Monday, December 5, 2011

கடலில் ஒரு கதை!

அவள்: வீட்டில்

மாமன் போயி பத்து  நாளாச்சி
மனசெல்லாம் செத்து ரணமாச்சி
கடல்தாயை நாளும் கேட்டாச்சி
தலையில் பூவும் வாடிப்போச்சி!

காத்திருக்க கவலையில்லை மாமாவே
சீக்கிரமா வந்து சேரு மாமாவே
ஞாபகம் இருக்கட்டும் மாமாவே
வயித்தே ஒதெக்கிரான் மாமாவே
உன்னெயே தேடுரான் மாமாவே
இன்னையோட ஆறு மாசம் மாமாவே!

போனவரெல்லாம் வந்தாச்சு மாமாவே
உன்னையே மட்டும் காணலெயே மாமாவே
புள்ளதாச்சி நான் இங்கே மாமாவே
புலம்புவது புரிகிறதா மாமாவே!

காவலுக்கு யாரும் இல்லே மாமாவே
சேதி சொல்ல யாறும் இல்லை மாமாவே
நிலா கிட்டே சொன்ன சேதி மாமாவே
நிஜமா உனக்கு சேரலையோ மாமாவே!

காதலிச்ச உன்னைத்தேடி மாமாவே
குடும்பத்தை உதறி வந்தேன் மாமாவே
கல்யாணம் மட்டும் வெற்றியல்ல மாமாவே
சாதிக்கணும் ஊருக்குள்ளே மாமாவே
தலைநிமிந்து நிக்கணும் என் அப்பாகிட்டே மாமாவே!

காத்து காத்து கலங்கி நிக்கறென் மாமா
பாத்து பாத்து தயங்கி ஏங்குறேன் ஆமா
மறக்காமே சீக்கிரமா வந்து சேரு மாமா
மத்தியான சாப்பாட்டுக்குள்ளே ஆமா!


இவன்:நடுக்கடலில்

உன் சிரிப்பு சத்தம் காதுக்குள்ளே இருக்கு
உன் மடிப்பு மச்சம் மனசுக்குள்ளே இருக்கு
பத்து மயில் தள்ளி நீ இருந்தாலும்
நித்த மயில் உன் நினப்பு  தாண்டி!

என் பேச்சே கேக்கலையே கட்டுமரம்
அலை பேச்சே கேட்டதடி பட்டமரம்
போன பாதை தெரியவில்லை எனக்கு
எப்படிட்தேன்  புரியவைப்பேன் உனக்கு?

நீ எனக்கு கொடுத்த முத்தம் காயலையே கண்ணே
கையில் கருவாட்டு வாசம் கூட போகலயே கண்ணே
வலை போட்டு பிடித்த மீன்கள் ஏராளம் கண்ணே
மூணு மாசம் நாம் வாழ தாராளம் கண்ணே!

வெயில் பட்டு  உடம்பும் கறுத்ததடி
மயில் நீ பட்டு மனசும் வெளுத்ததடி
நெடும்பயணம் போயி கசப்பாச்சுதடி
உன் மடித்தூக்கம் எனக்கு இனிப்பானதடி!

காலை சூரியன் வரும் முன்னே கண்ணே
வந்து நிப்பேன் உன் முன்னே பெண்ணே
கலங்காமல் காத்திரு என் கண்ணே
கட்டாயம் சாதிப்போம் என் பெண்ணே!


இன்று : இலங்கை ராணுவம்

சட்டெண்று வந்த கப்பல்
சிலோனின் கடற்படை கப்பல்
கச்ச தீவு எல்லைக்குள்ளே
வெச்ச காவு நெஞ்சின் மேலே

வலையை அறுத்து கட்டி எறிந்தான்
தலையை வெறுத்து எட்டி உதைத்தான்
மீன்களை எடுத்துக் கொண்டான்
வீண்பழி போட்டு வென்றான்!

ராவணன் துப்பாக்கிகள்
ராமன்களை அழித்தது
மீனவன் கண்ணீர் கடலில்
நம்மவன் செந்நீர் திடலில்

கடலில் தொடங்கும் இவன் வாழ்க்கை
கடலில் அடங்கும்  அது இயற்கை
பாதுகாப்பில்லாத இவன் பொழப்பு
பாதுகாப்பது யார் பொறுப்பு?


இனி : இந்தியா...

காத்திருக்கும் இவன் மனைவிக்கு
சேதி சொல்ல யார் இருக்கா?
நாதியற்ற மீனவன் இவனுக்கு
தேசம் இனி காவல் தருமா?
பாசம் காட்டி நடிக்கும் சிங்களனின்
வேஷம் காட்ட யார் இருக்கா?
நேசம் காட்ட நாம் இருந்தும்
தேசம் இன்னும் முழிக்கலையே!

உப்பு கரிப்பது கடலால் அல்ல
தப்பு நடக்குது கண்ணீரால் சொல்ல
குப்பத்து வீட்டு கதவுகள் திறந்தே இருக்கும்
தொலைந்தவர் மீண்டு வருவார் என்று!

விளையாட்டாய் நேரம் தொலைக்கும் தமிழா
மீனவர் வாழ்க்கை பாரம் உனக்கு எளிதா?
மறக்காதே இவன் உயிர் நமக்கு முக்கியம்
பொறுக்காதே இனி உயிர் காப்போம் நிச்சயம்!

Monday, November 28, 2011

புதிய இந்தியா!
"Levis Jeans" ஸும்,"Van Heusen"ஸும்
வந்ததால் - எங்களின்
பருத்தி காதி துணிகள்
பழசாய்ப் போயின!

"Netty" யும்,"Gown" னும்
வந்ததால் - எங்களின்
தாவணிகளும்,புடவைகளும்
தரமிழந்துப் போயின!

"Pizza" வும் "Burger" ரும்
வந்ததால் - எங்களின்
இட்லி,சப்பாத்திக்களை
சுவை இழக்க வைத்தன!

"Axe Perfume" உம் "Olay" க்களும்
வந்ததால் - எங்களின்
மஞ்சளும்,மருதாணிக்களும்
வாசம் இழந்துப் போயின!

"Valentine's Day, Friendship Day" க்களும்
வந்ததால் - எங்களின்
நட்புக்களும்,கல்யாணங்களும்
கோர்ட் படிகள் ஏறுகின்றன!

"Cricket"டும்,"Golf" பும்
வந்ததால் - எங்களின்
கபடியும்,மல்யுத்தமும்
களையிழந்துப் போயின!


"Pepsi" யும் "Coke" கும்
வந்ததால் - எங்களின்
கோலிசோடாவும், பொவண்டோவும்
தாகத்தில் துவண்டன.

"Wine" னும்,"Vodka" வும்
வந்ததால் - எங்களின்
கூழையும்,கள்ளையும்
குழித்தோண்டிப் புதைத்தன!

"Standard Charted, American Express Bank" கும்
வந்ததால் - எங்களின்
கூட்டுறவு வங்கிகள்
திவாலாகிப்போயின!

"Dollar , Euro" க்களும்
வந்ததால் - எங்களின்
மூளைகள் வெளிநாடுகளில்
அடமானத்திற்க்கு விற்கப்பட்டன!


இதோ....
"Walmart" டும், "Tesco" வும்
வருவதால் - எங்களின்,அண்ணாச்சி கடைகளும்
நாடார் அங்காடிகளும்,செட்டியார் வியாபாரங்களும்
உழைக்கும் விவசாயிகளும் கூட இனி...
அமெரிக்கர்களின் எகாதிபத்யத்தில்
மீண்டும் அடிமையாகப் போகிறார்கள்.

இருப்பதை விட்டுவிட்டு
பறப்பதற்கு ஆசைப்படும்
அரசியல் அதிகாரிகளுக்கு
மீனைவிட தூண்டில் பெரிதென்று
புரிவதெப்போது?

முடிந்துப்போன தீபாவளி என்பதெல்லாம்...!
முடிந்துப்போன தீபாவளி என்பதெல்லாம்...!


வருடத்தின் ஒரு நாளுக்காக - எங்கள்
வம்சத்தின் விலை - இழப்பு!

மிச்சமிருக்கும் தலைமுறையும் - அடுத்த
வருடத்திற்க்கு சுமை சுமக்கும் - சாகும்வரை!

விவரம் அறியாத வயதுகளில் - தெரிந்தே
விபத்தில் சிக்கிக்கொண்டோம்!

வினைகள் புரியாத வேதியியலில் - தினமும்
விழுந்து விளையாடிக்கொண்டோம்!

பாஸ்பரசும்,பொட்டாஷியமும் - எங்களுக்கு
பாதி நேரச் சாப்பாடு

அலுமினியமும்,சல்ஃபரும் - எங்களுக்கு
மீதி நேர பெரும்பாடு!

எங்கள் உடல்களில்...கெட்ட
அமிலங்களும் தாதுக்களும்
தஞ்சம் கொண்டு தாண்டவமாடும்.
ஊர் உலகம் கொண்டாட
உயிர்களும்,உறவுகளும்
நெஞ்சம் கொதிக்க திண்டாடும்!

வெட்ட வெயிலில்,பொட்டக் காட்டில்
பட்ட மரங்களின் கீழ்
கட்டு கட்டாய் பட்டாசுகளை
கட்டி வருகிறோம்

எட்ட நின்று பற்றவைக்கும் - அதனை
கட்டிக்கொண்டு வாழ்கிறோம்!

எங்கள்...
கருத்துப்போன உடலில்
தீக்காயம் பட்ட தோல்கள்
மறத்துப்போன மனதில்
விபத்தில் தொலைத்த கால்கள்!

முதலாளியின் சொந்த குத்தகையில்
தொலைந்த வாழ்க்கை
தொழிலாளிக்கு கந்து வட்டியில்
விழுந்தது இயற்கை!

தொழிற்ச்சாலை வெடி விபத்துகளில்
சொந்தங்களை இழந்தோம்
வேதியியல் வினை விபத்துகளில்
பந்தங்களை தொலைத்தோம்!

நாங்கள் இறந்தால்...
ஆரடி நிலம் தேவையில்லை
சிதறிப்போன உறுப்புக்களுக்கு
ஓரடி நிலம் போதும்!
உடல்களை எரியூட்ட
கட்டைகள் தேவையில்லை
உடல்களே வேதியியல் அடைத்த கட்டைகள்தான்!


நீங்கள் கொளுத்தி வெடிப்பது - வெறும்
காகிதமும் ரசாயணமும் மட்டுமல்ல - எங்கள்
உழைப்பையும் இழபபையும் தான்.
ஒவ்வொறு பட்டாசு சத்தங்களிளும் - இந்த
கொத்தடிமைகளின் வேதனை சப்தங்கள்!

