Tuesday, December 25, 2012

என் அந்தகாலத்து பாட்டியும் கிறிஸ்துமஸ்ஸும்.
இந்த கதை 1940 களில் நடந்த உண்மை சம்பவம். என் அம்மாவின் அம்மா, என் பாட்டி ஒரு பக்காவான ஹிந்து குடும்பத்து பெண். ஊட்டியில் இருக்கும் மலை கிராமமான பாட்டியின் ஊரிலிருந்து அடுத்த மலையில் ஒரு சர்ஸ் (நேர்க்கம்பை சர்ச்- பெரிய மலையில் இருக்கும் சர்ச் என்று அர்த்தம்) ஒன்று இருக்கின்றது.

பல காலமாக அந்த சர்சுக்கு பாட்டியின் ஊரிலிருந்து பலர் கிறிஸ்துமஸின் முதல் நாளன்று அங்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு அங்கிருக்கும் குழந்தைகளுக்கு மிட்டாய்கள் கொடுத்துவிட்டு வருவார்கள். ஹிந்துக்களானாலும் பழையை சர்ச் என்பதால் இந்த ஊர்மக்களுக்கு அதன்மீது ஏதோ ஒரு வகையான பாசம்.

ஒரு நாள்....

கிறிஸ்துமஸ்ஸுக்கு முதல்நாள் என் பாட்டி என் மாமாவையும் (அம்மாவின் அண்ணன்), என் அம்மா(கைக்குழந்தை) யையும் அழைத்துக்கொண்டு ஊர்மக்களோடு அந்த சர்ச்சுக்கு சென்றிருக்கிறாள். அந்த சர்ச் இருக்கும் மலை மிகவும் செங்குத்தானது.....ஒற்றையடிப்பாதைதான்....மேலேறிப்போவத்ற்க்குள் ஒரு வழி ஆகிவிடுவோம்.

அங்கே பூஜை முடிந்தவுடன் எல்லோரும் மலையிலிருந்தி கீழே இறங்கியிருக்கிறார்கள். ஊர்மக்கள் அனைவரும் அவரவர் பாட்டுக்கு நடந்து வந்திருக்கிறார்கள்.

என் பாட்டியும் இடுப்பில் என் அம்மாவையும், என் மாமாவை இன்னொரு கையிலும் பிடித்துக்கொண்டு கொஞ்சம் கஷ்டப்பட்டே மலையில் கீழே இறங்கி இருக்கிறார்கள். திடீரென்று பல்லாயிரம் தேனீக்கள் சில நொடிகளில் பூம்......என்கிற சப்தத்துடன் கூட்டமாய் வந்திருக்கின்ற்து மேலிருந்து கீழ்....இதை பார்த்த மற்ற மக்கள் அனைவரும் வேகமாய் தலைதெறிக்க ஓட....என் பாட்டி கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் நின்றிருக்கிறார்.

"இயேசுவே என் குழந்தைகளை காப்பாற்றுங்கள்" என்று தனது தோளில் இருந்த வெள்ளை வேஷ்டியை (எங்கள் ஊர் அம்மாக்கள் வெள்ளை வேஷ்டியைய்த்தான் சால்வையாக போத்திக்கொள்ளுவார்கள்) என் மாமா மீதும், என் அம்மா மீதும் மூடி அப்படியே தரையில் உட்கார்ந்து இருக்கிறார்கள் கண்ணை மூடி இயேசுவை பிரார்தித்திருக்கிறார்கள்.

கொஞ்சம் நேரத்தில் பறந்த தேனீக்கள் என் பாட்டி, மாமா, அம்மாவைத்தவிற, இவர்களை அம்போ என்று விட்டுவிட்டு ஓடிய அத்துணைப்பேரையும் பதம் பார்த்திருக்கின்றது. மற்ற அனைவரின் கண்களும், கன்னங்களும், கைகால்கள் என அனைத்தும் கொப்புளங்களாய் வீங்கியிருக்கின்றது.

அன்றுமுதல் தங்களை பாதுகாத்த இயேசுவுக்கு ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் நாள் அன்று ஊரில் உள்ள அனைவர்க்கும் காஃபியும், டீயும், ஊட்டி வர்க்கி, பொரிகள் என கொடுத்து கடந்த 50 வருடங்களாய் தொடர்ந்து செய்துவருகிறார் என் பாட்டி. ஒவ்வொரு கிறிஸ்துமஸுக்கு முதல் நாள் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்புவரை என் அம்மாவும், நாங்களும், மாமாவும், மாமா குழந்தைகள் அனைவரும் பாட்டி வீட்டில் ஒன்றாய் இருந்து தியானம் செய்து மறுநாள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம். இரவில் இயேசுவின் பைபிள் படித்து எங்களுக்கு பல கதைகள் சொல்லுவார் என் பாட்டி.

ஆனால் கடந்த சில வருடங்களாய் நாங்களும், மாமாவும் பிள்ளைகளும் கல்யாணம், வேலை என்று அவரவர் வழியில் திசைமாறி ஒவ்வோர் இடத்தில் இருக்க அந்த பழைய நினைவுகள் மட்டும் மிச்சமுள்ளது இப்போது.

இப்போது கிட்டத்தட்ட 75 வயதை தொடும் என் பாட்டி கடந்த மூன்றாண்டுகளாக உடல் நலம் இல்லாததால் வெறும் மிட்டாய்கள் மட்டும் வாங்கி ஊரில் கொடுப்பதாக அம்மா சொன்னார்.

இந்த கிறுஸ்துமஸ் அன்று இதை பகிர்வதில் நான் சந்தோஷம் கொள்கிறேன். ஹிந்துவான அந்தகாலத்து பெண் ஆன என் பாட்டி இயேசுவையும் கடவுளாக நினைப்பதில் அவரின் பரந்த மனம் விளங்கும்.என் பாட்டிக்கு எல்லா வளமும் கிடைக்க பிராத்திக்கிறேன்.


நீதானே என் பொன் வசந்தம்ஃபேஸ்புக்கில் வந்த நெகடிவ் கமெண்டுகளால் கிட்டத்தட்ட மூன்று வாரம் லேட்டாய் பார்த்த படம். இவர்கள் சொன்னதுபோல் அப்படியென்றும் மோசமான படமாக எனக்கு தெரியவில்லை. காரணம் சண்டைகளும், வில்லன்களும், ஆபாசமும்  இல்லாத படத்தை இவர்கள் படமாக நினைப்பதில்லைபோலும்.

இரண்டு பேரின் வாழ்க்கையில் நான்கு பருவ நிலைகளில் நடக்கும் கதை. இந்தக்காதல் சொல்லப்பட்ட விதம் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தாலும்....அவ்வளவாய் போரடிக்கவில்லை என்றே தோன்றுகிறது.

எனக்கு ஒரு சந்தேகம்....கௌதம் எந்த படம் எடுத்தாலும் இது என் சொந்தக்கதை என்கிறார்...எத்தனை பேரை காதலித்திருக்கிறார்....எத்தனை காதல் கதைகள் வைத்திருக்கிறார் என்பது புரியவில்லை....!

இந்தப்படம் கட்டாயம் பிடிக்கும்... ஆனால் அதற்க்கு இரண்டு விஷயங்கள் நம் வாழ்வில் நடந்திருக்க வேண்டும். "ஒன்று நீங்கள் யாரையாவது காதலித்திருக்க வேண்டும் அல்லது உங்களை யாராவது காதலித்திருக்க வேண்டும்". பொறுமையாக இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது உங்களின் பழைய நினைவுகள் உங்களை துரத்தப்போவது நிச்சயம்.

சொன்ன விதம் கொஞ்சம் கொட்டாவி விடவைத்தாலும் படம் ரசிக்கும்படிதான் இருக்கின்றது. காதலில் இருக்கும் ஈகோவிலும், அதிகமாய் விரும்புவதினாலும், சொல்ல வேண்டிய தருணங்களில் சொல்லாமல் விட்டதாலும் இருவருக்குள் ஏற்ப்படும் இடைவெளியை இயக்குனர் நன்றாக சொல்லியிருக்கிறார். சினிமாத்தனங்கள் அதிகமில்லாத இந்த படம் ஒரு கமர்சியல் படம் அல்ல. அதனால் ரொம்பவும் எதிர்ப்பார்த்து போகவேண்டாம். கடைசி 25 நிமிடங்களை சுருக்கியிருந்தால் உண்மையிலேயே படம் விண்ணைத்தாண்டி வருவாயாவை கட்டாயம் தூக்கி சாப்பிட்டுவிட்டிருக்கும்.

ஜீவா சாதரணமாக நடித்துவிட்டு போகிறார். யதார்த்தமான நடிப்பில் நம்மை கவர்கிறார். சின்ன பிரச்சனைகளுக்காக சட்டென்று பிரிவதும், பின்னர் வருந்துவதும் , மீண்டும் துரத்துவதும் இயல்பாக செய்திருக்கிறார்.

சமந்தா உண்மையிலேயே பாராட்டக்கூடிய நடிப்பு. அதுவும் ஸ்கூல் பெண்ணாக அப்படியே அச்சு அசலாக கவர்கிறார். ஜீவாவை உருகி உருகி காதலிப்பதும், அவனுக்காக தன் வாழ்வையே அர்ப்பணிப்பதும் நிஜ வாழ்வில் நானும் பார்த்திருக்கிறேன். பெண்களுக்கு யாரையாவது பிடித்துவிட்டால் அவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். படத்தின் இறுதிகாட்சிகளில் நம்மை கொஞ்சம் அசைத்துவிடுகிறார் நடிப்பால். ஆனாலும், தெலுங்கில் நானிக்கு லிப் டு லிப் கொடுக்கும் சமந்தா ஏன் ஜீவாவுக்கு மட்டும் கொடுக்கவில்லை என்பது விளங்கவில்லை.

ஒரு டைரக்டர் பல படங்களை இயக்கி இருந்தால் அவருக்கென்று ஸ்டைல் உருவாவது இயற்க்கை. ஒரு நடிகர் பல வருடமாக ஒரே ஸ்டைலை கொண்டு நடித்தால் பாராட்டுவார்கள், ஒரு ஓவியர் தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கி ஓடம் வரைந்தாலும் பாராட்டுவார்கள். ஆனால் ஒரு இயக்குனரின் படங்களின் அவர்களின் முந்தைய படங்களின் சாயல் கொஞ்சம் இருந்தால் மட்டும் அது தவறா???காதல்களை மையப்படுத்தி கவுதமின் கதைகள் மற்ற இயக்குனர்களைவிட கொஞ்சம் வேறுமாதிரி இருப்பது போதாதா?

சந்தானம்...சீரியஸான படத்தில் ஆங்காங்கே கொஞ்சம் கிச்சு கிச்சு மூட்டுகிறார். மற்றப்படி கதைக்கு என்ன தேவையோ அதை கொடுத்துவிட்டு கிளம்பியிருக்கிறார். அவரின் மனைவியாக அந்த பெண் பல இடங்களில் சந்தானத்தை ஓரம் கட்டுகிறார். மற்றப்படி அமெரிக்க மாப்பிள்ளைகள் மாதிரி அமெரிக்கன் மணமகள் வரும் காலம் ஆகிவிட்டது....படத்தில் அமெரிக்கன் மணப்பெண்ணாய் வரும் நடிகை பாவம். அந்த பெண்ணை புதிய தலைமுறையில் பார்த்த ஞாபகம்...சரிதானா?

இளையராஜா...முதன் முறையாய் கை கோர்த்தாலும் படத்தில் ஒரு பாடல் சூப்பர், மற்ற இன்னும் இரண்டு பாடல்கள் அதைவிட சூப்பர். ஆனாலும் பாடல்களில் கொஞ்சம் பழைய வாடை அடிப்பதை தவிர்க்க முடியவில்லை.யுவனின் குரல் "சாய்ந்து சாய்ந்து..." பாடலில் நம்மை உருக்குவது நிஜம்.

நெகடிவ் என்று பார்த்தால்....கொஞ்சம் நீளமான திரைக்கதை...இருவரை பற்றி மட்டுமே கதை நகர்வதால் வரும் சலிப்பு, தன் குடும்பத்திற்க்ககத்தான் செலிகிறேன் என்பதை சொல்வதில் ஜீவாவுக்கு இருந்த தயக்கம், ரொம்பவும் சின்ன பிரச்ச்னைகளால் அடிக்கடி பிரிவது, சுரத்தில்லாத சந்தானத்தின் காமெடி, கொஞ்சம் கன்பியூஸ் செய்கிற வசனங்கள்,கௌதம் பாடிய இளையராஜாவின் பாடல் மற்றும் தேவையில்லாத கடைசி நீள காட்சிகள்....

நாங்கள் அனிமேஷன் படங்கள் எடுக்கும்போது அதை யாருக்காக எடுக்கிறோம் என்பதை தெளிவாக  குறிப்பிடுவோம். அதேமாதிரி "ஜனரஞ்சக படங்கள் எல்லோருக்கும் பிடிக்கும், இந்தமாதிரி குறிப்பிட்ட சிலருக்காக எடுக்கப்படும் படங்கள் எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை". இதுவரை மக்களுக்காக படம் எடுத்த இயக்குனர் இந்த படத்தை அவருக்காக எடுத்திருக்கிறார்!

இளைஞர்களையும், காதலர்களையும் நம்பி இந்த படம் இருக்கும் என்பதால் படம் சுமாரான வெற்றியை பெறும்.

மொத்தத்தில்
நீதானே என் பொன் வசந்தம் - காதலர்களுக்கும், பொறுமைசாலிகளுக்கும் மட்டுமான வசந்தம்!

Saturday, December 22, 2012

கும்கி :- திரைப்பட விமர்சனம்.கும்கி :- திரைப்பட விமர்சனம்.

நீதானே என் பொன்வசந்தமா இல்லை கும்கியா என யோசிக்கும்போது கும்கியை தேர்ந்தெடுத்ததற்க்கு காரணம், ஒன்று பிரபு சாலமன் இன்னொன்று சிவாஜியின் வாரிசு. ஆனால் முதலாமவர் என்னை ஏமாற்றிவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

என்னடா இது ஃபேஸ்புக்கில் எல்லோரும் இந்த படத்தை பாராட்டும்போது நீங்கள் மட்டும் எப்படி இப்படி பேசலாம் என்று கேட்பது புரிகின்றது. காரணம் நான் எழுதப்போவது நல்ல விமர்சனம் (கௌதமையும், ஜீவாவையும் பிடிக்காததால்தான் கும்கியை புகழ்ந்தார்களோ என்று தோன்றுகின்றது!).

காட்டு யானைகளின் அட்டகாசதிற்க்கு, என்ன காரணம் என்பதை ஒரே ஒரு வசனத்தில் மட்டும் மேலோட்டமாய் சொல்லிவிட்டு, காட்டு யானைகள்தான் மனிதர்களுக்கு எதிரிகள் என்று சொல்லாமல் சொல்லியிருக்கும் படம். உண்மையிலேயே வில்லன்கள் காட்டு யானைகளா? இல்லை மக்களா.....???

சரி கதைக்கு வருவோம்.....

பொம்மன் எனும் காட்டுயானையின் அட்டகாசத்தை (இந்த படத்தில் மட்டும்தான் காட்டு யானை சிங்கிளாக வருகின்றது!) மூன்று ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து (ஒரு ஊரைத்தான் காட்டுகிறார்கள் அதுவும் மொத்தம் 10 12 வீடுகளின் செட்) கும்கி யானை வரவைத்து காட்டு யானையை விரட்ட அழைத்துவருகிறார்கள். அவசரத்தில் கும்கியானை கிடைக்காததால் விக்ரம் பிரபு (இவரும் பொம்மன்) தனது செல்ல வீட்டு மாணிக்கம் என்கிற யானையை  கும்கியானை என்று சொல்லி அழைத்துவருகிறார். விக்ரம் பிரபு ஊர் தலைவரின் மகள் அல்லியை கண்டவுடன் காதல் கொள்ள (வழக்கம்போல்தான்...!) காதல் கை கூடியதா,  யானைகளின் நிலை என்ன மற்றும் காதல் கனிந்ததா என்பதை பச்சை பசேல் வெள்ளித்திரையில் காண்க.


முக்கியமான இன்னொரு கேரக்டர் விக்ரம் பிரபுவின் மாமாவாக வரும் தம்பி ராமைய்யா....முதன் முதலாக சோலோ காமெடியனாக நடித்திருக்கிறார். ஆனால் அவரின் இரட்டை அர்த்த வசனங்களும், மற்றவர்களின் மனதை புண்படுத்தும் விதமான வசனங்களும் நம்மை சிரிக்க வைப்பதை விட கொஞ்சம் எரிச்சல் அடைய செய்கிறார். அவரின் எடுபிடியாக "உண்டியல்" அவினாஷ் நல்லாவே செய்திருக்கிறார்.

நல்ல கதையை அரைவேக்காட்டாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர். படத்தில் திருப்பங்கள் ஏதும் இன்றி கொஞ்சம் மெதுவாகவே கதை நகர்கிறது (முதல் பாதி படு ஸ்லோ). சட்டென்று முடிந்துவிடும் சொதப்பல் கிளைமாக்ஸ்....உண்மையாக காரணத்தை ஆராயாமல் முழுப்பழியையும் காட்டு யானைகள் மீது சுமத்தி இருக்கிறார். வழக்கம்போல் இந்த படத்திலும் போலீஸாரும், அரசாங்க ஊழியர்களும் கெட்டவர்களாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். (இந்த இயக்குனர்கள் கதாநாயகர்களை போலீஸ் வேடத்தில் போட்டால் மட்டும் போலீஸ் துறையை உயர்த்தி காட்டுவார்கள்..இல்லையென்றால் அசிங்கப்படுத்தி மொக்கையாக்குவார்கள்).

படத்தின் ஹீரோ விக்ரம் பிரபு தனது முதல் படத்திலேயே சிவாஜியின் பேரன் என்பதை நிரூபித்து இருக்கிறார். ஆறரை அடி ஆஜான பாகுவான உடலமைப்பில் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வர வாய்ப்புண்டு. அதுவும் யானையின் தந்தங்களை இரண்டு கைகளால் பிடித்து நெற்றியில் முத்தமிடும் காட்கிகள் அழகு. ஆனாலும் அவரின் நீளமான மூக்கு கொஞ்சம் மைனஸ்தான். முதல் படத்தில் தன் வேலையை சிறப்பாக செய்ததில் நல்ல ஹீரோவாக வர வாய்ப்புண்டு (கிளைமாக்ஸ் காட்சியின் நடிப்பு ஒன்றே சாட்சி).

