Friday, February 17, 2012

"Dhoni" Movie Review

"தோனி" திரைப்பட விமர்சனம்.சென்னையில் 9 வது படிக்கும் மாணவன் தனது டீச்சரை கத்தியால் குத்தி கொலை செய்த இந்த நேரத்தில் வந்திருக்கும் சரியான படம் இந்த தோனி.

எப்போதுமே நல்ல படங்களுக்கு உதவிசெய்யும் பிரகாஷ்ராஜ் மற்றும் டூயட் மூவிஸின் அடுத்த படைப்பு இந்த தோனி.
முதன் முறையாக டைரக்டராகவும் தன்னை நிலைநிறுத்தி இருக்கிறார், வெற்றியும் பெற்றிருக்கிறார்.

சமீபகாலமாக இந்திய கல்விமுறையை தாக்கி வந்திருக்கும் மூன்றாவது படம் இது. தாரே ஜமீன் ஃபர், 3 இடியட்ஸ் படங்களை தொடர்ந்து இந்த தோனி.

மற்ற இரண்டு படங்களைவிட இதில் யதார்த்தம் அதிகம்.
கதை :

மனைவியை இழந்து இரண்டு குழந்தைகளின் வளர்ப்புக்காக பாடுபடும் ரிஜிஸ்தார் ஆபீஸில் வேலை செய்யும் அப்பாவி மிடில்கிளாஸ் அப்பா ப்ரகாஷ்ராஜ் (கூடவே ஊறுகாய் தொழில் வேறு). அப்பாவுக்கு மகன் MBA படிக்க வேண்டும், ஆனால் மகனுக்கு தோனி, கிரிக்கெட் என்றால் உயிர். சுட்டுபோட்டாலும் படிப்பு வரவில்லை. வட்டிக்கு பணம் வாங்கி மகனின் படிப்புக்கு செலவழிக்கும் பிரகாஷ்ராஜ் படிப்பு வரவில்லை என்று மகனின் பள்ளியிலிருந்து பிரகாஷ்ராஜை கண்டிக்க கோபப்பட்டு மகனை அடிக்க தவறுதலாய் படாத இடத்தில் பட்டு மகன் உணர்வை இழந்து மயக்கமாகிறான் (கோமா நிலை). பிரகாஷ்ரஜுக்கு மேல் வீட்டு சூழ்நிலை விபச்சாரியும், கந்துவட்டி காரரும் உதவி செய்ய பின்னர் நடக்கும் உணர்ச்சிபூர்வமான இரண்டாவது பாதியே மீதி கதை.

இந்திய கல்விமுறைக்கு இந்த படம் கொடுக்கும் சாட்டையடி வலிமையானது. பந்தய குதிரைகளாகிவிட்ட இந்த சுமைதூக்கும் மாணவர்களின் நிலையை இயக்குனர் நன்றாகவே சொல்லியிருக்கிறார். பள்ளிகள் இதை புரிந்துக்கொள்ளுமா?

அரசு ஊழியர்கள் அரசாங்கத்திற்க்கு எதிராக செயல்பட்டால் ஏற்ப்படும் விபரீதத்தை கடைசி டுவிஸ்ட்டில் சாமார்த்தியமாக சொல்லியிருக்கிறார். ஆனால் இது அரசு ஊழியர்களின் அவலம்.

மிகப்பெரிய பலம் பிரகாஷ்ராஜ். மிடில்கிளாஸ் அப்பாவாக வாழ்ந்திருக்கிறார். இயலாமை அதனால் சமூகத்தின் மீது வரும் கோபம், மொட்டைமாடி அரட்டைகளில் அவரின் நடிப்பு ஏ ஒன்.

சூழ்நிலைகளால் வழிமாறிப்போன விபச்சாரி ராதிகா ஆப்தேயின் நடிப்பு சூப்பர். அப்பப்பா....ராதிகாவின் கண்கள் கவிதை. டைரக்டர்கள் கவனிப்பார்கள் என நினைக்கிறேன்.

கிரிக்கெட் வெறியனாக வரும் ஆகாஷ் நடிப்பு கவனிக்கத்தக்கது.இயல்பாக செய்திருக்கிறார்.

வட்டிக்காரர் முரளி ஷர்மாவின் தெனாவெட்டு நடிப்பும் கடைசியில் தடாலடியாக நல்லவராக மாறுவதும் கொஞ்சம் உறுத்தல்.

