Monday, January 23, 2012

இந்திய பள்ளிகள் டிஜிடலுக்கு மாறிவருகின்றன


இந்திய பள்ளிகள் டிஜிடலுக்கு மாறிவருகின்றன


நாம் எல்லாம் படிக்கும்போது சிலேட்டும், பலப்பம் கொண்டு பாடம் படித்தோம். நேற்றய குழந்தைகள் நோட்டு புத்தகங்களை கொண்டுப் படித்தனர். இன்றைய குழந்தைகள் “White Borad, Digital Board” களில் படிக்கின்றனர். ஆனால் நாளைய இந்திய குழந்தைகள் மடிக்கணினி (Laptop) மற்றும் கையடக்கக் கணினி ( Tablet) களைக் கொண்டு படிக்கப் போகின்றனர்.
உலக அளவில் டிஜிடல் மூலம் கற்ப்பித்தல் வெகுவாக வளர்ந்துவரும் இந்த வேளையில் இந்தியாவும் உலக சூழலுக்கு ஏற்ப்ப மாறிவருகின்றன. இவை உண்மையிலேயே வரவேற்க்கப்பட வேண்டிய மற்றும் தேவைப்பட வேண்டிய முன்னேற்றம். காரணம் இன்றைய குழந்தைகளின் புத்தகச்சுமைகளை வெகுவாக குறைக்கும் (LKG,UKG குழந்தைகள் மூன்று முதல் நான்கு கிலோக்கள் வரை புத்தக பைகளை சுமக்கின்றனர்).
 டிஜிடல் கல்வி கல்விமுறையை முறை இன்னும் எளிமையாக்கும். இன்னும் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கும் இது வழி வகுக்கும். இதில் இணையம் இருப்பதால் குழந்தைகளின் பொது அறிவும் உலக நடப்புகளும் மென்மேலும் பெருகும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

Indian schools are changing to digital


While we are in schooldays we used to study using black board and chalk piece. Next to our generation childrens studied using books and notes.Today’s generation children use white board and digital board for their education.But the next generation of India will use laptop and tablet for their studies. World wide teaching by digital method is common in India , and at the same time India is also changing its teaching process side by side.
Saying truthfully this process is one which is welcomed by everyone and it is compulsory for India too.Reason behind it is that the students are carrying books which is very heavy and by this process the burden for the students would reduce ( LKG, UKG students carrying 3 to 4 kg’s of books as their burden.) Digital method would make the education very easy ,and it might welcome other new devices to come.
We have internet connected to it , so students would be able to study more on General knowledge, World wide news and much more.we don’t have any doubt about it. Since internet is connected to it we have advantages and disadvantages . If teachers and parents bring students in a proper path this might be a good development.

Infant deaths in West Bengal Hospital


Infant deaths in West Bengal Hospital

As said for the past 5 months around 3700 infants have died in hospital.The infant babies who have died are all around three months babies.RTI activist approached the court for the public welfare of law .the West Bengal  Mamta ‘s government has given this shocking news based on people welfare.
These kind of incidents are taking place in government hospitals still now.Yesterday around 20 children’s have died because of no medical treatment.For past three days 47 infant babies have died.Parents have complained that this is happening because of doctor’s carelessness and no proper medical treatment. Children’s which was born are the category less weight and because of nutrient deficient,and say that the infants would have died because of this.Indeed weather the doctors are wrong? or there is no enough medical facilities in the hospital? We should find the main reason behind it? Media have informed that government of Mamta and the doctors are hiding the true reason behind these problems, and many infant child are still suffering from such problem in many hospitals .
Since Mamta’s government is getting ready for the election we do not know how they would tackle this problem.But opposite party have taken this problem against the government. In India 100 infant children’s are born but 17 of them die as soon as they get the birth.Horrible! Government has to give the proper reason behind these deaths and a they should be punished immediately.Unanimous voice of victims .மேற்க்கு வங்க மருத்துவமனைகளில் சிசுக்களின் மரணம்

கடந்த 5 மாதங்களாக மேற்க்கு வங்கத்தில் கிட்டத்தட்ட 3700 குழந்தைகள் மருத்துவமனைகளில் இறந்திருக்கின்றன. இந்தக் குழந்தைகள் அனைத்தும் ஒரு நாள் முதல் மூன்று மாதங்களேயான சிசுக்கள். இந்த அதிர்ச்சித்தரும் செய்தி பொதுநல வழகின் கீழ் ஒருவர் தாக்கல் செய்த “தகவல் அறியும் உரிமைச்சட்டம் (RTI) மனுவிற்க்கு மேற்கு வாங்க அரசின் மக்கள் நலத்துறை இந்த தகவல்களை தெரிவித்துள்ளது.