நாயகி அல்லியாக லக்ஷ்மி மேனன் கிராமத்து ஆதிவாசி பெண்ணாக அசத்தியிருக்கிறார். அகலமான கண்களால் முதல் காட்சியிலேயே ஹீரோவை அவுட்டாக்கியதில் தப்பேதும் இல்லை. முதலில் யானையை பார்த்து பயப்படும்போதும், பின்னர் அதனுடன் ஒட்டி உறவாடும்போதும் மின்னுகிறார். கிளைமாக்ஸ் காட்சியில் நம்மை கொஞ்சம் கலங்கடிக்கிறார்.

ஊர் தலைவராக (பெயர் தெரியவில்லை), அவரின் சகோதரராக ஜூனியர் பாலாஜி வித்தியாசமான கெட்டப்பில் ரொம்ப நாள் கழித்து ரீ எண்ட்ரி. ஒரு நல்ல நடிகரை தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. காட்டு வாசி மக்களாக அனைவருமே நல்ல தேர்வு....காஸ்ட்டியூமில் கவனம் செலுத்தா விட்டாலும் ஹேர் ஸ்டைலிலும், வித்தியாசமான நடிகர் தேர்விலும் பிரபு சாலமன் வெற்றிப்பெற்றிருக்கிறார்.....

முக்கியமாய் இயக்குனர் பிரபு சாலமன்....

மைனாவில் மயங்கவைத்த இயக்குனர். அடுத்ததாகவும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார். லொகேஷனிலும், நடிகர்கள் தேர்விலும், இசைக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை கொஞ்சம் கதையில் செலுத்தியிருக்கலாம். இரண்டு காட்சியில் வீட்டு யானைக்கு ஒரே ஒரு டயலாக்கில் கும்கி யானையாக மாற்றுவதென்பதும், ஒட்டாத காதலும், அறுவெறுப்பான ராமைய்யாவின் காமெடிகளும் நம்மை படத்திலிருந்து அந்நியப்படுத்துவதால் படத்துடன் ஒன்ற முடியவில்லை. இது மாதிரி சமூகம் சார்ந்த படங்களை எடுக்கும்போது கொஞ்சம் மெனக்கெடல் வேண்டும். சொல்ல வருவதை தெளிவாக சொல்லத்தெரிந்தால் மட்டுமே படம் சரியாகப்போய் சேரும். கடைசியில் யாரையாவது சாவடிக்காமல் படத்தை எடுக்க மாட்டீர்களா? பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சாலமன்.

படத்தின் முக்கியான ஹீரோ ஒன்னொருவரும் இருக்கிறார். அவர் இசை இமான். மைனாவில் சிக்ஸர் அடித்தவர் இதிலும் சென்ச்சுரி அடித்திருக்கிறார். படத்தின் முக்கியமான பலம் இசையும் பாடல்களும். சினிமாட்டோகிராபியில் பச்சை பசேல் மலைகளும், ரம்மியமான வயல் வெளிகளும் நம்மை குளிர்விப்பது உண்மை. இந்த மாதிரி லொகேஷன்களுக்காகவே படத்தை இன்னொரு முறை பார்க்கலாம். கொள்ளை அழகு.

மைனஸ் :-

நிறைய.....முதலில் படத்தின் அரைவேக்காட்டு கதை. படத்தின் முதலிலும், கடைசியிலும் இரண்டு நிமிடங்களுக்கு மட்டுமே கொம்பன் வருவதால் ஆர்வம் வராத கிளைமாக்ஸ், அவர்கள் ஊரில் யாருக்கும் தெரியாமல் இவர்கள் மட்டும்  காடு மலை என காதல் செய்வது, காதல் காட்சிகளில் மட்டும் தாவணி கட்டிக்கொண்டு பாறைக்குள் ஓளித்து வைப்பது, காதல் காட்சிகளில் இரண்டு காட்சிகளில் மட்டும் காதலனும், காதலியும் இணைந்து வருவதால் அவர்கள் பிரியும்போது நமக்கு ஏற்ப்படாத அதன் தாக்கம், சுமாரான கிராபிக் காட்சிகள் (இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு ஷாட்கள் வைத்திருந்தால் கிராபிக்ஸ் உதவியுடன் பரபரப்பை கூட்டி இருக்கலாம்), மெதுவாக நகரும் திருப்பங்களோ, வித்தியாசங்களோ இல்லாத சுமார் கதை, மொக்கை ரேஞ்சர்ஸ், நம்பிக்கை துரோகம் என்பதை கிளைமாக்ஸில் சொன்ன இயக்குனர் பொது மக்கள் காட்டு யானைகளுக்கு செய்யும் நம்பிக்கியை துரோகத்தை மறந்ததேன்?....இப்படி பல....

பிளஸ்....

யானை மாணிக்கம் கலக்கி இருக்கிறது அனைத்திலும், இசை மற்றும் பாடல்கள், லொகேஷன், விக்ரம் பிரபு, மற்றும் நாயகி.

மொத்தத்தில்...

 ஒட்டாத காதலும் அழுத்தமில்லாத கதையும் நம்மை ஏமாற்றிவிட்டார் பிரபு சாலமன். மைனாவில் வேகமாய் ஒடி வெற்றி கல்லை தொட்ட இயக்குனர், கும்கியில் வேகமாய் ஓடினாலும் குப்புற விழுந்து....ஆனாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று டிவிக்களில் கும்கி குழுவின் அலப்பறை செய்துக்கொண்டிருக்கிறார்கள்.

பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் :- சரியான போட்டி இல்லாததால் இந்த படம் சுமாராக ஓடும் திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமிக்கு கொஞ்சம் லாபமும் தரும்.

கும்கி :- பெரிய யானை சிறிய கதை!

Sunday, December 16, 2012

சம்மதமா?யானைக்கு மதம் பிடிக்கும்
மனிதனுக்கும் மதம் பிடிக்கும்.

யானைக்கு மதம் பிடித்தால் ஆசாமிகளுக்கு பாதிப்பு.
மனிதனுக்கு மதம் பிடித்தால் சாமிக்கு ஆபத்து!

நிறவெறி
முகத்திற்க்கு

பவுடர் போடும்போதே

 ஆரம்பித்துவிடுகின்றது நிறவெறி!

நீக்கம்!

"மனிதம்" என்பதில்

"னி" எடுத்து விட்டு

பேசுங்கள்

உண்மை புரியும்!

Friday, December 14, 2012

காப்பீடு திட்டங்களும் - வாய்ப்பாடு கட்டங்களும்.

காப்பீடு திட்டங்களும் - வாய்ப்பாடு கட்டங்களும்.

பொது மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு கட்டுரை.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு மத்தியான வேளையில் ஆபீஸில் இருக்கும்போது பலரின் மொபைல் போன்கள் அலறும். எடுத்து பேசினால் அழகான பெண்ணின் குரல்கள் உங்களை இடைமறிக்கும். சார்..நாங்க "...." இன்சுரன்ஸ் கம்பெனியிலிருந்து பேசுறோம்...உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்துக்காகவும் இன்ஸ்யூர் பண்ணுங்க சார் என்று குழையும். வேண்டாம் என்றாலும் பல காரணங்களை சொல்லி நம்மை கட்டிப்போட்டு அடுத்த நாளே டை கட்டிய பிரதிநிதியை வீட்டுக்கு அனுப்பி செக்கையும், போட்டோவையும் வாங்கி விடுவார்கள். கூடவே 10 பேப்பர்களில் கையெழுத்து வாங்கிக்கொள்ளுவார்கள். "கியாரண்டியா... டபுளாகும் சார்...உங்க பொண்ணு கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நடத்திடலாம் சார்...பையனுக்கு எஞ்சினியர் சீட் நிச்சயம் இந்த பணத்துலே தான் சார்" என்று கட்டம் போட்டு கணக்கு போட்டு உங்களுக்கு பல லட்சம் கிடைக்கும் என்று ஆசை காட்டுவார். அவர் பங்குக்கும் கொஞ்சம் தூவி விட்டு செக்கை வாங்கிவிட்டு போவார்.

அவர்கள் சொன்னதையெல்லாம் நம்பி வருடா வருடம் கஷ்டப்பட்டு உழைத்த சிறுக சிறுக சேர்த்த பணங்களை, பாலிசி காலம் முடிந்து எடுக்கலாம் என்று போனால் அந்த ஆபீஸில் முப்பது பல்லையும் காட்டிக்கொண்டு வணக்கம் வைத்து வரவேற்க்கும் அழகான ரிசப்ஷனிஸ்ட் பெண் கொஞ்ச நேரத்தில் அழகான ராட்சஷி ஆவாள். இதுவரை நாம் கட்டிய 40,000 ரூபாய் டபுளாகி இருக்கின்றது என நினைத்தால் அது நாம் கட்டியதை விட 18,000 குறைவாகவே இருக்கும்.

பலருக்கு ஹார்ட் அட்டாக்கே வரும்...."என்னங்க நான் கட்டிய பணம் கூட இல்லையே என்றால்"...."சார்...நாங்க என்ன பண்றது? மார்க்கெட் டல்" என்கிற ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொள்ளுவார்கள்.

"வேறே என்னதான் வழி" என்று கவலையுடன் கேட்டால்...சிம்பிளாய் சொல்லுவார்கள் "இன்னொரு நல்ல பாலிசி இருக்கு போடுறீங்களா?"

"நான் பாலிசி போட்டபோது மார்க்கெட் 17000 ஆயிரத்தில் இருந்ததே...2010 வாக்கில் 22 ஆயிரத்தை தொட்டது...இப்போது கூட 19500க்கும் மேல்தானே உள்ளது என கேட்டால்"...."ஹி ஹி...என்று வழிவார்கள். எங்க மானேஜர் இல்லை அடுத்தவாரம் வாங்க" என்பார்கள்.

அட...நாம் தான் ஏமாந்துவிட்டோம் என்றால் நம்மளை மாதிரி பல பேர் ஆங்காங்கே ஆபீசில் சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள். ஆண்கள், பெண்கள், படித்தவர், விஷயமுள்ளவர், பால்காரர், பிச்சைக்காரர்,முதலாளி, தொழிளாளி என்று பாரபட்சனையில்லாமல் ஏமாந்து இருக்கிறார்கள்.கிட்டத்தட்டா கால்வாசி இந்தியா ஏமாந்துவிட்டு...டிவியில் "சார்... கட்டி மூணு வருஷம் ஆச்சு...டபுளாகும்னு சொன்னாங்க...ஆனா பாதி கூட கிடைக்கலே..." என்று அதே டை கட்டியவர்களிடம் ஆலோசனைகள் கேட்டு புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள். மீன் மார்க்கெட்டை விட அதிக சப்தமானதாக இருக்கும்.

பின்னர் ஞானம் வந்து...அடுத்த பாலிசி போடலாம் என்றால் "டிரடிஷனல் பாலிசிதான் சார் கேரண்டி, மத்ததெல்லாம் வேஸ்ட் என்பார்கள்"

என்னதான் நடக்குது இங்கே?

பாலிசி கம்பெனிகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டு டை யப் செய்து சந்து பொந்தெல்லாம் கம்பெனிகள் முளைத்துவிட்டன. வெறு 10 சதவீத மக்கள்தான் தங்களின் வாழ்க்கையை இன்ஸ்யூர் செய்திருக்கிறார்கள் என்கிற நிலையில் இந்தியாவில் இதற்க்குண்டான மார்க்கெட் பரந்து விரிந்து உள்ளது. இதை தன் வசப்படுத்திக்கொண்ட கம்பெனிகள் மக்களை முட்டாளாக்கி நாளுக்கு நாள் ஏமாற்றி வருவது தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கின்றது.

இதுதான் இப்படி என்றால் மெடிக்கல் இன்சுரன்ஸ் செய்தவர்களின் நிலமை இன்னும் பாவம். காப்பீட்டு நிறுவனங்கள் எந்த நோய்களுக்கும் நாங்கள் சிகிச்சை கொடுப்போம் அல்லது செலவழித்த பணத்தை தருவோம் என்று சொல்லிவிட்டு  நமக்கு எதிர்பாராத விபத்தோ அல்லது காயங்களோ ஏற்ப்பட்டால் அவர்களின் உண்மையான சுய ரூபத்தை காட்டுவார்கள். அதாவது நமக்கு ஆன செலவை விட 50 சதம் குறைவாகவோ அல்லது இந்த நோய்க்கு சலுகை கிடையாது என்று கை விரிப்பார்கள்.

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இந்திய அரசு நிறுவனமான "எல்ஐசியில் பணம் கட்டி வந்திருக்கிறார். மூன்று வருடம் கழித்து பணம் எடுக்க சென்றால் அவருக்கு பேரதிர்ச்சி...அந்த பாலிசையையே காலாவதி ஆக்கிவிட்டார்களாம்" வேறு வழியின்றி கிடைத்த வரை போதும் என்று மீதிப்பணத்தை எடுத்து வந்திருக்கிறார்.

இதற்கெல்லாம் ஒத்துக்கொள்ளாமல் நாம் தலைமை நிறுவனக்களையோ அல்லது ஐஆர்டிஏ மற்றும் ஓம்புடுஸ்மேன் தலைமையையோ அணுகினால் நமக்கு பெரிதாய் கிடைக்கபோவது ஒன்றுமில்லை. செபியும் தனக்கு வரும் கம்ப்ளெய்ண்ட்களை பொதுவாக இன்சுரன்ஸ் கம்பெனிகளுக்கு சாதகமாகவே வழங்கும்.

ஏமாந்தவங்க, ஏமாறப்போறவங்க முக்கியமா கவனியுங்க.... 

1. அரசாங்க நிறுவனமான எல்ஐசியில் மட்டும் கோரப்படாத அல்லது குறைந்த பிரீமியம்கள் கட்டப்பட்டு தொடரப்பாடாத உபரிப்பணங்கள் பல ஆயிரம் கோடிகளை தொடும். எத்தனைப்பேர் இதைப்பற்றி அறிந்திருக்கிறீர்கள்?

2. இவை மட்டுமா...நமக்கு பாலிசி கிடைத்த 15 நாட்களுக்குள் அதன் சாதக பாதங்களை பார்த்து நமக்கு பிடிக்கவில்லையென்றால் கேன்சல் செய்து பணத்தை திரும்ப பெறலாம் என்பதும் எத்தனை பேருக்குத்தெரியும்.

3. மெடிக்கல் கிளைமுக்கு போன பாலிசி தாரரின் அப்ளிகேஷன்கள் நிராகரிக்கப்பட்டதும் அல்லது குறைந்த அளவு பணம் பெறப்பட்டதினால் கொள்ளையடித்த நிறுவனங்களின் பங்கு பல மடங்கு லாபங்கள் அதிகமோ அதிகம்.

4. எந்த இன்சுரன்ஸாவது நஷ்டமானதுண்டா இந்தியாவில்? அதன் பங்குகள் குறைந்ததுண்டா..ஆனால் வாடிக்கையாளர்களின் பணங்கள் மட்டும் குறைந்திருக்கின்றன.

5. கஷ்டமர்களின் கம்ப்ளெய்ண்ட் லெட்டர்களும், தீர்ப்பாயத்திற்க்கு அனுப்பப்பட்ட கடிதங்களில் சுமார் 20% சதம் மட்டுமே இன்சுரன்ஸ் கம்பெனிகளால் பதிலளிக்கப்பட்டுள்ளன. மற்ற 80% சதம் நிராகரிக்கப்பட்டுள்ளன.

6. பாலிசையை தொடங்கினால் தொடருங்கள் பாதியில் விட வேண்டாம். நன்றாக ஆராய்ந்து ஒன்றுக்கு நான்கு முறை அலசி பின்னர் முடிவெடுங்கள். அளவுக்கு அதிகமாய் ஆசைப்பட்டு தகுதிக்கு மீறி பாலிசி போடாதீர்கள்.

7. பிரதிநிதிகளின் பொய் வார்த்தைகளையோ, கால் செண்ட்டர் பெண்களின் வார்த்தை ஜாலங்களையோ நம்பி முதலீடு செய்யாதீர்கள்.

8. பின்னால் வரப்போகும் காலத்தை இன்பமானதாய் கழிக்கப்போகும் நிலையில் உங்களின் கஷ்டப்பட்டு சம்பாதித்த சிறு தொகைகளை முதலீடு செய்யும்போது உஷாராய் இருப்பது நலம்.

9. அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது உங்கள் பாலிசிகளின் NAV பண நிலையை அறிந்துக்கொள்ளுங்கள். இன்சுரன்ஸ் கம்பெனிகளின் வெப் சைட்டில் ஆன்லைனில் லாக் இன் செய்து உங்களின் குறிப்பிட்ட பாலிசிகளை கண்காணியுங்கள். தேவைப்பட்டால் "சுவிச் ஆப்" முறையை பயன்படுத்தி உங்களின் பங்குகளை சரியான முதலீட்டில் போடுங்கள்.

கடைசியாய் உங்களின் வாழ்க்கையை இன்ஸூர் செய்கிறேன் என்கிற பேரில் கன்பியூஸ் செய்துகொள்ளாதீர்கள். வடிவேலு பாஷையில் சொல்லணும்னா "எதையுமே...சரியா பிளான் பண்ணி பண்ணனும்..ஓகெ"!

ஷேர் செய்யுங்கள் நண்பர்களுக்காக!

விஷ்வரூபம் கமல் செய்யப்போவது சரியா?
விஷ்வரூபம் கமல் செய்யப்போவது சரியா?

கடந்த மூன்று நாட்களில் சினிமா ரசிகர்களுக்கு விஷ்வரூபத்தின் அடுத்தடுத்த அதிர்ச்சி தரும் அறிக்கைகள் நம்மை அசத்திக்கொண்டிருக்கின்றது. பல பேர் பலவிதமாக கருத்துக்கள் சொன்னாலும் உண்மையான காரணம் என்ன என்பதை கொஞ்சம் அலசுவோம்.

