Saturday, July 30, 2011

வெருங்கூத்து!
முன்பெல்லாம்..

முட்டுச்சந்து மேடையில்
முன்னூறு பேராவது கூடுவார்கள்!

கூட்டத்தை கண்டவுடன்
தூக்கம் கண்டிராத என் கண்கள்
துடிப்பாய் அகல விரியும்!

வாழ்க்கை சுமையெய் சுமக்கும் என் தோள்கள்
விரெய்ப்பாய் திமிரி நிமிரும்!

முன்னூறுப்பேரின் கைட்தட்டலில் என்
சோறு காணாத வெறும் வயிரு...
சுகம் நிரம்பி பொங்கும்!

அரிச்சந்திரனாய்,கட்டபொம்மனாய்,
ராமனாய்,பீமனாய்,வாமன்னாய்...
எத்தனையோ அவதாரங்கள்
எங்கள் தெருக்கூத்து நாடகத்தில்!

நாடகம் முடிந்த்தவுடன்
பிரசிடெண்ட்டும்,பெரிய பண்ணையும்
கசங்கிய ரூபாய் நோட்டுகளை
எண்ணிப்பார்க்காமல் திணிப்பார்கள்
அடுத்தமுறையும் அழைப்பார்கள்!

ஊர் மக்களின் கொடையும்,சன்மானமும்
பலநாள் எங்கள் மானம் காக்கும்.
சில நாள் எங்கள் பசியை போக்கும்!

இவையனைத்தும் நேற்றுவரை!

மேடையில் ரிக்கார்ட் டேன்ஸுகளும்
சின்னத்திரை டி வி பொட்டியும்
பெரியத்திரை கினிமா கொட்டகையும்
எங்கள் நாடக கலாச்சாரத்தை
நடு வீதியில் தவிக்கவிட்டனர்!

ஊர் சந்து பொந்தெல்லாம் நவ
நாகரிகம் நாட்டியமாடியதால்
பாட்டன் வளர்த்த பெருங்கலை - இன்று
பாதியில் விட்டனர்..,பெருங்கவலை!

கலையை கொடுத்த ஆண்டவன்
விலையை கொடுக்க மறந்தான்
மேடை ஏறிய எங்கள் கால்கள் - இன்று
சோடை போனது எதனாலே?

படித்திருந்தால் பாதை மாறியிருப்போம்
பிடித்திருந்தால் மானத்தை மறந்திருப்போம்
பழகியிருந்த்தால் பச்சையாய் பிழைத்திருப்போம்
மேடையில் நடிக்க தெரிந்த எங்களுக்கு
நிஜத்தில் நடிக்க தெரியவில்லை!

என் பிள்ளைகளிடம் சொல்லியிருக்கிறேன்
சவக்குழியில் என்னுடன்-என்
அரிதார பொட்டியையும் புதைக்கவேண்டும்-என்
அவதாரங்ககளையும் அழிக்கவேண்டும்!


வேலை என்ன?

முன்பெல்லாம்...

ஊரில்..,
எப்போதவது..எங்காவது நடக்கும்!

கடந்த நான்கு மாதத்தில்
ஆறு திருட்டுக்கள்...

அதில்...

அம்புஜம் மாமியின் நாலு பவுன் அட்டிகையும்,
ரங்கு அண்ணன் வீட்டு ரகசிய பெட்டியில் லட்சத்தையும்,
அண்ணாச்சிக் கடை இரும்பு கல்லாப்பெட்டியும்!

அப்புறம்...

ரெண்டு ஆட்டுக்குட்டிகளும்,சில கோழிகளும் கூட
திருடுப்போயின!

அடுத்த ஊர் பூசாரியும்,
கேரள ஆச்சாரியும்
ஏதேதோ சொல்லிவிட்டுப் போனார்கள்...!

ரெண்டு நாள் முன்னாடிக்கூட
மூணாவது தெரு நாலாவது வீட்டில் கொள்ளை..

நேற்று கூட..
கோயில் உண்டியலிலும் கை வைத்துவிட்டார்கள்!

போலீசும், மோப்ப நாயும்
விருந்து சாப்பிட்டுவிட்டுப் போனார்கள்
தேடிக்கொண்டிருப்பதாய் சொன்னார்கள்!

இன்று...

ஊர் எல்லையெய் கடந்து நடக்கும்போது
காவல் தெய்வம் கருப்பண்ண சாமியெய் காட்டி
ஆறு வயது மகள் கேட்டாள்
இவரோட வேலை என்னப்பா?

Friday, July 29, 2011

அது ஒரு கனாக்காலம்!


