Sunday, July 8, 2012

நான் ஈ.... விமர்சனம்.


நான் ஈ.... விமர்சனம்.

ஒரு டைரக்டர் டைனோசர்களை வைத்தும் பெரிய சிம்பன்சிகளை வைத்தும் ஹாலிவுட்டில் வில்லனை ரிவெஞ் எடுத்து காலிசெய்வார்கள். நம்ம ஊரில் யானை, ஆடு, குரங்கு மற்றும் நாய்களைக் கொண்டு வில்லனை ரிவெஞ் எடுப்பார்கள். அது சுலபமானது மட்டுமல்ல படம் பார்ப்பவர்களும் நம்புவார்கள். ஆனால் உலகத்திலேயே முதன்முறையாக ஒரு சிறிய ஈ இந்த படத்தில் ரிவெஞ் எடுக்கிறது. அதையும் ஆடியன்ஸை சீட்டின் முனைக்கு வந்து நம்பும்படி நம் இந்திய இயக்குனர் ஹாலிவுட்டிற்க்கு முன்னோடியாக படம் எடுத்திருக்கிறார்.இதற்க்கு டைரக்டர் ராஜாமோலியை பாராட்டியே ஆகவேண்டும்.கமர்சியல் படமாகட்டும் புதுமைகளை சொல்வதில் ஆகட்டும் தனது முந்தைய 10 படங்களிலும் தனியே நிற்க்கிறார் இந்த ஆந்திரத்து ராஜா.

கதையை பார்ப்போம். கோடீஸ்வரரான சுதீப் பெண்களை வளைத்து போடுவதில் கில்லாடி. கதாநாயகியை பார்த்தவுடன் அடையத்துடிக்கிறார். அவளுக்கு காதலர் இருப்பதை கண்டதும் கதாநாயகி காதலை சொல்லும் நேரத்தில் அவரை சுதீப் கொல்கிறார். பின்னர் ஈ யாக உருவெடுத்து சுதீப்பை கதாநாயகன் ஈ எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் கதை.

கதாநாயகனாக முதல் 30 நிமிடம் வந்தாலும் ஞானி கவர்கிறார்.இன்னும் அவர்களின் காதல் காட்சிகள் இருந்திருக்கலாமோ என நினைக்க தோன்றுகிறது.காரணம் கதாநாயகிமீது இன்னொம் கொஞ்சம் பச்சாதாபம் வந்திருக்கும். கரெண்ட் கட் ஆனவுடன் ஆண்டனா மூலம் வெளிச்சம் வர வைப்பதிலும், 15 ரூபாய் செக் கொடுத்து வழிவதலும் ஏ ஒன்.

டைரக்டர் பற்றி சொல்ல நிறைய இருந்தாலும் மகதீராவில் கிராபிக்ஸால் பிரமாண்டமாக்கிய இயக்குனர் இந்த படத்தில் அடுத்த தன் கிரியேட்டிவ்வின் உச்சத்தை தொட்டிருக்கிறார். கதாநாயகர்களுக்காக படங்க்கள் ஓடும் இந்த காலத்தில் ஒரு இயக்குனருக்காக படம் ஓடுகிறதென்றால் அது இவரின் படமாகத்தான் இருக்கும். கிட்டத்தட்ட சுமார் 2 மணிநேரம் அந்த ஈயின் அட்டகாசங்களதான். அதையும் நம்பும் விதமாக கிராஃபிக்ஸ் காட்சிகள் வைத்து ரசிகர்களை திணரடித்த இந்த டீமுக்கு வாழ்த்துக்கள்.

சுதீப்....கன்னடத்து சூப்பர் ஸ்டார்களில் ஒருவர், மிகச்சிறந்த படங்களை தரும் சுதீப் "கிச்சா" என்று கர்நாடகத்து ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் நடித்த இல்லை இல்லை வாழ்ந்த படம் இந்த ஈ. சொந்த குரலில் தமிழ் பேசி இன்னும் கலக்கியிருக்கிறார். தமிழ் நடிகர்களே டப்பிங்கை நம்பும் இந்த காலத்தில் கன்னட நடிகரான இவர் தமிழ் பேசியிருப்பது இன்னும் அழகு. அதுவும் படப்பிடப்பில் இல்லாத ஈயை இருப்பதாக நினைத்து நடிப்பது மிகவும் கடினம். காரணம் ஈயை கிராபிக்ஸில் பின்னர்தான் சேர்த்திருக்கிறார்கள். அந்த சஷ்டமான நடிப்பை அதுவும் ஒரு சாதாரண ஈக்கு பயப்படும் நடிப்பில் உச்ச்த்தை தொட்டிருக்கிறார்.அவரின் தமிழும் அழகுதான்.