அரசு மருத்துவ மனைகளில் இந்த அவல நிலை இன்னும் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கின்றது. நேற்றுக்கூட 20 குழந்தைகள் சரியான மருத்துவ சிகிச்சைகள் இன்றி இறந்துப்போயின. கடந்த மூன்று நாட்களில் இது 47 வது சிசுக்களின் மரணம். இதற்க்கு மருத்துவர்களின் அலட்சியப்போக்கே காரணம் என பெற்றோர்களும், மக்களும் கூறி வருகின்றனர். குழந்தைகள் எடை குறைவாகவும் மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாடால் இறந்துப்போயிறுக்கின்றன என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உண்மையிலேயே மருத்துவர்களின் மீது தவறா? இல்லை மருத்துவமனைகளில் போதுமான வசதிகள் இல்லையா? என்பது ஆராய படவேண்டிய ஒன்று!
மம்தா அரசும், மருத்துவ மனைகளும் இந்த சிசுக்கொலைகளை மறைத்து வருவதாகவும் சரியான பாதுகாப்பு இன்றி பல குழந்தைகள் இன்னும் தவித்து வருவதாகவும் ஊடகஙள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. ஊடகங்களால்தான் இந்த அதிர்ச்சி தகவல்கள் ஒவ்வொன்றாய் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தேர்தலுக்கு தயாராகிவரும் மம்தா அரசு இதை எப்படி எதிர் கொள்ள போகிறது என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனால் எதிர்கட்சிகள் இதை அரசுக்கு எதிராக இப்போதே கையிலெடுக்க தொடங்கி இருக்கின்றன.
இந்தியாவில் கிட்டத்தட்ட நூரில் பதினேழு குழந்தைகள் பிறந்தவுடன் இறந்து போவது இன்னும் கொடுமை. மக்களுக்கு உண்மையான காரணங்களை அரசு தெளிவு படுத்தி இதற்க்குக் காரணமானவர்களை தண்டிக்கவேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் ஒருமித்த குரல். இதை சரியாக செய்யும் அரசே உண்மையான அரசு!அமெரிக்க கோடாக் நிறுவனம் திவால்


அமெரிக்க கோடாக் நிறுவனம் திவால்

உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற 131 வருடங்கள் அனுபவம் வாய்ந்த “கோடாக்’ புகைப்படக் கருவி (கேமரா மற்றும் ஃபிலிம்) நிறுவனம், தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருவதால், திவால் நோட்டீஸ் சமர்ப்பித்துள்ளது (சேப்டர் 11). அமெரிக்காவின் “கோடாக்’ நிறுவனம், புகைப்படக் கருவி, படச் சுருள் ஆகியவற்றில் உலகப் புகழ் பெற்றது. நூறாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த நிறுவனம், மோசமான நிர்வாகம், போட்டியாளர்களைச் சமாளிக்க முடியாமை ஆகிய காரணங்களால், கடந்த 2003 ம் ஆண்டு முதல் சிறிது சிறிதாக நொடிந்து கொண்டே வந்தது. கடந்த 2003 முதல், இதுவரை, தனது 13 படச் சுருள் மற்றும் புகைப்படக் கருவி தயாரிப்பு நிலையங்களை மூடியது.இந்நிறுவனம், சுமார் 47 ஆயிரம் ஊழியர்களையும் இதுவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளது.
சந்திரனில் முதன் முதலில் காலடி வைத்த நீல் ஆர்ம்ஸ்டாங் கால்பதித்த காட்சியைவெளியிட, இந்த நிறுவன படச் சுருளின்  உதவி வரலாற்றில் இடம் பெற்றது.இந்நிலையில் இந்நிறுவனம், அமெரிக்க அரசிடம், திவால் நோட்டீஸ் சமர்ப்பித்துள்ளது. இதன் மூலம் நிறுவனங்கள், தனிநபர்களிடம் வாங்கிய கடனை, இந்நிறுவனம் சிறிது கால அவகாசம் எடுத்துக் கொண்டு மெல்ல மெல்ல செலுத்தும். இந்த திவால் நோட்டீஸ், அமெரிக்காவில் இயங்கும் வர்த்தகத்திற்கு மட்டுமே என கோடாக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இப்போதைக்கு இந்திய வர்த்தகத்தில் பிரச்சனைகள் இல்லை என்பதால், இந்தியாவில் இதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்பது இன்னும் வரும் காலங்களில் தான் தெரியும். இந்தியாவில் கோடாக் நிறுவனத்தின் வர்த்தகம் நல்ல முறையில் இயங்கி வருவதால்,இந்நிறுவனத்துடனான வர்த்தகத்தை இப்போதும் உள்ளபடியே தொடரலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மிகப்பெரிய நிறுவனங்கள் எப்போதும் கவனமாகவே இருக்கவேண்டும் என்பது இதன் மூலம் இன்னும் தெளிவாகிறது.


