Sunday, March 25, 2012

அபிராமி மெகா மகால் - ஒரு அலுப்பு பயணம்.
அபிராமி மெகா மகால் - ஒரு அலுப்பு பயணம்.(இந்த கட்டுரையில் வரும் சம்பவங்கள் என் சொந்த கருத்து. நன்மை தீமைகளுக்கு நானே பொறுப்பு. மக்களின் பொதுநலத்தை கருதி இதை எழுதி இருக்கிறேன். நம்புவதும் நம்பாததும் அவரவர் சொந்த விருப்பம்).

கடந்த பல வருட சென்னை வாழ்க்கையில் திடீரென்று பல மல்டிஃபிளக்ஸ் தியேட்டர்களும் மல்டிஃபிளக்ஸ் மால்களும் முளைத்துவிட்டது. மும்பை மற்றும் பெங்களூருக்கு அடுத்தப்படியாக ஐனாக்ஸ், ஃபேம், சத்யம் சினிமாஸ், ஸ்கை வாக், மாயாஜால்,எக்ஸ்பிரஸ் அவென்யூ மற்றும் அபிராமி மெகா மால் இப்படி பல. வெளிநாட்டு கலாச்சாரத்தின் அடுத்த படையெடுப்புகள்.

முன்பெல்லாம் திரையரங்குகளில் படம் பார்க்க ஒருவர் போனால் 40 லிருந்து 50 ரூபாய் டிக்கெட்டும் இருபது ரூபாய் வரை இடைவேளைகளில் காப்பி,பப்சுக்கும் செலவாகும். ஆனால் இந்த மல்டிபிளக்ஸ் மால்கள் வந்தவுடன் ஒருவர் படம் பார்க்க 300 லிருந்து 400 வரை செலவாகிறது. வெளி உணவுகள் எடுத்துச் செல்ல அனுமதியும் இல்லை. படம் பார்ப்பது மட்டுமல்லாது நம் வீட்டு ஷாப்பிங்க்கையும் முடித்து விட்டு வந்துவிடலாம்.

சென்னையில் கிட்டத்தட்ட எல்லா மல்டிஃபிளக்ஸ்களையும் பார்த்தாயிவிட்டது. ரொம்ப நாள் ஆசையில் குடும்பத்துடன் அபிராமி மெகா மால் சென்றேன். பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களையும் அபிராமி ராமநாதனின் பல நிகழ்ச்சி பேச்சுக்களை கேட்டவன் என்பதால் மிக அதிகமான எதிர்ப்பார்ப்புடன் சென்றேன்.

வீட்டிலிருந்து புரசைவாக்கம் சென்றதும் மெகா மால் மெகாவாய் கண்ணில் பட்டது. படிகளில் ஏறி போனதும் மிகக்குறுகிய வரவேற்ப்பு வாசல் என்னை வரவேற்றது. வார நாட்களை குடும்பத்துடன் நிம்மதியாய் கழிக்கலாம் என்று சென்ற எங்கள் குடும்பத்தவர்க்கு நிற்பதற்க்கு கூட இடமில்லாத அபிராமி மெகா மாலை பார்த்தவுடன் ஆச்ச்ர்யப்பட்டேன்.....நில்லுங்கள்.... நிற்பதற்க்கு இடமில்லாத கூட்டமா என கேட்க வேண்டாம்!

அத்தனையும் கடைகள் கடைகள்....கடைகள்....தியாகராய நகரின் ரோடுகளை மறைத்துகொண்டிருக்கும் நடைபாதை வியாபாரிகளைப்போல் அபிராமி மால் முழுவதும் எண்ணிலடங்கா சின்ன சின்ன கடைகள்.

நம்ப மாட்டீர்கள் மாடிகளுக்கு செல்ல ஆறு பேர் வரை செல்லும் லிஃப்டும் மேலொருவர் ஏற கீழே ஒருவர் இறங்கும் இரண்டடி அகலம் கொண்ட படிகள்....