கடந்த மூன்றுமாதங்களாகவே கமலின் படம் முடிந்துவிட்ட நிலையில் இதோ அதோ என்று ஒருவழியாக ஜனவரி இரண்டாவது வாரத்தில்(ஜனவரி 11ம் தேதி) தியேட்டர்களில் ரிலீஸ் ஆகலாம் என்கிற கருத்தும், அதற்க்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

ஆனால் திடீரென்று கமல் விஷ்வரூபம் டிடிஎச்(கேபிள் தொலைக்காட்சி) மூலம் முதல் நாள் ஒளிபரப்பப்படும் என்கிற குண்டை தூக்கி போட்டவுடன் மொத்த சினிமாத்துறையும் ஆச்சரியப்பட்டது. தியேட்டர் சங்கமும், தயாரிப்பு சங்கமும் கொதித்து எழுந்தது. காரணம் இவ்வளவு நாள் அவர்கள் ரசிகர்களின் வயிற்றில் அடித்தார்கள் இப்போது கமல் அவர்களின் வயிற்றில் அடிக்க கிளம்பிவிட்டார் என்கிற குமுறல்தான்.

வித்தியாசமான ஒளியமைப்பில்(ஆரோ 3டி) உலகில் இரண்டாவது படமாகவும் விஷ்வரூபம் வெளிவர இருப்பதால் அதற்க்கு வசதியாக தியேட்டர்களின் சவுண்ட் சிஸ்டத்தை மாற்றவும்  தியேட்டர்களில் வேலைகள் ஆரம்பித்துவிட்ட நிலையில் கமலின் அதிரடி அறிவிப்பு பல தியேட்டர் அதிபர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்துள்ளது.

படத்தை டிடிஎச்சில் ஒளிபரப்ப கமல் முடிவெடுத்ததற்க்கு காரணம் என்ன? தனது படம் தயாரிப்பு மற்றும் அதற்க்குண்டான விளம்பரம் செய்ததற்க்கான செலவுகள் அதிகம் என்பதால் கமலும் தியேட்டர் உரிமையாளர்களிடமும், வெளியீட்டாளர்களிடமும் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும், தன் படத்திற்க்கு கிடைக்கும் என நினைத்த 100 கோடி அளவுக்கான பணம் கிடைக்காததால்தான் இப்படி முடிவெடுக்க காரணம் எனவும் கூறப்பட்டது.

படம் வெளிவரும் முன்பு டிடிஎசில் ஒளிபரப்புவது சரிதானா? இது சினிமாத்துறைக்கு நல்லதா இல்லை கெட்டதா என்பதை இப்போது அலசுவோம்.

ரேடியோக்கள் கேட்டுக்கோண்டிருந்த காலத்தில் டிவிக்கள் வந்தது. அதனால் ரேடியோக்கள் அழிந்துவிட்டதா? இல்லை...இன்றும் பல நூறு ரேடியோ நிலையங்கள் நம்மை பாதிநேரம் மூழ்கடித்துக்கொண்டிருக்கின்றது.

லேப்டாப்கள் இருந்தபோது டாப்லட்கள் வந்துவிட்ட காலம். லேப்டாப்கள் அழிந்துவிட்டதா? இல்லையே.

டிவிக்கள் வந்தபோது சினிமா அழிந்துவிடும் என்றார்கள். அழிந்துவிட்டதா?

டிஜிடல் கேமராக்கள் வந்த போது பிலிம் ரோல் போட்டு படம் எடுக்கும் கேமராக்கள் கூட இன்னும் இருக்கத்தான் செய்கின்றன.

அவ்வளவு ஏன்...சினிமாத்துறையில் இன்று வரை ஏகப்பட்ட மாற்றங்கள். கொட்டகைகள், சிங்கிள் தியேட்டர்கள், மினி தியேட்டர்கள், மல்டிபிள்க்ஸ்கள், மற்றும் பெய்ட் பிரிவியூ என அங்கும் மாற்றங்கள் நிகழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன.

தொழில் நுட்பம் வளரும்போது முந்தைய கண்டுபிடிப்புகள் இல்லாமல் போவதும் அல்லது அதன் உபயோகங்கள் குறைவதும் சகஜமான விஷயம்தான்.

எனது விளக்கங்கள்.... 

1. தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் இந்த காலத்தில் படம் டிடிஎச்சில் ஒளிபரப்ப பட்டாலும்....படம் நன்றாக இருக்கும் பட்சத்தில் கட்டாயம் தியேட்டருக்கு வருவார்கள்.(பல கேபிள் சேனல்களில் "வீடியோ ஆன் டிமாண்ட்" என்று படம் வெளியான சில நாட்களில் குறிப்பிட்ட தொகை கொடுத்து நம் வீட்டில் இருப்பவர்கள் மட்டும் பார்க்கும்படி வசதிகள் இப்போதும் உள்ளது).

2. தியேட்டருக்கு வருபவர்கள் குறைந்தால் வருமானம் குறைந்து தியேட்டர் உரிமையாளர்கள் கட்டணத்தை குறைக்கும் வாய்ப்பும் உண்டு. மல்டிபிளக்ஸ் கொள்ளை குறையும் (மினிமம் ஒருவருக்கு 120 ரூபாய் டிக்கெட்டும், பாப்கார்ன், கோலா என்று 200 ரூபாயும், பார்க்கிங்க கட்டணம் என்கிற வகையில் 50 ரூபாயும் கொள்ளையடிக்கிறார்கள். சாமானிய மக்களால் இந்த அளவு செலவுகள் செய்ய இயலுமா?)

3. பெரிய படங்களானாலும், சிறிய படங்களானாலும் நல்ல படங்களாக இருந்தால் கட்டாயம் டிடிஎச்சிலும் வரவேற்ப்பு கட்டாயம் இருக்கும். அதனால் சிறிய தயாரிப்பாளர்களும், சிறிய படங்களும் அழியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

4. முக்கியமான இன்னொரு நன்மை.....தமிழ்நாட்டில் சுமார் 50 லட்சம் பேர் ஒரு மாத்தில் தியேட்டர் வந்து திரைப்படம் பார்ப்பவர்கள் என வைத்துக்கொண்டால்.....டிடிஎச்சில் ஒளிபரப்பினால் காசு கொடுத்து சுமார் 2 கோடி பேராவது பார்க்கும் வாய்ப்பு இருக்கும் இதனால் திரைப்படத்திற்க்கு ரசிகர்களாகிய மக்கள் எண்ணிக்கை கூடுமே தவிற குறையாது. இதனால் கிடைக்கபோகும் வியாபாரமும் அதிகமாகும்.

கமலின் முயற்சியை குறை சொல்லுபவர்களுக்கு....

படங்கள் வெளியான இரண்டு நாட்களில் திருட்டு விசிடிகளிலும், இணையங்களிலும் வெளிவந்துவிடுவதால் சினிமா அழிந்துவிட்டதா?

சன் டிவியில் எத்தனையோ படங்கள் வெளிவந்து இரண்டு வாரங்களிலும், ஏன் தியேட்டரில் வெளிவராமலும் இருந்த பல படங்கள் சின்ன திரையில் முதன்முறையாகவும் வந்த போது ஏன் பேசவில்லை, ஏன் கோபப்படவில்லை?

படம் நன்றாக இருந்தால் கட்டாயம் தியேட்டர் போய் பார்ப்பார்கள். என்னதான் டிவியில் பார்த்தாலும் சில பிரமாண்டமான  படங்களை தியேட்டரில் பார்த்தால் தான் அதன் அருமை புரியும்.

இந்த விஷயத்தில் தீமையும் இருகின்றது, நன்மையும் இருக்கின்றது. ஆனால் நன்மைகள்தான் அதிகம்.

சிறு தயாரிப்பாளர்கள் இதனால் பாதிக்கப்போவதில்லை. 600 படங்கள் வெளியிடப்படாமல் பெட்டிக்குள் உள்ளதாம். பல படங்கள் டிடிஎச்சில் வருவதின் மூலம் தியேட்டர்கள் ஈயாடும்(!) அப்போது அவர்களின் பார்வை சிறு படங்களின் மீது கட்டாயம் விழும். சிறு படங்களைக்கூட அவர்கள் வெளியிட தயாராவார்கள்.

தியேட்டர்கள் தான் சிறு படங்களுக்கு எதிரியே தவிர கமல் அல்ல. பெரிய நடிகர்களின் படங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சிறு படங்களுக்கு தியேட்டர் அதிபர்கள் கொடுப்பதே இல்லை. பெயருக்காக காலை காட்சிகளில் ஒரு காட்சியை ஓடவிட்டு, சரியான நேரங்களை பத்திரிகைகளில் கொடுக்காமல், அல்லது திடீரென்று திரையிடும் நேரங்களை மாற்றியோ அல்லது படத்தை முன்னறிவிப்பின்றி ரத்து செய்தோ சிறு படங்களை அழிக்கிறார்கள். முதலில் இவர்களிடம் ஒற்றுமையில்லாததும் ஒரு சில பெரிய தயாரிப்பாளர்களின் கைப்பாவையாக சினிமா துறையும், தியேட்டர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் இருப்பதால்தான் இந்த நிலமை.

இறுதியாக....டிடிஎச்சால் தங்களுக்கு பாதிப்பு வரும் என்பதால்தான் அவர்கள் இப்படி கூப்பாடு போடுகிறார்கள். கமல் மாதிரி வித்தியாசத்தையும், தொழில் நுட்பத்தையும் நம்புபவர்களின் இந்த மாதிரி புதிய முயற்ச்சிகளை வரவேற்க பழகிக்கொள்ளவேண்டும். அதும் சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவிலேயே இன்வெஸ்ட் செய்யும் கமலின் முயற்சியை வரவேற்ப்போம். வெற்றி பெற வாழ்த்துவோம்.

வித்தியாசங்களை விரும்பும் தமிழ் சினிமா அடுத்தக்கட்ட தொழில்நுட்பத்தை வரவேற்ப்பதில் தவறில்லை.


நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் - திரை விமர்சனம்.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் - திரை விமர்சனம்.

ஒரு வரி நிஜக்கதை (வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் இணை இயக்குனராக் பிரேம் வேலைசெய்துகொண்டிருந்தபோது நடந்த உண்மை சம்பவம்), அதுவும் சோகமான ஒரு சம்பவத்தை இரண்டரை மணிநேரத்துக்குமேல் நம் வயிறுகளை குலுங்க வைக்க முடியுமா?

படம் பார்த்தவுடன் என் வயிறை அளந்து பார்த்தேன்...குலுங்கி குலுங்கி சிரித்ததில் இரண்டு இன்ச் குறைந்திருந்தது.

எடுத்தவுடன்... ஒரு பாடலில் நான்கு நண்பர்களை அறிமுகப்படுத்தலுடன் ஆரம்பிக்கிறது படம். கல்யாணத்திற்க்கு இரண்டு நாட்களுக்கு முன் ஜாலியாய் கிரிக்கெட் விளையாட போகும் நம்ம நாயகன் கேட்சை பிடிக்க தாவி குதிக்க கால் தடுக்கி பின் பக்கமய் விழுந்து பின் மண்டையில் அடிப்பட்டு ஷாட் டெர்ம் மெமரி லாஸாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்களில் அவர் வாழ்க்கையில் நடந்ததை மறந்துவிடுகிறார். நாயகனின் ரிஸப்ஷன் நடந்ததா, திருமணம் முடிந்ததா என்கிற சஸ்பென்சை நான்கு நண்பர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகளை வைத்து பிரில்லியண்ட்டாய் காமெடியாய் செதுக்கி இருக்கிறார் இயக்குனர்.

"என்ன ஆச்சு...கிரிக்கெட் விளையாண்டோம்...நீதானடா அடிச்சே....பந்து மேலே போச்சு...."என்று படத்தில் முப்பது தடவைக்கு மேல் நாயகன் சொன்னாலும் சலிக்கவில்லை. அதுவும் ரிஷப்ஷன் மேடையில் "ப்ப்ப்ப்பாபாபா....யாருடா இந்த பொண்ணு பேய் மாதிரி மேக்கக் போட்டுகிட்டு..." என்று தன் காதலியை சொல்லும் காட்சிகளில் நம்மால் அந்த சோகத்திலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.


"நான் சொன்னா கேப்பியா மாட்டையா..." என்று கண்ணாடி போட்ட நண்பனின் வார்த்தைக்கு கட்டுப்படும்..." காட்சிகளில் இருவரும் நெகிழ வைக்கிறார்கள். கிட்டத்தட்ட நாயகனை தவிர அத்தனைப்பேரும் புது முகங்கள் என நினைக்கிறேன். காட்சிகளை உள் வாங்கி அசத்தி இருக்கிறார்கள். நண்பராக வரும் "பக்ஸ்" கொட்டை கண்ணில் அனைவரையும் கவர்கிறார்.

உண்மையான சம்பவத்தை எடுத்திருந்தாலும், அதில் வாழ்ந்தவர்கள்தான் படத்திலும் முக்கியமான அங்கத்தினர்களாய்....உண்மை சம்பவத்தின் ஹீரோ படத்தின் கேமராமேன்(பிரேம்), பக்ஸ் - படத்தில் துணை இயக்குனரும், நாயகனின் நண்பரும் கூட, இயக்குனர் பாலாஜி உண்மையான கதையில் ஒரு நண்பர்.

கிரவுண்டிலும், அரசாங்க ஆஸ்பத்திரியிலும், கல்யாண மண்டபத்திலும், கல்யாணத்திலும் நடக்கும் கூத்துகளை படம் பார்த்து பல நாட்கள் ஆனாலும் அவ்வப்போது நினைத்து இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன். இதுதான் படத்தின் உண்மையான வெற்றி. படத்தின் தாக்கம் கட்டாயம் உங்களுக்கு மினிமம் ஒரு வாரமானாலும் வந்து தாக்கும்.

"மெடுல் ஆப்ளிகண்டா" இந்த வார்த்தையும் படத்தின் இன்னொரு ஹீரோதான். கிட்டத்தட்ட பலராலும் பல நேரங்களில், பலவிதமாய் சொல்லப்படும் வார்த்தை.

சில காட்சிகளில் காமெடி இருந்தால் அதை குறிப்பிட்டு சொல்லலாம். ஆனால் படத்தில் எல்லா காட்சிகளிலும் காமெடி இருப்பதால் எதை சொல்லுவது எதை விடுவது. எல்லோரும் தங்கள் பங்குக்கு யதார்த்த நடிப்பில் பின்னியெடுப்பதால் யாரை பாராட்டுவது என்பதே தெரியவில்லை.

இயக்குனர் பாலாஜி சின்ன பட்ஜெட்டில் பெரிய படம் காட்டி இருக்கிறார். பீட்சா வுக்கு அடுத்து விஜய் சேதுபதி கேட்சை மிஸ் பண்ணினாலும் அவுட்டாக்கியிருக்கிறார்.சத்யம் சினிமாஸின் அக்ரெஸிவ் மார்கெட்டிங்கால் படம் வெற்றிப்படமாக ஆகி இருக்கின்றது. ஆனாலும் இந்த மாதிரி நல்ல சின்ன படங்களுக்கு மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களும் ஆதரவு தந்திருந்தால் தமிழ் சினிமா இன்னும் நல்ல திசையில் பயணித்திருக்கும்.

பாட்ல்கள் பரவாயில்லை....பிண்ணனி இசை அருமை. கேமரா சிறிய அறைக்குள்ளும் கதையோடு உலவுவது அழகு.

மைனஸ் - 

நிறைய பிளஸ்கள் இருந்தாலும் நாடகத்தனாம காட்சிகளும், பட்ஜெட் பிரச்சனையால் அதிகம் மெனக்கெடாத ஆர்ட் டைரக்ஷனும், கூட்டமில்லாத ரிஷப்ஷன் காட்சிகளும் மற்றும் தாலிக்கட்டும்போது கடைசியாய் நண்பர் ஐயரை உதைக்க அவரும் யாகத்தீயில் விழுந்தாலும் அதைப்பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை....இது கொஞ்சம் உறுத்துகிறது. மூச்சுக்கு முன்னூறு முறை "என்ன ஆச்சு...கிரிக்கெட் விளையாண்டோம்..." " ப்பா... என்ன பொண்ணுடா..." போன்ற வசனங்கள் திகட்டுவது உண்மை. கல்யாண வீட்டில் மாப்பிள்ளை பையனுக்கு நடந்திருக்கும் மாற்றத்தை கண்டுபிடிக்காத வீட்டுக்காரர்களும், ரிஷப்ஷனில் ஒட்டாமல் இருக்கும் கணவனாகப்போகும் காதலனின் நிலமையை கண்டுபிடிக்காமல் இருக்கும் மணப்பெண்ணும் - கொஞ்சம் நம்பத்தான் முடியவில்லை! படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்...திரும்ப திரும்ப ஒரே வசனங்களை நாயகன் சொல்லுவதால் சலிப்பு வருவதை தவிர்ர்க்க முடியவில்லை (இப்போது படத்தை 25 நிமிஷங்கள் வெட்டி டிரும் செய்து கிரிஸ்ப்பாய் ஆக்கியிருக்கிறார்களாம்:))

ஆயிரம் சொல்லுங்கள் ரொம்ப நாட்கள் கழித்து புல் லென்த் காமெடி கலாட்டா. படம் பார்க்கும் அனைவரையும் பேஷ் பேஷ் சொல்லவைக்கும். இந்த மாதி சின்ன படங்களை ரசிகர்கள் வெற்றி அடைய வைத்து சினிமா துறையை தூக்கி நிறுத்தனும் ரசிகர்களே!

மொத்தத்தில்...

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
படத்துல நிறைய சிரிப்பை கண்டோம்! 


Sunday, December 2, 2012

பேய்க்கதை டூ! True Story

பேய்க்கதை டூ!
தைரிமானவராக இருந்தால் இந்த உண்மைக் கதையை படியுங்கள்.

முதலில் படித்த பேய்க்கதையை விட இந்த கதை இன்னும் பயங்கரமானது. நம்பினால் நம்புங்ககள்.

இதுவும் நிஜக்கதைதான். நான் பெங்களூரில் வேலைசெய்த நேரம். 2001 ல் நடந்தது.

அப்போது நான் தனியாக மஹாலக்ஷ்மி லே அவுட்டில் (இஸ்கான் கோயிலுக்கு கீழ் உள்ள பகுதி) ஒரு அவுட் ஹவுஸில் 3800 ரூபாய் வாடகையில் தங்கியிருந்தேன். பொதுவாக நான் அசைவம் சாப்பிடுவதில்லை என்பதால் எப்போதும் வீட்டில் சமைத்து தனியாக இருப்பேன்.கிட்டத்தட்ட 6 மாதமாக இந்த வீட்டில் இருக்கிறேன்.