அப்போதெல்லாம்..

அப்பா அனுப்பும் ஐனூறு ரூபாயில்
என் நண்பர்கள் கடன் கேட்பார்கள்...
அதுவும் பத்து,இருபது...அதிக பட்சம் ஐம்பது ரூபாய்!

ஒன்றாம் தேதி வந்தவுடன்
போஸ்ட்மேன் அண்ணனின்
சைக்கிள் மணி சத்தத்துக்காக
கேட்டருகில் தவம் கிடப்போம்!

ஐனூறு ரூபாயை நாலு முறை
எச்சை தொட்டு எண்ணி கொடுப்பார்!
என்னை விட...
ஐந்து ரூபாய் டிப்சை வாங்க்கிக்கொண்டு
வெத்தலை வாயை குதப்பி சிரிப்பார்!

வாங்கிய கடனும்...
கொடுத்த கடனும் போக
24 ரூபாய் பஸ் பாஸும்
350 ரூபாய் மெஸ் ஃபீஸும்
கலரும் கேன்வாசும் அக்கவுண்டில் போக..
மீதமிருப்பது 50 ரூபாய்!

தினமும்...
காலை..மாலை...50 பைசா டீயும்...
ஞாயிறு மட்டும் ஸ்பெஷலாய் ரெண்டு பஜ்ஜியும்
என் பஜ்ஜெட்டில் அடக்கம்!

சொல்ல மறந்துவிடேன்...
மாதம் இருமுறை
அடையார் ஆனந்த பவனில்
13 ரூபாய் ஃபுல் மீல்ஸும் உண்டு!

இரும்பு கட்டிலில்,லொட லொட ஃபேனில்
பொன் வண்டு சோப்பின் பெட்ஷீட் மணத்தில்
சரோஜா தேவி புத்தகத்தை படித்துக்கொண்டே
ஸ்ரீதேவி,ராதாவை கனவில் கண்டோம்!

மொட்டை மாடியில்
சொந்த கதை,சோகக் கதைகளையும்,
பிஞ்சு காதல் கதைகளையும்
சினிமா கிசுகிசுக்களையும்
சலிக்காமல் பேசியிருக்கிறோம்!

பணம் அனுப்புமாறு 15 பைசா போஸ்ட்கார்டிலும்
மணியார்டர் வந்துவிட்டதாய் 50 பைசா இன்லெண்ட் லெட்டரும்
ஸ்பெஷல் ஃபீசுக்காக பக்கத்துவிட்டு பிபி ஃபோனும்
எங்களின் மாதா மாதம் அட்டவணையில் ஆஜர்!

சந்தோசமானலும் சரக்கடிப்போம்
சோகமானாலும் சரக்கடிப்போம்
காக்கைகளாய் கலந்திருப்போம்
யானைப்போல் சேர்ந்திருப்போம்
பிரச்சனை என்றால் தோள்கொடுப்போம்!

ரூம் மேட்டின் டீ ஷர்ட்டும்
சீனியரின் கேன்வாஸ் ஷூவும்
ஃபிகரை மடக்க கடன் வாங்கி
சோப்பு முதல் சீப்பு வரை
பகிர்ந்திருக்கிரோம்!மகிழ்ந்திருக்கிரோம்!

இப்போது...

நுனி நாக்கு ஆங்கிலமும்
சாஃப்ட்வேர் கம்பெனி வேலையும்
எடிம் கார்ட் டாலர் சம்பளமும்
கையில் கிரடிட் கார்டும்
காலில் ரிபொக் ஷூவும்
ஆபீஸ் போக ஏ சி காரும்
லன்ச்சில் பர்கரும்,செல்ஃபோனும்
டின்னருக்கு டான்ஸ் பாரும்
நன்பர்களுடன் பேச ஸ்க்ய்பியும்
போட்டோக்களுக்கு ஃபேஸ் புக்கும்
இன்னும்...எவ்வளவோ....

ஆயிரம் இருந்தும்...

ஐம்பது ஆயிரத்தின் இந்த வாழ்க்கையை விட
ஐனூறு ரூபாயின் அந்த வாழ்க்கை
என்றும் இனிமை...அருமை...பெருமை!

Thursday, July 28, 2011

என்ன இல்லை இந்த....என்ன வேண்டும் விளையாடலாம்...
மைதானம் அல்ல!
விளக்கங்கள் விரைவாய் கிடைக்கும்!
டிக்ஷ்னரி அல்ல!
படங்கள் பார்க்கலாம்
தியேட்டர் அல்ல!
பாடங்கள் படிக்கலாம்
பள்ளிக்கூடம் அல்ல!
இது செல் ஃபோன் அல்ல "வெல்" ஃபோன்!