நொடியில் வெடித்து கரியாக்கும்
அற்ப சந்தோஷத்திற்க்காக
விடியல் மறந்து உழைக்கும்
எங்கள் வாழ்க்கை விளங்கட்டும்!
விழுந்த ஓசோன் ஓட்டையும்
பெரிதாய் வளராமல் இருக்கட்டும்!

கடைசியில்...
வெடிப்பது வெடிகளை மட்டுமல்ல
தடுப்பது விபத்துக்களையும்தான்
கூடவே...
எங்களின் விபத்தில்லா வாழ்க்கையும்தான்!


Sunday, November 27, 2011

வாடகை வீடு!

வீட்டுச் சொந்த்தக்காரர்
வாடகை அக்ரிமெண்ட் போட்டார்...

நாலு குண்டு பல்ஃபுகளும்
மூன்று டியூப்லைட்டுகளும்
இரண்டு பஜாஜ் ஃபேனும்
ஒரு டியூப்லைட் பட்டையும் - மற்றும்
பாத்ரூம் கண்ணாடியும்
விட்டுச் செல்வதாய் எழுதினார்!

ஆனால்...
கடைசிவரை சொல்லவேயில்லை...
ஆறு எலிகளையும்
மூன்று பல்லிகளையும் - கூடவே...
நூறு கரப்பான்களையும் விட்டுச்சென்றதை!ப"சுமை"

தாத்தா நட்டுவிட்டுப்போன
மாங்கா மரம் காணவில்லை
ஊர் நடுவில் இருந்த நெல்லிமரம்
யார் நினைவிலும் இன்றில்லை

அரச மரத்தடியில் நடந்த
பஞ்சாயத்துக் கூட்டங்கள் - இன்று
மார்டன் மண்டபங்களில்!

ஊர் எல்லையில் சுமைதாங்கிக்கு
நிழல் சுகம் கொடுத்த
அரச மரத்தின் அடிச்சுவடே இல்லை!

ஊர் வரும் ஒத்தையடிப்பாதையில்
இருப்பக்கமிருந்த பசுமை மரக் காவலர்கள்
இருந்த இடம் தெரியவில்லை!

அய்யனார் கோயில் வேப்பமரமும்
வேரோடு ம்வெட்டப்பட்டுவிட்டதாம்.

ஊரிலிருந்த பறவைகள் எல்லாம்
கட்டாயம் இடமாற்றம் செய்யப்பட்டன

ஊர்க்குழந்தைகள் விளையாடிய மைதானங்க்களில்
குழந்தைக்களுக்குப் பதில் வாகனங்கள்  வட்டமிடுகின்றன.

மேய்ப்பான்கள் இல்லாத ஆடு, மாடுகள்
போஸ்ட்டர்களையும்,குப்பைத்தொட்டிகளையும்
பசிமறக்க அலசி மேய்கின்றன.
மரங்களில் கட்டப்பட்ட மாடுகள் எல்லாம் - இன்று
மின்சார கம்பங்க்களில் மண்டியிட்டு இருக்கின்றன.

கல்யாணங்களில் கூட
பிளாஸ்டிக் வாழைகளும்,மாவிலைகளும்
வாடகைக்கு வரவேற்க்கப்படுகின்றன.
சாமிக்குக்கூட காகித மாலைகள்
சாயம் போட்டு விற்கப்படுகின்றன.

மரங்களற்ற மலைகள் - நாளை
மண்சரிந்து  மடுவாகும்.
நீர் வற்றிய ஏரிகள் - விரைவில்
புரம் போக்காகி பட்டாக்களகும்.

கடைசியில்...
வானம் பார்த்த பூமியும்  - இனி
மானம் காக்க போராடும்!
பசுமை மறந்த ஆசாமியும் - இனி
வாழ்வை காக்க போராடுவான்.

யாரோ சொன்னார்கள்...
ஊருக்குள் லாரிகள் வந்தது - லோடுகளாய்
காய்கறிகளும், பசுமைகளும்
நகரத்திற்க்கு விற்கப்பட்டனர்!

ஊருக்குள் பஸ்கள் வந்த்து - அடிமாடுகளாய்
பட்டதாரிகளும்,விவசாயிகளும்
ஏற்றப்பட்டு ஊர்கடத்த்ப்பட்டனர்!

உலக மயமாக்கலும் நாகரிக மயமாக்கலும்
விட்டுவிட்டுப்போன சுமைகள் இவை,
ப"சுமை" மறந்த சுவடுகள் இவை!

Thursday, October 20, 2011

Amma @ Bangaluru Court


அப்பாவி!
அப்பாவி!

ஒவ்வொரு முறையும்
நானும் அவளும்...
சண்டை போடும்போதெல்லாம்
உடைவதென்னவோ
எங்கள் மனங்கள் அல்ல,
ஒரு தவறும் செய்யாத
என் வீட்டு டிவி ரிமோட்தான்!பயம்!
பயம்!

கண்களை
இமைப்பதற்குக் கூட கஷ்டமாய் இருக்கிறது
காரணம்...
என் கண்ணுக்குள்
குடியிருக்கும் என்னவளுக்கு
இருட்டென்றால் பயம்!

Wednesday, October 19, 2011

நிஜமும் நிழலும்!

ஓவியன் ஆகிய எனக்கும் (அட நம்புங்க!)
என் ஓவிய நண்பனுக்கும்
ஒரு போட்டி.

யாருடைய ஓவியங்கள் சிறந்ததென்று?
யாருடைய ஓவியங்கள் மக்களுக்கு பிடிக்கும் என்று!

ஒப்பந்தமும்,போட்டியும் இதுதான்...
"யாருடைய ஓவியத்தை
மக்கள் அதிக நேரம் பார்க்கிறார்களோ"
"யாருடைய ஓவியத்தை
அதிக நேரம் ரசிக்கிறார்களோ"
அவனே சிறந்த  ஓவியன்!
முடிவுக்கு வந்தோம்!

நான்...
கஷ்டப்பட்டு யோசித்து...
தூக்கம் கெட்டு
மூன்று மாதத்தில்
ரியலிஸ்டிக் ஓவியங்களை
ஓவியமாய் தீட்டினேன்!

பிச்சைக்கார பாட்டி,சைக்கிள் தள்ளும் கிழவன்
தெருவில் விளையாடும் அழுக்கு குழந்தை
திண்னை வீடு,மாடவீதி கோயில்
இரவு நிலா,இனிய காலை...
இப்படி ஒவ்வொன்றையும் அற்புதமாய் தீட்டினேன்!

கண்காட்சிக்கு வைத்தோம்
கூட்டம் திரண்டது
என் இதயம் மிரண்டது!

என் ஓவியங்களை விட நண்பனின் ஓவியங்களுக்கு
ரசிகர்கள் அதிகம்...கூட்டங்கள் அத்தனையும்
அவனிடத்தில்....அவன் ஓவியங்களுக்கு அருகில்!

கடைசியில் என் நண்பனே வென்றான்!
போட்டி விதிகளின் படி...
"இனி நான் ஓவியம் வரையவே கூடாது"

சோகமாய் இருந்த என்னிடம்
நண்பன் சொன்னான்..

இந்த மக்கள்...
"ஒன்றும் இல்லாத இடத்தில் ஏதோ இருப்பதாய்
ஆராய்ந்துக்கொண்டு  இருப்பார்கள்
புரியாத ஒன்றை புரிந்ததாய்
புன்னகைப்பார்கள்
சகலமும் அறிந்தவர்ப்போல்
சம்பாஷனையில் சிலிர்ப்பார்கள்"

மேலும் தொடர்ந்தான்...
மூன்று மாத உழைப்பில் வரைந்த உன் "ரியலிஸ்டிக்" ஓவியங்களைவிட
மூன்றே நாளில் வரைந்த
என் "மாடர்ன் ஆர்ட்" கிருக்கல்கள்
இந்த மதி கெட்ட மக்களுக்கு பிடித்திருக்கிறது என்றான்!

இப்போதுதான் எனக்குப் புரிந்தது
உள்ளதை உள்ளபடி காட்டினால்
மதிக்காது உலகம்
இல்லாததை உண்டென்று சொன்னால்
தடுக்காது உலகம்!


Tuesday, September 13, 2011

வட்டம்!


தொலைந்துப்போன மணித்துளிகளை
சுற்றி சுற்றி தேடும்
கடிகார முள்ளுக்குத் தெரியாது
வாழ்க்கை ஒரு வட்டம் என்று!


Saturday, September 3, 2011

பணக்காரன் ஆவது (ஆனது) எப்படி?


மிகப்பெரிய பணக்காரர்களை பார்க்கும்போதெல்லாம்
என்னுள்...ஆச்சர்யம்...ஆதங்கம்...கூடவே
கொஞ்சம் பெருமூச்சுடன் வரும் பொறாமை


நானும் நினைத்ததுண்டு...
அப்பன் காசில் வாங்கிய "ஆடி" காரில் வரும்
அவனைப் பார்த்தால்...
என் அப்பன் எனக்கு இளக்காரமாய் தெரிந்தான்!


பீசாவும் பர்கரும் தின்னும் அவனை கண்டால்
தயிர் சாதமும்,தொக்கும் எனக்கு குமட்டும்
இதை தின்பதற்க்கு  "பீ..."யை கூட திங்கலாம் எனத்தோன்றும்!


அவனின் ஒருநாள் பாக்கெட் மணி - எனக்கு
என் வீட்டின் மூன்று மாத மளிகை செலவு


அவனிடம் கேட்டே விட்டேன்...
எப்படி உன் அப்பன் கோடீசுவரன் ஆனார் என்று?


நக்கலாய் சிரித்தான்...ஏளனமாய் பார்த்தான்...
மெதுவாய் கொட்ட ஆரம்பித்தான்


தள்ளு வண்டியில் வளையல் விற்ற
அவன் அப்பன் "ச... ஸ்டோர்" கதையை...
கேளுங்கள்...நாளை உங்களுக்கும் உதவும் பாயிண்ட்டுகள்!
1. பணக்காரன் ஆகவேண்டுமானால்
முதலில் "குழிப்பறிக்க" கற்கவேண்டும்.


2. சொந்தப் பணம் இல்லாவிட்டலும்
ஊர்ப் பணத்தை இரட்டிப்பு ஆக்குவதாய்...
ஏலச்சீட்டில் ஏமாளிகளை சேர்த்து 
நம் பணமாய் சுருட்டத் தொடங்கவேண்டும்!


3.அரசியல் கதர் வேட்டி பெருசுகளுடன்
ஐக்கியமாகி அந்தப்புரங்களில் அலையவேண்டும்
பெரிய கும்பிடுகளுடன் பொக்கே கொடுத்து
பேனர்களில் போஸ் கொடுக்கவேண்டும்!


4. போலீஸ் மாமாக்களுடன் மல்லுக்கட்டி
மாமா வேலைகள் பார்க்கவேண்டும்
பொங்கல்,தீபாவளி நாட்களில்லெல்லாம்
அன்பளிப்பால் அவர்களை அமுக்கவேண்டும்!