எனக்கு ஊரில் பெண் பார்த்துக்கொண்டிருந்த நேரம். ஊரில் இருந்து அடுத்த நாள் பெற்றோர்கள் என்னை பார்க்க வருவதாய் சொல்லியிருந்தார்கள்.

நான் இருந்த தெருவில் கிட்டத்தட்ட 15 வீடுகள் இரண்டு பக்கமும் வரிசையாக இருக்கும். மழைக்காலம் முடிந்து இருந்ததால் எந்த வீட்டின் முன் இரும்பு கேட்டை திறந்தாலும் கீ.....ங்க்....கீ.....ங்க்....என்ற சப்தம் வரும்.

நான் இருந்த அவுட் அவுஸ் ஓனர் வீட்டுக்கு பின்புற சந்தில் இருந்தது. ஓனர் வீட்டில் ஒரு தாத்தாவும் அவரின் மனைவியும் மட்டும் இருந்தார்கள்.

பொதுவாய் இரவு 10.30 வரை டிவி பார்த்துவிட்டுத்தான் தூங்குவேன். என் பெற்றோர்கள் நாளை காலை வருவதாக சொன்னதால், அவர்களை கிட்டத்தட்ட ஆறு மாதம் கழித்து பார்ப்பதாலும் எனக்கு தூக்கமே வரவில்லை.அவர்கள் காலையில் கிட்டத்தட்ட 4.30 மணி முதல் 5 மணிக்குள் வரலாம்.

11 மணிக்கு அசதியில் படுத்த நான் கீ...ங்க்...என்று கேட்டின் சப்தம் வர சட்டென்று எழுந்தேன். என் ஹாலில் இருக்கும் ஜன்னலை திறந்து வெளி கேட்டை பார்த்தேன். யாரும் இல்லை...அது ஏதோ...தள்ளியிருக்கும் வீட்டின் கேட்டின் சப்தம். மறுபடியும் மணியை பார்த்தேன் அப்போது மணி 11. 30. பெற்றவர்கள் வரும் ஆவல் என்னை எழுப்பி விட்டது.

மீண்டும் தூங்கினேன். திடீரென்று கீ...ங்க்...கீ.....ங்க்.... சப்தம். சட்டென்று திடுக்கிட்டு எழுந்து பார்த்தேன். இந்த முறையும் என் வீட்டு கேட்டின் சப்தம் இல்லை. சலித்துக்கொண்டு மறு படியும் தூங்கும் முன் மணியை பார்த்தேன்  சரியாக இரவு12.00 காட்டியது.

எப்போது தூங்கினேன் என்று எனக்கு தெரியவில்லை. சட்டென்று நான் தூங்கிக்கொண்டிருந்த ஹாலின் கதவு திறந்தது. நானும் தலையை சாய்த்து திரும்பி பார்த்தேன். கதவு திறந்ததால் சிலீர் என்ற வெளி காற்று என் முகத்தில் பட்டு உடல் சிலிர்த்தது....

ஒரு அழகான இளம் பெண் கிளி பச்சை நிற சுடிதாரும், வெளிற் பச்சை நிற துப்பட்டாவும் காலிள் கொலுசு சப்தத்துடன் என்னை தாண்டி என் காலருகில் உட்கார்ந்தாள். என்னை பார்த்து அழகாய் சிரித்தாள்.

எனக்கு கை கால்கள் உதற ஆரம்பித்தது. பேச வரவில்லை....சப்தம் போட்டு கத்தினேன் முடியவில்லை. அவள் தன் நீண்ட கூந்தலை வலது கைகளால் கோதிக்கொண்டு என் காலருகில் நெருங்கி இரண்டு கைகளாலும் அழுத்தி என் மீது நெருங்கினாள். என்னால் திமிற முடியவில்லை...கால்களை அசைக்க நினைத்தேன். அவளின் அழுத்தம் அதிகமாய் இருந்தது என்னை நோக்கி சிரித்துக்கொண்டே என் முகமருகில் வந்தாள். என் கழுத்தில் இருந்த ருத்திராட்ச கொட்டையை கைகளால் அழுத்தி பிடித்து முருகா...முருகா...என சொல்லிக்கொண்டு பலம் கொண்ட மட்டும் அழுத்தி அவளை எட்டி உதைத்தேன். இதை சற்றும் எதிர்ப்பார்க்காத அவள் நிலை தடுமாறி என் காலுக்கு அடுத்து இருந்த கம்ப்யூட்டர் டேபிளில் மேல் விழுந்தாள். அதனால் பக்கத்தில் இருந்த இரண்டு ஸ்பீக்கர்களும் கீழே விழுந்தது.

கோபமான அவள் என்னை தட்டிவிட்டு வெடுக்கென்று வேகமாய் வெளியே சென்றுவிட்டாள். அவள் போன வேகத்தில் என் வெளிக்கதவுகள் இரண்டு முறை வேகமாய் அடித்தது. அவளின் துப்பட்டா என் முகத்தை தடவி சென்றது. எனக்கு வேர்த்து ஒழுகியது. பின் எப்போது படுத்தேன் என்று எனக்கே தெரியவில்லை....தூங்கிப்போனேன்.

மறுபடியும் கீ...ங்க்... என்று சப்தம் கேட்டதால் எழுந்து வெளியே பார்த்தால் என் தந்தையும், அம்மாவும் வந்து கொண்டிருந்தார்கள்.

வீட்டுக்குள் வந்த அவர்கள் என்னடா கதவு திறந்திருக்கே என்றார்கள். விழுந்துகிடந்த ஸ்பீக்கர்களை எடுத்து மேலே வைத்த அம்மா...இதெல்லாம் ஒழுங்கா வைக்க மாட்டியா...என்றார்.

எனக்கு தூக்கி வாரிப்போட்டது. நேற்று இரவு நடந்ததை இருவருக்கும் சொன்னேன்.அம்மா நம்பவில்லை.

ஆனால் அப்பா அதை நம்பினார். காரணம் என்னை வெளியே வாசலுக்கு போய் பார்க்க சொன்னார். அங்கே என் மூக்கை தூக்கும் கெட்ட வாசனை....யாரோ எடுத்த வாந்தி மாதிரி இருந்தது.

என்னப்பா அது என கேட்டேன்....

அது நாயின் வாமிட் என சொல்லிவிட்டு மனிதர் கண்களுக்கு தெரியாத அனுமானுஷ்ய உருவங்கள் விலங்குகளுக்கு தெரியும். நேற்று வந்த அந்த மோகினி வீட்டுக்கு பக்கத்தில் இருந்த நாய்க்கு தெரிந்திருக்கு. என்றார். அதனால் பயந்து போன அந்த நாய்தான் பயத்தில் வாமிட் பண்ணியிருக்கு என்றார். நாய்கள் பொதுவாக வாமிட் பண்ணாதாம் அதுகள் வாமிட் பண்ணினால் ஏதோ ஒன்றை பார்த்து பயந்திருக்கு என்பது பின்னர் படித்து தெரிந்து கொண்டேன்.

என் பெற்றோரை பார்க்க வந்த ஓனரும் என்னப்பா நேத்து நைட்டு அவ்ளோ வேகமா கதவை சாத்துரே மிட்நைட்டுலே என்று இன்னும் என்னை குழப்பிவிட்டு போனார். நடந்ததை அவருக்கும் சொன்னேன்...கொஞ்சம் தயங்கியவர் அதெல்லாம் பிரம்மை தம்பி என்றார்.

அடுத்த இரண்டு நாட்கள் என்னுடன் பெற்றோரும் என்னுடன் இருந்ததால் எனக்கு அவ்வளவாக பயம் வரவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் என்னை பயம் தொற்றிக்கொண்டது. ஆனாலும் அதற்க்கு பின்னர் அந்த பச்சை சுடிதார் பெண் வரவேயில்லை. ஆனால் அவளின் முகம் மட்டும் என்னை விட்டு அகலவே இல்லை.

அதற்க்கு பின் மூன்று மாதம் கழித்து கல்யாணத்திற்க்கு பின் கொஞ்சம் பெரிய வீடு தேவைப்பட்டதால் வேறு வீட்டுக்கு மாறவேண்டிய நிர்பந்தம் ஏற்ப்பட்டது. வீட்டை காலிசெய்யும் நேரத்தில் எனக்கு வீட்டு ஓனர் ரெண்டு வீடு தள்ளியிருக்கும் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போனார்....

அங்கே எனக்கு பேரதிர்ச்சி...."தம்பீ நீங்க தனியா இருக்கிறதாலே பயந்திருவீங்கன்னு தான் அன்னக்கி  சொல்லலே. அந்த போட்டோவை பாருங்க என்றார். அந்த வீட்டின் முன் அறையில் அதே பச்சை கலர் சுடிதார் போட்ட பெண் படம் மாலையுடன் இருந்தது. காதல் தோல்வியில் அவள் 9 மாதம் முன் தற்கொலை செய்துக்கொண்டாளாம்".

என் காலின் கீழ் பூமி நழுவிக்கொண்டிருந்தது.....

(முதல் கதையை படிக்காதவர்கள் கீழே லிங்கை சொடுக்கவும்)

http://www.bluehillsbook.blogspot.in/2012/06/blog-post_17.html


Saturday, December 1, 2012

துப்பாக்கி - திரை விமர்சனம்துப்பாக்கி - திரை விமர்சனம்

என்னடா இது எல்லோரும் படம் வெளிவந்த வுடனே சூடா விமர்சனம் எழுதிவிட்டார்கள் ஒரு வாரம் கழித்து இப்போது என்னத்துக்கு இது என்று யோசிப்பவர்களுக்கு என் பதில் இதோ....

நானும் படத்தை ரிலீஸுக்கு ஒரு நாள் முன்னமே பார்த்து விட்டேன். ஆனால் நடுநிலையாக எழுத வேண்டும் என்பதால்தான் ஒரு வாரம் கழித்து எழுதுகிறேன்.

முதல் நாளில் படத்தை பற்றி சிறப்பாய் எழுதினால் விஜய் ரசிகன் என்பார்கள் படம் நல்லா இல்லை என்று எழுதினால் அஜித் ரசிகன் என்பார்கள். நான் விமர்சகன் அதனால் பொதுவாய்தான் எழுதுவேன். அதற்க்காகத்தான் கலப்பம்.கா எனக்கு சன்மானம் தருகிறது.

துப்பாக்கி....பல முக்கிய நடிகர்களின் படங்கள் இந்த வருடம் தோற்றுப்போனதால் நொந்து போயிருக்கும் டிஸ்டிரிபியூட்டர்களுக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் தீபாவளி ரேஸில் வந்திருக்கும் முக்கிய படம் இந்த துப்பாக்கி. என்னதான் பெரிய ஸ்டார்களின் படமானாலும் முதல் நான்கு நாட்கள் அவுஸ் புல்லாகத்தான் இருக்கும். அதற்க்கு பின்னர்தான் அந்த படம் வெற்றியா தோல்வியா என கணிக்க முடியும். துப்பாக்கி வெற்றி படம் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் பிளாக் பஸ்டரா என்பது வரும் நாட்களிதான் தெரியும்.

(ஒரு மதத்தை சார்ந்த மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் மோசமான காட்சிகள் அப்படி ஒன்றும் இல்லை என்றுதான் சொல்லுவேன். ஆனால் அவர்களுக்கு துணைப்போவதில் மற்ற இன மக்களையும் காட்டத்தவரவில்லை. முஸ்லிம் மத மக்கள் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என போராடினால்...தீவிரவாதிகளுக்கு உதவிசெய்பவராக ஒரு தமிழனை காட்டி இருக்கிறார்கள் இந்த படத்தில், அப்படியானால் அனைத்து தமிழ் மக்களும் போராட வேண்டும். போராடினார்களா? படங்களில் அரசியல் வாதிகளையோ, போலீஸ்காரர்களையோ, அரசு ஊழியர்களையோ அவமதிக்காத படங்கள் இதுவரை வந்ததுண்டா???)

சரி.....விமர்சனத்திற்க்கு வருவோம்.

மும்பையில் லீவில் ஊருக்கு வரும் மிலிட்டரி கம் சீக்ரெட் ஏஜண்ட்(!) விஜயை ரயிலில் இருந்து நேராக காஜலை பெண்பார்க்க அழைத்து செல்கிறார்கள். மார்டன் பெண் அல்ல என்பதால் மறுக்கும் விஜய் பின்னர் காஜலை அடிக்கடி சந்திக்க நேர்கிறது. காஜல் மார்டனான பாக்ஸிங் மங்கை என்பதால் இப்போது விஜய்க்கு பிடிக்கின்றது, ஆனால் காஜலுக்கு பிடிக்காமல் போகிறது. பின்னர் அப்படி இப்படி யென்று இருவருக்கும் பிடிக்க....அந்த நேரத்தில் காஜல் வீட்டில் வேறோரு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் அதுதான் விஜயின் காமெடி ஆபீஸர் ஜெயராம். பின்னர் ஜெயராம் தனது மாமன் மகளை திருமணம் செய்ய நினைக்க காஜலும், விஜயும் ராசியாகிறார்கள்....

என்ன சார்...துப்பாக்கின்னு பேரை வைத்து விட்டு இப்படி சடுகுடு காதலை சொல்லுகிரீர்கள் என நினைக்கிறீர்களா?

முதல் 30 நிமிடம் ஜாலியாக நகரும் கதையில் பஸ்ஸில் ஒருவரின் பணப்பை தொலைந்துபோக விஜயும் தனது போலீஸ்கார நண்பர் சத்யனும் பயணிகளை சோதனை செய்ய சத்யன் உண்மையான திருடனை கண்டு பிடிக்க இன்னொருவனும் தப்பியோட அவனை விஜய் துரத்த திடீர் திருப்பமாய் பஸ் வெடிக்க அந்த தீவிரவாதியை பிடித்து போலீஸிடம் ஒப்படைக்கிறார்ப் விஜய்.

தீவிரவாதியை கிளரும் விஜய் இன்னும் 12 இடங்களில் குண்டு வெடிப்புகள் நடக்கப்போவதை அறிந்து, திருமணத்தில் நண்பர்களுடன் கலந்துகொள்ளும் விஜய் போலீஸிடம் தப்பிய தீவிரவாதியை 12 நண்பர்களுடன் பாலோ செய்து 12 பேரை தீர்த்துக்கட்ட அந்த 12 சிலீப்பர் செல்ஸ்க்ளின் முக்கிய தலைவனை எப்படி கண்டுபிடித்து அழிக்கிறார் என்பதை காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாய் டுவிஸ்ட்டுகளுடன் ஜெட் வேகத்தில் சொல்லும் இரண்டாவது பாதிதான் இந்த துப்பாக்கி.

"ஸ்லீப்பர் செல்ஸ்" என சொல்லப்படும் தீவிர வாதிகளின் நெட்வர்க்குகளையும், அவர்கள் இயங்கும் முறைகளையும் படம் போட்டு முதன் முறையாய் திரையில் கொண்டுவந்த முருகதஸுக்கு ஒரு கிராண்ட் சல்யூட்(சிலீப்பர் செல்ஸ் என்பவர்கள் அல் குவைதா இயக்கத்தில் தலைவன் யார் என்று தெரியாமல்,  தலைவனின் கட்டளைகளுக்காகவும் தீவிர வாத செயல்களை செய்ய காத்திருக்கும் குழுக்கள்.ஆனால் இவர்கள் ஒவ்வொருவருக்கும் அறிமுகம் இல்லாது வெறும் கட்டளைக்காக காலம் முழுதும் காத்திருப்பார்கள்).


சிறப்பான திரைக்கதை யோட்டத்தில் ஆங்காங்கே இருக்கும் லாஜிக் ஓட்டைகளை மறைத்த திறமை இயக்குனரையே சாரும். சூர்யாவின் போதி தர்மனை சொதப்பிய இயக்குனர் ஜெகதீஷை தூக்கி தலைநிமிர செய்திருக்கிறார்.

படத்தின் இன்னொரு தூண் விஜய். காமெடி நடிப்பாகட்டும், சுமார் பாடல்களை தனது நடனத்தால் ஆஹா ஆஹா வாக்கியதிலாகட்டும், காஜல் உடனான காதல் காட்சிகளில் கெமிஸ்ட்ரியலாகட்டும் (இன்னொரு படத்திலாவது காஜலுக்கு ஒரு லிப் கிஸ் கொடுத்திடுங்க விஜய் சார்!), கிளைமாக்ஸ் சண்டையிலாகட்டும் விஜய் அசத்துகிறார். கெட்டப்பில் மற்ற படங்களில் இல்லாத ஒரு ஸ்மார்ட்னஸ் இந்த படத்தில் இருப்பது அழகு. முக்கியமாய் விஜயின் ஹிந்தி உச்சரிப்புகள் கன கச்சிதம். அடுத்து நேரடி ஹிந்தி படங்களில் நடித்தாலும் ஆச்சர்யம் இல்லை.

காஜல் அழகு. வித்தியாசமாய் நடிக்கவோ, கலக்கவோ வாய்ப்பில்லை. விஜயின் தங்கைகள், விஜயின் அப்பாவாக புரமோஷன் வாங்கியிருக்கும் நாளைய இயக்குனர் நடிகர், நண்பர்கள் என அத்தனை பேரும் அளவாய் நடித்து பலம் சேர்த்திருக்கிறார்கள்.

சத்யன் போலீஸ் நண்பராய் வந்து போலீஸ் பெருசா, மிலிட்டரி பெருசா என விவாதித்து கடைசியில் மிலிட்டரிதான் பெருசு என ஒத்துக்கொள்கிறார். சிறந்த நடிகர் அந்த துக்கடா வேடத்துக்கு தேவையா?(எல்லாம் விஜயின் மலையாள் மார்க்கெட்டுத்தான் காரணம்).

இன்னொரு அழகான வில்லன். வழக்கம்போல் எல்லா பாஷையும் கூடவே தமிழும் பேசுகிறார். கடைசியில் உதைவாங்கி பட்டென்று செத்துப்போகிறார்.அவருக்கும் சிறப்பான வாய்ப்புகள் இல்லை.

இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான் என்றாலும் பிண்ணனி இசை இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம்.மற்றப்படி ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் சொல்லவும் வேண்டுமா? அருமை.

வசனங்களும் எழுதப்பட்ட இடங்களும் உணர்வுப்பூர்வமானவை. முக்கியமாய் "பலரை கொல்ல பலியாகும் தீவிரவாதி இருக்கும்போது பலரை காப்பாற்ற நாம் ஏன் சாகக்கூடாது?"


