Tuesday, February 7, 2012

உயிரின் எடை 21 அயிரி


 உயிரின் எடை 21 அயிரி
சில நேரங்களில் சில அதிசயங்கள் நடப்பதுண்டு….அப்படித்தான் இந்த படமும். படம் வெளி வந்ததே பலபேருக்குத்தெரியாது. அப்படித்தான் எனக்கும்!
இந்தப்படத்தை பார்க்க போனதற்க்கு இன்னொரு காரணம் உண்டு. தணிக்கை சான்றிதழ் பெறப்பட்ட போது சுமார் 42க்கு மேல் காட்சிகள் வெட்டப்பட்டு, தணிக்கை செய்யப்பட்டு வெளிவந்தப் படம் என்பதால்…என் எதிர்ப்பார்ப்பை தூண்டியது!

தியேட்டர் காலியாய் இருந்தது.வேண்டா வெறுப்பாய் நானும் படம் பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் எனக்கு கிடைத்தது இன்ப அதிர்ச்சி. முழுக்க முழுக்க திரைப்பட மாணவர்களால் உருவாக்கப்பட்ட படம். விளம்பரம் இல்லாததால் ஒரு நல்ல படம் வெளிவந்ததே தெரியாமல் போய்விட்டது.
சரி கதைக்கு வருவோம். திரைப்படத்தனம் இல்லாத வன்முறை அதிகம் உள்ள, கூர்மையான வசனங்களில் எடுக்கப்பட்ட நிழல் உலக அடியாட்களின் வாழ்க்கையை ரத்தத்துடன் சொல்லும் தைரியமான படம். அது என்ன “உயிரின் எடை 21 அயிரி” ரொம்ப துளாவியதில் “உயிரின் எடை 21 கிராம்” என்பது புரிந்தது.
முதல் பாதியில் அச்சா என்று அழைக்கப்படும் தாதா மலையாள நடிகர் விஜயனின் நம்பிக்கையான அடியாள் ஈஸ்வர், அச்சாவின் மகன் பாலூ என்கிற சீனு அச்சாவின் அடுத்த வாரிசாகவேண்டும் என்ற பேராசையால், ஈஸ்வரால் கொல்லப்பட்ட இன்னொரு குட்டி தாதாவின் தம்பி பாண்டியை கைகோர்த்து ஈஸ்வரை அறிவாளால் கண்டம் துண்டமாய் வெட்டி ஆற்றில் வீசிவிடுகிறார்கள்.
விதவை மருமகள், பேத்தியுடன் வாழ்ந்துவரும் ஒரு இயற்கை கிராமத்து மருத்துவரால் காப்பாற்றப்படும் ஈஸ்வர் உண்மையான பாசத்தை அறிந்து இவர்களுடன் வாழ நினைக்கிறார். எப்படியோ ஈஸ்வரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து அச்சா அவரை மீண்டும் அழைத்துவருகிறார். அச்சாவுடன் பேசி அடிதடிகளை விட்டு நல்ல மனிதனாய் திருந்தி வாழவும் மருத்துவரிடம் திரும்பி போக சம்மதம் பெறுகிறார் ஈஸ்வர். ஈஸ்வரை கொண்டுபோய் விட கூடவே செல்லும் அச்சாவின் மகன் சீனுவும் அவனின் இன்னொரு உதவியாளனும் ஈஸ்வரை என்ன செய்கிறார்கள் என்பதை படபடப்பாய் சொல்லும் கலங்கவைக்கும் கடைசி கிளைமாக்ஸ்.
முதல் பாதி வேகமாய் நகர்ந்தாலும் இரண்டாவது பாதியில் அதிக தொய்வு. அச்சாவாய் வரும் திலகன் கலக்கி யிருக்கிறார். அவரின் அனுபவம் ஒவ்வொறு காட்சியிலும் மிளிர்கிறது.
ஈஸ்வராக நடித்திருக்கும் படத்தின் இயக்குனர் முதல்பாதியில் நன்றாக நடித்திருக்கிறார். ஆனால் மெதுவாய் நகரும் இரண்டாவது பாதியில் கதையில் வலுவில்லாதலால் அவரின் மேல் பரிதாபம் எழவில்லை.மருத்துவரின் மருமகளாக வரும் நாயகிக்கு நடிக்க அதிக வாய்ப்பில்லை.
வைத்தியர், குழந்தை, சீனுவின் நடிப்பு மற்றும் ஆட்டு காமெடி என அங்காங்கே இன்னும் சில பிளஸ். வசனங்கள் மிகவும் அருமை.
” என் கண்ணீர்- கண்ணாடிக்கும்,கட்டிலுக்கும் மட்டும் தெரியும்” ” முன்னால் செய்த கருமங்களை நினைத்து வருந்துபவன் மனிதன், வாய்ப்பு கிடைத்தும் திருந்தாதவன் மிருகம்” இப்படி பல…
ஜெ.பி,ராஜின் ஒளிப்பதிவு இருட்டையும், ரத்தத்தையும் மற்றும் கிராமத்தின் அழகையும் இன்னும் அழகாய் காட்டியுள்ளது. ஜி.கார்த்திகாவின் எடிட்டிங் 42 வெட்டுகளைத்தாண்டி படத்தை தூக்கி நிறுத்தியிருக்கின்றது. ஏகனின் இசையும் சண்டைகாட்சிகளில் பரபரப்பை கொடுக்கின்றது.
மொத்தமாக திரை தொழில் நுட்பத்தில் நல்ல படம் ஆனால் அதிக வன்முறையும்,ந்நாடகத்தனமான இரண்டாவது பாதியும் படத்தின் தரத்தை குறைக்கின்றன.

