Friday, July 29, 2011

அது ஒரு கனாக்காலம்!


அப்போதெல்லாம்..

அப்பா அனுப்பும் ஐனூறு ரூபாயில்
என் நண்பர்கள் கடன் கேட்பார்கள்...
அதுவும் பத்து,இருபது...அதிக பட்சம் ஐம்பது ரூபாய்!

ஒன்றாம் தேதி வந்தவுடன்
போஸ்ட்மேன் அண்ணனின்
சைக்கிள் மணி சத்தத்துக்காக
கேட்டருகில் தவம் கிடப்போம்!

ஐனூறு ரூபாயை நாலு முறை
எச்சை தொட்டு எண்ணி கொடுப்பார்!
என்னை விட...
ஐந்து ரூபாய் டிப்சை வாங்க்கிக்கொண்டு
வெத்தலை வாயை குதப்பி சிரிப்பார்!

வாங்கிய கடனும்...
கொடுத்த கடனும் போக
24 ரூபாய் பஸ் பாஸும்
350 ரூபாய் மெஸ் ஃபீஸும்
கலரும் கேன்வாசும் அக்கவுண்டில் போக..
மீதமிருப்பது 50 ரூபாய்!

தினமும்...
காலை..மாலை...50 பைசா டீயும்...
ஞாயிறு மட்டும் ஸ்பெஷலாய் ரெண்டு பஜ்ஜியும்
என் பஜ்ஜெட்டில் அடக்கம்!

சொல்ல மறந்துவிடேன்...
மாதம் இருமுறை
அடையார் ஆனந்த பவனில்
13 ரூபாய் ஃபுல் மீல்ஸும் உண்டு!

இரும்பு கட்டிலில்,லொட லொட ஃபேனில்
பொன் வண்டு சோப்பின் பெட்ஷீட் மணத்தில்
சரோஜா தேவி புத்தகத்தை படித்துக்கொண்டே
ஸ்ரீதேவி,ராதாவை கனவில் கண்டோம்!

மொட்டை மாடியில்
சொந்த கதை,சோகக் கதைகளையும்,
பிஞ்சு காதல் கதைகளையும்
சினிமா கிசுகிசுக்களையும்
சலிக்காமல் பேசியிருக்கிறோம்!

பணம் அனுப்புமாறு 15 பைசா போஸ்ட்கார்டிலும்
மணியார்டர் வந்துவிட்டதாய் 50 பைசா இன்லெண்ட் லெட்டரும்
ஸ்பெஷல் ஃபீசுக்காக பக்கத்துவிட்டு பிபி ஃபோனும்
எங்களின் மாதா மாதம் அட்டவணையில் ஆஜர்!

சந்தோசமானலும் சரக்கடிப்போம்
சோகமானாலும் சரக்கடிப்போம்
காக்கைகளாய் கலந்திருப்போம்
யானைப்போல் சேர்ந்திருப்போம்
பிரச்சனை என்றால் தோள்கொடுப்போம்!

ரூம் மேட்டின் டீ ஷர்ட்டும்
சீனியரின் கேன்வாஸ் ஷூவும்
ஃபிகரை மடக்க கடன் வாங்கி
சோப்பு முதல் சீப்பு வரை
பகிர்ந்திருக்கிரோம்!மகிழ்ந்திருக்கிரோம்!

இப்போது...

நுனி நாக்கு ஆங்கிலமும்
சாஃப்ட்வேர் கம்பெனி வேலையும்
எடிம் கார்ட் டாலர் சம்பளமும்
கையில் கிரடிட் கார்டும்
காலில் ரிபொக் ஷூவும்
ஆபீஸ் போக ஏ சி காரும்
லன்ச்சில் பர்கரும்,செல்ஃபோனும்
டின்னருக்கு டான்ஸ் பாரும்
நன்பர்களுடன் பேச ஸ்க்ய்பியும்
போட்டோக்களுக்கு ஃபேஸ் புக்கும்
இன்னும்...எவ்வளவோ....

ஆயிரம் இருந்தும்...

ஐம்பது ஆயிரத்தின் இந்த வாழ்க்கையை விட
ஐனூறு ரூபாயின் அந்த வாழ்க்கை
என்றும் இனிமை...அருமை...பெருமை!

2 comments:

  1. ungal kavidai inimai, arumai, perumai.
    Solla varum karuthum, adhai vadivamaikkum varthaigalum sariyaga padippavar manadhai thodum vitthai petrulleergal. Vazhulthukkal.
    Dhanaraju

    ReplyDelete