5. சோற்றுக்கு வழியில்லாத கிராமத்து உழைப்பாளிகள்
சுப்பனையும்,குப்பனையும் குனியவைத்து கும்மியடித்து
வயல்,வரப்புகளை அடிமாட்டு விலைக்கு அதட்டி வாங்கி 
அடுக்கடுக்காய் அப்பார்ட்மெண்ட்டுகள் கட்ட வேண்டும்!


6. தங்கங்களையும்,கறுப்பு பணங்களையும்  
கொஞ்சமாய் கணக்கு காட்டி, வரி கட்டி
அவாலா கணக்கில் ஸ்விஸ் பேங்க்கில்
பினாமி பெயர்களில் பதுக்க வேண்டும்!


7. கும்பல் கும்பலாய் கொத்தடிமைகளை
குறைஞ்ச விலைக்கு ஊரில் வாங்கி 
இருபது மணி நேரம் வேலைக்கொடுத்து
உதிரங்கள் சுண்ட சுண்ட  உறுஞ்ச வெண்டும்!


8. ஊருக்கு ஒரு கிண்டர் கார்டன்,
டவுனுக்கு ஒரு கான்வெண்ட் ஸ்கூல்
மாவட்டத்துக்கு ஒரு பொறியியல் கல்லூரி
கல்வியை வியாபாரமாக்கத் திரியவேண்டும்!


9. ப்பார்கிங் இல்லாத நகைக்கடை
ஃபயர் எஃஸிட் இல்லாத துணிக்கடை
லிஃப்ட் இல்லாத மளிகைக்கடை
எஞ்சினியர் முடித்தவர்க்கு ஐடி கடை
இதனையும் லஞ்சம் கொடுத்து காக்கவேண்டும்!


10. இலவசமாய் அரசிடம் நிலம், நீர் வாங்கி
ஃபைவ் ஸ்டார் கணக்காய் ஹாஸ்பிடல் கட்டி
ஏழை பாழைகளுக்கு வைத்தியம் பார்ப்பதாய்
நம்பவைத்து டாக்டர் பட்டம் வாங்கவேண்டும்!


11. பத்துமாடி ஹோட்டல் ,கிளப் கட்டி
ஃபாரின் ஃபிகரை ரிசப்சனிஸ்ட் ஆக்கி
மறைமுகமாய் மாமா வேலைப்பார்த்து
ஆர்டர்களை அள்ள தெரியவேண்டும்!


12. நாளை திடீரென்று சிபிஐ ரெய்டு வந்தால்
இதயத்தில் இறுக்கமாய் வலி யென்று
பேச முடியாமல் வாயில் மாஸ்க்கைப் போட்டு
ஐசியு வில் அட்மிட் ஆகி நடிக்க வேண்டும்!


13. ஒன்றுக்கு மூன்றாய் கல்யாணம் செய்து
வெப்பாட்டிகளின் வயதுக்கு ஏற்ப
வரிசையாய் குழந்தைகள் பெற்று
குடும்ப சொத்துக்களை பிரித்து 
பாதுகாக்க தெரியவேண்டும்!


14. வருடம் ஒருமுறை யேனும் மேடைகளில்
கொடை வள்ளலாய் அரிதாரம் பூசி
மூணு கால் சைக்கிளும்,தையல் மிஷினும்
மானாவாரியாய் மக்களுக்கு கொடுத்து
போட்டோவில் கைகூப்பி சிரிக்கவேண்டும்
பத்திரிகை பக்கங்களில் பப்ளிசிட்டி பண்ணவேண்டும்!


15. அடுத்ததாய்...


அய்யோ...அய்யோ...நிறுத்துப்பா...
இனிப் பணக்காரர்களை பார்த்தால்
எனக்கு பொறாமை வராது.
அய்யோ பாவம் என்று கரிசனம் வரும்.
பணக்காரனாய் இருப்பதை விட
கூவத்தில் கூட குடும்பம் நடத்தலாம்!
Wednesday, August 31, 2011

"நாள்முழுதும் அன்பொழுகும்!"


"நாள்முழுதும் அன்பொழுகும்!"அவனை பழிக்கு பழி வாங்கணும்
அவள் குடும்பத்தை கூண்டோடு அழிக்கணும்
நீ நாசமாய் போகணும்
நீ நன்றி கெட்ட ஜென்மம்
அவளை அடெஞ்சே தீரணும்
எப்படியாவது நம்ம வலைக்குள் வீழ்த்தனும்
எப்படி வாழ்ந்திருவான்னு பாக்குரேன்
குழந்தையை கடத்தனும்
அஞ்சி லட்சம் பணத்தோட வா
ரெண்டுப்பேரும் ஓடிப்போயிடலாம்
விஷம் வைத்து கொன்னுடலாம்
காரை ஏத்தி சாவடிச்சுடலாம்
அவளை நடுத்தெருவுக்கு கொண்டுவருவேன் -
இது உன்மேல் ஆணை!
கொள்ளையடிக்கணும்,குழிப்பறிக்கணும்!
கடவுளே உனக்கு அறிவில்லையா? மனமில்லையா?
நீ வெறும் கல்! இனி உன்னை கும்பிடவே மாட்டேன்!
டாய்...நான் குடிச்சுட்டு பேசரேன்னு நினைக்காதே
குடிச்சாலும் ஸ்டெடியாய் இருக்கேன்...
வீட்டை எரிச்சிடுங்க, அழ வைக்கணும்
கத்தியால் குத்தணும், ரத்தம் பாக்காமே விடமாட்டேன்!
என் கற்பத்துக்கு நீதான் காரணம்
புருஷன் நான் புள்ளைக்கு அப்பன் அவனா?
அவளை கட்டிக்கிறேன்,உன்னை வெச்சிக்கிறேன்!

பொறுங்கள்....
பயந்துவிடாதீர்கள்...காதைப் பொத்தாதீர்கள்....
இவை அனைத்தும்...
நடு ரோட்டுச் சண்டைகள் அல்ல
தரங்கெட்ட மனிதர்களின் வார்த்தைகள் அல்ல!
கொடூர மனிதர்களின் அசிங்கப் பேச்சுக்கள் அல்ல!
திருடர்களின் திருட்டுப் பேச்சும் அல்ல!
தீவிரவாதிகளின் தியாகப் பேச்சும் அல்ல!

ஆமாம்....
காலை முதல் இரவு வரை
திங்கள் முதல் வெள்ளி வரை
நம் சின்னத்திரை டிவி சீரியல்களில்
மங்களமாய் வரும்
குடும்பக் குத்துவிளக்கு பெண்களும்,ஆண்களும்
பேசும் பெருவாரியான தமிழ் வசனங்கள்தான்!
வாழ்க தமிழ் குடும்பங்கள்! வளர்க தமிழ் தொண்டுகள்!


Tuesday, August 30, 2011

அந்த மூன்று பேரும் இந்த தூக்குக் கயிறும்!


பிறப்பு சொல்லாமல் வந்ததில்லை
இறப்பு சொல்லிவிட்டு வருவதில்லை
ஆனால்...
இவர்களுக்கு மறுப்பும்,இறப்பும்
முன் தேதியிட்ட கடிதங்களாய்!

யாருக்கு கிடைக்கும் இந்த
மரணத்தின் முன்னறிவிப்பு?

உண்ணா விரதத்திற்க்கே
ஊர் கூடி கோஷமிட்டவர்கள் - இங்கே
மண்ணாகும் மனிதர்களின்
தலை காக்க வரவில்லை!

தீவிர வாதிகளை மன்னிக்கும்
இந்த பாரத மண் - இந்த
பாமர வாதிகளை
பரிதவிக்க விட்டதேனோ?

இது வரை எனக்குப் பிடித்த
கறுப்பு நிறம்...
இனி வெறுப்பு தரும்!
இறக்குமதி செய்யப்பட்ட
நைலான் கயிரு...
இனி இறக்கும் வரை இறுக்கும்!

காலன் இங்கு நாள் குறித்தப்பின்
கடைசி ஆசை கேட்பதேனோ?
கடைசி ஆசை "வாழ்வதென்றால்"
கருணை மனுவும் கலைந்ததேனோ?

இந்திய சட்டத்தின் ஆணைப்படி
ஆயுள் தண்டனையாம் பதினான்கு வருடம்
அரசியல் உயர் மட்டத்தின் ஆணைப்படி
ஆயுள் தண்டனையாம் இருபது வருடம்
இலவச இணைப்பாய்...
இப்போது மரணதண்டனையும் கூட!

சிறைக்குள் எங்கள் சிறகுகள் சிறைப்பட்டது - கம்பி
திரைக்குள் எங்கள் மனங்கள் கரைப்பட்டது
நான்கு சுவற்றுக்குள் நாதியற்று கிடந்தோம் - நம்பி
இருக்கும் மனத்திற்க்குள் நாட்களை எண்ணி கழித்தோம்!

மெதுவாய் நொந்து சாவதைவிட
விரைவாய் வெந்து சாவதே மேல்
ஜடமாய் வாழ்க்கை வாழ்வதைவிட
திடமாய் உயிரை இழப்பது மேல்!

போலீசின் வீட்டுச் சண்டைக்கு - எங்கள்
முதுகுகள் லத்தியால் கவனிக்கப்படும்
சிபிஐயின் பதவி உயர்வுக்கு - எங்கள்
பெயர்கள் வட்டியாய் விற்கப்படும்!

சிறைக்குள் வந்துப் பாருங்கள்
சுவர்களில் எத்தனை கிருக்கல்கள்
தரைகளில் எத்தனை ஓவியங்கள் - எங்கள்
துக்கங்களை தாங்கி நிற்கும் தூண்கள் - எங்கள்
ஏக்கங்களை அணைத்து இருக்கும் கூரைகள்
அவை...கிருக்கல்கள் அல்ல
எங்கள் வாழ்க்கைப்போல் திசை தெரியா கோடுகள்
அவை ஓவியங்கள் அல்ல
எங்கள் வாழ்க்கையின் நிறமற்ற நிஜங்கள்!

ஊசலாடும் தூக்குக்கயிறுகள் எங்கள் உயிரை எடுக்கலாம்
நேசத்தோடு இருக்கும் நீங்கள் எங்கள் உயிரை காக்கலாம்
பயணித்த பாதி வாழ்க்கை தவறென்று புரிந்துக்கொண்டு- இனி
பயணிக்கும் மீதி வாழ்க்கை தவம் என்று அறிந்துக்கொண்டு
மன்னித்து எங்கள் மரணம் தடுத்தால் - இனி
மனம் திருந்தி வாழ்வை ஏற்ப்போம்
எங்கள் மூன்று பேரின் உயிர் தன்னில் - இனி
தமிழ் மண்ணின் மானம் காப்போம்!
 
