Tuesday, February 21, 2012

"காதலில் சொதப்புவது எப்படி" Review"காதலில் சொதப்புவது எப்படி"

எப்போதாவது சில படங்கள் வித்தியாசமான கதையம்சத்துடன் வருவதுண்டு...சில படங்கள் வித்தியாசமாக கதையே இல்லாமல் வருவதுண்டு. இந்தப் படமும் அப்படித்தான்.

ஆனால்....வித்தியாசமாக சொல்ல நினைத்த இயக்குனர் வித்தியாசமாகவே சொல்லியிருக்கிறார். வித்தியாசம் வெற்றிப்பெற்றதா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

சில கதைகளை எபிசோடுகளாக எடுக்க முடியும், சில கதைகள் திரைப்படமாக எடுக்க முடியும். ஆனால் பல எபிசோடுகளை இணைத்து ஒரு முழுநீள படத்தை கொடுத்திருக்கிறார் இந்த இயக்குனர்.

நாளைய இயக்குனர்கள் போட்டியில் வெற்றிப்பெற்ற இந்த ஐந்து நிமிட கதை 2 1/2 மணிநேரமாக ஜவ்வுமாதிரி இழுக்கப்பட்டுள்ளது.

கதையே இல்லாமல் என்னதான் இருக்கு இந்தப் படத்தில்?

பெண்களை புரிந்துகொள்வது கஷ்டம்(அதுவும் காதலிப்பது ரொம்ப கஷ்டம்),பெண்களை நம்பாதே என்கிற இரண்டு மிகப்பெரிய தத்துவத்துடன் வெளி வந்திருக்கும் படம்.

இரண்டு காதலர்களுக்குள் ஏற்ப்படும் சண்டையில் ஆரம்பிக்கிறது படம். அப்புறம் குட்டி குட்டி ஃபிளாஸ்பேக், கடைசியில் இருவரும் இணைகிறார்களா என்பதே மீதிக்கதை. இரண்டு வருடங்களில் நடக்கும் கதையாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக வரும் என்று நம்பி சித்தார்த்தும், நீரவ் ஷாவும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். ஒரு கல்லூரி வளாகம், இருபது புதுமுக இளைஞர்கள் ஒரு வாரம் பாண்டிச்சேரி டூர் படத்தை மிக குறைந்த செலவில் முடித்தே விட்டார்கள்.

படம் முழுக்க புலம்பிகொண்டே இருக்கிறார் சித்தார்த், காதலியை சமாதானம் செய்வதிலும், கெஞ்சுவதிலுமே நேரம் சரியாய் இருக்கிறது. பக்கம்பக்கமாக வசனங்கள் பேசிக்கொண்டே இருக்கிறார் சித்தார்த்.அமலா பால் கொஞ்சம் கூட இந்த கதைக்கு ஒத்துவராத முகம். கோபப்படும் இடங்களில் கொஞ்சம் அழகு.
அமலாவின் அப்பாவாக வரும் சுரேஷின் நடிப்பு ஒகே. ஆனால் அவர்களின் கிளைக்கதை மனதில் ஒட்டவில்லை.

பாண்டிச்சேரியில் தண்ணி பார்ட்டியில் நடக்கும் கூத்துகள் ரசிக்கலாம்.

படத்தின் ஒரே ஆறுதல் நீரவ் ஷாவின் கேமரா மற்றும் சுரேஷின் எடிட்டிங்.

தமனின் இசை கேட்கும்படியாக ஒன்றும் இல்லை. தமன் - தெலுங்கில் காட்டும் முக்கியத்துவத்தை தமிழிலும் காட்டுங்க சார். 

முதல்பாதியில் இருக்கும் கதையின் தொய்வு இரண்டாவது பாதியில் இல்லாமல் செய்தது இயக்குனர் பாலாஜியின் திறமை,

இயக்குனர் பாலாஜி 80 சதவீத படத்தை வசனங்களிலேயே எடுத்திருக்கிறார். நல்ல வசனகர்த்தாவாக வருவார் என்பதில் சந்தேகம் இல்லை.

என்ன ஆனாலும் இந்தக்கதை இளைஞர்களுக்கும் காதலர்களுக்கும் கட்டாயம் பிடிக்கும். காதலர்கள் தியேட்டருக்கு போனால் பேசுவதற்க்கு நிறைய நேரம் கிடைக்கும். A சென்டர் ஆடியன்ஸ்களையும் கவரலாம்.

படத்தை பார்த்து இரண்டு நாட்களாகிவிட்டது. ஆனாலும் இன்னும் என் காதுகளில் சித்தார்த் புலம்பல் கேட்டுக்கொண்டே இருக்கிறது.


ஃபைனல் கமெண்ட் :

காதலில் சொதப்புவது எப்படி - நல்ல கதையை சொதப்பலாம் இப்படி!

"kaathalil sothappuvathu eppadi"

Sometimes few films comes with different story. But few films comes without story.This film lies under second category.

Some stories suitable for episodes, few stories suitable for movies. But this films is taken with combining many episodes together and made full length movie by the director.

This film won the award in “Naalaya iyakkunar” 5 min short film competition, now they drag it to 2 ½ hours full length movie.

Without story what’s rolling in this movie?

Reading the minds of women and to be loved is impossible! Don’t believe in girls these are the two quotes are main knots of this film.

The movie start with two lovers quarreling and after few small small flashbacks, the movie deals whether both gets joined or not. The story happens in two years.

Sidhaarth and Neerav Sha have produced this film with much confident. A college campus, around 20 new artist and one week Pondicherry tour, they completed this film with low budget.

Sidhaarth always blabbering in this movie, getting compromise and begs with the lover. So many pages of dialogue for Sidhaarth in this movie, he always talks much.

Amala paul doesn’t suit for this film. She looks beautiful in some places.
Actor suresh  as Amala Paul’s father acted ok. But their relationship is not touched.

Pondicherry drinks party scenes are enjoyable.

Nirav’s Camera and Suresh’s editing is only satisfied.

Thaman’s music is not up to the expectation. He could have concentrated more in Tamil as he proved in Telugu.

There is lack of speed in the first off, Second off director Balaji showed his talent to overcome the speed of the story.

Director Balaji has handled 80% of the film with dialogues. There is no doubt that he would become a good dialogue writer. 

Whatever happens this film is loved by all youngsters and the lovers. This move only for A center audience.
Almost two days completed watching the film still I am hearing Sidharth’s blabbering in my ears.


Final Comment:

 How to screw up love - Good story can be screwed up like this!

No comments:

Post a Comment