கதாநாயகியாக சமந்தா சமத்தாய் நடித்திருக்கிறாள். முன் பாதியில் கதாநாயகனை அலைய விடுவதிலாகட்டும், பின் பாதியில் ஈ க்கு உதவிசெய்வதிலாகட்டும், சுதீப்பிடன் மாட்டிக்கொண்டு தவிக்கும் பின்பாதியில் மிளிர்கிறார்.

அப்புறம் நம்ம ஒரிஜினல் கதாநாயகன் ஈ.
எல்லா கார்டூன் படங்களிலும், அல்லது விலங்குகள் படங்களிலும் கற்ப்பனை விலங்குகளுக்கும், பூச்சிகளுக்கும் பெரிய கண்கள், பல கோணங்க்கள் காட்டும் வாய் இப்படி யெல்லாம் இருக்கும். ஆனால் இந்த ஈயில் இவை அத்தனையும் இல்லாமல் எக்ஸ்பிரஷன்கள் காட்ட முடியாவிட்டாலும் பார்க்கிறவர்களுக்கு சந்தோஷ்த்தையும், பல இடங்களில் ஆச்சியத்தையும் தந்ததில் இதை உருவாக்கிய விஷுவல் எஃப்க்ட்ஸ் டீமுக்கு ஒரு சல்யூட். அந்த ஊசியை வத்து ஈ யை பிடிக்கும் காட்சியும் கொஞ்சம் கொஞ்சமாய் இறக்கைகளை பறிக்கும் காட்சியில் நமக்கு சுதீப்பின் மீது வரும் கூபமும் எரிச்சலுமே படத்தில் ஈக்கு கிடைத்த வெற்றி.கடைசியில் அந்த கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு றெக்கையுடன், நொண்டிக்கொண்டு தானும் இறந்து காதலியை காப்பாற்றும் அந்த டெக்னிக் கிரியேட்டிவிடியின் உச்சம்.ஹாலிவுட்டிற்க்கு இணையாண கிராஃபிக்ஸ் உத்திகள் அதுவும் படத்தில் 90 சதவீதம். இந்திய திரைப்படங்களில் இது ஒரு மைல் கல்லாக இருக்கும் என்பதில் அய்யமில்லை.

என் நண்பர் தீபக் என்பவர்தான் அந்த ஈயையும் அதன் மிரட்டல் காட்சிகளை உருவாக்கியிருக்கிறார் என்பது கூடதல் தகவல்.சந்தானத்தை மூன்று காட்சிகளில் பார்த்தாலும் சிரிக்க வைத்து விட்டு போகிறார். மறக்காமல் டைட்டில் முடியும் வரை உட்கார்ந்து பாருங்கள்,ஈ யின் டான்ஸை மிஸ் பண்ணாதீரகள். கிரேசியின் காமெடி டயலாக்குகள் படத்திற்க்கு பலம்.

மூன்று பாடல்களும், ஒளிப்பதிவும், இசையும் மேலும் சுகம். குடும்பத்துடன் பாருங்கள். எல்லோருக்கும் கட்டாயம் பிடிக்கும்.

மொத்ததில் ஈ யையும் வைத்து இப்படி பிரமாண்டமான படம் எடுக்கலாம் என்பதை உலகுக்கு டைரக்டர் உணர்த்தியிருக்கிறார். அடுத்த முறை உங்கள் அருகில் ஒரு ஈ வந்தால் அதை நசுக்கி கொல்லாதீர்கள். பாவம் அதற்க்கும் ஒரு காதல் ஃபிளாஸ்பேக் இருக்கலாம்.

இந்த "ஈ" உங்கள் வாயை பிளக்க வைக்கும் "ஆ".

No comments:

Post a Comment