Kodak files for bankruptcy

131 year worldwide film and camera pioneer Kodak Company (As Eastman Kodak Co.), after continues loss they given bankruptcy notice to American govt. Kodak Company famous for camera and film roll. World leader Kodak lost his prestige because of his poor management in high level and unable to compete competitors from the film companies. So from the year of 2003 started losing his bankrupt. Almost Kodak closed his 13 manufactured units all over the world and around 47,000 people sent home from work.
Neil Armstrong’s first click in the moon was with Kodak’s Camera, it was one of the finest moments in world and this pride moment is also taken place in the History. Kodak as produced the Bankruptcy notice to the American govt based on the chapter 11 – company had taken a limited period of time to pay the dues to the partners and independent distributers. This is applicable only for the American business.
Regarding this bankruptcy there is no worry for the Indian distributers and customers. After effects will known In upcoming days. In India Kodak company is in good stage and they have decided to continue the service in India.
To overcome such kind of incident the bigger companies should be always alerted.


"இலங்கைக்கான இந்திய உதவிகள்" - ஒரு முன்னேற்றம்.


இலங்கைத்தமிழர் இந்தியாவின் உதவிகளைப் பெற உள்ளார்கள் – ஒரு முன்னேற்றம்

எஸ்.எம். கிருஷ்ணா அவர்களின் அறிவுப்பு இலங்கை வாழ் தமிழ் மக்களை பெரிதும் சந்தோஷப்படவைத்துள்ளது. அப்படி என்ன அறிவிப்பு என கேட்கிறீர்களா? இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.எஸ்.எம்.கிருஷ்ணா தனது குழுவுடன் இலங்கைக்கு பயணம் மேற்க்கொண்டது அனைவரும் அறிந்ததே. இந்திய அரசாங்கம் இலங்கை வாழ் தமிழர்களுக்காக கிட்டத்தட்ட் 49 ஆயிரம் வீடுகளை கட்டித்தர முடிவெடுத்துள்ளது. இதில் ஆயிரம் தொகுப்பு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.இதை கிருஷ்ணா அவர்கள் இன்று இலங்கைக்கு அர்ப்பணிக்கிறார்.

நேற்று நடந்த இந்திய அரசின் வெளியுறவுட்துறை அமைச்சர் திரு.எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களுக்கும் ஸ்ரீலங்கா அமைச்சருக்கும் இடையே இந்த ஒப்பந்த்தங்கள் கையெழுத்தாயின. இதற்க்காக இந்திய அரசாங்கம் சுமார் 260 மில்லியன் பண உதவியை ஸ்ரீலங்காவுக்கு அளிக்கிறது. இந்த உதவிகள் தமிழற்கள் அதிகம் வாழும் கிளினொச்சி மற்றும் ஜஃப்னா பகுதிகளுக்கானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை அடுத்து இன்னும் நிதித்துறை, ரயில்வேத்துறை, விவசாயத்துறை மற்றும் தகவல் தொடர்புத்துறை களில் இந்தியாவின் உதவிகளுக்கான பரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின.
“இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானாலும் இந்திய அரசின் இந்த உதவிகள் தமிழ் மக்களுக்கு சரியானபடி போய் சேருகிறதா என்பதனையும் கண்காணிக்க வேண்டும் என்பதே எங்களின் விண்ணப்பம்.”"India's help to Srilankan Tamil's"

External affair minister S.M.Krishnaa's announcement had made Srilankan's tamil people to feel happy. 
What might be the announcement?
Two days before External affair minister S.M. Krishna and his team traveled to Srilanka regarding welfare scheme.
Indian Govt has planned to build around 49 thousand houses for Srilankan Tamilians. As a first step they have finished 1000 houses nearly 100 units.
Yesterday agreement was signed by  both the government. Indian govt has allotted 260 million for this scheme.These schemes mostly for the Tamils peoples territory like Kilinochi and jaffna.
They have also signed the agreement for the Finance, Railways, Agriculture and Tele Communication Dept.
"India should monitor weather are these needs properly to reaching Tamilans in Srilanka. This might be our kind request."