 

Wednesday, August 24, 2011

"நேயர்களே இன்றைய நிகழ்ச்சிகளை..."எட்டு மணிக்கு பெட் காஃப்பி
குளிக்காமல் மார்னிங் டிஃபன்

ஒன்பது மணி முதல் பத்து மணி வரை
ஓலமன் மூப்பையாவின் - தமிழ் சினிமாவில்
"ஹிந்தி நடிகை பேசும் தமில் அலகா?" இல்லை
"தமிழ் நடிகை பேசும் தமிழ் அழகா?"
ஒரு மாபெரும் வெட்டி மன்றம்!

பத்து மணிமுதல் பதினோரு மணி வரை
கவர்ச்சி கன்னி "மகீலா" வுடன் ஒரு நாள்!

பதினோரு மணிக்கு
கதாநாயகிகளின் சுதந்திர தின நாள்
கோலாகல கொண்டாட்டங்கள்!

மதியம் பனிரெண்டு மணிக்கு
"என் பப்பியும் நானும்"
குண்டு நாயகி "கும்தாஜ்" தன் செல்ல நாயுடன்
வவ் வவ் கலகல கலக்கல் பேட்டி!

ஒரு மணிக்கு...
தனது சினிமா அனுபவங்களை
சிலாகித்து கூறுகிரார் சில்வர் ஸ்கிரீன்
சிரிப்பழகி சொத்தைப்ப்பல் "வினேகா"!

இரண்டு மணிக்கு...
இந்த ஆண்டின் இனிய பத்து வெத்துப்பாடல்கள்
மற்றும்
முதல் பத்து கண்ணியமற்ற காமெடி காட்சிகள்!

மாலை நான்கு மணிக்கு
சின்னத்திரை வரலாற்றில் முதன் முறையாக
திரைக்கு வந்து "ரிலீஸ் ஆகாத" புத்தம் புதிய
காதல் படம் "கல்யாணக் காதல்"!

இரவு ஏழு மணிக்கு
குத்தாட்ட நாயகிகளின் கும்மியாட்டம்
"நீயாட நானாட" குலுக்கல் நடனங்கள்!

எட்டு மணிக்கு..
"வெருமதி செல்வம்" சின்னத்திரை குடும்பமும்
"வெல்லமே" சின்னத்திரை குடும்பமும்
இணைந்து குழப்பும் சின்னத்திரை கொலையாட்டு!

ஒன்பது மணிக்கு.....

நேயர்களே...
இன்றைய சுதந்திர தின நிகழ்ச்சிகளை காணுங்கள் - நம்
இந்திய சுதந்திரத்தை பேணுங்கள்!

எல்லா...
விஷேஷ நாட்களிலும் எப்போதும்போல்
நம்ம வீட்டு டிவி பெட்டிகளில்
விதவிதமாய் இரைச்சலுடன்
டிஆர்பியில் முந்தும் புதுமை நிகழ்ச்சிகள்!

கடைசிவரை எந்த டிவியும் காட்டவில்லை
"சுதந்திரத்தைப் பற்றியோ,தியாகிகளைப் பற்றியோ".

சினிமா கவர்ச்சியில் சிதறிப்போனது
நம் சிந்தனை மட்டுமல்ல...
நம் நாட்டுப்பற்றும் தான்!


Saturday, August 20, 2011

ஓவியன் ஆவது எப்படி? How to become famous Artist?
ஓவியன் ஆவது எப்படி?
How to become famous Artist?

முதலில்...
இந்த கவிதைக்காக,
திறமையான உண்மை ஓவியர்கள் என்னை மன்னிக்கவும்.
(உங்களுக்கு தெரியும் உங்களின் ஓவியத் திறன் பற்றி!)

நிறைய ஆங்கில வார்த்தைகள் கலந்தமைக்கும் மன்னிக்கவும்.

ஓவியன் ஆக வேண்டும் என்று சென்னை வந்த நான்...
(படிப்பு வரவில்லை என்பது வேறு விஷயம்)

சென்னை ஓவியக்கலூரியில் படிப்பு...

கிராமத்து பழமான எனக்கு - சென்னை
நகரத்து புதுமை வாழ்க்கை - என்னை
குழந்தையாக்கி மெல்ல வளர்த்தது!

ராமராஜன் சட்டையும், முக்கால் பேண்ட்டும் போட்ட நான் - சென்னை
காமராஜ் ரோட்டிலும், மெரினா பீச்சிலும் மார்டனாய் திரிந்தேன்!

விவேக்கை போடா வெண்ணை என்று சொன்ன சென்னை
என்னை வாடா பண்ணை என்றது!

பாவாடை தாவணிகளை பார்த்து பழகிய எனக்கு
நகரத்து சுடிதாரும்,ஜீன்ஸும் நலமா என்றது!

சரி! விஷயத்துக்கு வருவோம்..
அதாங்க...ஓவியனான கதை....

பத்து ரூபா சப்பட்டை கலர் பாக்சும்
அஞ்சி ரூபா பிரஷும் தெரிந்த எனக்கு
பாட்டிலில் போஸ்ட்டர் கலரும்
பேஸ்ட்டில் வாட்டர் கலரும்
இருப்பது தெரியவில்லை!

வாட்டர் மேன் ஷீட் என்றார்கள்
கேன்வாஸ் போர்ட் என்றார்கள்
ச்சார்கோல் பென்சில் என்றார்கள்
ஆயில் பெயிண்ட் என்றார்கள்
அக்ரலிக் கலர் என்றார்கள்
புதிது புதிதாய் ஏதோதோ சொன்னவர்கள்...
கடைசி வரை எது "ஆர்ட்" என்று சொல்லவேயில்லை!

தாடியும் வைத்துப்பார்த்தேன்
குர்தா,ஜுப்பா போட்டுப்பார்த்தேன்
ஜோல்னாப்பை வாங்கிப் பார்த்தேன்
சோடாப்புட்டி கண்ணாடியுப் போட்டுப்பார்த்தேன்
ஆனால்....
ஓவியம் மட்டும் வரைய வரவில்லை!

இன்னொரு தாடிக்காரன் சொன்னதை நம்பி
ஆர்ட் கேலரிக்கெல்லாம் அலைந்து திரிந்து,
கன்னிமரா லைப்ரரியின் மூலை முடுக்குகளில்
மைக்கில் ஆஞ்சலோவையும்,பிக்காஸோவையும்
படித்து கரைத்து குடித்து கிழித்தாயிற்று..
ஆனாலும்...
ஓவியம் வரைய முடியவில்லை(வரவில்லை)!

கடைசியாய்...
ஓவியங்களை காப்பியடித்து வரைந்துப் பார்த்தேன்
ஸ்டிரேஸ் செய்து வரைந்துப் பார்த்தேன்
கடற்கரையில் சிந்தித்துப் பார்த்தேன்
மிட்நைட்டில் யோசித்துப் பார்த்தேன்
மூளையை(இருந்தாத்தானே!) கசக்கிப் பார்த்தேன்
அப்படியும் கூட ஓவியம் வரவில்லை!

வாத்தியாருக்கு டீ வாங்கிவந்தேன்
புரபசருக்கு வண்டி துடைத்தேன் - அவர்கள்
வரைவதை ஒளிந்து நின்றுப் பார்த்தேன்
ஏதோ... "டெக்நிக்" இருக்குதாமே...வரைவதற்க்கு
அவர்களிடமும் ஒன்றும் தேறவில்லை எனக்கு!

எப்படித்தான் ஓவியனாவது?
புரிய வில்லை எனக்கு!

பட்டிக்காட்டு மரமண்டை எனக்கு மார்டன் ஆர்ட் புரியவில்லை
வக்கில்லாத எனக்கு கண்டம்ப்ரரி ஆர்ட் தெரியவில்லை
அரைகுறையான எனக்கு அப்ஸ்டிராக்ட் ஆர்ட் ஏறவில்லை
கான்செப்ட்டே வராத எனக்கு கான்செப்ஸூவல் ஆர்ட் விளங்கவில்லை
மஸாஜ் தெரிந்த எனக்கு கொலாஜ் பெயிண்டிங் கிடைக்கவில்லை
ஐய்யோ....எப்படித்தான் ஓவியனாவது?

கடைசியாய்...
என்னுடைய சாகசங்களை
எலக்ஷன் டைமில் சுவர்களில் "தலைவர் வாழ்க"
டீக்கடையில் கலர்ஃபுல் போர்டுகள்
துணிக்கடை பேனர்களில் "ரம்பா,மீனா"..
மிகப்பெரிய விஷயம் - பெரிய தியேட்டர்
டாய்லெட்டில் "ஆண்கள்,பெண்கள்" வரைந்ததுதான்!
அத்தனையும்...
டிஜிடல் பேனர் வந்தபின் "வேலை காலி இல்லை"!

ஊரில் எல்லாம்...
மகன் பெரியப் படிப்பு படிப்பதாய் - அப்பா
கை நிறய சம்பளம் வாங்குவான் - அம்மா
என் கல்யாணம் அண்ணன் பணத்தில் - தங்கை
பைக்கு வாங்கி தருவதாய் நம்பி - தம்பி
இவர்களுக்கு தெரியாது...
ஓவியனாவது சும்மா லேசுப்பட்ட காரியமா?

அப்போதுதான்....
எனக்கு ஞானோதயம் கிடைத்தது..
மார்டன் ஆர்டிஸ்ட் "ம.ப.ஃபசைன்" வடிவில்!
அசிஸ்டண்ட்டாய் சேர்ந்த நான்...
அவரின் டெக்னிக்குகளை..கற்க தொடங்கினேன்!

இன்று...
நான் ஒரு மிகப்பெரிய ஓவியன்
ரெண்டு நேஷனல் அவார்ட்
ஒரு இண்டர் நேஷனல் அவார்ட்
ஆறு ஸ்டேட் அவார்ட்
லச்சக் கணக்கில் வருமானம்!

எப்படி சத்தியம்..எப்படி ஓவியனானேன்?

சென்னைய் குப்பைதொட்டிகளில் வாரியெடுத்த
வீணான பொருட்களை..வித்தியாசமாய் ஒட்டி
கண்ட்டெம்ப்ரரி ஆர்ட் ஆக்கினேன்!

கலர்களை கையில் அப்பி அசிங்கமாய்
கேன்வாசில் கிருக்கி மார்டன் ஆர்ட் வரைந்தேன்!

வித்தியாசமாய் யோசிப்பதாய்...வெட்கமின்றி
புரியாததை வரைந்து விஷுவல் ஆர்ட் ஆக்கினேன்!

மீந்துப்போன துருப்பிடித்த கம்பிகளையும்,தகடுகளையும்
வர்ணம் பூசி அப்ஸ்ட்ராக்ட் ஆர்ட் செய்தேன்!

