Saturday, May 12, 2012

வழக்கு எண் 18/9 -திரைப்பட விமர்சனம்
வழக்கு எண் 18/9 -திரைப்பட விமர்சனம்


பாலாஜி சக்திவேல் தமிழ் பட இயக்குனர்களில் உண்மையில் நடந்த சமூகம் சார்ந்த பிரச்சனைகளை படமெடுத்து வெற்றிபெற்றவரின் அடுத்த படைப்பு இந்த வழக்கு எண் 18/9.

ஒரே கதை, ஆனால் இருவரின் பார்வைகளில் சொல்லப்ப்படுகிறது. ஒரு ஏழை காதல் பணக்கார காமத்தில் எப்படி அழிக்கப்படுகிறது என்பதுதான் படத்தின் கரு.

வடநாட்டு முறுக்கு கடையிலிருந்து தப்பித்து சென்னையின் ரோட்டோர இட்லி கடையில் வேலை செய்யும் பெற்றோரை இழந்த வேலு பக்கத்து அப்பார்ட்மெண்டில் வீட்டு வேலைசெய்யும் ஜோதி என்கிற பெண்ணை ஒருதலையாய் காதலிக்கிறான். ஜோதியின் அம்மாவுக்கு சில காரணங்களால் வேலுவை பிடிக்கவில்லை. பணக்கார வீட்டில் இருக்கும் ஆர்த்தியை மேல்வீட்டு கோடீஸ்வர மகன் தினேஷ் பல வகைகளில் செல்ஃபோனில் படமெடுத்து காமம்கொள்கிறான். இதையறிந்த ஆர்த்தி அவனை வெறுத்து ஒதுக்குகிறாள். கோபம் கொண்ட தினேஷ் ஆசீடை வீச அது அந்த வேலைக்கார பெண் ஜோதி மீது படுகிறது. ஜோதியின் அம்மா சொன்னதின் அடிப்படையில் தவறுதலாக வேலு மீது காவல்துறையின் பார்வை திரும்புகிறது.

கடைசியில் வேலு விடுதலையானானா, ஜோதியின் எடுக்கும் நிலையென்ன மற்றும் போலீசின் முகத்திரையை கிழித்து மனதை தொடும் விதத்தில் சமூகத்துக்கு பாடம் சொல்லியிருக்கும் நெஞ்சை உறையவக்கும் பதறவைக்கும் கடைசிக்காட்சிகள்.

நம்ம முடியலவில்லை....முதன் முதலில் முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்தே எடுத்து முடிக்கப்பட்டிருக்கும் படம். தெரிந்த பிரபலமானவர்கள் யாரும் இந்த படத்தில் நடிக்கவில்லை என்பது இதன் அடுத்த சிறப்பு.

பணக்கார வர்கங்களின் கைக்கூலிகளாக  மாறிப்போன அரசு எந்திரம், படிக்கும் வயதில் மாணவர்களின் தகாத ஆசைகள், மக்களின் நண்பன் என்று சொல்லி ஏழை மக்களின் மீது பொய் வழக்குகள் சுமத்தி தண்டிக்கும் அவலம் இறுதியாய் செல்ஃபோனால் மாணவர்களுக்கு ஏற்படும் ஆபாச பரிவர்த்தனைகள் என படம் முழுக்க பாடங்கள்.

பாலாஜி சக்திவேலின் இந்த வித்தியாசமான படைப்பை நாம் பாராட்டியே ஆகவேண்டும். புது முகங்களை பழகிய முகங்களாய் மாற்றிய அவரின் திறமைக்கு ஒரு சல்யூட்.
கதையும் கதை சொல்லப்பட்ட விதமும் உலகத்தரம். படத்தில் மனம் வருந்தும்போது வரும் கேமாராக்கோண்ங்க்களும் எடுத்த விதமும் அவரின் புதுமைக்கு கிடைத்த புகழ்.

ஏழை கதாநாயகன் வேலு கனகச்சிதம்.கரை படிந்த பற்களும் அழுக்கு உடையுமாய் படத்தில் ஜொலிக்கிறார்.