Nanban Reviewநண்பன் 

நண்பன் படம் பார்க்கப்போவதற்க்கு முன் என் மனதை தயார் படுத்திக்கொண்டேன்.காரணம் "3 இடியட்ஸ்" என்கிற படத்தை மூன்று வருடத்திற்க்கு முன் 
பார்த்ததிலிருந்து அதன் பாதிப்பிலிருந்து இன்னும் மீளாதவன் என்பதால்...மிகப்பெரிய ஒரு வெற்றிப்படத்தை ஷங்கர் எப்படி எடுக்கப்போகிறார் என்கிற எதிர்ப்பார்ப்பும்
என்னை படத்தை உடனே பார்ர்க்கத்தூண்டியது!

இந்திய கல்வி அமைப்பின் தரத்தையும் கல்வி முறையையும் சாடும் ஒரு சாட்டையடிப் படம். இன்றைய மாணவர்கள் பந்தய குதிரைகளாய், புத்தகத்தை படித்து ஒப்புவிக்கும் இயந்திரங்களாய் மாறிப்போன அவலத்தை சொல்லும்  படம்.

ஒவ்வொரு காட்சிகளும், கேமரா கோணங்களும் அப்படியே "3 இடியட்ஸ்" இன் ஜெராக்ஸ் காப்பி. "இதற்கு எதற்க்கு 60 கோடி செலவு அப்படியே மொழிமாற்றம் செய்திருக்கலாமே"  என தோன்றலாம்.அவர்களுக்கு என் பதில்...."இந்திப்படத்தை பார்க்காத/ புரியாத தமிழ் மக்கள் நிறயப்பேர் இருக்கிறார்கள்.அவர்கள் இந்தப் நல்ல படத்தை பார்க்கட்டுமே!"

கதை - "மாணவர்களது திறமையை அறிந்து அவர்களின் ஆர்வத்தை தெரிந்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் புரிந்து நடந்துக்கொள்ளவேண்டும்"  என்கிற உயர் கருத்தை வலியுறுத்தி இருக்கிற படம். ஃபிளாஷ்பேக்குடன் ஆரம்பிக்கறது கதை. இந்தியாவிலேயே மிகச்சிறந்த "ஐடியல்"கல்லூரியில் இஞ்சினியரிங் படிக்க வருகிறார்கள் கதாநாயகன் பாரி என்கிற விஜய், செந்தில் என்கிற ஜீவா, வெங்கட் என்கிற ஸ்ரீகாந்த் மற்றும் ஸ்ரீவஸ்தன் ( சைலன்சர்) என்கிற சத்யன். ஸ்ரீகாந்த்  வனவிலங்கு புகைப்படமெடுப்பதில் ஆர்வம் கொண்ட நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவன். ஜீவா சுமாராய் படிக்கும் பரம ஏழை மாணவன். விஜய் எதையுமே ப்ராக்டிகலாக செய்யும் அறிவான பணக்கார மாணவன்.அமெரிக்காவில் வேலை கிடைக்க படிக்கும் சத்யன்.
கல்லூரி முதல்வர் மற்றும் கல்லூரி சொந்தக்காரராக "வைரஸ்" என்கிற விருமாண்டி சந்தனம்( சத்யராஜ்).சத்யராஜ் மிகவும் கண்டிப்பானவர் எப்போதும் மாணவர்கள் 
நல்ல மார்க் எடுக்கவேண்டும் என்பதை கட்டாயமாக்கி கல்லூரியை முதல் இடத்திற்க்கு கொண்டுவந்தவர்.

   விஜயின் சாமார்த்தியமும், புத்திசாலித்தனமும் சத்யராஜை கோபம் கொள்ள செய்கிறது. ஆனால் விஜயின் திறமையைக்கண்டு சத்யராஜின் இரண்டாவது மகள்(இலியானா) விஜையை காதலிக்கத்தொடங்குகிறார்.அறிவு ஜீவியான விஜய் தனது அதீத அறிவால் பல ஆசிரியர்களின் கோபத்துக்கு ஆளாகிறார். சத்யனின் அமைச்சர்
வரவேற்ப்பு பேச்சில் விஜய் செய்த கட்டுரை மாற்றங்களால் அமைச்சர் கோபமாய் வெளியேர சத்யன் "செப்டெம்பர் 5" யை மொட்டைமாடி சுவற்றில் எழுதி சில வருடம் கழித்து மற்றவைகளைவிட தான் உயரிய இடத்தில் இருக்கப்போவதாகவும் விஜய்,ஜீவா,ஸ்ரீகாந்த் மூவரும் பிச்சை எடுப்பீர்கள் என சவால் விடுகிறார். சில வருடம் கழித்து ஸ்ரீகாந்த்,ஜீவா,சத்யன் மூவரும் விஜயை தேடி வருகிறார்கள்.