இன்னமும்...
நான் வரைந்ததைப் ஆர்வமாய் பார்த்துக் கொண்டு
புரியாமல் நிற்கும் மக்கள் கூட்டம் இருக்கும் வரை
நான் என்றும் மிகப்பெரிய ஓவியன்தான்!
தமிழ்நாட்டு நிலைமை!
தமிழ்நாட்டில்...

வறுமை கோட்டின் கீழ் யாறும் இல்லையாம்!
நேற்று சட்டசபையில் அம்மா சொன்னார்கள்.

ஆமாம்...

நம்ம அம்மா சொன்னது உண்மைதான்...

அறிக்கை பேப்பரில் இருந்த
வறு"மை" யை அழித்துவிட்டார்களாம்!


Monday, August 15, 2011

சொதந்திரொ கிடெச்சது இன்னாத்துக்கு?நாலு வார்த்தை படிக்கக் கூட
நாப்பதாயிரம் கேக்குறான்
நாகரீகம் பேரைச்சொல்லி
புள்ளே படிப்பே விக்குறான்!

நஞ்ஞை புஞ்ஞை காடு கழணி
பிளாட்டு போட்டு விக்குறான்
நம்பி இருக்கும் குடும்பம் மொத்தம்
நடுத்தெருவிலே நிறுத்துறான்!

டிவி பொட்டி கிரைண்டர் காட்டி
இலவசமா மயக்குறான்
கரண்ட்டை கூட்டி வரியை கூட்டி
அப்புறமா கவுக்குறான்!

பார்க்கிங்கு பத்து ரூவா ஆயி போக அஞ்சி ரூவா
டிக்கெட்டு போட்டு அமுக்குறான்
சிகெரெட்டு ஆறு ரூவா புடிச்சாக்க நூறு ரூவா
அபராதம் கட்ட மிரட்டுறான்!

ஜாதி பேரை சொல்லிச்சொல்லி தீயைமூட்டி
ஜாக்கிரதை என்கிறான்
பொண்ணு ஒண்ணு காதலிச்சா காதலனோட
அவளை சேத்து பொதைக்கிறான்!

மத்திய மந்திரி ஆனா போதும் மறக்காமெ
கல்லா நல்லா கட்டுறான்
அஞ்ஜி வருசம் ஆண்ட பின்னே மினிமம்
ஆயிரம் கோடி சேக்குறான்!

கந்து வட்டி கும்பல் ஒண்ணு
வீடியோவோட அலையுது
அப்பன் கட்டும் வட்டிக்கு பொண்ணு
மானம் பறக்குது!

இங்கே உண்ணாவிரதம் இருந்தாத்தான்
ஊருகூட அசையுது
அண்ணா அசாரே வந்து நின்னாத்தான்
அர்த்தங்கூட புரியுது!

பெருசுங்கெல்லாம் பார்லிமெண்ட்டில்
கூட்டம் போட்டு கத்துது
பிரியாணி பஜ்ஜி தின்னுகிட்டு
குச்சியெடுத்து பல்லை குத்துது!

கோடி கோடி செலவு பண்ணி
தீவிரவாதியை பாது காக்குது
அப்பாவி மக்களை அம்போனு
பாதுகாக்காமெ சாவடிக்குது!

பெரிய முதலாளி மனசும் சேத்து
பணமும் கூட கறுப்புதான்!
நம்ம நாட்டில் ஊழல் லஞ்சம்
தலைவிரித்து ஆடுது!

பணமிருந்தா கோர்ட்டு கூட வாய்தா
வாய்தா கொடுக்குது
கோர்ட்டிலையே நீதிபதி முன்னே
கொலையும் கூட நடக்குது!

காய்கறியும் பருப்பும் இங்கே ராக்கெட்
விலைக்கு விக்குது
கஷ்டம் படும் ஏழை குடும்பம் எலியை
புடிச்சி திங்குது!

பேருக்குத்தான் இந்தியாவில் எல்லோரும்
அண்ணன் தம்பி என்கிறான்
நம்ம ஊரு தண்ணியை கூட அணையை
கட்டி தடுக்குறான்!

இதுக்குத்தானா வெள்ளைக்காரன்
சொதந்த்திரத்தை கொடுத்தது
அய்யா சாமீ நீயே வந்து
மறுபடியும் எங்களை ஆண்டிடு!


சந்தோஷ காந்தி!
கஷ்டப்பட்டு சம்பாதித்த வெள்ளைப் பணமோ
கொள்ளையடித்து சம்பாதித்த கறுப்புப் பணமோ

இரண்டிலுமே...

எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும் காந்தி!
Saturday, August 13, 2011

ஓடி விளையாடு பாப்பா!
சின்ன வயதுகளில்...

பெரியத்தெருக்களில்...
காலை வேளையில் வயிற்றில் கஞ்சி நிரம்பியவுடன்
அழுக்கு சட்டையும்,கிழிந்த கால்சட்டை ஜோப்பில்
தொங்கும் இருபது முப்பது கோலிகுண்டுகளுடன்
தூரத்தில் இருக்கும் கோலிகளை - நடுவிரலால்
நச்சென்று சரியாய் அடித்ததுண்டு!

மைதானத்தின் மத்தியில்...
வெட்டிப் பயபுளைக்கு லீவு தந்த மகிழ்ச்சியில்
சிறிய குழித்தோண்டி கையில் தாண்டாவுடன்
வறண்ட நாக்கை கீழ் மடக்கி எச்சில் ஒழுக
எதிரி எறிந்த கில்லியை குறிப்பார்த்து - அனலாய்
அறுபதடி அனாயாசமாய் அடித்ததுண்டு!

குறுக்கு சந்துகளில்...
உடைந்து போன கருத்த சிவப்பு ஓடுகளை
ஏழு அடுக்குகளாய் அவசரமாய் அழகாய் அடுக்கி
அந்தபக்கம் இந்தபக்கம் பார்க்கும்முன்
சாக்கடை நீர் தடவிய துணிப்பந்தில் - சரமாரியாய்
துரத்தி துரத்தி முதுகில் அடித்ததுண்டு!

வீட்டுத்திண்ணைகளில்...
மங்கிப்போன மாலை நேர மஞ்சள் வெயிலில்
அண்ணனும் தம்பியுமாய் சினிமா கதைப்பேசி
மூன்று புலிகளையும் பத்திரண்டு ஆடுகளையும்
ஆடுகள் புலிக்கு தண்ணிக்காட்ட - அதிசியமாய்
புலிகள் வெட்டப்பட்டு வீழ்ந்ததுண்டு!

கோயில் மண்டபத்தில்...
ஊர் கூட்டமெல்லாம் கலைந்து போன பின்னே
பொடிசுகள் எல்லாம் சாட் பூட் போட்டு கண்ணைக்கட்டி
பலப்பொடிசுகள் தூணுக்குப்பின்னே,நாற்காலிக்குள்ளே,
கைகால்களை மடக்கி சுருட்டி  மூச்சுவிடாமல் - மாயமாய்
மறைந்து மணிக்கணக்கில் மகிழ்ந்ததுண்டு!

அம்புட்டுத்தானா?
பாட்டியுடன் ஆடும் பல்லாங்குழி
பைசாவை கொண்டு பூவா தலையா
திருட்டுத்தனமாய் சீட்டுக்கட்டுடன் மங்காத்தா
கட்டுடல் காளைகள் விளையாடும் கபடி
கன்னியர்கள் விளையாடும் கோ கோ
இன்னும் எத்தனையோ...!

காலை முதல் மாலை வரை
பவர் ரேஞ்சரும்,கிரிக்கெட்டும்,WWF
பார்த்து குர்குரே தின்னும் என் மகனுக்கு
விளையாட்டும் விளையாட்டு தோழனும்
டிவி பெட்டி மட்டும்தான்!

Tuesday, August 9, 2011

காலம்!

"போங்கப்பா...நான் என்ன சின்ன பாப்பாவா?"-என்று

அன்பு மகள்  கேட்டபோதுதான் தெரிந்தது...

வாங்கி வந்த "மரப்பாச்சி" பொம்மைகளை

விளையாடும் வயதை தாண்டிவிட்டாள் என்று!


என்ன செய்வது...

எல்லா அப்பாக்களுக்கும் தங்கள் குழந்தைகள்

என்றும் சின்ன பாப்பாக்கள் தான்!Monday, August 8, 2011

விடுதிச் சாலை
அப்போதெல்லாம்...
கல்லூரி நேரம் முடிந்தவுடன்
அவசரமாய் விடுதி திரும்புவேன்!

எக்மோரில் இருந்து அடையாருக்கு..பேருந்தில்...
மத்தியான வேளை...என்றும் போல்...
உச்சி வெயில் மண்டையை பிளக்கும்!

அடையாரிலிருந்து தரமணி வரை...
நடை பயணம்...அமைதியாய்...

அப்போதெல்லாம்...
இரண்டு பக்கமும் மரங்கள் இருக்கும்
இனிதாய் நிழலும் தொடர்ந்து வரும்!

மரத்தின் கீழே...
மெல்லிய மணம் வீசும்
ஆடு மாடுகள் ஓய்வெடுக்கும்
புடவை தொட்டிலில் குழந்தை தூங்கும்
மரத்தின் இலைகள் சாமரம் வீசும்!

இளநீர்காரன் கடை போடுவான்-மத்தியானம்
மதீனா பிரியாணி விற்ப்பான்
மீன் விற்றவன் கணக்குப்பார்ப்பான்
மீசை கண்டெக்டர் அரசியலை ஏய்ப்பான்!

கால்நடைகளுடன்,கார்களும்
பைக்குகளும்,பறவைகளும் இளைப்பாரும்
புதிதாய் ஒரு காதல் ஜோடி
உண்மையாய் பல பொய் பேசி நடிக்கும்
குறவனின் குடும்பம் குடிசைப்போட்டு வாழும்!

மரத்தின் கீழே உற்றுப் பார்த்தால்
மல்லாக்க இரண்டு எறும்புகளும்
மத்தியான சாப்பாட்டையும் மறந்து
கிசு கிசுக்களை பேசி மகிழும்!

என் கால் மணிப்பயணம்
சட்டென்று காலியாகும்
எட்டடி  வந்தபின்னே
விடுதியும் எட்டிப்பார்க்கும்!

இப்போதெல்லாம்....

அதே பாதை...
இரண்டு பக்கமும் கட்டிடங்கள்
மரங்களுக்கு பதில் மின்சார கம்பங்கள்
புகைமூட்டமான ரோட்டில்...
பறவைகள் பரப்பதில்லை
ஓய்வெடுக்க இடமும் இல்லை
கார்ப்பரேஷன் குழியுண்டு
காதல் பேசும் ஜோடிகள் இல்லை
ஆளுயர இரும்பு கதவுகள் உண்டு - கூடவே
 உள்ளிருந்து இரும்பு மனங்களும் எட்டிப்பார்க்கும்!