ஊரில் இருந்துக்கொண்டு
இல்லை என்று சொல்லலாம்!
அருகில் நின்றுகொண்டே
அனைத்தையும் மறுக்கலாம்!
இது அலை பேசியல்ல பொய் பேசி!

சாவு வீட்டில் சடலம் தூக்கும்போது
"சஹானா...சாரல் தூவுதோ...பாடலும்"
கல்யாண வீட்டில் தாலி கட்டும்போது
"பெண்ணை நம்பாதே...உன்னை ஏமாற்றும்"
கோயிலுக்குள்...அர்ச்சனை நேரத்தில்
"நேத்து ரத்திரி..யம்மாவும்"
ரிங்டோன்களாய்...
இது செல் ஃபோன் அல்ல "கொல்" ஃபோன்!


கடவுளின் கருவரைக்குள்
காமக் களியாட்டம் நடத்திய
காஞ்சிபுரம் தேவநாதனும்..,
அலை பேசி ஊழலில்
அரசியல் வாதிகளையும்
ஆடவைத்த நீரா ராடியவும்..,
இது அலை பேசியல்ல "விலை" பேசி!

கடைசியாய் ஒன்று...
மிஸ்டு கால் கொடுக்கும் ஃபிகரும்..
இரத்தத்தில் ஏரிய சுகரும்...
....................................................

(இதை நீங்களே நிரப்பிக்கொள்ளுங்கள்).Sunday, July 24, 2011

ஆரம்பப் பள்ளி!
சார்...
நாலு பேரு அமெரிக்காவுலே டாக்டருங்க,
ஜப்பான்லே மூணு பேரு எங்ஜினியருங்க,
லண்டன்லே மூணு பேரு பிச்டி பண்றங்க,

ரெண்டு கலெக்டருங்க,
ஆறு மானேனஜருங்க,
மூணு மில் ஓனருங்க,
அரசாங்க வேலையிலே ஐம்பது பேர்,
தனியார் கம்பெனியிலே நிறய பேர்,

முக்கியமா...

ஐடி யிலே ஆயிரம் பேர்
ஃஃபேஸ் புக்கில் நூறுப்பேர்..
சொல்லிக்கொண்டே போகலாம்!

இப்படியெல்லாம்
நேற்று வரை பெருமையாக பேசப்பட்ட
எங்கள் பள்ளியில்...
இன்று நாலேப்பேர்...

ஒரு தலைமை ஆசிரியரும்,
எங்கள் பத்மா டீச்சரும்,மற்றும்..
ஒரு சதுணவு ஆயாவும்,
ஒரே ஒரு மாணவனும்!

எங்களுக்கு எல்லாம்
பதவியையும்,குடும்பங்களையும் தந்துவிட்டு..
அனாதை ஆனது என் பள்ளிக்கூடம்!

நாங்கள்...
இன்று கம்பீரமாய் நிற்கும்போது
தலை சாய்ந்து,பாழடைந்து இருக்கிறது
என் ஆரம்பப் பள்ளி!

முன்பெல்லாம்...
பள்ளியின் விளையாட்டு மைதானத்தில்
எங்கள் ஊர் பிள்ளைகள் விளையாடுவார்கள
இப்போது...
பள்ளியின் விளையாட்டு மைதானத்தில்
ஒரு ரேஷன் கடை...
ஒரு நூலகம்...
ஒரு வி ஏ ஓ ஆபீஸ்...
இன்னும் வரும்..!

ஆங்கிலமும்,கான்வென்டும்
ஆடம்பர கட்டிடங்களும்
மஞ்சள் நிற பள்ளி வாகனமும்
எங்கள்...
ஆரம்பப் பள்ளிக்கு ஆப்பு  வைத்தன!

இந்த வருடத்துடன்
அரசாங்கம் இந்த பள்ளியை
இழுத்து மூடப்போகிறதாம்
எங்கள் ஊரின்
இன்னொரு அடையாளம்
ஆங்கில மோகத்தால் அழிக்கப்படுகிறது!

என் கவலையெல்லாம்...
அடுத்த முறை ஊருக்குவரும்போது
என் மகனுக்கு காட்ட
ஆரம்பப் பள்ளியின் சுவடுகளாவது மிஞ்சுமா?

Wednesday, July 20, 2011

என்ன செய்கிறீர்கள்!