கதை விஜயின் தேடுதலிலும் ஃபிளாஷ்பேக்கிலும் நகர்கிறது. விஜயின் ஆசியால் ஸ்ரீகாந்த் நல்ல புகைப்படக்காரர் ஆகிறார். ஜீவாவுக்கு கார்பொரேட் கம்பெனியில் நல்ல வேலை, அமெரிக்க கம்பெனியில் சத்யனுக்கு பெரிய வேலை (ஒரு பெரிய காண்ட்ராக்ட்டுக்காக கையொப்பம் வாங்கவும் வருகிறார். அவர் தேடி வரும் "கொசக்க்ஷி பசப்புகள்" தான் விஜய் என்பது கடைசியில்வரும் திருப்பம்). யாருக்காக விஜய் பாரியாக இருந்தார் மற்றவர்களின் ஆசை நிறைவேறியதா? என்பதே கொஞ்சம் நீளமான இரண்டாவது பாதி.

விஜய் முதலில் பாரியாக வரும்போதும்,சின்ன சின்ன கண்டுப்பிடிப்புகளால் மற்றவர்களை அசத்தும்போதும்,சதூர்யத்தினால் படத்தில் மிளிர்கிறார். சீனியரை சிறுநீர் கழிக்கும்போது மின்சாரம் பாய்ச்சுவதும்,வசந்தின் ஹெலிகாப்டரை சரிசெய்வதும், இலியானாவை பணக்கார மாப்பிள்ளையிடம் காப்பாற்றுவதும், ஜீவானின் அப்பாவை சரியான நேரத்தில் காப்பாற்றுவதாகட்டும், கடைசியாக சத்யராஜின் முதல் பெண்ணுக்கு கார் பேட்டரி மற்றும் வாக்குவம் கிளீனர் கொண்டு பிரசவம் பார்ப்பதும் கதையாசிரியரின் தனிச்சிறப்பு.யதார்த்த மான விஜய் நடிப்பு படத்தின் பலம்.

ஜீவா நண்பனை காட்டி கொடுக்காமல் மாடியிலிருந்து விழுந்து காயப்படுவது, குடும்ப ஏழ்மையாலும் கையாகாதத்தனத்தால் புலம்புவதிலும் நல்ல நடிப்பில் அசத்துகிறார்.

ஸ்ரீகாந்த் அப்பாவிடம் தன் ஆசைகளை சொல்லி புலம்புவதிலும்,உடம்பை குறைத்து கதைக்காக நன்றாகவே உழைத்திருகிறார்.

இலியானாவுக்கு நிறைய காட்ச்சிகள் இல்லை என்றாலும் திருப்தியான நடிப்பு.

சத்யராஜ் - ரொம்பவும் மெனெக்கெட்டிருக்கிறார்.இழுத்து இழுத்து பேசுவதாகட்டும், தன் மகளின் பிரசவ காட்சிகளில் மின்னுகிறார்.தன் குருவின் பேனாவை விஜய்க்கு கொடுத்து திருந்துகிறார்.

காமெடியனாக இருந்த சத்யன் காமெடி கலந்த குணச்சித்திர நடிப்பில் உச்ச்த்தை தொட்டிருக்கிறார்.

ஒரே ஒரு காட்சியில் வரும் வசந்த்,பிரசவ காட்சிகளில் அனூயா, பாரியாக வரும்  எஸ் ஜெ சூர்யா, மில்லிமீட்டர் வின்செண்ட், இலியானாவின் மாப்பிள்ளை ராகேஷ், ஜீவாவின் அம்மா...படம் முழுக்க அங்கங்கே முத்துக்கள்.

முதல் மூன்று பாடல்கள் கதையோடு உணர்ந்து எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக வசந்த் பாடும் பாடல் நெஞ்சை தொடுகின்றது.