பசுமையை தொலைத்த இந்த பயணம்
வெப்பத்தை கந்து வட்டிக்கு வாங்கி
அண்ணாந்து பார்த்தால்...
வெறிச்சோடிய வறட்டு வானம்
சூரியன் கூட நிழலைத்தேடி...

என் கால் மணிப்பயணம்-இப்போதெல்லாம்
அரைமணியாய்...அலைச்சலாய்..இரைச்சலாய்...Saturday, August 6, 2011

ஒரு கல் இரண்டு மாங்கா!

என் ஏழு வயது மகனுக்கு
ஆடிய பல்லை காட்டப்போனபோதுதான் தெரிந்தது...
பல் டாக்டரம்மா
பல்லை மட்டும் புடுங்குவதில்லை
ஃபீசையும்தான்!
Saturday, July 30, 2011

வெருங்கூத்து!
முன்பெல்லாம்..

முட்டுச்சந்து மேடையில்
முன்னூறு பேராவது கூடுவார்கள்!

கூட்டத்தை கண்டவுடன்
தூக்கம் கண்டிராத என் கண்கள்
துடிப்பாய் அகல விரியும்!

வாழ்க்கை சுமையெய் சுமக்கும் என் தோள்கள்
விரெய்ப்பாய் திமிரி நிமிரும்!

முன்னூறுப்பேரின் கைட்தட்டலில் என்
சோறு காணாத வெறும் வயிரு...
சுகம் நிரம்பி பொங்கும்!

அரிச்சந்திரனாய்,கட்டபொம்மனாய்,
ராமனாய்,பீமனாய்,வாமன்னாய்...
எத்தனையோ அவதாரங்கள்
எங்கள் தெருக்கூத்து நாடகத்தில்!

நாடகம் முடிந்த்தவுடன்
பிரசிடெண்ட்டும்,பெரிய பண்ணையும்
கசங்கிய ரூபாய் நோட்டுகளை
எண்ணிப்பார்க்காமல் திணிப்பார்கள்
அடுத்தமுறையும் அழைப்பார்கள்!

ஊர் மக்களின் கொடையும்,சன்மானமும்
பலநாள் எங்கள் மானம் காக்கும்.
சில நாள் எங்கள் பசியை போக்கும்!

இவையனைத்தும் நேற்றுவரை!

மேடையில் ரிக்கார்ட் டேன்ஸுகளும்
சின்னத்திரை டி வி பொட்டியும்
பெரியத்திரை கினிமா கொட்டகையும்
எங்கள் நாடக கலாச்சாரத்தை
நடு வீதியில் தவிக்கவிட்டனர்!

ஊர் சந்து பொந்தெல்லாம் நவ
நாகரிகம் நாட்டியமாடியதால்
பாட்டன் வளர்த்த பெருங்கலை - இன்று
பாதியில் விட்டனர்..,பெருங்கவலை!

கலையை கொடுத்த ஆண்டவன்
விலையை கொடுக்க மறந்தான்
மேடை ஏறிய எங்கள் கால்கள் - இன்று
சோடை போனது எதனாலே?

படித்திருந்தால் பாதை மாறியிருப்போம்
பிடித்திருந்தால் மானத்தை மறந்திருப்போம்
பழகியிருந்த்தால் பச்சையாய் பிழைத்திருப்போம்
மேடையில் நடிக்க தெரிந்த எங்களுக்கு
நிஜத்தில் நடிக்க தெரியவில்லை!

என் பிள்ளைகளிடம் சொல்லியிருக்கிறேன்
சவக்குழியில் என்னுடன்-என்
அரிதார பொட்டியையும் புதைக்கவேண்டும்-என்
அவதாரங்ககளையும் அழிக்கவேண்டும்!


வேலை என்ன?

முன்பெல்லாம்...

ஊரில்..,
எப்போதவது..எங்காவது நடக்கும்!

கடந்த நான்கு மாதத்தில்
ஆறு திருட்டுக்கள்...

அதில்...

அம்புஜம் மாமியின் நாலு பவுன் அட்டிகையும்,
ரங்கு அண்ணன் வீட்டு ரகசிய பெட்டியில் லட்சத்தையும்,
அண்ணாச்சிக் கடை இரும்பு கல்லாப்பெட்டியும்!

அப்புறம்...

ரெண்டு ஆட்டுக்குட்டிகளும்,சில கோழிகளும் கூட
திருடுப்போயின!

அடுத்த ஊர் பூசாரியும்,
கேரள ஆச்சாரியும்
ஏதேதோ சொல்லிவிட்டுப் போனார்கள்...!

ரெண்டு நாள் முன்னாடிக்கூட
மூணாவது தெரு நாலாவது வீட்டில் கொள்ளை..

நேற்று கூட..
கோயில் உண்டியலிலும் கை வைத்துவிட்டார்கள்!

போலீசும், மோப்ப நாயும்
விருந்து சாப்பிட்டுவிட்டுப் போனார்கள்
தேடிக்கொண்டிருப்பதாய் சொன்னார்கள்!

இன்று...

ஊர் எல்லையெய் கடந்து நடக்கும்போது
காவல் தெய்வம் கருப்பண்ண சாமியெய் காட்டி
ஆறு வயது மகள் கேட்டாள்
இவரோட வேலை என்னப்பா?

Friday, July 29, 2011

அது ஒரு கனாக்காலம்!


அப்போதெல்லாம்..

அப்பா அனுப்பும் ஐனூறு ரூபாயில்
என் நண்பர்கள் கடன் கேட்பார்கள்...
அதுவும் பத்து,இருபது...அதிக பட்சம் ஐம்பது ரூபாய்!

ஒன்றாம் தேதி வந்தவுடன்
போஸ்ட்மேன் அண்ணனின்
சைக்கிள் மணி சத்தத்துக்காக
கேட்டருகில் தவம் கிடப்போம்!

ஐனூறு ரூபாயை நாலு முறை
எச்சை தொட்டு எண்ணி கொடுப்பார்!
என்னை விட...
ஐந்து ரூபாய் டிப்சை வாங்க்கிக்கொண்டு
வெத்தலை வாயை குதப்பி சிரிப்பார்!

வாங்கிய கடனும்...
கொடுத்த கடனும் போக
24 ரூபாய் பஸ் பாஸும்
350 ரூபாய் மெஸ் ஃபீஸும்
கலரும் கேன்வாசும் அக்கவுண்டில் போக..
மீதமிருப்பது 50 ரூபாய்!

தினமும்...
காலை..மாலை...50 பைசா டீயும்...
ஞாயிறு மட்டும் ஸ்பெஷலாய் ரெண்டு பஜ்ஜியும்
என் பஜ்ஜெட்டில் அடக்கம்!

சொல்ல மறந்துவிடேன்...
மாதம் இருமுறை
அடையார் ஆனந்த பவனில்
13 ரூபாய் ஃபுல் மீல்ஸும் உண்டு!

இரும்பு கட்டிலில்,லொட லொட ஃபேனில்
பொன் வண்டு சோப்பின் பெட்ஷீட் மணத்தில்
சரோஜா தேவி புத்தகத்தை படித்துக்கொண்டே
ஸ்ரீதேவி,ராதாவை கனவில் கண்டோம்!

மொட்டை மாடியில்
சொந்த கதை,சோகக் கதைகளையும்,
பிஞ்சு காதல் கதைகளையும்
சினிமா கிசுகிசுக்களையும்
சலிக்காமல் பேசியிருக்கிறோம்!

பணம் அனுப்புமாறு 15 பைசா போஸ்ட்கார்டிலும்
மணியார்டர் வந்துவிட்டதாய் 50 பைசா இன்லெண்ட் லெட்டரும்
ஸ்பெஷல் ஃபீசுக்காக பக்கத்துவிட்டு பிபி ஃபோனும்
எங்களின் மாதா மாதம் அட்டவணையில் ஆஜர்!

சந்தோசமானலும் சரக்கடிப்போம்
சோகமானாலும் சரக்கடிப்போம்
காக்கைகளாய் கலந்திருப்போம்
யானைப்போல் சேர்ந்திருப்போம்
பிரச்சனை என்றால் தோள்கொடுப்போம்!

ரூம் மேட்டின் டீ ஷர்ட்டும்
சீனியரின் கேன்வாஸ் ஷூவும்
ஃபிகரை மடக்க கடன் வாங்கி
சோப்பு முதல் சீப்பு வரை
பகிர்ந்திருக்கிரோம்!மகிழ்ந்திருக்கிரோம்!

இப்போது...

நுனி நாக்கு ஆங்கிலமும்
சாஃப்ட்வேர் கம்பெனி வேலையும்
எடிம் கார்ட் டாலர் சம்பளமும்
கையில் கிரடிட் கார்டும்
காலில் ரிபொக் ஷூவும்
ஆபீஸ் போக ஏ சி காரும்
லன்ச்சில் பர்கரும்,செல்ஃபோனும்
டின்னருக்கு டான்ஸ் பாரும்
நன்பர்களுடன் பேச ஸ்க்ய்பியும்
போட்டோக்களுக்கு ஃபேஸ் புக்கும்
இன்னும்...எவ்வளவோ....

ஆயிரம் இருந்தும்...

ஐம்பது ஆயிரத்தின் இந்த வாழ்க்கையை விட
ஐனூறு ரூபாயின் அந்த வாழ்க்கை
என்றும் இனிமை...அருமை...பெருமை!

Thursday, July 28, 2011

என்ன இல்லை இந்த....என்ன வேண்டும் விளையாடலாம்...
மைதானம் அல்ல!
விளக்கங்கள் விரைவாய் கிடைக்கும்!
டிக்ஷ்னரி அல்ல!
படங்கள் பார்க்கலாம்
தியேட்டர் அல்ல!
பாடங்கள் படிக்கலாம்
பள்ளிக்கூடம் அல்ல!
இது செல் ஃபோன் அல்ல "வெல்" ஃபோன்!

ஊரில் இருந்துக்கொண்டு
இல்லை என்று சொல்லலாம்!
அருகில் நின்றுகொண்டே
அனைத்தையும் மறுக்கலாம்!
இது அலை பேசியல்ல பொய் பேசி!

சாவு வீட்டில் சடலம் தூக்கும்போது
"சஹானா...சாரல் தூவுதோ...பாடலும்"
கல்யாண வீட்டில் தாலி கட்டும்போது
"பெண்ணை நம்பாதே...உன்னை ஏமாற்றும்"
கோயிலுக்குள்...அர்ச்சனை நேரத்தில்
"நேத்து ரத்திரி..யம்மாவும்"
ரிங்டோன்களாய்...
இது செல் ஃபோன் அல்ல "கொல்" ஃபோன்!


கடவுளின் கருவரைக்குள்
காமக் களியாட்டம் நடத்திய
காஞ்சிபுரம் தேவநாதனும்..,
அலை பேசி ஊழலில்
அரசியல் வாதிகளையும்
ஆடவைத்த நீரா ராடியவும்..,
இது அலை பேசியல்ல "விலை" பேசி!

