Tuesday, August 9, 2011

காலம்!





"போங்கப்பா...நான் என்ன சின்ன பாப்பாவா?"-என்று

அன்பு மகள்  கேட்டபோதுதான் தெரிந்தது...

வாங்கி வந்த "மரப்பாச்சி" பொம்மைகளை

விளையாடும் வயதை தாண்டிவிட்டாள் என்று!


என்ன செய்வது...

எல்லா அப்பாக்களுக்கும் தங்கள் குழந்தைகள்

என்றும் சின்ன பாப்பாக்கள் தான்!



No comments:

Post a Comment