சில குறைகளும் உண்டு. கொஞ்சம் இழுவையான இரண்டாவது பாதி, சீனியர்களை ஏமாற்றும் ஜூனியர் விஜயை எப்படி ஒன்றுமே செய்யாமல் விட்டுவைத்தார்கள்,
சிறந்த மாணவனான பாரி என்கிற ஆள் மாறாட்டம் செய்யும் விஜய் திடீரென்று எப்படி "கொசக்க்ஷி பசப்புகள்" ஆக மாறி எப்படி புகழ்ப்பெற முடியும்? விஜயின் உடை யலங்காரங்களில் இன்னும் முக்கியத்துவம் செலுத்தியிருக்கலாம். தேவையில்லாத இரண்டு பாடல்கள் படத்தின் நீளத்தை கூட்டியிருக்கின்றன.

ஷங்கர் சொந்தக்கதைகளில் மட்டும் அல்ல அடுத்தவர் கதைகளுக்கும் மதிப்புக் கொடுத்து அதிகம் மாற்றாமல் தமிழ்ப்படுத்தி இருக்கிறார்.ஜெயித்தும் இருக்கிறார்.

நண்பன் இந்திய கல்வியமைப்புக்கு துரோகி!


Before watching Nanban i made myself well prepared ,because i saw "3 idiots"  three years before. i have not yet come out of it. i am eagerly waiting how Shanker would handle this superb movie in Tamil. This made me to watch this movie.

Nanban film is based on  Indian Educational System's quality and method of education system . Today's students education are always by hearting the portions like horse racing, and they have cahnged like a machine.
this film proves how yhe system should be.

In each and every scene an in camera handling its the xerox or "3 idiots" .U would thought why directors waste 60 crore for remaking this film in Tamil.answer for such question is " Many Tamil people would have not understood the film in Hindi, for those people Shanker has given a good film.

"Today's parents and the teachers should know the students interests and act according to them." Short description of the story.It story starts with a flashback.Three students comes to study engineering in a famous Ideal engineering college. Heroes Vijay as Paari , Jivva as Senthil , Srikanth as Venkat , and Sathyan as Srivasthav(silencer). Srikanth who loves to become a wild life photographer who comes from a middle class family, Jivaa who comes from a low class family studies less comparing both. next comes Vijay who comes from a rich family who is very practical in all matters. Sathyan studies well to get a good job in america. college principle and the owner of the college named(virus) Vitumandi Sandanam(Sathyaraj). Sathyaraj is a very strict person who always wants students to get good marks and get first in all, compulsory for each and every student..

Vijay's intelligence tempered Sathyaraj. Because of this Sathyaraj hated him but his second daughter Illena loved him. Vijay not only tempered the principle , he does this to everyone .sathyam's welcome address to the minister, angered the whole staffs- contents which was changed by vijay. sathyan went bad and he marks sep 5 on the terrace building and says who will be the greater one after a year after some years jiva, sathyan and srikanth come in search of vijay.

story moves by searching vijay and moving back to flash back. with the help of vijay srikanth becomes a good photograper, jivaa works for a corporate company and sathyan works in america.( comes to india to get signed in a contract) .sathyan doesnt know that vijay is that person who is in search of (kocakksi pacappukal) why did vijay turned as paari for whose sake he has acted like that comes in the second half.

why did  vijay act as paari? paari made small small researchers and shines in the film.pissing the seniors and passing electricity through it , finishing the eliicopter project made by vasanth, helping illena from the rich bride, saving jivvas father in a correct time, at the end saving sathyaraj's daughter during delivery using vaccum cleaner are some of the story writers plus. vijay's natural acting is films plus.

jeeva  without revealing vijays name he falls down from the principal's room and excellence to show his inability because of his poverty. He is done his best.

Shrikanth shown his acting by blabbering about his future to his father and by also reducing his body  weight for the character too.

Iliyana she don't have much scope in the screen.She done her job neatly. 

satyaraj  worked hard for his new role.He shines in his daughter delivery and in his speaking style. At last he gives the Guru's pen to Vijay  and changes his attitude.

comedian sathyan has done his Comedy along with is character role.  hands off to sathyan.

Vasanth in single shot, Anuya's delivery scene ,Original Pari S J Surya, Vicent as Millimeter, Rakesh as Iliyana's lover and Jiva's mother all have done Diamond  job.

First three songs mixed with the story especially the song which was sung by Vasanth was touching. 

There are few loop holes for example the second half  is little longer. How did junior student Vijay is left free after ragging seniors on the first day? How is it possible to  impersonate, and how can be possible for Vijay to become scientist (kocakksi pacappukal) within the period.

Shankar, Not only in his own story he proves his talent to make remake also. 

Finally Nanban Indian education system's Traitor.