“உயிரின் எடை படத்தின் தரத்தில் இல்லை”!


Sometimes some surprises happen…..this film is of that kind. Release of this film is not known by many of the people, even for me!
There is one more reason to watch this film. When the film got the sensor certificate around 42 scenes had cut, and censored and the got realised and it made me to watch this film. No crowd in the theater. With hesitation i started watching the film. But i got few surprising elements while watching this film because the whole film was taken by film institute students. Without much publicity about this good film people haven’t knew much about it.

let’s start the review. Uyirin Yedai 21 Ayiri is an underworld don story with the old message that one who takes the knife will die by the knife. The movie is all about a ruthless, paid killer who realizes the value of the human soul in his death bed. I searched meaning for the title finally i got to know “Soul’s weight is 21 Gram”.

The first half is about don Acha, his favourite goon Eeswar (Aegan) & the betrayal of the don’s son Seena. The narrative style of the director is neat and the interesting screenplay engages the audience with the notable scenes being the one in which the doctor realizes the influence of the don, and how Aegan is trapped by his own team mates. However, the blood-filled murders are clumsy and irritating. There are also no entertaining moments in the first half. The latter half is all about how the ruthless Eeswar transforms into a good human being. However, there are no good sequences to depict this. Forcefully added romance & the sentiment sequences make the movie look unrealistic.
Veteran Malayalam actor Thilkan, casted as don Acha, steals the show with his realistic performance. His body language, dialogue modulation, the style of his smoking are all spectacular. Murali, who plays as Seena, has also done a neat job.

Director Aegan plays the lead role as Eeswar and scores well in the second half, winning the sympathy of the audience in the climax. However, his physique and body language do not fit him into the shoes of a ruthless goon. Vinitha has minimum screen space.
village sidha docter, The Child, Cheenu’s acting and Goat comedy been plus for the film. Dialogues really excellent. For example “My tears is known to the Mirror and cot only” “the people who think about the past sin they become human in future, the people doesn’t realise their sin is referred to be animal”
Cinematography by J. P. Raj Selva is excellent with some good night-shots. He captures the beauty of Mothiramalai Forest with some stunning visuals. Editing by G. Karthika is so good that there is no evidence of the 42 cuts imposed by the Censor Board. Director Aegan also composes the music and background score. His background score in the stunt sequences have added tempo to the visuals. 
Overall, Aegan’s Uyirin Yedai 21 Ayiri, though technically scoring well, gets bogged down due to the blood spilling violence, the slow-paced second half and the lack of any entertaining elements.


“Weight of Soul is not in the Quality of the film”!

No comments:

Post a Comment