கடைசியாய் ஒன்று...
மிஸ்டு கால் கொடுக்கும் ஃபிகரும்..
இரத்தத்தில் ஏரிய சுகரும்...
....................................................

(இதை நீங்களே நிரப்பிக்கொள்ளுங்கள்).Sunday, July 24, 2011

ஆரம்பப் பள்ளி!
சார்...
நாலு பேரு அமெரிக்காவுலே டாக்டருங்க,
ஜப்பான்லே மூணு பேரு எங்ஜினியருங்க,
லண்டன்லே மூணு பேரு பிச்டி பண்றங்க,

ரெண்டு கலெக்டருங்க,
ஆறு மானேனஜருங்க,
மூணு மில் ஓனருங்க,
அரசாங்க வேலையிலே ஐம்பது பேர்,
தனியார் கம்பெனியிலே நிறய பேர்,

முக்கியமா...

ஐடி யிலே ஆயிரம் பேர்
ஃஃபேஸ் புக்கில் நூறுப்பேர்..
சொல்லிக்கொண்டே போகலாம்!

இப்படியெல்லாம்
நேற்று வரை பெருமையாக பேசப்பட்ட
எங்கள் பள்ளியில்...
இன்று நாலேப்பேர்...

ஒரு தலைமை ஆசிரியரும்,
எங்கள் பத்மா டீச்சரும்,மற்றும்..
ஒரு சதுணவு ஆயாவும்,
ஒரே ஒரு மாணவனும்!

எங்களுக்கு எல்லாம்
பதவியையும்,குடும்பங்களையும் தந்துவிட்டு..
அனாதை ஆனது என் பள்ளிக்கூடம்!

நாங்கள்...
இன்று கம்பீரமாய் நிற்கும்போது
தலை சாய்ந்து,பாழடைந்து இருக்கிறது
என் ஆரம்பப் பள்ளி!

முன்பெல்லாம்...
பள்ளியின் விளையாட்டு மைதானத்தில்
எங்கள் ஊர் பிள்ளைகள் விளையாடுவார்கள
இப்போது...
பள்ளியின் விளையாட்டு மைதானத்தில்
ஒரு ரேஷன் கடை...
ஒரு நூலகம்...
ஒரு வி ஏ ஓ ஆபீஸ்...
இன்னும் வரும்..!

ஆங்கிலமும்,கான்வென்டும்
ஆடம்பர கட்டிடங்களும்
மஞ்சள் நிற பள்ளி வாகனமும்
எங்கள்...
ஆரம்பப் பள்ளிக்கு ஆப்பு  வைத்தன!

இந்த வருடத்துடன்
அரசாங்கம் இந்த பள்ளியை
இழுத்து மூடப்போகிறதாம்
எங்கள் ஊரின்
இன்னொரு அடையாளம்
ஆங்கில மோகத்தால் அழிக்கப்படுகிறது!

என் கவலையெல்லாம்...
அடுத்த முறை ஊருக்குவரும்போது
என் மகனுக்கு காட்ட
ஆரம்பப் பள்ளியின் சுவடுகளாவது மிஞ்சுமா?

Wednesday, July 20, 2011

என்ன செய்கிறீர்கள்!

நல்லா டான்ஸ் ஆடுவோம்
நல்லா பாட்டு பாடுவோம்,
தினம் ஒரு கதை சொல்லுவோம்,
புதிய கார்டூன் படங்கள் பார்ப்போம்,
சினிமா படங்களும் பார்ப்போம்,
செடிகளுக்கு தண்ணீ ர் விடுவோம்,
வாரம் ஒரு  பிக்னிக் போவோம்,
வீட்டு கதைகள் அலசப்படும்,
மாட்டு சந்தைப்போல் அசைபோடப்படும்,
கணக்கு வாத்தியின் கடு கடுப்பு இனி இங்கில்லை,
தமிழ் வாத்தியின் உமிழ் நீர் தூறல் படுவதில்லை,
வரலாறு வாத்தி ஆங்கில வாத்திச்சியுடன் கசமுச,
தலைமை ஆசிரியரின் இன்றைய நிலைமை சரியில்லை,
வீட்டுப்பாடங்கள் இல்லாத புதிய உலகம்,
வார டெஸ்ட்டுகள் இல்லாத அதிசிய உலகம்!

புத்தக மூட்டை இல்லாத எங்கள் பைகள்,
காலையில் தூக்கம்,
மணியடிச்சா சோறு,
மத்தியானமும் தூக்கம்,
மாலை விளையாட்டு,
மறந்தும் கூட பாடமில்லை!

ஐய்யோ....
சும்மா இரு... சும்மா இருடா...
என்று கத்தும் ஆசிரியர்களுக்கு
இப்போதாவது  புரிந்திருக்கும்...
சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என்று!

சமச்சீர் கல்வியா?அமெச்சூர் கல்வியா?
அப்பா,அம்மாக்கள் கூட கலைஞர் டிவி நியூசில்,
வருமா?வராதா?

ஆக மொத்தம்...
அரசியல் வாதிகளின் அபரிமிதமான அன்பில்
சமச்சீர் கல்வி அந்தரத்தில் தத்தளிக்கிறது!

ஆறுதல்!

ஒவ்வொரு முறையும்
கடந்துப்போகும்போதும்
நடந்துப்போகும்போதும்
கவனிக்கிறேன்...


யாராவது ஒருவர்
ஏதோ சிந்தனையில்
உட்கார்ந்திருப்பார்கள்..


எங்கள்
ஊர் எல்லையில்
இத்தனை மனிதர்கள்...
கொட்டிய மனச்சுமைகளை
இன்னமும் தாங்கி கொண்டிருக்கிறது.


இந்த
கம்பீரமான
முகம் சுளிக்காத சுமைதாங்கி கல்!

Friday, July 15, 2011

ஞாபகம்!

எக்ஸாமில்
எண்பதுக்குமேல் வாங்கவில்லையென்று
என் மகனை பெல்ட்டால் அடிக்கும்போது...
நான்
இருபது மார்க் வாங்ககிய போதும் அடிக்காத அப்பா
என்
ஞாபகத்திற்க்கு வரவே இல்லை!

ஈழக்குரல்

சூரியன் கூட தினமும்
எங்களின் கஷ்டத்தை கண்டு
கண்ணை கசக்கிக்கொண்டுதான் விழிக்கிறது!

புதிதாய் துளிர் விடும்
தளிருக்கு தெரியாது
மக்கிப்போன தமிழனின் உடல்தான்
உரமாய் ஆனதென்று!

இங்கே...
மலரும் மல்லிகையின் மணத்தில் கூட
தமிழ் ஈழ
பிணத்தின் வாசனை!

ரோஜாக்களின் நிறங்களில்
எங்கள் போராளிகளின்
உதிரத்தின் சிவப்புச் சாயல்!

கடற்கரையில் ஒதுங்கும்
சங்குகளை காதில் வைத்தால்...
வீரமரணம் அடையும்போது எழுந்த வீரர்களின்
மரண ஓலங்கள்.

எங்கள் ஊரில்தான்
கழுகுகள் அதிகம்...
சொந்த நாட்டு அகதிகளை
கொத்தித்தின்ன வட்டமிடுகின்றன!

எல்லா ஊரிலும்
ஊருக்கு ஒதுக்குப்புறமாய் மாயானங்கள்...
சிங்கள தமிழர்கள் எங்கள் ஊரில் மட்டும்
மாயானத்துக்குள் எங்கள் ஊர்கள்!

தூர தேசத்து நாடுகள் எல்லாம்
இந்த...
அனாதை சிங்கள தமிழனுக்காக
கவலை கொள்கின்றனர்,குரல் கொடுக்கின்றனர்!
பக்கத்து நாட்டு சொந்த தமிழன் மட்டும்
ஐ பி ல்  பார்த்து அசதியாகிறான்!

எங்களை படைத்த பிரம்மனை விட
நாங்கள் பெரியவர்கள்!
மரணத்தின் தேதிகளை
மறக்காமல் வாசல்களில் குறித்துவைத்திருக்கிறோம்!

கடவுளே...கடவுளே...

எங்களின் ஆண்களின் விந்ததுக்கள்..
வீரியம் இழந்து போகட்டும்,
எங்களின் பெண்கள் மலடிகளாய் இருக்கட்டும்,
எங்களின் சந்ததிகள் இத்தோடு இறுதியாகட்டும்,
எங்களின் கர்மங்கள் எங்களோடு காலாவதியாகட்டும்,

இவையனைத்தும்...
புதிய தமிழ் ஈழம் மலரும் வரை!

Tuesday, July 12, 2011

அய்யோ பாவம்!

என்ன தவறு செய்தார்?
முச்சந்தி விநாயகர்...

பூட்டப்பட்ட கம்பிகளுக்குப் பின்னால்!

அந்தக்காலம்!

கல்யாணம் பண்ணிப்பார்..
வீட்டைக் கட்டிப்பார்...
அது அந்தக்காலம்.

சென்னையில்...
வாடகைக்கு வீட்டை தேடிப்பார்...
அங்கே வாழ்ந்துப்பார்..
இது இந்தக்காலம்!

பாதுகாப்பு!

போலீஸ் ஸ்டேஷன்
தண்ணீர் கேனில்...
சங்கிலியால் கட்டப்பட்ட
சில்வர் டம்ளர்!

Tuesday, July 5, 2011

கண்டிஷன்ஸ்!


சத்தமாய் பேசக்கூடாது..,
பல் தெரிய சிரிக்கக்கூடாது..,
சின்ன பசங்க விளையாடவே கூடாது..,
இரவு பத்து மணிக்குமேல் வரக்கூடாது..,
தண்ணி இல்லைன்னா மோட்டார் போடக்கூடாது..,
நண்பர்கள் யாரும் அடிக்கடி வரக்கூடாது..,
சொந்தக்காரர்கள் தலைக்காட்டக்கூடாது..,
வெளியில் துணி துவக்கக்கூடாது..,
துவைத்தாலும் வெளியில் காயப்போடக்கூடாது..,

இந்த கண்டிஷன்கள் எல்லாம்...
ஸ்கூலுக்கோ...ஹாஸ்டலுக்கோ...அல்ல!
வாத்தியாரோ...வார்டனோ..சொன்னதல்ல!

என்...
புது வீட்டு அவுஸ் ஓனர் சொன்னது!!!

Sunday, July 3, 2011

என்ன கிடைக்கும்?பத்தாயிரம் ரூபாயில் என்ன கிடைக்கும்?