மைனஸ்:

1. ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள்.
2. வழக்கம் போல் இந்த படத்தில் போலீஸ் கிளைமாக்ஸில் கூட வரவில்லை. 12 கொலைகள், இரண்டு காவல் அதிகாரிகளின் கொலைகள் ஆனால் போலீஸ் எங்கே போனது என்று தெரியவில்லை. ஹீரோ மிலிட்டரி என்பதற்க்காக போலீஸை இப்படி டம்மியாக்கலாமா முருகதாஸ்.
3. அந்த 12 பேரை கொண்று விட்டு காணாமல் போன 12 மிலிட்டரி நண்பர்களை கடைசிவரை காட்டவே இல்லை.
4. நல்ல நடிகர் ஜெயராமை காமெடியனாக்கி சொதப்ப வைத்த முருகதாஸுக்கு ஒரு குட்டு.
5. பாடல்கள், இசை அவ்வளவாக மனதில் பதியவில்லை.
6. ஒரே ஆளாக போலீஸுக்கு தெரியாமல் இவரே ஒன் மேன் ஆர்மியாக செயல்பட அவசியம் என்ன? போலீஸுடன் சேர்ந்து கூட்டாக செயல்பட்டிருக்கலாம்.
7. நிறைய ஆங்கில, ஹிந்தி வார்த்தை கலப்புகள். மும்பையில் இந்த கதை களம் நடக்க புதிதாய் ஒரு காரணமும் இல்லை. சென்னையை மையமாக வைத்து கூட எடுத்திருக்கலாம்.
8. கிளைமாக்ஸின் சின்ன பிள்ளைத்தனம். சட்டென முடியும் ஆராவாரம் இல்லாத சொதப்பல் கிளைமாக்ஸ்.

முருகதாஸ் துப்பாக்கி, விஜய் தோட்டா. என்வே இந்த துப்பாக்கியின் தோட்டா குறி தப்பாமல் தொட்டிருப்பது மாபெரும் வெற்றியை.

லைப் ஆப் பை (ஹிந்தி) - திரைப்பட விமர்சனம்.
லைப் ஆப் பை (ஹிந்தி) - திரைப்பட விமர்சனம்.

ஜங்கிள் புக் தொடங்கி இந்திய வாழ்வியலை மைய்யமாக வைத்து பல திரைப்படங்கள் ஹாலிவுட்டில் இதுவரை வெளிவந்துள்ளன. ஏன் இந்தியாவை சார்ந்த சத்யஜித் ரே முதல் தமிழ் நாட்டில் பாலா போன்ற இயக்குனர்கள் இந்தியாவை ஒரு அழுக்கு நாடாகவும், ஏழ்மை நாடாகவும் காட்டியே உலக அளவில் பெயர் வாங்கியிருக்கின்றனர்.

ஆனால் ஒரு சில படங்களில்தான் இந்தியாவின் கலாச்சாரத்தையும், அழகையும் காட்டி இருக்கின்றனர். அந்த வகையில் நாவலை(கனடாவை சேர்ந்த யான் மார்டல் என்பவர் எழுதி கடந்த 2001ம் ஆண்டில் வெளிவந்த நாவல்தான் லைஃப் ஆஃப் பை. மிகவும் பிரபலமடைந்த இந்த நாவல் ‘புக்கர் பரிசு’ உட்பட ஏராளமான விருதுகளை வாங்கி குவித்தது) மையமாக வைத்து ஆஸ்கார் இயக்குனர் பாண்டிசேரியிலும், மெக்ஸிகோவிலும், கனடாவிலும் லை ஆப் பை என்னும் படத்தை உருவாக்கியிருக்கிறார். சீன இயக்குனருக்கும் (ஆங் லீ), கதை ஆசிரியருக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும். முக்கியமாய் கடவுள் இருக்கிறார் என்பதையும் சொன்னதற்க்காக. இன்னொரு சிறப்பு மூன்று நான்கு பேரைத்தவிர மற்ற எல்லோருமே இந்திய நடிகர்கள்தான்.கதை என்ன?

பாண்டிச்சேரியில் மிருக காட்சி சாலை வைத்திருக்கும் நாயகன் பையின் தந்தை தொழில் நசிந்ததால் எல்லா விலங்குகளையும்  கனடாவுக்கு விற்க்க பெரிய சரக்கு கப்பலில் பயணிக்கிறார்கள். திடீரென்று தாக்கும் புயலில் கப்பல் சிக்கிவிட ஒரு படகில் நாயகன் பையும்(சூரஜ் ஷர்மா), சிம்பன்சி குரங்கும், ஒரு வரிக்குதிரையும், ஒரு ஓநாயும் தப்பிக்க முயல்கிறார்கள். நடுக்கடலில் ஓனாய் வரிக்குதிரையை தாக்கி கொன்று தின்கிறது. சிம்பன்சியையும் தாக்கி கொல்கிறது. திடீரென்று யாரும் எதிர்பாராத விதமாக போட்டுக்குள் இருந்து விளியே வருகின்றது ரிச்சர்ட் பார்க்கர் எனும் பெங்கால் புலி. நாயகனுக்கும், புலிக்கும் இடையே நடக்கும் வாழ்வியல் போராட்டம் தான் அடுத்த முக்கால் மணிநேரம் ரசிகர்களை பதைபதைப்பாகவும், ஆச்சர்யமாகவும் கடைசியில் ஆனந்த கண்ணீருடன் கைதட்ட வைக்கும் இந்த லைப் ஆஃப் பை.

உலகின் உயிர் வாழ்வியலை தெளிவாக சொல்கிறது படம். ஒன்றை அழித்துதான் இன்னொன்று வாழ வேண்டும் என்கிற நிலையில் அந்த புலிக்கும், பையுக்குமான கடைசி தருணங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. விலங்குகளுக்கும் மனம் உண்டு, கருணை உண்டு என்பதை சொல்லாமல் சொல்கிறது இந்த படம். கிட்டத்தட்ட 247 நாட்காள் இவர்களின் கடல் பயண நாட்களை அழகாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

கடலில் திமிங்கிலத்தின் பாய்ச்சலாகட்டும், மெக்ஸிகோவின் ஹைலண்ட் காட்சியாகட்டும், கடவுளாக ஏதோ ஒரு சக்தி இவர்களை காப்பாற்றுவதிலாகட்டும், கொஞ்சம் கொஞ்சமாக புலிக்கும், நாயகனுக்கும் ஏற்ப்படும் மன மாறுதல்களும், இறுதிக்காட்சியில் பார்க்கர்  நோய்வாய்ப்பட இருவரின் பாசப்போராட்டமாகட்டும் இப்படி நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள் ஏராளம்.

எல்லா மதத்தையும், எல்லா மத கடவுள்களையும் நம்பும் நாயகனை காட்டியதன்மூலம். கடவுள் ஒன்று, கடவுள் உண்டு என்று ஆணித்தரமாக சீன இயக்குனர் சொல்லியிருக்கிறார். இதுவரை இந்தியாவை மையப்படுத்தி வந்த படங்களில் இனி லைப் ஆஃப் பைக்கு ஒரு தனி இடம் நிச்சயம் இருக்கும்.


இயக்குனர் ஆஸ்காரை வாங்கியவர், தனது முந்தியப்படங்களான (Crouching Tiger, Hidden Dragon, Hulk, Lust, Caution) இவைகளின் மூலம் தனியிடத்தை தக்க வைத்தவர். அதுவும் பல இயக்குனர்கள் நாவலை படமாக எடுக்கும்போது தோற்றுவிடுகின்றனர். ஆனால் இவர் சத்தியமாய ஜெயித்திருக்கிறார்.

நாயகனின் அம்மாவாக தபூ, நாயகன் வளர்ந்த பிறகு இர்பான் கான் இந்த இரண்டு முகங்கள்தான் படத்தில் பரிச்சியமானவை. சென்னை பெண் ஆர்த்தி, இரண்டு காட்சிகளில் வந்தாலும் மனசை கொள்ளைகொள்கிறாள். சின்ன வயது நாயகனும், வளர்ந்து போட்டில் தவிப்பவராகவும், பின்னர் இந்த கதையை ஜப்பானிய அதிகாரிக்கு தன் பிளாஷ்பேக் கதையாக சொல்லும் இர்பான் கானாகவும் மூன்று பருவங்களில் காட்டியிருக்கிறார்கள். இர்பானின் யதார்த்த நடிப்பும், போட்டில் கஷ்டப்படும் அசாதாரண வாலிபனின் நடிப்பும், சிறுவனின் ஆர்வமான நடிப்பும்....நல்ல நடிகர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர்.

அடுத்ததாய் கிராஃபிக்ஸ் மற்றும் ஒளிப்பதிவை பற்றி சொல்லியே ஆகவேண்டும். கடலின் பிரம்மாண்டத்தையும், தவிக்கும் படகு காட்சிகளில் நம்மையும் படகில் ஏற்றி பதைபதைக்க வைக்கிறார்கள். திமிங்கிலத்தில் துள்ளல் ஆகட்டும், இரவில் தெரியும் கடவுளாகட்டும், மெக்ஸிகோ தீவின் அழகாகட்டும் இப்படியும் இந்த பூமியில் இடங்கள் உள்ளனவா என வாயைப்பிளப்பது நிஜம். இசை படத்தின் மிகப்பெரிய பலம். பாடல்கள் இல்லாமல் படத்தோடு ஒன்றச்செய்கிறது. இர்பான் பாத்திரத்தின் டைமிங் ஜோக்குகளையும் ரசிக்கலாம்.

ரொம்ப பழைய படங்களிலும், ராமநாராயணன் படங்களிலும் விலங்குகளை நடிக்கவைத்து பார்த்திருக்கிறோம்.பெங்கால் புலியை எப்படி இப்படி நடிக்க வைத்தார்கள் என்பது இன்னும் எனக்கு விளங்கவில்லை. எல்லா வித முகபாவங்களையும் நாயகனுக்கு சரி சமமாக காட்டுகிறது இந்த புலி.அதுவும் அந்த படகில் ஓநாயின் அட்டகாசத்தையும் சொல்லியாக வேண்டும். அமர்க்களம்.

மைனஸ்:

அவ்வளவாக ஒன்றும் இல்லை. ஆனாலும் சில காட்சிகளில் கண்டினியூட்டி மிஸ் ஆகிறது. கப்பல் விபத்தில் மற்ற யாரையும்  காட்டாமல் நாயகனை மைய்யப்படுத்தியது, இன்னும் ஒன்று இரண்டு காட்சிகள் கப்பலில் மற்றவர்களின் போராட்டத்தையும் காட்டியிருந்தால் இன்னும் கதையோடு ஒன்றியிருப்போம். இறந்த விலங்குகள் திடீரென்று படகில் காணாமல் போவதும், ஒரு காட்சியில் நூற்றுக்கணக்கான மீன்கள் படகுக்குள் விழுவதும் அடுத்த காட்சியில் படகு படு சுத்தமாய் இருப்பதும், கடவுள் தோன்றும் காட்சியை இன்னும் கொஞ்சம் தெளிவு படுத்தி இருக்கலாம். கடைசியாக அந்த சிறிய படகில் கிட்டத்தட்ட அத்த்னை நாட்கள் பயணம் செய்து தப்பிக்கமுடியுமா என்பது தெரியவில்லை. திமிங்கிலங்களினாலோ, சுறாக்களினாலோ எந்த வித அச்சுறுத்தலும் வராதது ஆச்சர்யம்!

ஒரு வெளிநாட்டு இயக்குனர் இந்தியாவின்  கலாச்சாரத்தின் மீதும், இந்திய மைத்தாலஜி கதைகளை பற்றி கொண்ட அறிவும், பரத நாட்டிய விளக்கமும், இந்தியத்தனம் மாறாத கதை சொல்லிய தெளிவும்....ம்ம்ம்ம் நம்ம இந்திய இயக்குனர்கள் இவர்களிடம் உண்மையிலேயே கற்றுக்கொள்ள வேண்டும்.

மற்றப்படி இந்த லைஃப் ஆஃப் பை....உங்களை இன்னொரு உலகத்துக்கு அழைத்து செல்லும். அந்த உலகம் உங்களை ஆனந்தப்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. குடும்பத்துடன் செல்லுங்கள். ஆச்சர்யம் காத்திருக்கின்றது!


Sunday, November 11, 2012சென்னையிலிருந்து கோயமுத்தூருக்கு 1666 ரூபாய் டிக்கெட்டா???

பகல் கொள்ளை....ஆமாம் இதைவிட கொள்ளைகள் உண்டோ....

நேற்றுவரை இந்த வெப்சைட்டில் எந்த பஸ்களுக்கும் டிக்கெட் இல்லை.

ஆனால் இன்று தீபாவளிக்காக எல்லோரும் ஊருக்கு செல்வதால் வெள்ளிக்கிழமை என்பதாலும்

பேருந்துகளின் கட்டணங்கள் மூன்று மடங்கு அதிகமானதின் மர்மம் என்ன???

அரசு கவனிக்குமா?

ஷேர் செய்யுங்கள் அப்பாவி மக்களுக்காக.

பாவப்பட்ட பெண்களும் வெளிநாட்டு வேலையும்.
பாவப்பட்ட பெண்களும் வெளிநாட்டு வேலையும்.

(படம் நன்றி கூகுள்).

இந்த இயந்திரமான வாழ்க்கையில் ஆண்களாகிய நாமே இவ்வளவு இன்னல்களை படும்போது பெண்கள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். சொந்த நாட்டிலேயே பலவகையான பிரச்சனைகள் இருக்கும்போது வெளிநாடுகளில் வேலைக்காக போன அபலைகளின் வாழ்வை என்றாவது நாம் நினைத்து பார்க்கின்றோமா?

படித்த பெண்களானாலும், படிக்காத பெண்களானாலும் பிரச்சனைகள் ஒன்றுதான். இன்னும் ஆணாதிக்க உலகத்தால் எங்கோ ஒரு மூலையில் நமக்கு தெரியாமல் பல பெண்களின் வாழ்வுகள் வாசமிழந்து நசுக்கப்படுகிறது.

படித்த பெண்கள் ஒரு நல்ல வேலையில் இருப்பதாலும், விஷயங்கள் அறிந்ததாலும் பல நேரங்களில் தப்பிக்க வாய்ப்புண்டு.

ஆனால்....

குழந்தைகளுக்காகவும், வீட்டுக்காககவும் கடல் கடந்து நர்சுகளாகவும், வீட்டு வேலைகள் செய்வதற்க்கும், ஏன் இன்னும் பல வகையான வேலைகளுக்காகவும் விவரம் அறியாமலும், தெரியாமலும் ஏஜண்ட்களிடம் சிக்கி தங்கள் வாழ்க்கையை தொலைத்த பெண்கள் ஏராளம்.

பாஷைகள் தெரியாமல், ஊர் பேர் தெரியாமல் அறிமுகமில்லா பணக்காரர்களிடம் பணம் கொடுக்குறார்கள் என்பதற்க்காக விட்டில் பூச்சிகளாய் வீழ்வது தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. முக்கியமாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள் அல்லது தெரிந்தே கடத்தப்படுகிறார்கள். அதில் எத்தனை பேர் சந்தோஷமான வாழ்வை அனுபவிக்கிறார்கள்? எத்தனைப்பேரின் கஷ்டங்களை நம்மால் அறியமுடியும்?

பணக்கார தாத்தாக்களுக்கு ஹோம் நர்சுகளாகவும், பல குடும்பங்களுக்கு வீட்டு வேலை செய்திட வேண்டும் என்கிற தகவலின் கீழ் செல்லும் பல பெண்கள் அங்கே மனத்தாலும் உடலாலும் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அரேபு ஷேக்குகளின் கீழ்த்தரமான பாலியல் தொந்தரவுகளாலும், அமெரிக்க பணக்கார கிழடுகளின் சேவை என்கிற பேரில் உடல் சம்பந்தமான தாக்குதல்களாலும் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு உயிருடன் வாழும் ஜடமாகத்தான் பெண்கள் அங்கே வாழ்ந்து சாகிறார்கள் என நினைக்கிறேன். இன்னும் மோசமாக தாய்லாந்து விபசார விடுதிகளுக்கு விற்ப்பதும் நடக்கத்தான் செய்கின்றது.

எல்லா பெண்களுக்கும் இந்த நிலைதான் என்று சொல்ல வரவில்லை...அதனால் வெளிநாட்டில் வேலை செய்யும் அனைத்து பெண்களையும் இந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.ஆனால் பத்தில் ஐந்து பெண்களுக்கு இந்த நிலைதான் என்பதை ஆய்வுகளும், பத்திரிகை செய்திகளும் நமக்கு காட்டுகின்றன.

எனக்கு தெரிந்த இரண்டு பெண்களின் நிலமை எனக்கு தெரிய நேர்ந்ததால்தான் இந்த பதிவை இடுகிறேன்.

வெளிநாட்டு வாழ் இந்திய மாப்பிள்ளைக்கு மணப்பெண்ணாய் போன பலரின் நிலமையே மோசமானதாக இருக்கும்போது.....வீட்டு வேலை செய்யப்போகும் பெண்களின் இன்னல் பற்றி சொல்லவும்வேண்டுமா?

வேலைக்காக செல்லும் பெண்களின் பாஸ்போர்ட்களை தங்களிடம் வாங்கி வைத்துக்கொண்டு ஓனர்களும், ஏஜண்ட்களும் இந்த பெண்களை எப்படியெல்லாம் துன்புறுத்த முடியுமோ அந்த அலளவுக்கு படுத்தி எடுக்கின்றனர்.

இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கத்தான் வேண்டுமா? அதுவும் வெளிநாடுகளுக்கு போவோர் தயவுசெய்து சரியான ஏஜண்ட்களிடம் சென்று அல்லது அரசாங்க்கத்தின் அனுமதிபெற்றவர்களிடம் சென்று தங்களை தங்கள் வாழ்வை சரியானபடி அமைத்துக்கொள்ளலாம். நாற்பதாயிரம் பணத்திற்க்காக வாழ்வை இழப்பதைவிட நம் நாட்டில் நாற்ப்பதாயிரம் தொழில்கள் இருப்பதை மறந்துவிடவேண்டாம்.

ஆனால் இந்திய அரசாங்கமும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிற மாதிரி தெரியவில்லை. வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நலங்களில் அக்கறை இருப்பதாகவும் தெரியவில்லை. இந்திய அரசுக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூலம் அதிகமான டாலர்களை பெறுவதோடு அரசின் கடமை நின்றுவிடுவது கொடுமையிலும் கொடுமை.

