Saturday, May 12, 2012

சென்னை To பெங்களூருக்கு ரயிலில் ஒரு அசிங்கப் பயணம்.
சென்னை To பெங்களூருக்கு ரயிலில் ஒரு அசிங்கப் பயணம்.


பெங்களூருக்கு இண்டர் சிட்டியில் டிக்கெட் கன்ஃபர்ம் ஆகாததால் அன்ரிசர்வ்ட் பெட்டியில் பயணம் சென்றேன்.

இடம் கிடைக்காமல் தேடியபோது கார்னரில் இரண்டு இருக்கைகளில் ரயில்வே டிபார்ட்மெண்ட்டில் வேலை செய்பவர்களுக்கான பாக்கெட்டில் srmu (சரிதானா?) அட்டையுடன் உட்கார்ந்திருந்த அவர்களிடம் நின்றுக்கொண்டேன். காரணம் அவர்கள் ஆம்பூர், வாணியம்பாடியில் இறங்குவதால் எனக்கு உட்கார இடம் கிடைக்கும் என்று பக்கத்தில் இருப்பவர் சொன்னதால்.

இது மத்தியானம் 1:32க்கு சென்னையில் கிளம்பி இரவு 8:30க்கு பெங்களூரை அடையும் ரயில்.

பிறகு நடந்தவைகள்தான் எனக்கு உணர்த்தியது நான் அங்கு நின்றது தவறு என்று.

அப்படியென்னதான் நடந்தது என்கிறீர்களா?

நான் சொல்வது எல்லாம் உண்மை...உண்மையைத்தவிர வேறோன்றும் இல்லை!

அந்த ஐந்து ரயிவே ஊழியர்களின் அத்து மீறல்கள்...யாரிடம்???

 "அரக்கோணத்தில்" ஏறிய குண்டாய் இருந்த முந்திரி கொட்டை மற்றும் முந்திரிப்பழம் விற்க்கும் பெண்ணை அவர்கள் தங்கள் அருகில் உட்காரச்சொன்னார்கள். உட்கார்ந்தவுடன் அவளிடம் பச்சையாக பேசுவதிலும், தொட்டு தொட்டு பேசுவதிலும், கொஞ்சலாக இளிப்பதிலும் அவர்களின் நேரம் போனது.

அந்த அம்மாவும் அவர்களுடன் சிரித்துக்கொண்டும், நெளிந்துக்கொன்டும் வந்தாள் (அவள் என்ன செய்வாள்...இப்படி இளிக்க வில்லையென்றால் அவர்கள் நாளைமுதல் அவளை ரயிலில் எதையும் விற்க்க தடா போடுவார்கள் போலும்). இளித்துகொண்டே இலவசமாய் கொஞ்சம் முந்திரிகளையும் வாங்கிக்கொண்டார்கள்.

கொஞ்ச நேரத்தில் ஒருவர் ஃபோன் செய்யதொடங்கினார்...யேய்...நீ சரியா வாடி...மறக்காமே தண்ணி பாட்டில் கொண்டுவாடி....என்று ஒருமையில் பேசினார்.

அடுத்த சோலிங்கர் ஸ்டேஷனில் ஸ்டாப்பிங்க் வந்தவுடன் அவர்கள் முன்னமே ஃபோன் செய்ததுப்போல் பூ விற்க்கும் பெண் ஏறிணாள். கூடவே அவர்களின் அடுத்த இரண்டு ரயில்வே ஊழியர்கள் ஏறினார்கள். உக்கார்ந்தவர்களில் இருவர் இறங்கிக்கொண்டனர்.

இப்போது பூ விற்க்கும் பெண்ணுடன் அவர்களின் சம்பாஷனைகள் ஆரம்பமனது. அவள் கொண்டுவந்த ஐஸ் வாட்டரில் கூலிங்க் கம்மியாம். "ஸ்டேஷன் மாஸ்டர் கிட்டே லைட்டா தடவினா நல்ல கூலிங்க் வாட்டர் தருவாரே" என்கிற படி அவர்களின் வார்த்தைகள்...

அது மட்டுமல்லாது அவர்கள் சுமார் 6 அல்லது 7 பேர் இருப்பதால்( அதில் இரண்டு பெருசுகளும், மூன்று சுமார் 28 லிருந்து 32 வயது மதிக்கத்தக்கவர்களும் மற்றும் ஐடிஐ படிக்கும் இரண்டு மாணவர்களும் அந்த குழுவில் அடக்கம்)

இன்னும் ரயிலில் டீ விற்ப்பவர்களிட்மும், தோசை விற்ப்பவர்களிடமும் நெரிசலில் இருக்கும் பெண்களை பற்றியும், கல்லூரி பெண்களிடத்திலும் அவர்களின் தரம் கெட்ட கமெண்டுகள் என் காதுகளை கூசியது.

இரண்டு அரவாணிகளிடம் கேட்ட கேள்விகளும் அவர்களும் நொந்துக்கொண்டு தொடர்ந்த பதில்களும்...இத்தனை பேர் முன் இவர்களால் எப்படி இப்படி யெல்லாம் பேச முடிகிறது என்று என்னையே கேட்டுக்கொண்டேன்.

யாருமே கண்டுகொண்டதாக தெரியவில்லை....நான் உட்பட (இது தினமும் ரொம்ப சகஜம் போலும்).

ஆம்பூர் வாணியம்பாடி வரை இது தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. அதன் பிறகு அவர்கள் காணாமல் போனார்கள்.

எனக்கு அவர்கள் பக்கத்தில் உட்கார வெட்கமாக இருந்தது. தட்டிக்கேட்க முடியவில்லை என்கிற ஆதங்கம் வேறு. அதனால் தான் இதை இங்கு பகிர்கிறேன்.

பொது இடங்களில் அரசாங்க ஊழியர்கள் இப்படி அபத்தமாக நடந்துக்கொண்டது நல்லதாகப் படவில்லை. வயிற்று பிழப்புக்காக ரயில் பொருட்களை விற்க்கும் பெண்களிடமும், பயணம் செய்யும் பெண்களிடமும் இப்படி நடந்துக்கொள்ள இவர்களுக்கு யார் தைரியம் தந்தது?

நான் மட்டும் தமிழ் பட ஹீரோவாக இருந்திருந்தால் அவர்களை பாய்ந்து பாய்ந்து தாக்கியிருப்பேன். நான் சாதாரண கோகுல கிருஷ்ணனாக போய்விட்டேனே!

என்னால் முடிந்ததெல்லாம் இந்த ஃபேஸ்புக்கில் போட்டு அவர்களை உங்களின் முன் நிறுத்துவதுதான் தெரியும்.

இந்த காட்சிகளை நீங்களும் பார்த்திருக்கலாம்...கேட்டிருக்கலாம்....

இவர்களை அடிக்க இந்த பிளாகில் ஒரு ஹீரோ கூட இல்லாமல் போய்விடுவானா என்ன???

கடைசியாய் "பல்லு இருக்குறவன் பட்டாணி கடிக்கிறான் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்"No comments:

Post a Comment