ரெண்டு டச் ஸ்கிரீன் மொபைல் கிடைக்கும்
ரெண்டு மாசம் ஸ்கூல் ஃபீஸ் கட்டலாம்
மூணு மாசம் மளிகை வாங்கலாம்
அரை பவுன் நகை எடுக்கலாம்
பொண்டாட்டிக்கு 20 புடவை கொடுக்கலாம்
ஊட்டி,கேரளா..ஃஃபேமிலி டூர் போகலாம்
முன் பணம் செலுத்தி பைக்குக்கு ஓனர் ஆகலாம்

எல்லாம் சரிதான்!
சென்னையில்...
சிங்கிள் பெட்ரூம் வீடு கிடைக்குமா?

Saturday, July 2, 2011

எப்போதும் போல்!


கல்யாண நாள்!

புதிய புடவை...
முத்த மழை...

மனைவியுடன்
ஆனந்த பவனில் இரவு விருந்து!

அப்பாடா...
ரொம்ப நாள் கழித்து மனைவியுடன்,
நிறய பேச வேண்டும்...
நிறய கொஞ்ச வேண்டும்...
மனம் விட்டு பேசி மாதங்கள் ஆகின்றன,
இன்றாவது பேசி மகிழ வேண்டும்!

குளிர்சாதன ஹோட்டலில்
தனிமையில் நாங்கள்!

அவளிடம் பேச ஆரம்பித்தேன்...
அவளின் செல்ஃபோன் சிணுங்கியது...
அவள் பேச ஆரம்பித்தாள்...
என் செல்ஃபோனும் சிணுங்கியது...
நானும் பேச ஆரம்பித்தேன்...

அவள்...
அவள் நண்பியுடனும்!
நான்...
என் நண்பனுடனும்!...


Thursday, June 23, 2011

போட்டி

குப்பைத் தொட்டியின்
எச்சில் இலைக்கு
போட்டி போட
பத்துக் கைகள்...

நல்ல வேளை...

ஐந்து வயிறுகள்தான்.

கடைசி யாத்திரை

குதறித் தின்னும்
புலிகள்...

சமயம் பார்த்து வட்டமிடும்
கழுகுகள்...

மிச்சம் வைக்காத
நரிகள்...

அழகிய மானின்
கடைசி யாத்திரை...

Tuesday, June 21, 2011

வாங்க க்ரிக்கெட் விளையாடலாம்!


வாங்க க்ரிக்கெட் விளையாடலாம்!


பெரியவநானால் என்ன ஆவாய்?
நான் சச்சின் டெண்டுல்கர் மாதிரி ஆவேன்!

சின்ன வயசு முதல்
கிரிக்கெட் என்றால் எனக்கு உயிர்.

பள்ளிக்கு கட் அடிதுவிட்டு பக்கத்து வீட்டு டிவியில்
க்ரிக்கெட் பார்திருக்கிறேன்.

ஓசியில் வாங்கிய பேப்பரில் கிரிக்கெட் படங்களை
வெட்டி நோட்புக்கில் ஒட்டியிருக்கிறேன்.

வீட்டு சுவர்களில் என் ஆஸ்தான வீரர்களை
சோற்றை கொண்டு ஒட்டி ரசித்திருக்கிறேன்.

பொங்கல் பண்டிகையில்...
புதுத்துணிக்கு பதிலாக க்ரிக்கெட் மட்டை வாங்கி
மகிழ்திருக்கிறேன்.

எங்களின் ஃபேமிலி ஃபோட்டோவில்
அப்பா,அம்மா,தங்கையுடன்
என் க்ரிக்கெட் மட்டையும்...உண்டு.

காயம் பட்ட டெண்டுல்கருக்காக
சர்ச்சில் அழுதிருக்கிறேன்...
ஏன்...
முண்டக்கண்ணி யம்மனுக்கு கூட
கூழ் ஊத்தியிருக்கிறேன்.

ஆனால்...
இன்று நானும் ஒரு க்ரிக்கெட் வீரன்.

ஸ்கூலில் விளையாடி...
ஊரில் விளையாடி...
யுனிவெர்சிடியில் விளையாடி..
ரஞ்சிவரை...வந்துவிட்டேன்.

நாளை தமிழ்நாடு ரஞ்சி செலக்க்ஷன்...!

எனக்காக...
பைக்கை விற்ற அப்பாவுக்காக...
கோச்சிங் செலவுக்காக
காலேஜை கை கழுவிய தங்கைக்காக...
தாலியை அடகுவைத்து
மஞ்ஞள் கயிருடன் இருக்கும் அம்மாவுக்காக..
நான்...
பெரிய ப்ளேயராகணும்.

ஆறு போட்டிகளில்...
மூன்று செஞ்சுரி...
பனிரெண்டு விக்கெட்டுகள்...
ஆறு கேட்ச்சுகள் கூட...

எல்லாரும் சொன்னார்கள்
ரஞ்சி டீமில் நான் இருப்பேன் என்று.

இன்று...
என் கனவுகள் கலைந்து...
கானல் நீரானது க்ரிக்கெட்.

எல்லாத் தகுதிகள் இருந்தும்...
ஆண்டனி என்றழைக்கும் என்னைவிட...
சுமாராக ஆடும்
ராமநாத ஐயருக்கு போனது வாய்ப்பு.

இப்போதுதான் புரிகிறது...
முன்பெல்லாம்
என் முதுகுப்பக்கத்தோளை அன்பாய் தட்டிக்கொடுத்தது
என் திறமைக்காக அல்ல...
வெள்ளை கயிறுக்காகத்தான் என்று.

அடுத்த ஜன்மத்திலாவது
சென்னைக்கு விளையாட
பார்ப்பனராய் பிறக்கவேண்டும்!
Friday, May 27, 2011

எல்லாம் முடிந்தது!


எல்லாம் முடிந்தது!
சஸ்பென்ஸ் உடைந்தது!

மிக்சியா? கிரைண்டரா?
தங்கமா? லேப்டாப்பா?

இல்லை...
ஃப்ஃபேனா? அரிசியா?
சமச்சீர் கல்வியா? இல்லையா?

ஓமந்தூரா? கோட்டையா?
அரசு கேபிளா? காங்கிரசுக்கு ஆதரவா?

கனிமொழிக்கு...
ஜெயிலா? பெயிலா?

இனி எல்லாம் தொடரும்...

ஆக மொத்தம்
1200 கோடி ஓமந்தூர் மக்கள் வரிப்பணம்
400 கோடி சமச்சீர் புத்தகங்கள் அச்சிட்ட நம்ம பணம்
கோட்டையை புதுப்பிக்க மக்கள் பணம்!

ஆனால்...
ஒன்று மட்டும் நிச்சயம்
தமிழ் நாட்டு மக்கள்
பெரிய திருடனை விட்டுவிட்டு
சின்ன திருடனை தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள்.

Wednesday, May 11, 2011

அரசியல்


அரசியல்

ரொம்ப நாளாக எனக்கு புரியவில்லை...
"குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவது" என்பது என்னவென்று?
இப்போது புரிந்தது!
ராகுல் காந்தியின் "உத்தர பிரதேச" உண்ணா விரதத்தை பார்த்தபோது!

Thursday, May 5, 2011

அரசியல் நிலவரம்!இங்கே...

ராஜாவின் "ராஜா"ங்கம் அடங்கி போனது.
கனிமொழிக்கு இனி "சனி"மொழி
அழகிரிக்கு மதுரையில் இல்லை "கிரி"வலம்
தளபதிக்கு இனி "தலை"வலி...
கருணாநிதிக்கு..."நிதி"யால் ப்ரச்சினை!

அங்கே...
ஜெயலலிதா கொடநாட்டால்..."பய" லலிதா!
காமெடி பீஸால் கலங்கிப்போன விஜயகாந்த்...

எல்லாம் சரிதான்...
13ம் தேதி வந்தால் தெரியும்...
உண்மையான காமெடி பீஸ் மக்களா...இவர்களா?

கிடைக்கட்டும்!

பத்து மணி வரை தூக்கம்
ஆறு மணி வரை வேலை
இம்சை இல்லாத முதலாளி
நச்சரிக்காத மனைவி
அடம்பிடிக்காத மகன்
தினமும் பார்ட்டி கொடுக்கும் நண்பர்கள்
ஃபேஸ்புக் நண்பிகள்
இந்த தமிழ் புத்தாண்டு இவை அனைத்தும்
உங்களுக்கு கிடைக்கட்டும்.

ஹசாரே!

அரசியல் சாக்கடையில்
கொத்தி தின்னும் கழுகுகள்
பண வெறி பண்றிகள்
முகமூடி முதலைகள்
நாறிப்போன பிணங்களாய் குற்றங்கள்
எப்படி தேடுவது...
என் தொலைந்துப்போன அண்ணா ஹசாரேக்களை.

முறை...

ஒரு முறை...
பத்து முறை...
நூறு முறை...
ஆயிறம் முறை...
இல்லை!
எத்தனை முறை கூப்பிட்டாலும்
இனிக்கும்...
வெறென்ன?
அவள் பெயறைச்சொன்னேன்.
நீங்களும் டிரை பண்ணுங்களேன்!

அவள்...

அவள்...
பதினைந்து வருடம் முன்பு...
அடையார் சிக்னலில் முதலில்,
பின்னொருனாள்...
அப்பாவுடன் பார்த்தேன்,
அப்புறம்...
22 அ பஸ்சில் பார்த்துக்கொண்டிருந்தேன்.
போன வாரம் திடீரென்று பார்த்தேன்.
கையில் குழந்தையுடன்..பக்கத்தில் கணவன்.
அவளும் என்னை பார்த்தாள்.
அன்று பார்த்த அதே பார்வை.
இதர்க்கு என்ன அர்த்தம்.
அன்றும் புரியவில்லை...
இன்றும் புரியவில்லை...
யாராவது அவளை பார்த்தால் கொஞ்ஜ்ம் கேட்டு சொல்லுங்கள்
என்னிடம்...

Kavitai...அவளுக்காக ஒரு கவிதை கேட்டாள்.
கவிதைக்கு எப்படி கவிதை எழுதுவது?

அவள்...

அவள்...
பேசினால் கவிதை மாதிரி இருக்கும்
கவிதை சொன்னால் பாடலாய் இருக்கும்
அப்போ...
பாடினால் எப்படி இருக்கும்.

இவள்...


இவள்...
கண்களால் பேசுகிறாள்
விரல்களால் நாட்டியமாடுகிறாள்
மௌனமாய் கவிதை சொல்கிறாள்
இவையெல்லாம்...
இவளாளல் மட்டும் எப்படி முடிகிறது.

நீ...நீ பேசினால் பிடிக்கும்
நீ பொய் பேசினால் பிடிக்கும்
நீ சிரித்தால் பிடிக்கும்
நீ பொய்யாய் சிர்த்தால் பிடிக்கும்
நீ நடந்தால் பிடிக்கும்
நீ ஆடினால் பிடிக்கும்
நீ பாடினால் பிடிக்கும்
நீ என்ன செய்தாலும் பிடித்தது
எல்லாமே பிடித்தது...அப்போது....
நீ என்னை காதலித்தபோது.