வெளிநாடுகள் பார்ப்பதற்க்கு சொற்கம்தான்...வாழ்ந்தால்தான் தெரியும் இந்தியாவின் மகிமை. வெறும் பணத்திற்க்காக பிணங்களாய் வாழத்தான் வேண்டுமா???

கடைசியாக....நம்மால் இன்னும் அவதிப்பட்டுகொண்டிருக்கும் அபலைகளுக்காக பிராத்தனையும், புதிதாய் வெளிநாடு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பாய் செல்லுங்கள் என்பதை மட்டுமே சொல்லமுடியும் என நினைக்கிறேன்.

ஷேர் செய்யுங்கள்.....அவர்களுக்காக!

பீட்சா - திரைவிமர்சனம்.


பீட்சா - திரைவிமர்சனம்.

விமர்சனம் இருக்கட்டும். முதலில் இந்த படத்தில் மைனஸ் என்று சொல்ல ஏதும் இல்லை. காரணம் ஒருவரால் ஒரு சம்பவம் கற்பனையாய் ஜோடிக்கப்பட்டு பகிரப்படுவதால் இதில் லாஜிக் கூட பார்க்க முடியாது. இதில் தான் இயக்குனர் 100 சதவீத வெற்றியை பெற்றிருக்கிறார். 

இந்த படத்தை இந்திய திரைப்படங்களில் இதுவரை வெளிவராத ஒரு கதையென்று தைரியமாக சொல்லலா. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு தலை குனிந்து வண
க்கம் சொல்வதில் தவறில்லை. கம்ப்ளீட் ஹாரர் த்ரில்லர்.

முதல் 5 நிமிட காட்சியிலேயே நம்மை படத்தோடு ஒன்றிவிடச்செய்துவிடுகிறார். படத்தின் கிட்டத்தட்ட 70 சதவீதம் இருட்டில் நடப்பதால் பயம் நம்மோடு ஒட்டிக்கொள்கிறது. படத்தை பார்த்துவிட்டு இரவில் தனியாக தூங்கமுடியுமா என்பது தெரியவில்லை. உண்மையிலேயே ஒரு உலகத்தரமான படம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

கதை : இந்த பீட்சாவில் 25 நிமிட சப்பாத்தி காதல், 80 நிமிட மிர்ச்சி திகில், 15 நிமிட வெண்ணையாய் கரையும் சஸ்பென்ஸ் இதுதான் கதை. கதையை சொல்லச்சொன்னா ஏதோ கணக்கு சொல்றாரேன்னு பாக்குறீங்களா? சில படங்களின் கதைகளை சொல்லலாம். சில படங்களின் கதைகளை நேரில் அனுபவித்தால்தான் நல்லா இருக்கும். இது இரண்டாவது ரகம். சோ...தயவு செய்து (நல்ல சவுண்ட் எஃபெக்ட்ஸ் இருக்குற) தியேட்டரில் பாருங்கள். ஒரு மொமண்ட் உங்களை தாக்கும் அதிசயத்தை உணரப்போகிறீர்கள். சொன்னா புரியாது சார்....

ஆனாலும் சொல்றேன்....

பேய்கள் பற்றிய கதைகள் எழுதும் ஒரு பெண்ணின் பீட்சா டெலிவரி செய்யும் கதலனான நாயகன் ஒரு வீட்டுக்கு பீட்சா டெலிவரி செய்யப்போக அந்த வீட்டில் நடக்கும் அனுமாணுஷ்ய நிகழ்வுகள்தான் கதை.அதற்குண்டான உண்மையான காரணத்தை சூப்பர் சஸ்பென்ஸுடன் பரிமாறியிருக்கிறார் இயக்குனர்.

நாளைய இயக்குனர்களில் பங்கேற்ற இயக்குனர்கள் ஆல்ரடி படங்களில் ஜெயித்துவிட, இப்போது கார்திக்கும் ஜெயித்திருக்கிறார். நேர்த்தியான கதையும், தொய்வில்லாத நடையும், பதறவைக்கும் இசையும்(சந்தோஷ் நாராயணன் - அட்டகத்தி புகழ்), இருட்டில் வெளிச்சமாய் ஒளிப்பதிவும், கதையில் ஒன்றிய நடிகர்களும்...இன்னும் சொல்லிக்கொன்டே போகலாம்.

பிட்சா டெலிவரி பாயாக வரும் நாயகன் விஜய் சேதுபதி, அவரின் காதலியாக வரும் ரெம்பா நம்பீசன், பீட்சா ஷாப்பின் ஓனராக வருபவர், நண்பர்கள், மற்றும் முக்கியமாய் அந்த சின்ன பெண் நடிப்பின் உச்சம்.

கொஞ்ச காட்சிகளில் வந்தாலும் எஸ்எஸ் மியூஸிக்கின் முன்னாள் காம்பியர் பூஜா நம்மை பயமுறுத்தி கலங்கடிக்கிறார்.

மைனஸ் என்று பார்த்தால்....

நாயகன் நாயகிக்கு உண்டான காதல் காட்சிகள் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம்...கெமிஷ்ட்ரி என்று சொல்வார்களே...அது கொஞ்சம் மிஸ்ஸிங். காரணம் நம்பீசன் ரொம்ப அழகாய் இருப்பதாலோ...

தாடியுடன் இருக்கும் பீட்சா டெலிவரி பாயை இந்த படத்தில்தான் பார்க்கலாம் போலும்.

மொத்தத்தில் இந்த பீட்சா...

இதமான சூட்டில் சரியான சுவையில் பரிமாறப்பட்ட டேஸ்ட்டி பீட்சா!

Sunday, October 21, 2012

இதுதாண்டா போலீஸ்.


இதுதாண்டா போலீஸ்.
நேற்று ஈவினிங் நண்பரின் வீட்டிற்க்கு சென்றிருந்தேன். பர்சனல் விஷயமாக.

அப்போது அவரின் பாஸ்போர்ட் விஷயத்திற்க்காக எழும்பூர் காவல் அதிகாரி வந்திருந்தார்.

வெரிஃபிகேஷன் டீட்டெய்ல்ஸ் முடிந்தவுடன் புறப்பட தயாரானார்.

திடீரென்று என் நண்பர் அவரின் கையில் 200 ரூபாயை திணித்தார்.

நானும் கொஞ்சம் அதிர்ந்து செய்வதரியாமல் நின்றேன்.

சிரித்துக்கொண்டே அந்த பணத்தை வாங்கிய அதிகாரி என் நண்பரின் குழந்தையை கூப்பிட்டார். குழந்தையின் கையில் நண்பர் கொடுத்த 200 ரூபாயை கொடுத்து நல்ல புஸ்தகம் வாங்கிக்கோம்மா என்று சொல்லிவிட்டு. சார்...இந்த வேலைக்குத்தான் எனக்கு அரசாங்கத்தில் சம்பளம் கொடுக்குறாங்க தயவு செய்து இந்த மாதிரி விஷயங்களை ஊக்குவிக்காதீர்கள் என நாசூக்காக சொல்லிவிட்டு சென்று விட்டார்.

வேறுயாராவது இருந்திருத்தால் என் நண்பரை உண்டு இல்லை என ஆக்கியிருப்பார்கள். இவரோட டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

நண்பர் செய்வதறியாமல் சாரி சார்....என சொல்லிட்டு என்னைப்பார்த்தார்.

லஞ்சம் வேண்டாம் என்று சொன்னாலும் பொது மக்கள் விடுவதில்லை. தவறு செய்பவர்களை விட தவறு செய்ய தூண்டுபவர்கள்தான் குற்றவாளிகள்.

அதிகாரியின் முகம் என் கண் முன் நின்றது. அவருக்கு என் சல்யூட். இவர்கள் மாதிரி நல்லவர்கள் இருப்பதால் தான் சென்னையில் இன்னும்  மழை பெய்கிறது போலும்.

அந்த அதிகாரியின் பெயர் எனக்கு தெரியவில்லையென்றாலும் அவரின் நேர்மை என்னை நெகிழச்செய்து இந்த பதிவை அவருக்கு சமர்ப்பணம் செய்ய வழிவகுத்ததில் மகிழ்ச்சியே!

Saturday, October 6, 2012

ஓய் ஜியின் அடுத்த தலைமுறையின் அரங்கேற்றம்.
ஓய் ஜியின் அடுத்த தலைமுறையின் அரங்கேற்றம்.
(டிக்கெட் அனுப்பிய behindwoods க்கு நன்றி :))

நேற்று இரவு ஹபிபுல்லா ரோட்டில் உள்ள "ராமா ராவ் கலா மண்டபத்தில்" நடந்த ஒய் ஜியின் மகள் "மதுவந்தி அருணின்" பழைய ஆங்கில நாடகத்தின் தழுவல் தான் இந்த "சக்தி" எனும் நாடகம். UAA யின் 60ஆவது ஆண்டின் கொண்டாட்டங்களின் அடுத்த படைப்பு.

கிட்டத்தட்ட அந்த ஆங்கில தழுவலை கொஞ்சம் தமிழுக்கு ஏற்றார் போல் சின்ன சின்ன மாற்றங்களுடன் வந்திருக்கும் அட்டகாச திரில்லர் என்றுதான் சொல்லவேண்டும்.

முகமூடி, தாண்டவம் போன்ற மொக்கை படங்களின் வெளியீடுதான் என்னை இந்த நாடகத்தை பார்க்க வைத்தது என்பதில் மகிழ்ச்சிதான்.

வித்தியாசமான தோட்டாதரணியின் ரொட்டேட்டிங் ஸ்டேஜ் செட்டுடன்( ஒரே ஸ்டேஜில் வீட்டின் வெளி வாசல், வீட்டின் உள் ஆல், பிலிம் ஸ்டூடியோ மற்றும், பால்கனி என எல்லாமே ஒரே ஸ்டேஜில்) கொலைவெறி ஃபேம் அனிருத்தின் இசையும் நாடகத்துக்கு பிளஸ்.

கண்பார்வையற்ற பெண்ணை சுற்றி நடக்கும் மர்மம்தான் கரு. கண்பார்வையற்ற பெண்ணின் கணவருக்கு ஏர்ப்போர்ட்டில் அறிமுகமில்லாதவர் கொடுக்கும் பொம்மையினால் வரும் பிரச்சனைகளையும், அதை கண் தெரியாத மனைவி எப்படி சமாளித்து வில்லனை கொல்கிறாள் என்பதுதான் கதை. தமிழ் நாடக மேடைக்கு ஒரு நல் வரவு.

நாடகத்தில் ஒய் ஜியின் அட்டகாசமான கெஸ்ட் அப்பியரன்ஸும் உண்டு. நாடகம் முழுக்க அங்கங்கே காமெடியும் உண்டு. ஒரு வரி கூட சொதப்பாத நடிகர்கள் அமர்க்களம்.

கூட்டம் கிட்டத்தட்ட 350 பேர் வந்திருப்பார்கள்.

கொஞ்சம் லென்த்தை கம்மி பண்ணியிருந்தால் இன்னும் திரில் கூடியிருக்கும்.

நாடகம்...இனி மெல்ல வாழும்!

Saturday, September 22, 2012

சுந்தரபாண்டியன் - திரைப்பட விமர்சனம்.
சுந்தரபாண்டியன் - திரைப்பட விமர்சனம்.

சசிகுமாரின் அக்மார்க் முத்திரை உடன் வந்திருக்கும் சமுத்திரகனியின் உதவி இல்லாமல் இன்னொரு படம். ரஜினியை இமிடேட் செய்து கிழவிகளுடன் டான்ஸும் ஆடி ஆர்ப்பாட்டமாய் தொடங்கும் படம். அத்ன்னவோ தெரியவில்லை....டான்ஸ் ஆடத்தெரியாடவர்கள் எல்லோரும் ரஜினியின் ஸ்டெப்பைத்தான் காப்பி அடிக்கின்றார்கள். அது ஈஸியா அல்லது வேறு காரணம் இருக்கின்றதா என்பது தெரியவில்லை.

சசிகுமாரின் முந்தைய படங்களைப்போலவே இந்த படத்திலும் நண்பர்களின் காதலுக்கு உதவியும், ஐடியாவும் கொடுக்குறார் சசிகுமார். ஆனால் அந்த நாயகி சசிகுமாரை காதலிக்க படம் வேகமெடுக்கின்றது. அதே பெண்ணை அவளின் அக்கா கணவரின் தம்பிக்கு தருமாரு பிரஷ்ஷர் கொடுக்க, அதுவும் சசிகுமாரின் கல்லூரி தோழர் என்பது பின்னர்தான் தெரிகின்றது. அவரும் சசிகுமார் மீது கோபம் கொள்ள, நாயகி யாருக்கு என்பத்தான் சுந்தரபாண்டியனின் பரபர கிளைமாக்ஸ்.

சசிகுமாரிம் பழைய படங்களின் கதை சாயல்கள் இருந்தாலும் பிரசண்ட்டேஷனில் இயக்குனர் ஜெயிக்கிறார். கிட்டத்தட்ட பாதி படங்கள் பஸ்ஸில் நகர்ந்தாலும் அலுப்பில்லாமல் சொன்னது அழகு.யாருப்பா அந்த கொட்டை கண்ணும், உப்பிய கன்னமும் கொண்ட நாயகி தெனாவெட்டு நடிப்பிலும், செண்ட்டிமெண்ட் காட்சிகளிலும் நம்மை எங்கோ கொண்டுபோகிறார்.

அதே தாடியுடன் சசிகுமார். இன்னும் அவருக்கு கேமரா முன் நிற்க்க கொஞ்சம் கன்பியூஸ் ஆகிறார். காதல் காட்சிகளிலும், குளோசப் காட்சிகளிலும் கேமராவை பார்ப்பதை விட்டுவிட்டு வேறு பக்கம் தலையை திருப்புவது கொஞ்சம் இடிக்கின்றது. காதல் காட்சிகளில் கதாநாயகியை விட இவர் அதிகம் வெக்கப்படுகிறார். இன்னும் வளரணும் சசி சார். தாடி பல இடங்களில் வயதை கூட்டி காண்பிப்பது ஒரு மைனஸ்தான். கல்லூரி இறுதியாண்டில் அதே பெண்ணை ரூட்டு விடும்போதாவது தாடியை ஷேவ் செய்திருக்கலாம். தாடி என்ன உங்களுக்கு அதிர்ஷ்டமா சார்? அடுத்த படத்திலாவது எடுத்துவிடுங்கள்.

எந்த பெண்களை பார்த்தாலும் கலாய்த்து, லந்து கொடுக்கும் இடங்கள் சூப்பர். பக்கத்து வீட்டு பையன் இமேஜ் உங்களை என்றும் காப்பாற்றும்.

சசிகுமாரின் நண்பராக சூரி, சுந்தரபாண்டியனை தூக்கி நிறுத்தும் நண்பராக மட்டுமல்லாது காமெடிகளிளும், டயலாக் டெலிவரிகளிலும் அசத்துகிறார். படத்தின் அடுத்த ஹீரோவும் இவர்தான்.

நாயகியை முதலில் ஒரு தலையாய் காதலுக்கிஉம் வேடத்திலும் சசிகுமாரின் நண்பராயும் கலக்கியிருக்கும் புதுமுகம் என நினைக்கிறேன், ஆனால், கிளைமாக்ஸில் யாருமே அதிர்ப்பார்க்காததை செய்து கோபத்தை அள்ளிக்கொள்கிறார். உயரமாகவும், ஸ்மார்ட்டாய் இருப்பாதால் ஒரு ரவுண்டு வரக்கூடிய நடிகர்.

இன்னொரு வில்லனாய் சசிகுமாரின் இன்னொரு நண்பர், இரணு மூன்று படங்களில் நடித்தவர். பரிதாப்பட வைக்கும்போது கூடவே கிளைமாக்ஸின் சூழலுக்கு காரணமாகி கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.

அப்புகுட்டி...பாவமாய் வந்து ஒருதலையாய் காதலித்து இறந்தும் போகிறார். ஆனாலும் காதலில் அழகுக்குத்தான் முக்கியம் என்று சொன்னதில் இந்த படமும் பத்தோடு பதினொன்றாக போனதில் வருத்தமே. அழகு மட்டும்தான் எல்லத்துக்கும் முக்கியமா???

அடுத்ததாய்... முக்கியமாய்...கதாநாயகி!

அருமையான தேர்வு. குண்டு கன்னங்களுடன், முட்டை கண்களுடன் கோபப்படும்போதும்,பார்த்தும் பார்க்காமல் விலகும்போதும், பிரியாமல் தவிக்கும்போதும் கிராமத்து பெண்களை நம் கண் முன் நிறுத்துகிறார். தெனாவட்டாய் நடித்து எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுவிடுகிறார். நான் எதுக்காக கவலைப்படணும், தைரியமான ஆம்பிளையைத்தான் நான் காதலீகிறேன் என்று சொல்லும்போது தனித்து நிற்க்கிறார்.

மற்றப்படி கிராமத்து பாட்டிகளும், சாதியை பறை சாற்றும் பண்ணைகளும், பெருசுகளும் கம்பீரமாய் வந்து போகிறார்கள்.

பாடல்கள் பழைய மெட்டுக்களின் சாயல்களில் இருந்தாலும் ரசிக்கலாம். கொண்டாடும் மனசு குத்தாட்டம் போடவைக்கும். பின்னணி இசையும் பொருத்தாமாய் பொருந்துகின்றது.

கிராமத்து படமாக இருந்தாலும் கொஞ்சம் மார்டனாகவே உள்ளது படம். படமுழுதும் டீக்கடையும், பஸ்ஸிலும் முடிந்துவிடுகின்றது. லொகேஷன்களுக்காக மெனக்கெடாமல் படம் எடுத்திருக்கிறார்கள்.

படத்தின் முக்கியமான இன்னொரு விஷயம் வசனம். அதை எழுதியவருக்கு ஒரு சல்யூட். யதார்த்தமாகவும், நட்பை பரை சாற்றும் பலமான எழுத்துக்கள். வார்த்தைகளில் உயிர் இருப்பது இப்படி எப்போதாவதுதான் நிகழ்கின்றது.வாழ்த்துக்கள்.

புதுமுக இயக்குனர், சசிகுமாரின் பட்டரையில் இருந்து வந்த பிரபாகர் தன் குருவுக்கு என்ன வருமோ, எது தேவையோ அதை அளவாய் கொடுத்திருக்கிறார். தாய்மார்களை குறிவைத்து சிக்ஸர் அடித்திருக்கிறார்.