கதாநாயகனின் நண்பனாக வரும் கூத்துக்கலைஞன் சிறுவனின் நடிப்பு வைரக்கல்.

ஜோதிக்கு அதிக வசனம் இல்லை யென்றாலும் கடைசி காட்சியில் நம்மை கலங்க வைக்கிறார்.

பணக்கார பெண் ஆர்த்தியாக வாழ்ந்திருக்கிறார். வயசுக்கோளாறுகளால் ஏற்ப்படும் மாற்றங்களை அழகாக வெளிப்படுத்தி யிருக்கிறார். காந்தக்கண்களும் மாநிரமும் கோலிவுட்டில் ஆர்த்திக்கு நல்ல எதிர்காலம் இருக்கின்றது.

முக்கியமாய் பாராட்ட வேண்டியர் தினேஷ்...அப்பா இல்லாமல் வளரும் அவனுக்கு பணக்கார திமிரும், அழகும் கூடவே தப்பு செய்ய தூண்டும் நண்பர்களும் சொல்லவா வேண்டும் நடிப்பில் பின்னியிருக்கிறார். இந்த பாத்திரத்திற்க்கு இவர் சரியான தேற்வுதான் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

படத்திற்க்கே பலம் கொடுக்கும் கேரக்டரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடிப்பில் மிரட்டி யிருக்கிறார். முதல் படம் என்று சொல்லமுடியவில்லை. குடோஸ்!

முதல் பாதி அழுக்காகவும் இரண்டாவது பாதியை அழகாகவும் கதைக்கேற்ப்ப காட்டியிருக்கும் கேமராமேனை பாராட்டலாம். முழு நீள பாடல்கள் இல்லையெனினும் இசையமைப்பாளர் தனித்து நிற்க்கிறார்.

ஆனாலும் படத்தில் சில குறைகளை சுட்டிகாட்டியே ஆகவேண்டும்.

1. எல்லா பணக்காரர்களை கெட்டவர்களாகவும் ஏழைகள் என்றால் நல்லவர்கள்தான் என காட்டியிருப்பது சரிதானா.

2. போலீஸ்காரர்கள் என்னதான் தினேஷின் அம்மாவிடம் பணம் வாங்கி பொய் ஜோடனை செய்து வேலைவை கைது செய்தாலும், ஆர்த்தியின் கம்ப்ளெய்ண்ட் என்ன ஆனது மற்றும் உண்மையை தெரிந்துகொண்ட ஆர்த்தியின் வீட்டிலிருந்து ஏன் வேலுவை காபாற்றவில்லை என்பது விளங்கவில்லை.சரியாக சொல்லப்படவில்லை.

3. இறுதி தீர்ப்பில் வேலுவுக்கு விடுதலை கிடைத்தாலும் தவறு செய்த தினேஷை தண்டித்தவர்கள் இந்த பொய் வழக்குக்கு உதவி புரிந்த காவல் துறையை ஏன் தண்டனையில் குறிப்பிட வில்லை ஏன் தண்டிக்கவில்லை.

4. ஒரு மாணவன் இன்னொரு மாணவியின் வீட்டுக்குள் அவ்வளவு எளிதாக நுழையமுடியுமா எனக்கு தெரியவில்லை.

ஆனாலும் கடைசி காட்சியில் உங்களுக்கு கண்ணீர் வரவில்லையென்றால் உங்களுக்கு இதயம் இருக்கின்றதா இல்லையா என்பதை தயவு செய்து பரிசோதித்துக்கொள்ளுங்க்கள்.

என் கல்லூரி சீனியர் மயிலின் ஆர்ட் டைரக்க்ஷனும் யதார்த்தமாக உள்ளதை உள்ளபடி வடிவமைத்துள்ளார்.அவருக்கும் என் வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் இந்த வழக்கு எண் பதினெட்டின் கீழ் ஒன்பது காதலுக்கு கலங்கரை  போலீசுக்கு கல்லரை!

No comments:

Post a Comment