நல்லா டான்ஸ் ஆடுவோம்
நல்லா பாட்டு பாடுவோம்,
தினம் ஒரு கதை சொல்லுவோம்,
புதிய கார்டூன் படங்கள் பார்ப்போம்,
சினிமா படங்களும் பார்ப்போம்,
செடிகளுக்கு தண்ணீ ர் விடுவோம்,
வாரம் ஒரு  பிக்னிக் போவோம்,
வீட்டு கதைகள் அலசப்படும்,
மாட்டு சந்தைப்போல் அசைபோடப்படும்,
கணக்கு வாத்தியின் கடு கடுப்பு இனி இங்கில்லை,
தமிழ் வாத்தியின் உமிழ் நீர் தூறல் படுவதில்லை,
வரலாறு வாத்தி ஆங்கில வாத்திச்சியுடன் கசமுச,
தலைமை ஆசிரியரின் இன்றைய நிலைமை சரியில்லை,
வீட்டுப்பாடங்கள் இல்லாத புதிய உலகம்,
வார டெஸ்ட்டுகள் இல்லாத அதிசிய உலகம்!

புத்தக மூட்டை இல்லாத எங்கள் பைகள்,
காலையில் தூக்கம்,
மணியடிச்சா சோறு,
மத்தியானமும் தூக்கம்,
மாலை விளையாட்டு,
மறந்தும் கூட பாடமில்லை!

ஐய்யோ....
சும்மா இரு... சும்மா இருடா...
என்று கத்தும் ஆசிரியர்களுக்கு
இப்போதாவது  புரிந்திருக்கும்...
சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என்று!

சமச்சீர் கல்வியா?அமெச்சூர் கல்வியா?
அப்பா,அம்மாக்கள் கூட கலைஞர் டிவி நியூசில்,
வருமா?வராதா?

ஆக மொத்தம்...
அரசியல் வாதிகளின் அபரிமிதமான அன்பில்
சமச்சீர் கல்வி அந்தரத்தில் தத்தளிக்கிறது!

ஆறுதல்!

ஒவ்வொரு முறையும்
கடந்துப்போகும்போதும்
நடந்துப்போகும்போதும்
கவனிக்கிறேன்...


யாராவது ஒருவர்
ஏதோ சிந்தனையில்
உட்கார்ந்திருப்பார்கள்..


எங்கள்
ஊர் எல்லையில்
இத்தனை மனிதர்கள்...
கொட்டிய மனச்சுமைகளை
இன்னமும் தாங்கி கொண்டிருக்கிறது.


இந்த
கம்பீரமான
முகம் சுளிக்காத சுமைதாங்கி கல்!

Friday, July 15, 2011

ஞாபகம்!

எக்ஸாமில்
எண்பதுக்குமேல் வாங்கவில்லையென்று
என் மகனை பெல்ட்டால் அடிக்கும்போது...
நான்
இருபது மார்க் வாங்ககிய போதும் அடிக்காத அப்பா
என்
ஞாபகத்திற்க்கு வரவே இல்லை!

ஈழக்குரல்

சூரியன் கூட தினமும்
எங்களின் கஷ்டத்தை கண்டு
கண்ணை கசக்கிக்கொண்டுதான் விழிக்கிறது!

புதிதாய் துளிர் விடும்
தளிருக்கு தெரியாது
மக்கிப்போன தமிழனின் உடல்தான்
உரமாய் ஆனதென்று!

இங்கே...
மலரும் மல்லிகையின் மணத்தில் கூட
தமிழ் ஈழ
பிணத்தின் வாசனை!

ரோஜாக்களின் நிறங்களில்
எங்கள் போராளிகளின்
உதிரத்தின் சிவப்புச் சாயல்!

கடற்கரையில் ஒதுங்கும்
சங்குகளை காதில் வைத்தால்...
வீரமரணம் அடையும்போது எழுந்த வீரர்களின்
மரண ஓலங்கள்.

எங்கள் ஊரில்தான்
கழுகுகள் அதிகம்...
சொந்த நாட்டு அகதிகளை
கொத்தித்தின்ன வட்டமிடுகின்றன!

எல்லா ஊரிலும்
ஊருக்கு ஒதுக்குப்புறமாய் மாயானங்கள்...
சிங்கள தமிழர்கள் எங்கள் ஊரில் மட்டும்
மாயானத்துக்குள் எங்கள் ஊர்கள்!

தூர தேசத்து நாடுகள் எல்லாம்
இந்த...
அனாதை சிங்கள தமிழனுக்காக
கவலை கொள்கின்றனர்,குரல் கொடுக்கின்றனர்!
பக்கத்து நாட்டு சொந்த தமிழன் மட்டும்
ஐ பி ல்  பார்த்து அசதியாகிறான்!

