Tuesday, January 3, 2012

வெள்ளைக்காரன் கதை கேளு!




முதல் கதை...

அன்று கப்பலில் வந்தவர்கள்
இன்று விமானம் ஏறி வந்தார்கள்.

பருத்தி பூமிகளை குறிவைத்து
விவரமில்லாத விவசாயிக்கு
இனிமையாய் இளித்துக்கொண்டு
விதையில்லா பருத்தி என்று
இலவசமாய் கொடுத்தார்கள்!

கொள்முதலை கொள்ளை விலைக்கு
அவர்களே வாங்கிக்கொள்வதாய்
கையில் அடித்து சொன்னார்கள்!

பாவப்பட்ட பாமரனும்
பச்சைப் பொய்களை நம்பி
பருத்தியை பாசமாய் பயிரிட்டான்!

முதல் அறுவடையில்...
அமோக விளைச்சல்

இரண்டாம் அறுவடையில்...
நல்ல விளைச்சல்

மூன்றாம் அறுவடையில்...
சுமாரான விளைச்சல்

நான்காவது முறை
விதைக்காக வெள்ளையனிடம்
கைக்கட்டி நின்றான்
மூன்றுமுறை இலவசம் என்றவற்கள்
இம்முறை ஐந்தாயிரம்,பத்தாயிரம் என்றார்கள்!

விதையில்லாத விதை - இவன்
நிலத்தை மலடாக்கியது! -இந்த
வியாபாரக் கதை - இவன்
வாழ்வை முரடாக்கியது!

அடுத்த கதை...

அப்போதெல்லாம்...
ஊரெங்கும் நாட்டுக் கோழிகள்
வீட்டில் ஒருத்தராய் அவைகளும்

அடை காத்து...குஞ்சுப் பொறித்ததால்
நாட்டு முட்டை நாலணாவுக்கு கிடைத்தது
நடை நடந்து வரும் விருந்தாளிக்கு
வீட்டு கோழி விருந்தோம்பலாய் இருந்தது!

வெள்ளையனைப் போலவே...
வெள்ளைக் கோழியை கொண்டுவந்தான்
ஊர் முழுக்க இலவசமாய் கொடுத்தான்
இயற்கையை மறந்த இந்தியனும்
செயற்கையை திறந்துக் கொண்டான்!

"லகான்" முட்டையை நம்பி
நாட்டுக் கோழிகளை அழித்தான்
அமெரிக்கன் கெஃப்சி யை நம்பி
சேவல்களை வெறுத்து மறந்தான்!

நாலணாவுக்கு கிடைத்த நாட்டு முட்டை - இன்று
மூன்று ருபாய்க்கு லகான் ஆனது!
வீட்டில் இலவசமாய் வளர்ந்த கோழி - இன்று
கிலோ எழுபது,எண்பதானது!
கரிக்கோழிகளை  தின்று தின்று
உடலும் பெருத்தது! ஊரும் பெருத்தது!

அன்று...
விதையில்லா பருத்தி
சதையில்லா கோழி

நேற்று...
மரபணு கத்திரிக்காய்

நாளை...
வால்மார்ட்டாமே???

No comments:

Post a Comment