இவ்வளவு பெரிய மாலில் இவ்வளவு சிறிய படிக்கட்டுகளா? ஏதிர்பாராத அவசர காலங்களில் எப்படி இந்த படிகளை உபயோகப்படுத்த முடியும்? என் கண்ணில் ஒரே ஒரு அவசர கால வழி தென் பட்டது ஆனால் அவசரத்துக்கு இருவர் சேர்ந்து பயன் படுத்தக்கூடிய நிலையில் அந்த வழி இல்லை என்பது சோகம்.
எங்கையுமே மின்கசிவை தடுக்கும் ஃபயர் எக்ஸ்சிங்க்யூஷர் சிலிண்டர்களை பார்க்கவே இல்லை.

ராமநாதன் நல்ல வியாபாரத்தந்திரம் கொண்டவர் இருனூறுக்கு மேற்ப்பட்ட பெட்டி கடைகளை அங்கே அமைத்து நல்ல லாபம் பார்க்கிறார் என்பது நிஜம். ஆனால் சரியான பாதுகாப்பில்லாத ரோட்டிற்க்கு மிக அருகில் இருக்கும் இந்த கட்டிடத்திற்ற்கு அரசு எப்படி அனுமதி அளித்தது என்பது எனக்கு புரியவில்லை. பெரிய பெரிய கட்டிடங்களுக்கு முன்னால் சிறிய நிலத்தை "இது பொதுமக்களுக்கான திறந்த வெளி பூங்கா" என்று பத்தடிக்கு பத்தடியாவது சாதித்துவிட்டதாய் போர்டு போடும் பழைய மேயர் இந்த இடத்தை கவனித்தார என்பது புரியவில்லை.

நடப்பதற்க்கு கூட இடம் இலாததால் அது மல்டிபிளக்ஸ் ஞாபகத்தை எங்களுக்கு தரவில்லை மாறாக ஒண்டிக்குடித்தன வீடுகளுக்கு போன தலைவலியைத்தான் தந்தது.

மற்ற மல்டிபிளக்ஸ்களுக்கு போனவர்கள் அபிராமி மெகா மாலை என்ன வென்று சொல்வார்கள் என்பது எனக்கு நன்றாக புரிந்தது. குழந்தைகளுக்கான விளையாட்டு என்று சொல்லி அங்கே அடிக்கப்படும் கொள்ளைகள் அப்பப்பா....சொன்னால் புரியாது.

சரி...அங்குதான் அப்படி சாப்பிடவாவது போகலாம் என்று கீழ் தளத்திற்க்கு வந்தால் இன்னும் கொடுமை. சுமார் பத்திற்க்கு மேற்ப்பட்ட உணவகங்கள் இருப்பதால் மெனு கார்டை மாற்றி மாற்றி காட்டி வெறுப்பேற்றுகிறார்கள். நெருக்கமாய் பல கடைகள் இருப்பதால் பல சாப்பாட்டு சுவைகள் அந்த ஏசி அறைக்குள் பரந்து இருப்பதால் உண்மையிலேயே நிம்மதியாக சாப்பிடும் எண்ணம் வரவே இல்லை. சாப்பாட்டு விலைகளும் கொள்ளை விலை. தண்ணீர் பாட்டில் தான் வாங்க வேண்டும் என்பது தனி சட்டம். கழிவறை வசதிகள் கூட கீழ்தளத்தில் மட்டும் உண்டு அப்படியொன்றும் சுத்தமாக இல்லை.

எனக்கு தெரிந்த வரை மற்ற மால்களில் இருக்கும் இடவசதியும், காற்றோட்டமும் மற்றும் பாதுகாப்பு வசதிகளும் இங்கு இல்லை என்பது நிஜம். காரில் போகாததால் பார்க்கிங் பற்றி அவ்வளவாக தெரியவில்லை. புதிதாய் இந்த மாலுக்கு போகிறவர்கள் போகாமல் இருப்பது நலம். முன்பே போனவர்கள் இனி போக மாட்டார்கள் என்பது நிஜம். "அப்பா மெதுவா வீட்டுக்கு போலாம்" என்று சொல்லும் என் மகன் பத்துமுறைக்கு மேல் கேட்டுவிட்டான் "வீட்டுக்கு போலாம்பா" வார இறுதி நாள் மாலையை அழகாக கழிக்க நினைத்த நாங்கள் வியர்க்க விறுவிறுக்க அசதியாய் வெளியே ஓடி வந்தோம். கடைசியாய் இது "மெகா மால் நம்மை மெகா ஃபூல் ஆக்கும்"No comments:

Post a Comment