எங்களை படைத்த பிரம்மனை விட
நாங்கள் பெரியவர்கள்!
மரணத்தின் தேதிகளை
மறக்காமல் வாசல்களில் குறித்துவைத்திருக்கிறோம்!

கடவுளே...கடவுளே...

எங்களின் ஆண்களின் விந்ததுக்கள்..
வீரியம் இழந்து போகட்டும்,
எங்களின் பெண்கள் மலடிகளாய் இருக்கட்டும்,
எங்களின் சந்ததிகள் இத்தோடு இறுதியாகட்டும்,
எங்களின் கர்மங்கள் எங்களோடு காலாவதியாகட்டும்,

இவையனைத்தும்...
புதிய தமிழ் ஈழம் மலரும் வரை!

Tuesday, July 12, 2011

அய்யோ பாவம்!

என்ன தவறு செய்தார்?
முச்சந்தி விநாயகர்...

பூட்டப்பட்ட கம்பிகளுக்குப் பின்னால்!

அந்தக்காலம்!

கல்யாணம் பண்ணிப்பார்..
வீட்டைக் கட்டிப்பார்...
அது அந்தக்காலம்.

சென்னையில்...
வாடகைக்கு வீட்டை தேடிப்பார்...
அங்கே வாழ்ந்துப்பார்..
இது இந்தக்காலம்!

பாதுகாப்பு!

போலீஸ் ஸ்டேஷன்
தண்ணீர் கேனில்...
சங்கிலியால் கட்டப்பட்ட
சில்வர் டம்ளர்!

Tuesday, July 5, 2011

கண்டிஷன்ஸ்!


சத்தமாய் பேசக்கூடாது..,
பல் தெரிய சிரிக்கக்கூடாது..,
சின்ன பசங்க விளையாடவே கூடாது..,
இரவு பத்து மணிக்குமேல் வரக்கூடாது..,
தண்ணி இல்லைன்னா மோட்டார் போடக்கூடாது..,
நண்பர்கள் யாரும் அடிக்கடி வரக்கூடாது..,
சொந்தக்காரர்கள் தலைக்காட்டக்கூடாது..,
வெளியில் துணி துவக்கக்கூடாது..,
துவைத்தாலும் வெளியில் காயப்போடக்கூடாது..,

இந்த கண்டிஷன்கள் எல்லாம்...
ஸ்கூலுக்கோ...ஹாஸ்டலுக்கோ...அல்ல!
வாத்தியாரோ...வார்டனோ..சொன்னதல்ல!

என்...
புது வீட்டு அவுஸ் ஓனர் சொன்னது!!!

Sunday, July 3, 2011

என்ன கிடைக்கும்?பத்தாயிரம் ரூபாயில் என்ன கிடைக்கும்?

ரெண்டு டச் ஸ்கிரீன் மொபைல் கிடைக்கும்
ரெண்டு மாசம் ஸ்கூல் ஃபீஸ் கட்டலாம்
மூணு மாசம் மளிகை வாங்கலாம்
அரை பவுன் நகை எடுக்கலாம்
பொண்டாட்டிக்கு 20 புடவை கொடுக்கலாம்
ஊட்டி,கேரளா..ஃஃபேமிலி டூர் போகலாம்
முன் பணம் செலுத்தி பைக்குக்கு ஓனர் ஆகலாம்

எல்லாம் சரிதான்!
சென்னையில்...
சிங்கிள் பெட்ரூம் வீடு கிடைக்குமா?

Saturday, July 2, 2011

எப்போதும் போல்!


கல்யாண நாள்!

புதிய புடவை...
முத்த மழை...

மனைவியுடன்
ஆனந்த பவனில் இரவு விருந்து!

அப்பாடா...
ரொம்ப நாள் கழித்து மனைவியுடன்,
நிறய பேச வேண்டும்...
நிறய கொஞ்ச வேண்டும்...
மனம் விட்டு பேசி மாதங்கள் ஆகின்றன,
இன்றாவது பேசி மகிழ வேண்டும்!

குளிர்சாதன ஹோட்டலில்
தனிமையில் நாங்கள்!

அவளிடம் பேச ஆரம்பித்தேன்...
அவளின் செல்ஃபோன் சிணுங்கியது...
அவள் பேச ஆரம்பித்தாள்...
என் செல்ஃபோனும் சிணுங்கியது...
நானும் பேச ஆரம்பித்தேன்...

அவள்...
அவள் நண்பியுடனும்!
நான்...
என் நண்பனுடனும்!...