மைனஸ்:

இந்த பாகத்தில் அதிகம் இல்லையென்றாலும்....என் கண்களுக்கு கொஞ்சம்....

ஆவூன்னா பியரும், பார்ட்டியுமாய் இருப்பது கொஞ்சம் உறுத்துகின்றது. அன் ஷேப்பில் இருப்பவர்களை காதலிக்க மாட்டார்களா?, சாகிரமாதிரி இரும்பு கம்பியால் தலையிலும், உடம்பிலும் சாவடி அடித்தாலும் எழுந்து நின்று திருப்பி தாக்கும் சராசரி ஹீரோ, பத்திரிகை அடித்தபின்னும் கல்யாணத்தை தள்ளி போடும் பெண்ணின் அப்பா, சசிகுமாரின் சொதப்பலான டான்ஸ் எண்ட்ரி, பாடல்கள், அடிக்கடி பஸ்ஸை காட்டுவதால் அட்ட கத்தியின் தாக்கம், சசிகுமாரின் முந்தைய படங்களின் ஒட்டல்கள்...இப்படி சில...

ஆனாலும், தொடங்கியது முதல்  கடைசி வரை தொய்வில்லாமல் கதையை நகர்த்தி நட்புக்கும், பாசத்துக்கும் உதாரணமான இந்த சுந்தரபாண்டியன் நம்மை மகிழ்விப்பான், சிங்கிளாய் ஜெயிப்பான்.

Thursday, September 20, 2012

பர்ஃபி - ஹிந்தி திரைப்பட விமர்சனம்.பர்ஃபி - ஹிந்தி திரைப்பட விமர்சனம்.

மீண்டும் ஒரு ஹிந்திப்படம். "பர்ஃபி" மூன்று வித்தியாசமான இதயங்களின் அழகான கவிதை கோர்வைதான் இந்த பர்ஃபி.

எடுத்த எடுப்பில் ஒரு போலீஸ் சேஸிங்குடன் ஆரம்பிக்கின்றது படம். வாய் பேச முடியாத குறும்புதனமிகுந்த அழகான வாலிபன் தான் ரன்பீர். மலைப்பிரதேசமான டார்ஜிலிங்கில் ஜாலியாய் பொழுதை கழிக்கிறான். அங்கே வரும் இலியானாவை கண்டதும் நட்பு கொண்டு இருவரும் ஊர் சுற்றுகிறார்கள். ஒரு கட்டத்தில் இலியானாவுக்கு ரன்பீருடன் காதல் வர,இலியானா இன்னொருவருக்கு நிச்சயமான பெண் என்பது தெரிந்ததும் ரன்பீர் விலகுகிறான். அதே வேளையில் ரன்பீரின் தந்தை டிரைவராய் வேளை பார்க்கும் இடத்தில் மனநலம் பாதித்த குழந்தைத்தனமான பெண்ணாய் பிரியங்கா சோப்ரா. பிரியங்காவின் தாத்தா எல்லா சொத்துகளையும் பிரியங்காவின் பேரில் எழுதிவிடுகிறார்.

ரன்பீரின் தந்தை திடீரென்று நோய்வாய் பட ஆபரேஷனுக்கு பணம் தேவைப்பட்டதால் பிரியங்காவை கடத்த நினைக்கிறார் ரன்பீர். அதற்க்குள் யாரோ பிரியங்காவை கடத்திவிட அவர்களிடமிருந்து பிரியங்காவை காப்பாற்றி வேறு இடத்திற்க்கு செல்கின்றனர். அங்கே வேலைசெய்யும் இடத்தில் திடீரென்று இலியானாவை சந்திக்கின்றான் ரன்பீர், இதை பிடிக்காத பிரியங்கா காணாமல் போய்விட போலீஸும், பிரியங்காவின் அப்பாவும் ரன்பீரை துரத்த, கணவனுடன் பிரிந்து இலியானாவும் ரன்பீருடன் வருகிறாள். கடைசியில் ரன்பீரும் இலியானாவுன் இணைந்தார்களா? இல்லை ரன்பீரும் பிரியங்காவும் மணந்தார்களா என்பதே மீதிக்கதை.

படம் முழுதும் கிட்டத்தட்ட 70 களின் பிளாஸ்பேக்காக சொல்லப்பட்டுள்ளது. நம்ம ஊர் படங்களைப்போல் பழைய காஸ்ட்டியூம், கிருதா அலங்காரங்கள் என அதிகம் மெனக்கெடாமல் சிம்பிளான உடைகளிலும், லொகேஷன்களிலும் படத்தில் அந்த காலத்தை கண் முன் கொண்டு வந்திருக்கின்றார்கள். படத்தோடு இணைந்த காமெடிக்காட்சிகள் நம்மை மகிழ்ச்சியின் உச்சத்துக்கு கொண்டுசெல்கின்றன. சின்ன சின்ன வித்தியாசமான காட்சியமைப்புகளில் இயக்குனர் அனுராக் பாசு பின்னி பெடலெடுக்கிறார்.

ரன்பீர் :

இவர் நம்ம ஊர் இளைய ஹீரோக்கள் மாதிரி இல்லை. வித்தியாசமான படங்களில் நடிப்பதிலேயே ஆர்வம். இலியானாவை கவர்வதிலாகட்டும், போலீஸ்காரர்களுக்கு டிமிக்கி கொடுப்பதில் ஆகட்டும், பின்பாதியில் பிரியங்காவுடன் கஷ்டப்படுவதிகாட்டும் நம்மை கனக்க வைக்கிறார். நடிப்பில் இன்னொரு பரிமாணம். கட்டாயம் அவார்டுகள் குவியும் என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை. இறுதிக்காட்சியிகளில் வரும் அந்த வயதான மேக்கப் ஒன்றே போதும். பிரில்லியண்ட்.

இலியானா :

முதல் பாதியில் ரன்பீரை கொள்ளைகொள்கிறார். ரன்பீருக்கு கொடுக்கும் அந்த உதட்டு முத்தம் ஏ ஒன். பின் பாதியில் பிரியங்காவுக்காக விட்டுகொடுத்து தியாகி ஆகிறாள். ஆனாலும் இறுதிக்காட்சிகளில் இவரின் நடிப்பில் நம் கண்கள் குளமாவது உறுதி.

பிரியங்கா :

சவாலான வேடங்கள் ஏற்ப்பதில் பிரியங்கா ஆல்வேய்ஸ் கிரேட். பல காட்சிகளில் ரன்பீரை தனது அசாத்திய நடிப்பால் ஓரம் கட்டுகிறார். குழந்தை தனமான அந்த நடிப்பில் பிரியங்காவின் முதிர்ச்சி தெரிகின்றது. சுண்டு விரலில் ரன்பீரை பிடிப்பதிலாகட்டும், இலியானா ரன்பீரை பார்த்து பொறாமை படுவதிலாகட்டும், சுசூ போக ரன்பீரின் உதவியை கேட்கும் இடங்களில் நம் கண்ணீரை பரிசாய் பெறுகிறார். இமேஜை பற்றி கவலைப்படாமல் நடிக்கும் இவர்களின் நடிப்பு கட்டாயம் இவர்களை உச்சத்தில் கொண்டு செல்லும் என்பதில் அய்யமில்லை.

அனுராக் பாஸு :

2004 ல் மர்டர் படத்தை கொடுத்தவரிடமிருந்து யாருமே எதிர்ப்பார்க்காத இன்ப அதிர்ச்சி.
வித்தியாசமான படங்களை கொடுத்து தன்னை வித்தியாசமாய் வெளிக்காட்டியவர். இந்த படத்தின் மூலம் இன்னொரு கவிதைத்தனமான படத்தையும் கொடுத்திருக்கின்றார். கிரியேட்டிவான பல விஷயங்களை காமெடி கலந்து கொண்டுபோய் கடைசியில் கண்ணீருடன் முடித்திருக்கின்றார். வாய் பேச முடியாதவர்களிடம் இந்த அளவுக்கு திறமைகள் இருக்கும் என்பது இந்த படத்தை பார்த்தபின்தான் புரிகின்றது. குளு குளு மலை பிரதேசங்களில் இவரின் கதா பாத்திரங்கள் இன்னும் நம்மை குளிர்விக்கின்றன. பர்பி பெயருக்கான காரணத்தையும் (மர்ஃபி ரேடியோ),  மற்ற எல்லா காட்சிகளிலும் வித்தியாசமான கலவைகளுடன் காமெடி கலந்து விருந்து வைத்திக்கிறார்.

போலீஸ் காரராக வரும் சுவரப் சுக்லா, பிரியங்காவின் தந்தையாகவும் கிட்டத்தட்ட வில்லனாகவும் வ்ரும் ஆஷிஷ் வித்யார்த்தி, ரன்பீரின் அப்பாவாக வருபவர், பிரியங்காவின் தாத்தா என அனைவருமே பர்ஃபியை செதுக்கி இருக்கின்றார்கள்.

இசை பிரிதம் சக்ரோபர்த்தி நம்மை 1972ம் ஆண்டுக்கு கொண்டுபோகிறார். பின்னணி இசையும் படத்திற்க்கு பலம். நம்ம ஊர் ரவி வர்மனின் சினிமாட்டோகிராஃபி கண்களில் ஒற்றிக்கொள்ளலாம்.

கதை சொன்ன விஷயத்தில் கொஞ்சம் புதுமை.எல்லா படங்களிலும் காட்சிகளை வைத்துவிட்டு டிவிஸ்ட் வைப்பார்கள். ஆனால் இந்த படத்தில் டிவிஸ்ட்டுகளை காட்டிவிட்டு கதைகளை பின்னோக்கி காட்டுகிறார்கள். அதற்க்குண்டான எடிட்ங் அருமை.

மைனஸ் :

அவ்வளவாக இல்லை எனினும் இனிலியா அன்பான கணவரை மறந்து ரன்பீரிடம் வருவதற்க்கு சரியான காரணம் இல்லை. மனநலம் குன்றிய நிலையில் பிரியங்காவுக்கு ரன்பீரிடம் காதல் வருவது சாத்தியமானதாக தெரியவில்லை...காரணம் ஒன்றையும் புரியாத நிலையில் காதல் மட்டும் எப்படி அவளுக்கு புரியும். மனநிலை பாதித்தவரும், ஊமையும் வாழ்வில் இணைவதென்பது பிராக்டிகலாய் கடினம். ஆனால் இங்கே அதை ஈஸியாய் சொல்லி இருக்கிறார்கள்.

மொத்தத்தில் பஃப்ரி கல் மனதையும் குளிர்விக்கும் குல்ஃபி. இந்தியாவின் இந்த ஆண்டின் சிறந்த படம் என்பதில் வேறு கருத்து இல்லை.

Sunday, September 16, 2012

"திக் திக் ஒரு ப(தி)க்க கதை".திக் திக் ஒரு ப(தி)க்க கதை.

தினமும் சீக்கிரமாய் போய்விடுவேன்...இன்று வெள்ளி என்பதாலும் நாளை சனிக்கிழமை லீவ் அதனால் சொச்சம் இருந்த வேலையை முடித்துவிட்டு கிளம்பும்போது மணி 10 ஆகிவிட்டது.

மெதுவாய் வெளியே வந்தேன். மாலையில் மழை பெய்து விட்டிருந்ததால் வானம் இறுக்கமாக இருந்தது, வெளியில் மெல்லிய தூறல்....கும்மிருட்டு வேறு.

தப்பு செய்துவிட்டேன் கணவர் போன் செய்தபோது நானே வந்து விடுவதாய் சொல்லிவிட்டேன்.

செக்யூரிட்டி சல்யூட் வைத்துவிட்டு கேட்டை மூடினார். அம்மா போய்விடுவீங்களா? எனக்கேட்டார்...

மெதுவாய் திரும்பி பரவாயில்லை ஆட்டோ பிடிச்சு போய்டுவேன்....குருட்டு தைரியத்தில் கொஞ்சம் தயக்கமாய்தான் சொன்னேன்.

துடைத்துவைத்த சாலை....வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது. நம்ம இசிஆர் ரோடா இது? நம்ப முடியவில்லை.

வெள்ளிக்கிழமை என்பதால் எல்லா டெக்கிகளும் சீக்கிரமாய் பார்ட்டி, பப் என்று போவதால் ரோட்டில் ஒரு ஈ காக்காக் கூட இல்லை.

மெதுவாய் நடந்து பஸ்டேண்ட் அருகில் வந்தேன். முதன் முறையாக பத்து மணிக்கு மேல் தங்கியதால் இந்த மாதிரி இருக்கும் என்று நினைக்க வில்லை. ஷேர் ஆட்டோக்கள் வரும் என எதிர்ப்பார்க்க ஆரம்பித்தேன்.

நல்ல வேளையாக பஸ்டேண்டில் ஒரு பெண்ணும் கொஞ்சம் தள்ளி ஒரு ஆளும் இருந்தார்கள். கொஞ்சம் தைரியம் வந்தது. அந்த பெண்ணுக்கு அருகில் வந்து நின்றுக்கொண்டேன். மெதுவாய் அவர்களைப்பார்த்து சிரித்தேன். சட்டென்று பஸ் வர அவர்கள் ஏறி சென்று விட்டார்கள். அது என் ரூட் பஸ் அல்ல.

பஸ் போவதையே வெறித்துப்பார்த்தேன்...

அப்போதுதான் கவனித்தேன் என் முதுகு பக்கம் யாரோ என்னை வெறித்துப்பார்ப்பது போல் இருந்தது.

திரும்பி பார்த்தேன்....பக்கத்தில் இருந்தது அந்த ஆள்தான். அழுக்கான துணியில் பல கிழிசல்கள்.....கையில் அழுக்கு மூட்டை பற்க்களில் மஞ்சள் கறை...தலை சொறிந்துக்கொண்டு என்னை பார்த்து சிரித்தார்.

அந்த இருட்டு குளிரிலும் எனக்கு வேர்த்தது. கைகள் நடுங்கத்தொடங்கின...கால்கள் உதற ஆரம்பித்தது.

அவன் மெதுவாய் என்னை நெருங்குவது தெரிந்தது. எனக்கு என் இதயத்தின் திக் திக் தெளிவாய் கேட்டது.

மெதுவாய் இரண்டடி முன்னே நின்றேன். அவனும் என் அருகில் நின்றான்.

சத்தமாய் கத்தவேண்டும் போல் இருந்தது....கத்தினால் மட்டும் யாராவது வரப்போகிறார்களா என்ன?

மனதில் தைரியத்தை வரவைத்து என் விரல்களை இறுக்கி தவராய் நடந்தால் அவனை குத்துவதற்க்கு தயாராய் இருந்தேன்.

கடவுளை வேண்டிக்கொண்டு கண்களை மூடி திறந்தேன்.

அவனும் பக்கத்தில் வந்து சிரித்தான்." எக்ஸ்கியூஸ்மி, ஐ வாண்ட் டூ ருபீஸ்" என்றான். எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

வேகமாய் பர்ஸில் இருந்த 5 ரூபாய் காய்னை கொடுத்தேன்.

"தேங்க்ஸ்" என்று சொல்லிவிட்டு ஆர்வத்துடன் வேகமாய் போய்விட்டான்.

அப்பாடா என்று இருந்தது.....

தூரத்தில் மஞ்சள் வெளிச்சம் மினிக்கி கொண்டு பெரிதாகிக்கொண்டே வந்தது. அது ஒரு போலீஸ் வண்டி என்பதற்க்கு அதன் மேல் இருக்கும் சிவப்பு விளக்கு அடையாளம் காட்டியது.

மெதுவாய் என் அருகில் வந்து நின்றது.....

"இங்கே என்னம்ம பண்றே" சத்தமான போலீஸ் மிரட்டல் ஒலி.

"இல்லே சார் இன்னைக்கி கொஞ்சம் லேட் ஆயிடுச்சு" என்றேன்.

"எந்த ஏரியா போகணும்?"

"மைலாப்பூர் சார்"

"ஏறுங்க நாங்க அந்த வழியாத்தான் போறோம்...."

நானும் கொஞ்சம் கலக்கத்துடன் ஏறினேன்......

முன்னால் உட்கார்ந்திருந்த போலீஸ் காரர் என்னை மேலிருந்து கீழ் பார்த்தார்.....

எனக்கு கூசியது....

அவரின் சிரிப்பில் ஏக்கமும் கண்களில் காமமும் தெரிந்தது.பெரிய தவறு செய்துவிட்டதைப்போல் மனம் பயப்பட தொடங்கியது....

                                               தொடரும்......
பாகம் - 2

மெதுவாய் என் போனை எடுத்தேன். கால் செய்ய தொடங்கினேன்...

அய்யோ கடவுளே....பொண் சுவிச் ஆஃப் ஆகியிருந்தது. பயத்தில் நாக்கு வரண்டது. வேர்வையில் சுடிதார் என் உடலோடு ஒட்டி எனக்கு அறுவறுப்பை தந்தது.

என்ன செய்வது...எப்படி தப்பிப்பது? எனக்கு புரியவில்லை...
ஜீப்பும் வேகமாய் சாலையில் நழுவிக்கொண்டு இருந்தது. மனம் யோசிக்க ஆரம்பிப்பது.

"சார்...." மெதுவாய் அழைத்தேன்.
"என்னம்மா" குழைந்துவிட்டு ஜொள் வடிய என்னைப்பார்த்தார் போலீஸ்காரர்.
"ஒண்ணுமில்லே சார்" என சொல்லிவிட்டு...தலை குனிந்தேன்.

அதற்க்குள் நம்ப முடியவில்லை....என் வீட்டு ஏரியாவை நோக்கிதான் வாகனம் செல்கிறது....

"எந்த தெரு ம்மா" அவர் கேட்டவுடன்...

"அடுத்த ரைட்டுங்க" என்றேன்.

வீட்டுக்கு அருகில் ஜீப் நின்றதும்...கதவை திறந்து இறக்கிவிட்டார்.

எனக்கு என்னை நினைக்க அறுவெறுப்பாய் இருந்தது. பதட்டத்தில் மற்றவர்களின் பார்வையை தவறாக புரிந்துக்கொண்டதில் என் தவறு புரிந்தது.

