Wednesday, February 15, 2012

மெரினா - Tamil Movie Review


மெரினா பசங்க மற்றும் வம்சம் படங்களை அடுத்து பாண்டிராஜின் அடுத்த சொந்த படைப்பு இந்த மெரினா.

கடல் – மணலும் மணலை சார்ந்த இடமும் – இதுவே மெரினா.

 பசங்க படத்தில் குழந்தைகளை வைத்து தேசிய விருதை வாங்கிய பாண்டிராஜ் இந்தப்படத்திலும் குழந்தைகளை வைத்து கல்வி அவசியம் என்பதை எடுத்துள்ளார்.


எதிர்பார்ப்புடன் படம் பார்த்த எனக்கு….மிகப்பெரிய ஏமாற்றம். காரணம் பீச்சையும் முக்கியமாக பெண்களையும் மிகவும் கேவலப்படுத்தி அதை குழந்தைகளுக்கான படம் என்று விளம்பரப்படுத்தி இருக்கிறார். மெரினா என்றால் காதலித்தலும்,கஷ்டப்படுதலும்,சுண்டல் விற்றலும் மட்டும்தானா?
சத்தியமாக இப்படி ஒரு படத்தை பாண்டிராஜிடம் எதிர்ப்பார்க்க வில்லை.

        
 கதை என்று ஒன்றும் பெரிதாக இல்லை! நிறைய கிளைக்கதைகளை இணைத்து ஒரு முழு நீள டாக்குமெண்ட்டரியாக  2 1/2 மணிநேரத்துக்கு கொடுத்திருக்கிறார்.

ஊரை விட்டு ஆமர் ஊர்தியில் சென்னைக்கு வரும் கதாநாயகன் அம்பிகாபதி(பாண்டி) என்கிற 14 வயது சிறுவன் கடைசியில் மெரினா பீச்சில் தஞ்சம் அடைகிறான்.வயிற்று பிழைப்புக்காகவும், படிப்பை மீண்டும் தொடரவும் பீச்சில் தண்ணீர் பாக்கெட் விற்கிறான். இதற்கு பிச்சைக்காரர் தாத்தா உதவிசெய்கிறார். முதலில் அம்பிகாபதியை வெறுக்கும் சிறுவர்கள் பின்னர் இன்னொரு நண்பன் மூலம் ஒன்றிணைகிறார்கள். பீச்சில் ஏற்ப்படும் அன்றாட நிகழ்வுகள் தான் மீதி கதை.

பீச்சில்….மருமகளால் துரத்தப்பட்ட பிச்சைக்காரர் தாத்தா(சுந்தர ராஜன்), பாட்டு பாடி பிழக்கும் பெண் குழந்தையின் அப்பா (ஆறுமுகம்), போஸ்ட் மேன் அங்கிள் (ஜித்தன் மோகன்), பாண்டியின் நண்பன், குதிரைக்காரர், கதலிக்கும் செந்தில் நாதன் (சிவகார்திகேயன்), காதலியான சொப்பன சுந்தரி (ஓவியா), மனநலம் சரியில்லாதவர் மற்றும் ஜெயப்பிரகாஷ் ….இன்னும் நிறையப்பேர்.

பிச்கைக்காரரும்,மனநலம் சரியில்லாதவரும் முறையே….பெரியாரையும், செ கியூவாரா(che guevara) நினைவுறுத்துவதுப்போல் இருக்கிறார்கள். உண்மையா பாண்டிராஜ்?

மைனஸ் :

ஏகப்பட்ட நடிகர்கள் நிறைய கிளைக்கதைகள் மற்றும் நாடகத்தனம்.
சிவா, ஓவியாவின் காதல் காட்சிகளில் நகைச்சுவை அதிகம் இருந்தாலும் எல்லாமே பெண்களை மிகவும் மட்டமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. காதலையும் கொச்சைப்படுத்தி உள்ளனர்.

சுண்டல்/தண்ணீர் விற்ப்பவர்கள் எல்லாரும் அனாதைகள் தானா? பீச்சில் சோகம் மட்டும் தானா? எத்தனை நாளுக்குத்தான் ஏழ்மையை இப்படி வியாபாரமாக்கப் போகிறார்கள்?