சின்ன சின்ன வேடங்களில் பலரின் அனுபவமான நடிப்பு படத்துக்கு பெரிய பலம். பிரபுதேவாவின் ஒரு பாடலுக்கான சிறப்பு தோற்றம் அழகு.

பின்னணி இசையில் சிக்சர் அடித்திருக்கும் இளையராஜா பாடல்களில் அவ்வளவாக ஜொலிக்கவில்லை.

படம் முழுக்க இழையோடும் நகைச்சுவை, குகனின் கேமரா, கிஷோரின் எடிட்டிங்கும் படத்தை தூக்கி நிறுத்தும்.

ஆங்காங்கே சில குறைகள்....

அர்த்தமற்ற தனமாய் காட்டும் அரசாங்க அலுவலகம்.
இரண்டாவது பாதியின் ஆமை வேகம்.
கல்வியை வெறுக்கும் மாணவர்களுக்கு விளையாட்டு ஒன்றுதான் சாப்பாடு போடுமா? கல்விமுறையை சாடும் இந்த படம் அதற்க்கு பதிலாக சரியான தீர்வை சொல்லவில்லை என்பது நிஜம்.
வெறும் 4 சதவீத மக்கள் பார்க்கும் விஜய் டிவியின் ஐந்து நிமிட பேச்சால் இவ்வளவு பிரபலம் கிடைக்குமா? எனக்கு தெரியவில்லை.
அவ்வளவு சுலபமாக முதலமைச்சரை பார்த்து பேசிவிட முடியுமா?

ஃபைனல் கமெண்ட் :

தோனி - கடைசி பந்தில் தேவைப்பட்டது இரண்டு ரன்கள், ஆனால் இந்த தோனி அடித்தது சிக்சர்."Dhoni" film review.

9th standard student who have killed his teacher stabbed by a knife, this timely released film have been released in a correct time named Dhoni.

prakaashraaj's duet movies always support the best movies and this venture Dhoni and he has directed himself. He won his first attempt as a director.

Recently this is the third movie regarding the Indian educational systems loops and following Thare zameen par, 3 Idiots.

Compare to other two movies this movie shows its reality.

Story:

Innocent and middle class prakaashraaj is the father of two children working as a clerk in the registrar office who lost his wife and works hard to bring his children to high level in education (doing pickles as side business). Father wants son to do his MBA but son wants to become cricketer like Doni and he dies for cricket. He wants his children to get the best of education. But his son (Aakash) is interested in cricket and is not able to cope with his academics. Things get to a point when his school unceremoniously decides to sack Aakash. Prakaashraj in a fit of rage does something, that has devastating consequences and life isn't the same anymore for him and his kids. It is only now that Prakaashraj realizes that the fault was not with his son but rather with the education system itself. Prakaashraaj was helped by the prostitute and pawn broker in the second off story.

This film as given a big wip hit for the Indian education system. Students are victim as Horse race with loads. And director has elaborated their situations clearly. Will these schools knew this?

Govt officers who work against the government come across wave problems, described in the last twist. And this might be the govt staff's fate.

It is one-man show for Prakash Raj who is brilliant as Subbu as he carries this film completely on his shoulders. He delivers a mature and sensitive performance, adding those little touches that make a difference.

Radhika Apte playing a pivotal character, she acted as prostitute. Rathigaa's eyes like poetry. Will Tamil directors notify this?

Aakash as the young boy is spontaneous, cricket Monomaniac. Done his roll naturally.

murali sharma's assault acting skills and at last he as changing character as a pessimist.

Small small characters and some remarkable acting from the character artist are plus. Prabhudevaa's special appearance for one song is beautiful.

Ilayaraajaa'a as scored sixes in his Background music. But he failed to impress in songs.

The Comedy is moving along with the scenes. Guhan's Camera, Kishore's Editing have taken film to the next level.

There are few loop holes...

The places of Govt office are not worthy in this movie.
Second off moves tortoise speed.
Students who hate education - is it that sports alone will be only the solution? Movie shows about the failure of Indian education system but they have not given proper solution to solve this issue.
Vijay TV watched by only 4% of the people, just by five minutes speech will we get the popularity? i couldn’t understand.
Is that we can meet the CM very easily?

Final Comment:

Dhoni - Two runs needed from the last ball, but the Dhoni struck sixes.

No comments:

Post a Comment