்கப்போவதாய் எதிர்ப்பார்ப்பை உண்டாக்கி படத்தை நகர்த்துகிறர் சீனியர் டைரக்டர் கமல். விமான நிலையத்தில் பேந்த பேந்த முழித்துக்கொண்டிருக்கும் காவ்யா தனது அறிமுகமில்லாத வெளிநாட்டு வேலை மற்றும் பயணத்தின் நினைவுகளில் காத்துக்கொண்டிருக்கிறாள். தான் ஒரு இந்துப்பெண் என்பதை அறிந்து பொட்டை அழித்து இந்த ஃபர்தாவை போட்டுக்கொள் என இன்னொரு கத்தாமா அவளுக்கு சொல்ல உடையளவில் முஸ்லிமாக மாறுகிறாள்.

அரபு வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் அவளுக்கு ஆரம்பித்துவிடுகிறது பிரச்சனைகள். பாஷை தெரியாத இடத்தில் அதிகம் படித்திராத பெண்ணின் இயலாமை அங்கே அவளை முதலில் சிரமத்தைக்கொடுத்தாலும் இன்னொரு இந்தோனேஷிய வேலைப்பெண், மலையாளி டிரைவர் சூரஜ் என கொஞ்சம் ஆறுதல் பிறக்கிறது.

தான் இந்த வேலைக்கு வந்ததற்க்கான காரணங்கள் இயற்க்கை எழில் கொஞ்சும் கேரளத்தில் பிளாஷ்பேக்குகளாய் நகர்கிறது. தினமும் அபீசுக்கு வேலைக்குப்போகும்போது ஜேசிபி டிரைவர் பிஜுமேனனுடன் காதல், பின் கல்யாணம் பிஜுவின் திடீர் இறப்பு, குடும்ப வருமை என சிறிய சிறிய காட்சிகள்தான் எனினும் நம்மை படத்தோடு ஒன்றவைக்கிறது.

வரண்ட பூமியில் இரண்டாவது பாதியின் அவளின் போராட்டங்கள் படம் பார்ப்பவர்களை பரிதாபத்தை அவள் மீது கொட்டச்சொல்கிறது. இறுதியில் தப்பித்தாளா இல்லையா என்பதை படத்தைப்பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். அமைதியாய் வந்து நடித்துவிட்டுபோகும் சோசியல் வர்க்கர் ஸ்ரீனிவாசன். தனது சொந்தப்பைசாவில் மற்றவர்களுக்காக பாடுபடுவது நெகிழ்வு.

அரபு நாடுகளின் நம்மவர்களின் அட்டகாசங்களையும் தொடத்தவரவில்லை இயக்குனர். எதைப்பற்றியும் கவலை இல்லாமல் நாட்டின் மானத்தை வாங்கும் இந்திய இல்லீகல் வர்க்கர்ஸ், வேலை செய்யும் இடத்தில் தனது காம இச்சைகளை தீர்த்துக்கொள்ளும் ஆட்கள், எதையும் அவ்வளவாக கண்டுக்கொள்ளாத ஏஜண்ட்கள் என நம்மவர்கள் மீதும் தவறுகள் இல்லாமல் இல்லை.

அதே நேரத்தில் பாலைவனங்களில் அடிமைகளாய் இருக்கும் ஒட்டகம் மேய்ப்பவர்கள், டிரக் டிரைவர் முரளி கோபி, சமூக சேவகர் என நல்லவர்களின் பக்கங்களையும் திறந்துக்காட்டியிருக்கிறார் இயக்குனர். அதுவும் அந்த ஆடு மேய்க்கும் நடிகர் நம்மை கலங்க வைக்கிறார்.

காவ்யாமாதவனின் நடிப்பை சொல்லவா வேண்டும். அவள் படும் கஷ்டங்கள் உண்மைதான் எனினும் கொஞ்சம் அதிகப்படியாகத்தான் தெரிகிறது. ஆனால் கேரளத்து காட்சிகளில் அவளின் பெரிய முட்டைக்கண்களுக்கு நான் அடிமை.

படத்தால் இயக்குனர் சில விஷயங்களை சொல்லவருகிறார். முடிந்த வரை தகுதியான படிப்பறிவு இல்லாமல் கீழ் மட்ட வேலைகளுக்கு வெளிநாடுகள் செல்லவேண்டாம். இந்தியா உன்மையிலேயே சொர்க்க பூமிதான், தவறான ஏஜெண்ட்டின் வார்த்தைகளை நம்பாதீர்கள் வெறும் 250 லிருந்து 300 டாலருக்காக வாழ்க்கையை இழந்துவிடாதீர்கள் படத்தில் வரும் அனாதை பிணங்களாட்டம்.

நானும் வெளிநாட்டில் இருப்பதால் இயக்குனர் சொன்ன கருத்துக்களுடன் ஒத்துப்போகிறேன். நம்மவர்களும் இங்கே படும் கஷ்டங்களை கண்களால் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். 

கேரள அரசின் விருதுகளை குவித்தப்படம், பெண்களை மையமாக வைத்து வந்திருக்கும் இன்னொரு சிறந்தப்படம்.

வெளிநாட்டு வேலையில் பணம் கிடைக்கலாம் பிணமாய் ஜீவிக்கவேண்டும்!!!

கத்தாமா - இந்தியப்பெண்னின் வாழ்க்கை போராட்டம்!!!