டைட்டில் பாடல், பொங்கும் கடல் தவிர மற்றபாடல்கள் மனதில் நிற்கவில்லை( இசை கிரிஷ்).

முதல்பாதியில் காமெடி காட்சிகள் நிறைய இருப்பதால் இரண்டாவது பாதியின் கதையும், சோகங்களும் மனதில் ஒட்டவில்லை.

மெரினா பீச்சில் மட்டுமே கேமரா இருப்பதால் ஒரே வறட்சி.

மகன் குட்டுவதற்க்காக குற்றவாளியைத் தேடும் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பயங்கரமாய் பில்டப் கொடுத்து கடைசியில் நல்ல காமெடி).

பிளஸ் :

நனநல பாதிக்கப்பட்டவர், பிச்சைக்காரர், தபால்காரர் மற்றும் பாண்டியின் நடிப்பு.

சிவ கார்த்திகேயனின் டைமிங்க் காமெடி சென்ஸ்.

கடைசியில் வரும் குதிரை ரேஸ்.

“குழந்தை தொழிலாளர் ஒழிப்பு” எனும் நல்ல கருத்தை வலியுறுத்திய பாண்டிராஜ்.

ஃபைனல் கமெண்ட் : 

சென்னை மெரினாவுக்கு போனால் டைம் பாஸாகும்,
மெரினா திரைப்படத்துக்கு போனால் டைம் லூஸாகும்.Merina

 

After Pasanga and Vamsam Pandiraaj is back with his own production Merina.
Sea – Sand and places of sand is called Merina.
Director Pandiyaraj has won his National Award for his film pasanga which deals only with children. In his next venture titled merina, he has showed the importance of Education with the help of children.I watched the film with much expectation, but it was a big shock. Because this film deals mainly on beach and demeaned ladies a lot but the trailer looks like a children’s film. Merina means falling in love, feeling sad, and selling of chickpeas!!!!!
We did not expect such kind of film from the director Paniyaraj.

 

Having said that the film maker could have worked more to avoid the documentary feel the film gives for the most part. It is due to this very reason the film struggles to sustain the interest of the audience completely.
But sadly the film falls flat and has a documentary feel to it. You can predict in the first ten minutes more or less how the entire movie will play out. It is a gritty, clichéd tale of a bunch of people- old, young and kids who make a living at the famous beach by selling water packets and peanuts and has a story of their own to tell.
Ambikarathy(Pakoda Pandian) an orphan who comes to Chennai, the friendly kind-hearted postman (Jithan Mohan), an old man (Sundararajan) abandoned by his children, a singer(Arumugham) , Senthilnathan (Sivakarthikeyan) and his lover Swapnasundari (Oviya), a horseman are some of the characters in the beach.
Credible characterization is a positive element in Marina and all the artists fit in perfectly with their respective roles, with Pandiraj picking some of the real life beach vendors. The director has so finely tuned all his characters that actors on the fringe too manage to make a mark like the Old man beggar, the horse jockey, postman, girl’s dad, Siva, Oviyaa, Mentally ill man and Jayaprakash .
The beggar’s, mentally ill people respectively… is it that Pandiyaraj is resembles Periyaar and Che guevara….


Minus:


Many actors, many episodes and the Drama.
There is more comedy in Shiva and Oviya’s love scenes even tough ladies have shown very badly. They have given the wrong definition for love.
Is it that all chickpeas seller, water bottle seller, are orphans only????? For how long will these directors will show cast the poverty and advertising them.
Except Title song, and “Pongum kadal” no other song humming in our mouths (Music-Krish).
First half is full of comedy scenes so that the second half’s story and sadness doesn’t fix to our heart.
Since the whole film is dealing with marina beach there is no colour full scenes, full of dry.
A big comedy is that the police inspectors are in search of a accused, So that his son could hit him in his head. (Horrible build-up).


Plus:


Mentally ill man, beggar, postman and pandi’s acting.
Shiva Karhikeyan’s timing comedy sense.
Horse race at the end.
Pandiyaraj has insisted a good point “Child Labor”.


Final Comment:

If we go to Merina beach it will be a Time pass.
But if we go to merina movie it will be a Time loose.

No comments:

Post a Comment