அப்போதுதான் அவர் பேச தொடங்கினார்..." அம்மா...நீங்க என்ன நினைச்சீங்கன்னு எங்களுக்கு தெரியும், ஆனாலும் எங்களோட சந்தேகத்தை தீக்கத்தான் அப்படி நடிச்சோம், காரணம் பணக்கார ஐடி பசங்க நிறைய பேர் உங்க ஆபீஸ் ஏரியாவுலே இருக்கிறதாலே...தப்பான பொண்ணுங்க எப்பவுமே அங்கே சுத்திட்டு இருப்பாங்க...அவங்களை கண்டு பிடிக்க நாங்க கொஞ்சம் அப்படி நடிச்சா அவங்களை ஈஸியா கண்டு பிடிச்சுடலாம்.சில பொண்ணுங்க தப்பா அட்ரெஸ் சொல்லி மாடிப்பாங்க"

நான் வழிந்துகொண்டே சிரித்தேன்.....

"முக்கியமா...உங்களை பயமுறுத்தியதற்க்கு காரணம் " இனிமே நீங்க மறுபடியும் இந்தமாதிரி பாதுகாப்பில்லாமே நேரங்கெட்ட நேரத்துலே வரக்கூடாது, அதுக்காகவும்தான் கொஞ்சம் நடிக்க வேண்டியதாகிவிட்டது" என்றார் சிரித்துக்கொண்டே.

"ரொம்ப தேங்ஸ் சார்" நிம்மதியாய் வீட்டுக்குள் நுழைந்தேன்.

முற்றும்.


மாலை பொழுதின் மயக்கத்திலே - விமர்சனம்.மாலை பொழுதின் மயக்கத்திலே - விமர்சனம்.


"ஃபிரேம்களில் ரிச்சான ஒரு லோ பட்ஜட்" படம்.

மற்றவர்கள் மாதிரி படம் வெளிவந்த வந்த உடனே சுடச்சுட என்னால் விமர்சனம் எழுதமுடியாது. காரணம் நான் வேலைக்கு செல்வதால்! எழுதுவது என்பது எனக்கு பொழுதுபோக்குமட்டுமே. அதனால், முதலில் என் வேலை, பின்னர் குடும்பம், அதற்க்கடுத்துதான் எழுதுவது.

ஆனாலும் அனைத்து படங்களையும் பார்த்தபின் அதை மக்களுடன் பகிர்வதில் நான் சந்தோஷம் கொள்வேன்.(கொஞ்சம் லேட்டானாலும்!)

மாலை பொழுதின் மயக்கத்திலே....மழை பெய்யும் ஒரு மாலை வேளையில் சென்னையின் பணக்கார மக்கள் கூடும் ஒரு காஃபீ டே யில் நடக்கும் நிகழ்வுகள்தான் கதை. சமீபத்தில் பார்த்த "மதுபானகடை" படத்தின் சாயலில் ஆனால் உயர்ந்த டீ கடையில் நடக்கும் கதை.

மதுபானக்கடையில் ஏழைகளும், குடிகார்களும் புலம்புவதைப்போல் இங்கே...மெத்தப்படித்தவர்களும் அப்பன் காசை கரைக்கும் உயர்தர மக்களும் ஆங்கிலத்தில் புலம்புகிறார்கள் அதுதான் வித்தியாசம்.

சரி கதைக்கு வருவோம்.

ஐடி-யில் நிறைய சம்பாதிக்கும் கணவன், படிப்பை பாதியில் விட்டுவிட்டு கல்யாணம் செய்துக்கொண்டு மனஸ்தாபங்களில் தவிக்கும் குடும்ப தலைவி, லேப்டாப்பில் கதை எழுதுவதாய் வெட்டியாய் காஃபி டேயில் நேரத்தை ஓட்டும் எழுத்தாளர், டைரக்டர் ஆக வேண்டும் என்கிற கனவில் பணப்பிரச்சனையில் தவிக்கும் நாயகன் இளம் இயக்குனர் (ஆரி) , கஷ்டத்தில் காஃபி ஷாப்பை நடத்தும் ஓனர், படிக்க துடிக்கும் காஃபி ஷாப்பில் வேலை செய்பவர், இங்கே வரும் பெண்களை கடலை போட வேலை செய்யும் இன்னொருவர், கடைசியாய் வந்து சேரும் இரண்டு நாளில் படிப்புக்காக ஆஸ்திரேலியாவுக்கு பறக்க விருக்கும் பணக்கார நாயகி (ஷுபா புட்டேலா), அம்மாவின் கனவுக்காக கதாநாயகன் ஆக நினைக்கும் கொழுத்த சொட்டை தலை ஹீரோ மற்றும் விடாமல் பெய்யும் அடை மழை இப்படி அனைவரும் சந்திக்கும் காஃபி டேயில் நடக்கும் ஒரு மாலை நேர நிகழ்வுகள்தான் இந்த கதை.

வெறும் 12 பேர் மட்டும்தான் இந்த படத்தில் நடித்திருக்கின்றார்கள். அவ்வளவாக பிரபலம் இல்லாத முகங்கள் சொல்லப்போனால் (சுப்பு பஞ்சு) இவரும், "சார் எங்கேயோ போய்ட்டீங்க" புகழ் (சிவாஜி) இவரும்தான் கொஞ்சம் தெரிந்த முகங்கள். மற்றவர்கள் சீரியல் ஆர்டிஸ்ட் மற்றும் நாளைய இயக்குனரில் நடித்த நடிகர்கள்.

படம் ஆரமித்த உடன் படத்தில் இருப்பவர்கள் போலவே நம்மையும் ஏசி அறையில் உட்கார்ந்த ஃபீலை தந்த இயக்குனருக்கு பாராட்டுக்கள். சில காட்சிகளில் நாயகனுக்கு ஏற்ப்படும் குளிரை நாமும் உணர்வோம். மிகவும் மெதுவாய் நகர்ந்தாலும் கொஞ்சம் அவ்வப்போது போரடித்தாலும் கடைசிவரை நம்மை ஒன்றச்செய்வதில் இயக்குனர் வெற்றிப்பெறுகிறார்.

முக்கியாமாய் நான்கு சுவற்றுக்குள் அழகான கவிதை மாதிரி நகர்கிறது படம். பரபரப்பான சண்டைகள் இல்லை, பன்ச் டயலாக்குகள் இல்லை, கண்ணை கலங்க வைக்கும் செண்டிமெண்ட் காட்சிகள் இல்லை, சீட்டின் நுனிக்கு நகர வைக்கும் திருப்பங்கள் இல்லை, மயிர் கூச்செரியும் திகிலும் இல்லை, கவர்ச்சிகள் காட்டும் நாயகிகள் இல்லை, பாடல்களில் குத்தாட்டங்கள் இல்லை குலுங்க வைக்கும் அயிட்டம் பாடல்கள் இல்லை.....அப்போ என்னதாய்யா இருக்கு? நீங்கள் கேட்பது புரிகின்றது.

ஆனாலும் படத்தை உட்கார்ந்து பார்க்கலாம். அங்கங்கே ரசிக்கலாம். பிரஷ்ஷான கேமரா, அழகான இடம், ஸ்மார்ட்டான நாயகன், கொஞ்சி கொஞ்சி டமிங்கிளீஸ் பேசும் நாயகி இது போதாதா கல்லூரி கூட்டங்களை கவர?

மசாலா படங்களை பார்த்து போரடித்துப்போனவர்களுக்கு இந்த படம் கொஞ்சம் ஆறுதலாயும், பொழுதை போக்கவும் உதவும். கணவனை எதற்க்கெடுத்தாலும் எரிந்துவிழும் மனைவி, வேண்டா வெறுப்பாய் அவுட்டிங் வந்ததால் வெயிட்டரிடம் கோபத்தை காட்டுவதும் கடைசியில் அனைத்தையும் மறந்து கணவரின் தோளில் சாய்வதும், நாயகியை பார்த்தவுடன் கவலைகளை மறந்து சர்ப்ப்ரைஸ் பர்த்டே பார்ட்டி கொடுத்து கேக்கில் பெயர் எழுத அவளின் பெயர் தெரியாமல் திரும்பி வந்து ஐயம் ஜெய்...நீங்க என அவள் பெயரை கேட்பதும், பில்லுக்கு பணம் இல்லாமல் பைக் சாவியை வைத்து விட்டு செல்வதும்,கோபத்தில் திட்டிவிட்டு கடைசியில் வேலை செய்பவரை மன்னிக்கும் ஓனரும், நாயகனின் இரண்டு மணிநேர கவனிப்பில் கனிந்து காதலை ஏற்க்கும் நாயகியும் இப்படி ஆங்காங்கே இதமான வருடல்கள்.

ஆரம்பத்தில் வரும் நந்தாவின் பாடல் அருமை. "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா" டீமின் வெஸ்டர்ன், ஹிப் ஹாப் டான்ஸில் நந்தாவும் மற்றவர்களும் சூப்பர். நாயகன் ஸ்மார்ட்...வழிவதிலும் சோகத்திலும், வெறுப்பிலும் கவர்கிறார். நாயகி குழந்தை தனமான பேச்சிலும் அவ்வளவாக நடிக்க வாய்ப்பில்லை எனினும் கோதுமை கலரில். காஃபி டேயில் வேலை செய்யும் வெயிட்டர் காமெடியில் அங்கங்கே நம்மை சிரிக்க வைக்கிறார். வந்து போகிறார். குண்டு பையன் நல்ல தேர்வு. மற்றப்படி சொல்ல ஒன்றும் இல்லை.

மைனஸ் :

கதை என்று ஒன்றும் பெரிதாக இல்லை. ரொம்ப டெட் ஸ்லோ நரேஷன். நாடத்தனமான சிலரின் நடிப்புகள். நான்கு அறைக்குள் இரண்டு மணி நேரத்தில் நடக்கும் கதை என்பதால் திருப்பங்கள் இல்லாத திரைக்கதை. குறைவான நடிகர்கள் மூன்று பேரை மட்டும் வைத்து கதை சுழல்வதால் வரும் கொட்டாவி. இடை இடையே கதையை தடுக்கவும், நேரத்தை ஓட்டவும் வரும் சுமாரன பாடல்கள்...

பிளஸ் :

வித்தியாசமான கதை களம், திறமையான இயக்கம் (நாராயண் நாகேந்திர ராவ்). ஃபீல் குட் எண்ட்ரடெய்னர்.

பன்ச் :

மாலை பொழுதின் மயக்கத்திலே
மனதை தொடும் தூரத்திலே!

ஒரு முறை பார்க்கலாம்.....டைம் பாஸுக்காக.

Thursday, August 30, 2012

18 வயசு - திரைப்பட விமர்சனம்.
18 வயசு - திரைப்பட விமர்சனம்.

ரேணிகுண்டாவின் மாபெரும் வெற்றிக்குப்பின் இயக்குனர் பன்னீர் செல்வத்தின் அடுத்த படைப்பு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப்பின் வெளிவந்திருக்கும் படம். முதல் பாட நாயகன் ஜானியையே இந்த படத்திலும் விளையாடி இருக்கிறார்.

ரேணி குண்டாவில் பட்டையை கிளப்பிய இந்த டீம் இதில் பாதி கிணறுதான் தாண்டியிருக்கிறார்கள். வித்தியாசமாய் ஆரம்பித்த படம் இடைவேளைக்குப்பின் கொஞ்சம் சறுக்குகிறது. ஆனாலும் வித்தியாசமாக சொல்ல நினைத்த இயக்குனரை பாராட்டியே ஆகவேண்டும்.

அப்படியென்ன வித்தியாசமான கதை என்கிறீர்களா?

அம்மாவிடம் ஒட்டாத மகன் அப்பாவிடம் பாசமாய் வளர்கிறான். அம்மாவின் தவறான நடத்தையால் அப்பா தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொள்ள, பாசத்துக்காக ஏங்கும் இவன் ஆதரவற்ற நாயகியைப்பார்த்து காதல் வயப்பட்டு அம்மாவையும், அம்மாவின் கள்ள காதலனையும் கொன்று விட்டு நாயகியை தூக்கிக்கொண்டு எஸ்கேப் ஆக, துரத்தும் போலீஸிடம் சிக்கினாரா? காதல் கைகூடியதா என்பதை சொல்லும் இரண்டாவது பாதிதான் இந்த படம்.

இதிலென்ன வித்தியாசம் என்கிறீர்களா?

இங்கேதான் இயக்குனரின் சாமார்த்யம். நாயகன் ஜானிக்கு ஒரு வித மன நோய் (ஆமாம்...அதே வாயில் நுழையாத பேர்தான்). பல விலங்குகளின் சப்தங்களை எழுப்பிக்கொண்டு அவைகளைப்போலவே செயலில் வெளிக்காட்டும் வித்தியாசமான நோய்.

ஜானியும் டப்பிங்கில் சொதப்பினாலும் சில இடங்களில் நடிப்பில் கவர்கிறார். அதுவும் விலங்குகளைப்போல, அதன் ஒலிகளை எழுப்பிக்கொண்டு மேனரிசத்தை காட்டும் காட்சிகளில் மிளிர்கிறார். கொஞ்சம் டப்பிங்கிலும், சில காட்சிகளில் நடிப்பில் இன்னும் கொஞ்சம் ஹோம்வர்க் செய்திருக்கலாம். சண்டை காட்சிகளில் அதுவும் அந்த கிளைமாக்ஸ் காட்சியில் அற்ப்புதம். ஜானியும் அவருக்கு ஐடியா கொடுக்கும் மன நிலை பாதித்தவரும் (சத்யேந்த்ரா) காட்சிகளில் நகைச்சுவை இழையோட நடித்திருக்கிறார்கள்.

ரொம்ப வருடங்களுக்குப்பின் சத்யேந்த்ரா காமெடியிலும் காதலுக்கு உதவுவதிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். அவருக்கு ஏற்ற சரியான வேடம்.(முன்பெல்லாம் அடிக்கடி இவரை கோடம்பாக்கத்து ரோடுகளில் சந்திப்பேன். கொஞ்சம் பேசுவோம். ஆனால் பல மாதங்களாக இவரை பார்க்கமுடியவில்லை...காரணம் இப்போதுதான் புரிகிறது). காதல் வாழ்க என்று சொல்வதும், போலீஸ்காரருக்கு சப்போர்ட்டாய் ஜானியை கொல்ல துணிவதும் ஆனால் கிளைமாக்ஸில் சர்ப்ரைஸ் கொடுப்பதும் கலக்கியிருக்கிறார். வாய்ப்புகள் கிடைத்தால் இன்னும் நல்லாவே செய்வார்.

நாயகனின் அம்மாவாக யுவராணி.மகன் மேல் இவருக்கு என்ன வெறுப்பு என்பது புரியவில்லை. கணவர் இறந்த்பின் கூட மகனின் மீது அன்பு காட்டாத அம்மா! இப்படியெல்லாம் இருப்பார்களா?

ஜானியின் நோயை அறிந்து உதவதுடிக்கும் டாக்டர் வேடத்தில் ரோகினி...சொல்லவா வேண்டும் அவரின் அனுபவம் நமக்கு ஆனந்தத்தை தருகின்றது.

நாயகி காயத்ரி புதுமுகம் அவ்வளவாக வாய்ப்புகள் இல்லையென்றாலும் முதலிலும் கடைசியிலும் நன்றாகவே நடித்திருக்கிறார். ஆதரவற்ற நிலையில் ஜானியை நம்புவதும் ஆனால் ஜானியை பற்றி தெரிந்தபின் சட்டென்று மாறுவதும்....வளர வாழ்த்துக்கள்.

ஜானிக்கு உதவும் நண்பனும், டாப் அப் காதலியும் காமெடிக்கு உதவியிருக்கிறார்கள். அதுவும் அந்த டாப் அப் சிரிப்பு காமெடியின் உச்சம்.

துரத்தும் போலீஸ்காரர் படத்தை ஆர்வத்துடன் பார்க்க செய்திருக்கிறார். அவரின் யதார்த்த நடிப்பு ஏஒன்.

பாடல்கள் அவ்வளவாக ஞாபகத்தில் நிற்க்கவில்லை ஆனால் பிண்ணனி இசை படத்தை விறுவிறுப்பாக்கத்தவரவில்லை. இரண்டு நிமிடமே வரும் ஃபிளாஸ்பேக் அருமை.

ஆக்க்ஷன் டைரக்டர் ராஜசேகரும், சினிமாட்டோகிராஃபி ஷக்தியும் பாராடும்படி உழைத்திருக்கிறார்கள். அதுவும் சண்டை காட்சிகளில் ஆக்க்ஷன் படு ஜோர். இரண்டாவது பாதி எடிட்டிங் கொஞ்சம் கத்திரியை யூஸ் செய்திருக்கலாம்.

வழக்கம்போல் கொஞ்சம் மைனஸ்களும் உண்டு.

சின்ன வயதுகளில் தெரியாத நோய் திடீரென்று எப்படி சீரியஸ் ஆனது என தெளிவாக சொல்லவில்லை.
வித்தியாசமான அம்மா இப்படியும் அம்மாக்கள் இருப்பார்களா? அம்மாவின் பாசமற்ற் தன்மைக்கு தெளிவான விளக்கம் இல்லை.
தேவையில்லாத கடைசி டூயட் பாடல்.
மீண்டும் போலீஸ்காரர்களை தவறாகவே காட்டியிருப்பது. எந்த போலீஸ்காரரும் இப்படி சின்ன பையனை கொல்லத்துடிக்க மாட்டார்.
வித்தியாசமான நோய்கள் இருப்பவர்கள் கொலை செய்கிறார்கள், காதலிக்கிறார்கள் இதைத்தவிர வேறொன்றும் செய்யமாட்டார்களா? இந்த படத்திலும் இப்படியே! இன்னும் கொஞ்சம் வித்தியாசம் இருந்திருக்கலாம்.
கொஞ்சம் ஸ்லோவான இரண்டாவது பாதி. இடைவேளைக்குப்பின் கதையை எப்படி நகர்த்துவது என்பதில் கொஞ்சம் குழம்பியிருப்பது நிஜம்.

மெசேஜ்...

படத்தில் காட்டியிருப்பதை போல் போலீஸ்காரர்கள் இருந்தால் முதலில் அவர்கள் துப்பறிவதை விட குற்றவாளிகளின் மனதை புரிய முயர்ச்சிக்கவேண்டும் என்பதை ஆழமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

ஆனாலும், ரேணிகுண்டாவில் மிரட்டிய இயக்குனரும் நடிகரும் இதிலும் சோடைபோக வில்லை.
இந்த பதினெட்டு வயசு... மதிகெட்ட மனசு. பார்க்கலாம் ஒருமுறை!